“லக்ஷ்மி காந்தன் கொலை வழக்கு” திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில்  இணைந்தார் பெரியாரிஸ்ட் சுப. வீரபாண்டியன்.

உண்மை சம்பவங்களை மையமாகக் கொண்ட திரைக்கதைகளால் பெரிதும் பாராட்டைப் பெற்ற இயக்குநர் தயாள் பத்மநாபன், தற்போது “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” என்ற தலைப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார்.

இப்படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில், அந்தப் படத்தின் ஒரு முக்கிய கதாபாத்திரத்திற்காக திரு.சுப. வீரபாண்டியன் நடிக்கிறார்.

இயக்குநர் தயாள் பத்மநாபன் கூறியதாவது:

தமிழ்நாட்டில் மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்திய கொலை வழக்கு தான் இந்த “லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு”. இந்தக் கொலை வழக்கு பற்றிப் பல ஆராய்ச்சிகளைத் தழுவியே இந்தப் படத்தின் படப்பிடிப்பு தற்பொழுது நடைபெற்று வருகிறது. இந்தக் கொலை வழக்கின் உண்மைச் சம்பவங்கள், இதற்கு பின்னால் அமைந்திருக்கும் மர்மங்களைப் பற்றி இன்னும் உண்மைத்தன்மையுடன் கொண்டு வருவதற்காக ஐயா சுப. வீரபாண்டியன் அவர்களும் இந்தப் படத்திற்காக இணைந்துள்ளது எங்களுக்கு மிகப்பெரிய உற்சாகத்தை கொடுத்திருக்கிறது. அடிப்படையில் சுப.வீ அவர்கள் ஒரு வரலாற்று ஆய்வாளர். ஆகையால் இந்தக் கதையை மேலும் உண்மைத் தன்மையுடன் கொண்டு வருவதற்கு அவரது பங்களிப்பு பெருந்துணையாக உள்ளது ” என்று கூறினார்.

இந்த படத்தை 2M Cinemas சார்பில் K.V. சபரீஷ் அவர்கள் தயாரிக்கிறார். இணை தயாரிப்பாளராக D Pictures சார்பில் தயாள் பத்மநாபன் இணைந்துள்ளார்.

இயக்குநராகவும், இணை தயாரிப்பாளராகவும் பணியாற்றும் தயாள் பத்மநாபன், சமீபத்தில் பெற்ற “Best Director Award” (Tamil) வெற்றியின் வெள்ளத்தில், இன்னொரு வித்தியாசமான முயற்சியாக இந்தப் படத்தை இயக்குகிறார்.

படத்தின் முக்கிய கதாபாத்திரங்களில் வெற்றி, ரங்கராஜ் பாண்டே, பிரிகிடா, லிஸ்ஸி ஆன்டனி, சரவணன், லொள்ளு சபா மாரண், இலவரசு மற்றும் கவிதா பாரதி ஆகியோர் நடித்துள்ளனர்.

படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி, தொடர்ந்து சென்னை மற்றும் சுற்றுப்புறங்களில் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
“லக்ஷ்மிகாந்தன் கொலை வழக்கு” விரைவில் ரசிகர்களைச் சந்திக்க வருகிறது.

மக்கள் தொடர்பு : ரேகா 

Related posts

Leave a Comment