சோனி விழாவில் இந்த விஜயதசமிக்கு அஜித் குமாரின் ‘குட் பேட் அக்லி’ திரைப்படம்!

இந்த விஜயதசமி பண்டிகையை முன்னிட்டு நடிகர் அஜித் குமார் நடித்த ‘குட் பேட் அக்லி’ திரைப்படத்தை வரும் அக்டோபர் 20, செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணிக்கு சோனி விழா தொலைக்காட்சி ஒளிபரப்புகின்றது. அதிரடி ஆக்‌ஷன் மற்றும் குடும்பப் பாசம், பழிவாங்குதல் கலந்த உணர்வுகள் என பல அம்சங்களைக் கொண்ட பொழுதுபோக்குத் திரைப்படமாக ‘குட் பேட் அக்லி’ உருவாகியுள்ளது. தனது கடந்த கால வாழ்க்கையை விட்டுவிட்டு குடும்பத்துடன் அமைதியாக வாழ நினைக்கும் ஒரு முன்னாள் கேங்ஸ்டரின் கதைதான் இப்படம். ஆனால் அவரது மகனுக்குப் பிரச்சனை ஏற்படும்போது அவர் மீண்டும் தான் விட்டுச் சென்ற பழைய உலகத்திற்குள் செல்ல வேண்டிய நிலை உருவாகின்றது. ஆதிக் ரவிச்சந்திரன் எழுதி இயக்கியுள்ள இப்படத்தை மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரித்துள்ளது. அஜித் குமார் மற்றும் த்ரிஷா கிருஷ்ணன் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் அர்ஜுன்…

Read More

ரஜினி என்ற மந்திரச் சொல்!!

தமிழ் சினிமா பல ஹீரோக்களை கண்டிருக்கிறது. சிலரை மட்டும் கொண்டாடிக் இருக்கிறது. அப்படி ரசிகர்களின் கொண்டாட்டத்துக்குரிய ஒருவர் சூப்பர் ஸ்டார் ரஜினி. திரையில் பொன்விழா கண்ட பிறகும் ரசிகர்களின் கொண்டாடத்துக்கு உரியவராகவே இருந்து வருவது சாதாரண விஷயம் அல்ல. தனக்கே உரித்தான ஸ்டைல் நடிப்பால், நடத்தையால், அன்பால் மெல்ல மெல்ல ரசிகர்களை ஆகர்ஷித்தவர் இவர். இந்த மேஜிக் கூட உடனடியாக நடந்து. விடவில்லை. நடிப்புக்கும் அவருக்குமிடையே ‘சென்னை To பெங்க ளூர் தூரம்’ இருந்தது. பஸ் கண்டக்டர் ஆகத்தான் தன் கேரியரை தொடங்கினார். ஆசைக்காக அவ்வப்போது உள்ளூர் நாடகங்களில் நடித்து வந்தார். சினிமாவுக்கு வர வேண்டுமென்றால் திரைப்பட நடிப்பு பயிற்சி கல்லூரியில் சேர்ந்து நடிப்பு கற்றுக்கொள்ள வேண்டியது அவசியம். நடிப்புக் கல்லூரி இருப்பதோ சென்னையில். நண்பர்கள் செய்த பண உதவியில் சென்னையில் நடிப்புக் கல்லூரியிலும் சேர்ந்தார். நடிப்புக்…

Read More

200-க்கும் மேற்பட்ட திரைப்படங்கள், 2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை – இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா!

சென்னை, ராமாபுரத்தில் உள்ள எஸ்ஆர்எம் கல்வி நிறுவனத்தில், ஐஎஸ்எம் (ISM) நிறுவனத்தின் சார்பில் சைமன் போஸ் மற்றும் பாப் சுரேஷ் ஆகியோரின் முன்னெடுப்பில், இந்தியாவின் முதல் வெர்டிகல் திரைப்பட விழா மற்றும் விருதுகள் வழங்கும் நிகழ்வு சிறப்பாக நடைபெற்றது. திரைப்படத் துறையில் வளர்ந்து வரும் வெர்டிகல் திரைப்பட வடிவத்தை ஊக்குவிக்கும் நோக்கத்துடன் நடைபெற்ற இந்த விழாவில், 200-க்கும் மேற்பட்ட வெர்டிகல் திரைப்படங்கள் பங்கேற்றன. அவற்றிலிருந்து சிறந்த திரைப்படங்கள் தேர்வு செய்யப்பட்டு, படைப்பாளர்களைப் பாராட்டும் வகையில் மொத்தம் ரூ.2 லட்சம் மதிப்பிலான பரிசுத்தொகை வழங்கப்பட்டது. வெற்றியாளர்களுக்குப் பரிசுத்தொகை! இவ்விழாவில் முதல் பரிசாக ரூ.1,00,000, இரண்டாம் பரிசாக ரூ.50,000, மூன்றாம் பரிசாக ரூ.25,000 வழங்கப்பட்டன. மேலும், ஐந்து சிறப்புப் பிரிவுகளில் தேர்வு செய்யப்பட்ட திரைப்படங்களுக்கு தலா ரூ.5,000 வீதம் வழங்கப்பட்டது. ட்ரீம் ஹவுஸ் தயாரிப்பில், ஹுசைன் இயக்கிய ‘நிலவே வா’…

Read More

டி. இமான் இசையமைப்பில் தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்தின் ‘ஜோ ஜோ மா’ பாடல்!

அலர் ஸ்டுடியோஸ் தயாரிப்பில், மலர்விழி நடேசன் எழுதி இயக்கியுள்ள ‘சிக்னல் அட் 11.30’ திரைப்படத்திலிருந்து, தந்தை – மகள் பாசத்தை அழகாகப் பேசும் பாடலான ‘ஜோ ஜோ மா’ வெளியாகியுள்ளது. தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் டி. இமான் இசையமைத்துள்ள இப்பாடலை ஹரிசரண் பாடியுள்ளார். பாடலாசிரியர் மோகன்ராஜன் பாடல் வரிகளை எழுதியுள்ளார். பெற்றோரின் அன்பையும், வார்த்தைகளால் விவரிக்க முடியாத பந்தத்தையும் இசையின் மூலம் வெளிப்படுத்தும் இப்பாடல், கேட்பவர்களின் மனதை நெகிழ செய்யும். தந்தை- மகள் பாசத்தை பேசும் ‘விஸ்வாசம்’ படத்தின் ‘கண்ணான கண்ணே’ பாடல், திரையில் இடம்பெற்ற ஒரு பாடலாக மட்டுமல்லாமல், மக்களின் வாழ்க்கையோடும் உணர்வுகளோடும் கலந்த ஒரு பாடலாக இன்றளவும் கொண்டாடப்படுகிறது. அதேபோன்ற உணர்வுப்பூர்வமான பாடலாக ‘ஜோ ஜோ மா’ பாடலை டி. இமான் உருவாக்கியுள்ளார். ஹரிசரணின் உணர்வுப்பூர்வமான குரலும் மோகன்ராஜனனின் வரிகளும் இப்பாடலுக்கு மேலும்…

Read More

“நடிகர் வித்யுத் ஜாம்வால் தல்சிம் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்துள்ளார்”- ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ இயக்குநர் கிட்டாவ் சக்குராய்!

பாரமவுண்ட் பிக்சர்ஸ் மற்றும் லெஜண்டரி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்துள்ள ‘ஸ்ட்ரீட் ஃபைட்டர்’ திரைப்படம், கேப்காம் (CAPCOM) நிறுவனத்தின் புகழ்பெற்ற வீடியோ கேம் தொடரை முதன்முறையாகப் பெரிய திரைக்குக் கொண்டு வந்துள்ளது. இந்தத் திரைப்படத்தில், உலகின் தலைசிறந்த போர் வீரர்களாக நடிக்க ஒரு நட்சத்திரப் பட்டாளமே இணைந்துள்ளது. இதில் மிகவும் பிரபலமான கதாபாத்திரங்களில் ஒன்று தல்சிம். இந்தியாவின் சிறந்த ஆக்‌ஷன் நடிகர்களில் ஒருவரான வித்யுத் ஜாம்வாலை, புகழ்பெற்ற கேமிங் கதாபாத்திரமான தல்சிமாகத் தேர்வு செய்தது குறித்து இயக்குநர் கிட்டாவ் சகுராய் மனம் திறந்துள்ளார். இந்த ஆக்‌ஷன் திரைப்படத்தின் மூலம் வித்யுத் ஜாம்வால் ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார். தற்காப்புக் கலைகளில் அவருக்குள்ள நிபுணத்துவத்தையும், தல்சிம் கதாபாத்திரத்துடன் அவருக்கு இருக்கும் தனிப்பட்ட தொடர்பையும் உலகெங்கிலும் உள்ள ரசிகர்களிடம் இந்த படம் கொண்டு சேர்க்கும். திரைப்படத்தில் தல்சிம் கதாபாத்திரத்தைச் சேர்ப்பது குறித்து படக்குழுவினருக்கு முதலில்…

Read More

கிரெட்டா கெர்விக் இயக்கும் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ (Narnia: The Magician’s Nephew) டிரெய்லர் வெளியீடு – புதிய சாகச உலகிற்கான கதவு திறக்கிறது

பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் ‘நார்னியா: தி மெஜிஷியன்ஸ் நெஃப்யூ’ திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. இலக்கிய உலகின் மிகவும் விரும்பப்படும் கற்பனை உலகங்களில் ஒன்றான ‘நார்னியா’வை, கிரெட்டா கெர்விக் தனது தனித்துவமான பார்வையில் எப்படி அணுகியுள்ளார் என்பதை இந்த டிரெய்லர் காட்டுகிறது. சி. எஸ். லூயிஸ் 1955-ல் எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்ட இப்படம், மர்மம், வியப்பு மற்றும் மறக்க முடியாத கதாபாத்திரங்கள் நிறைந்த ஒரு மாயாஜால சாகசத்தை வழங்குகிறது. மேலும், நார்னியா உலகம் உருவான கதையையும் இது விவரிக்கிறது. இப்படத்தை நெட்ஃபிக்ஸ் (Netflix) நிறுவனம் தயாரிக்க, சோனி பிக்சர்ஸ் ரிலீசிங் இன்டர்நேஷனல் (Sony Pictures Releasing International) நிறுவனம் விநியோகம் செய்கிறது. இந்த டிரெய்லர் பார்வையாளர்களை நார்னியா உலகிற்கு அழைத்துச் செல்கிறது. இதில் இளம் டிகோரி கிர்க்கே (Digory Kirke) கதாபாத்திரத்தில் டேவிட் மெக்கென்னாவும், பாலி பிளம்மர்…

Read More

அறிமுக இயக்குநர் சஃபர் சனல் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் பாராட்டுப் பெற்ற த்ரில்லர் திரைப்படம், தாய்மை, அறம் மற்றும் சிறிய முடிவுகளால் எதிர்பாராத விதமாக ஏற்படும் விளைவுகளை ஆராய்கிறது.

தேசிய அளவில், அக்டோபர் 9, 2026: மூத்த நடிகை உர்வசி வலிமையான மற்றும் பல பரிமாணங்களைக் கொண்ட முதன்மைக் கதாபாத்திரத்தில் நடித்துள்ள உளவியல் த்ரில்லர் திரைப்படமான ‘ஆஷா’வின் டிஜிட்டல் வெளியீட்டை மலையாளம் ZEE5 அறிவித்துள்ளது. சஃபர் சனல் இயக்கியுள்ள இப்படத்தை விநாயகா அஜித் தயாரித்துள்ளார். ஜோஜு ஜார்ஜ், ஐஸ்வர்யா லட்சுமி, விஜயராகவன், லட்சுமி மேனன், பாக்யலட்சுமி மற்றும் அஜயன் அடாட் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செப்டம்பர் 11-ம் தேதி திரையரங்குகளில் வெளியான ‘ஆஷா’ திரைப்படம், அக்டோபர் 16, 2026 அன்று மலையாளம் ZEE5-ல் வெளியாகிறது. இந்தப் படம் இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னட மொழிகளில் டப்பிங் செய்யப்பட்ட பதிப்புகளுடன் பல்வேறு மொழி ரசிகர்களையும் சென்றடையவுள்ளது. ‘ஆஷா’ திரைப்படத்தின் மையத்தில், எதிர்பாராத ஒரு சாலை விபத்துக்குப் பிறகு ஜீமோன் என்ற கதாபாத்திரத்தில் நடிக்கும் ஜோஜு ஜார்ஜுடன்…

Read More

”’டோரதி’ திரைப்படம் நான் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தை பெற்று தந்துள்ளது”- நடிகை ஜீவா சுப்பிரமணியம்!

தனது திறமைக்குரிய அங்கீகாரம் கிடைக்கும் போதுதான் ஒரு கலைஞருக்கு உண்மையான மனநிறைவு ஏற்படுகிறது. அப்படியான மனநிறைவை ‘டோரதி’ திரைப்படம் திருநங்கை நடிகை ஜீவா சுப்பிரமணியத்துக்கு கொடுத்துள்ளது. திரைப்படங்கள் மற்றும் இணையத் தொடர்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த ஜீவா, கார்த்திக் சுப்புராஜ் இயக்கிய ‘டோரதி’ படத்தில் தனது நடிப்புக்குக் கிடைத்துவரும் பாராட்டுகளால் நெகிழ்ச்சியடைந்துள்ளார். ஒரு கதாபாத்திரத்துக்குக் கிடைத்த வரவேற்பு என்பதைத் தாண்டி, தனது பணியை மக்கள் கவனித்துப் பாராட்டுவதுடன் கொண்டாடவும் செய்கிறார்கள் என்ற உணர்வையும் நீண்ட காலம் அவர் எதிர்பார்த்திருந்த அங்கீகாரத்தையும் இந்தப் படம் அவருக்கு கொடுத்துள்ளது. இதுபற்றி ஜீவா சுப்பிரமணியம் பகிர்ந்து கொண்டதாவது, “எனது நடிப்பை அங்கீகரித்து மக்கள் கொண்டாடுவதை முதல்முறையாக உணர்கிறேன். இத்தனை ஆண்டுகளாக இந்தத் தருணத்துக்காகக் காத்திருந்தேன். என் தம்பி கார்த்திக் சுப்புராஜ் மூலமாக அது இப்போது நடந்திருக்கிறது. எனக்கு இந்த வாய்ப்பு…

Read More

“‘டோரதி’ படத்தில் என் கதாபாத்திரத்திற்கு கிடைத்து வரும் ரசிகர்களின் அன்பு எனக்கு மகிழ்ச்சியையும் பொறுப்பையும் கொடுத்திருக்கிறது”- நடிகர் முத்துக்குமார்!

ஒரு நடிகருக்கு கிடைக்கும் உண்மையான விருதுகள் ரசிகர்களின் பாராட்டுகள் தான். கதாநாயகனோ வில்லனோ அல்லது குணச்சித்திர கதாபாத்திரம் என எதுவாக இருந்தாலும் தான் ஏற்று நடிக்கும் கதாபாத்திரத்தை அர்த்தமுள்ளதாக மாற்றுவது ரசிகர்களின் பாராட்டுக்கள் தான். அந்த வகையில் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் முத்துக்குமார் சமீபத்தில் வெளியான ‘டோரதி’ திரைப்படத்தில் தன் கதாபாத்திரம் மூலம் மீண்டும் ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளார். படத்திற்குக் கிடைத்துள்ள வரவேற்பு மற்றும் தனக்குக் கிடைத்து வரும் அன்பு குறித்து முத்துக்குமார் பகிர்ந்து கொண்டதாவது, “நடிகர்கள் கதாநாயகன், வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்கள் என எந்த பாத்திரம் ஏற்று நடித்தாலும், அவர்கள் மீது நிபந்தனையற்ற அன்பை ரசிகர்கள் தருவார்கள். ‘டோரதி’ படத்திற்காக எனக்குக் கிடைத்து வரும் அன்புக்கும் பாராட்டுகளுக்கும் நான் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இப்படிப்பட்ட சவாலான கதாபாத்திரத்தை எனக்கு கொடுத்த…

Read More

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் முதல் தயாரிப்பு – ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடக்கம்

தியாகராஜா டாக்கீஸ் நிறுவனத்தின் தயாரிப்பில், தமிழ் சினிமாவின் பிரபல நடிகரான ஜெய் கதையின் நாயகனாக முதன்மை வேடத்தில் நடிக்கும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு பாரம்பரிய முறைப்படி பூஜையுடன் தென்காசியில் தொடங்கியது. அறிமுக இயக்குநர் சிவ பிரசன்னா இயக்கத்தில் உருவாகும் ‘தியாகராஜா டாக்கீஸ் – புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தில் ஜெய் கதையின் நாயகனாக நடிக்க, அவருக்கு ஜோடியாக நடிகை டெல்னா டேவிஸ் நடிக்கிறார். விஜய் உலகநாத் ஒளிப்பதிவு செய்ய, கலை இயக்கத்தை ஜெயச்சந்திரனும், படத்தொகுப்புப் பணிகளை வி. ஜே. சபு ஜோசப்பும் மேற்கொள்கின்றனர். ஹாரர் காமெடியாகத் தயாராகும் இந்தத் திரைப்படத்தைத் தியாகராஜா டாக்கீஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஏ. எம். பிரபாகரன் தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு தென்காசியில் பாரம்பரிய முறைப்படி தொடங்கியது. இதில் தென்காசி மாவட்ட ஆட்சியர் திரு. ரஞ்சித்…

Read More