எட்டு தோட்டாக்கள், ஜீவி புகழ் நடிகர் வெற்றியின் “பிளாக் கோல்டு” திரைப்பட first லுக் போஸ்டர் வெளியானது..!!

MM ஸ்டுடியோஸ் சார்பில் M.மூர்த்தி வழங்கும், “தீர்ப்புகள் விற்கப்படும்” புகழ் தீரன் அருண்குமார் இயக்கத்தில், நடிகர் வெற்றி, பிரியாலயா, லிவிங்ஸ்டன், துளசி, பிக்பாஸ் அபிராமி, A.வெங்கடேஷ், அருள் D சங்கர், விஜய் டிவி ராமர் உள்ளிட்டோர் நடிக்க, பரபரப்பான ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகியிருக்கும் “பிளாக் கோல்டு” படத்தின் First லுக் வெளியானது. First லுக்கில் ஒரு படித்த யதார்த்த இளைஞன் போல இருக்கும் நடிகர் வெற்றி, ஆக்ரோசமாக, ரத்தம் தெறிக்க ஒரு எதிரியை வாட்டர் பம்ப் பிளேயர் ரிங்கால் அடித்து வீழ்த்துவதுபோல் உள்ளது. நடிகர் வெற்றியின் ஆக்ரோசமான முகமும், பின்னணியில் கதவு திறந்த நிலையில் இருக்கும் சரக்கு கண்டைனரும் காட்சியின் வீரியத்தை காட்டுகிறது. இந்த First லுக் அனைவரது கவனத்தையும் ஈர்த்து இணையம் முழுக்க வைரலாகி வருகிறது. ஒரு படித்த நடுத்தர குடும்பத்தை சேர்ந்த இளைஞன்…

Read More

“தி பாரடைஸ்” படத்திலிருந்து நேச்சுரல் ஸ்டார் நானியின் ஜடால் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது

‘தி பாரடைஸ்’ படத்தில் நேச்சுரல் ஸ்டார் நானி கதாப்பாத்திரத்தின்  ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து பெரும்  வரவேற்பைப் பெற்று வருகிறது. நானி வித்தியாசமான  தோற்றத்தில், இதுவரை தோன்றாத மாறுபட்ட ஒரு வேடத்தில் நடிக்கிறார். அடர்த்தியான மீசை மற்றும் தாடியுடன், இரண்டு ஜடை முடிகள் தொங்க அவரின் தோற்றம் மிரட்டலாக உள்ளது. இந்தக் கதாபாத்திரத்தின் பெயர் ‘ஜடால்’ – தனித்துவமான தோற்றம் கொண்ட ஒரு தனித்துவமான பெயராக அமைந்துள்ளது. இந்த தோற்றத்தை அறிமுகப்படுத்தி, தயாரிப்பாளர்கள் ‘மாறுபட்ட சிகையலங்காரமாகத் துவங்கி ஒரு புரட்சிகரமான லுக்காக முடிந்துள்ளது’ என்று தெரிவித்துள்ளனர். தசரா படத்தின் மிகப்பெரிய வெற்றிக்குப் பிறகு திறமை மிகு  இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடெலா இயக்கியிருக்கும் #TheParadise, இந்தியாவில் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்றாகும். ‘ரா ஸ்டேட்மென்ட்’ க்ளிம்ப்ஸ் வெளியானதைத் தொடர்ந்து, படத்தின் ஒவ்வொரு அறிவிப்பும் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தி வருகிறது. நானியின் ஃபர்ஸ்ட்…

Read More

ரியல் ஸ்டார்” உபேந்திராவின் (Real Star Upendra’s) பான்-இந்தியா திரைப்படம் “நெக்ஸ்ட் லெவல்” (Next Level) – பிரம்மாண்டமாக துவங்கவுள்ளது!!

பல மொழிகளில் ரசிகர்களின் இதயங்களை வென்றிருக்கும், ரியல் ஸ்டார் உபேந்திரா, ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பான்-இந்தியா திரைப்படமான “நெக்ஸ்ட் லெவல்” மூலம், வெள்ளித்திரைக்கு மீண்டும் வருகிறார். சுவாரஸ்யமான கதை சொல்லல் மற்றும் அதிநவீன விஷுவல் (VFX) ஆகியவற்றுடன், தனித்துவமான திரை அனுபவமாக இப்படம் உருவாகவுள்ளது. இப்படத்தின் நாயகியாக, பல மொழிகளில் சிறப்பாக நடித்துப் புகழ்பெற்ற நடிகை மலாஶ்ரீயின் (Malashree) மகள் ஆராதனா (Aradhana) நடிக்கிறார். பன்முக திறமையாளர் தர்ஷன் (Darshan) உடன் கடேரா ( Kaatera ) படத்தில் அறிமுகமாகி ரசிகர்களின் இதயங்களை வென்ற ஆராதனா, தற்போது தன் இரண்டாவது படத்தில், இன்னொரு கன்னட சூப்பர் ஸ்டாரான உபேந்திராவுடன் திரையை பகிர இருக்கிறார். தருண் ஸ்டுடியோஸ் (Tarun Studios ) நிறுவனத்தின் சார்பில் தருண் சிவப்பா (Tarun Shivappa) தயாரிக்கும் இப்படத்தை, பிரபல இயக்குநர் அரவிந்த் கௌஷிக்…

Read More

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் நடிப்பில் இன்னாசி பாண்டியன் இயக்கத்தில் ‘புல்லட்’ அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லர் திரைப்படத்தின் விறுவிறு டீசரை விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ், ஜி வி பிரகாஷ் வெளியிட்டனர்

ஃபைவ் ஸ்டார் கிரியேஷன்ஸ் கதிரேசன், அருள்நிதி நடித்த ‘டைரி’ வெற்றிப் படத்திற்குப் பிறகு இயக்குநர் இன்னாசி பாண்டியன் உடன் மீண்டும் இணைந்து ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘புல்லட்’ படத்தை தயாரித்துள்ளார். விறுவிறுப்பான அமானுஷ்ய ஆக்ஷன் திரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது சகோதரர் எல்வின் இணைந்து நடித்துள்ளனர். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் ஒரே சமயத்தில் இத்திரைப்படம் தயாராகி உள்ளது. ‘புல்லட்’ படத்தின் தமிழ் டீசரை நடிகர் விஷால், எஸ் ஜே சூர்யா, பிருத்விராஜ் மற்றும் ஜி வி பிரகாஷ் குமார் இன்று வெளியிட்டனர், தெலுங்கு டீசரை நாக சைதன்யா வெளியிட்டார். படத்தின் மீதான எதிர்பார்ப்புகளை அதிகரிக்கும் வகையில் டீசர் உருவாகியுள்ளதாக படக்குழுவினரை அவர்கள் பாராட்டினர். எண்பதுகள் மற்றும் 90களில் ரசிகர்களின் கனவுக் கன்னியாக விளங்கிய டிஸ்கோ சாந்தி…

Read More

காந்தாரா திரைப்படத்திலிருந்து ருக்மணி வசந்தின்  ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட் லுக்கை ஹோம்பாலே பிலிம்ஸ் வெளியிட்டுள்ளது !!

வரமஹாலக்ஷ்மி திருவிழாவின் இந்த புண்ணிய நாளில், ஹோம்பாலே பிலிம்ஸ், ருக்‌மிணி வசந்தை ‘கனகவதி’ (Kanakavathi) எனும் கதாபாத்திரமாக, காந்தாரா அத்தியாயம் 1 படத்திலிருந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இப்படம் உலகம் முழுவதும் 2 அக்டோபர் 2025 அன்று வெளியாகிறது. இந்திய கலாச்சாரத்தில் புனிதமும் பண்பாட்டு முக்கியத்துவமும் கொண்ட வரமஹாலக்ஷ்மி திருநாளில், வரவிருக்கும் மாபெரும் திரைப்படமான “காந்தாரா அத்தியாயம் 1”  இன் நாயகியாக நடிக்கும் நடிகை ருக்‌மிணி வசந்தின் ‘கனகவதி’ (Kanakavathi) கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்  லுக் போஸ்டரை, ஹோம்பாலே பிலிம்ஸ் பெருமையுடன் வெளியிட்டுள்ளது. இப்படத்தை எழுதி இயக்கி, கதாநாயகனாகவும் நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி. நம் பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கதைக்களத்தில் 2022ஆம் ஆண்டு வெளியாகி, மக்களிடமும்  விமர்சகர்களிடமும் பெரும்  பாராட்டுக்களைக் குவித்த “காந்தாரா” படத்தின் முன்கதையைச் சொல்லும் (Prequel) படமாக இத்திரைப்படம் உருவாகியுள்ளது. இவ்வருடத்தின் தொடக்கத்தில், நாயகன் ரிஷப் ஷெட்டியின் கதாப்பாத்திர ஃபர்ஸ்ட்…

Read More

இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது ஜியோஹாட்ஸ்டாரில் ஸ்ட்ரீம் ஆகிறது

விமர்சகர்கள் மற்றும் ரசிகர்களால் அதிகம் பாராட்டப்பட்ட இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் தற்போது திரையரங்குகளில் இருந்து ஜியோஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் ஸ்ட்ரீம் ஆகிறது. தந்தை-மகன் உறவை அடிப்படையாக வைத்து மியூசிக்கல் காமெடியாக உருவான இந்தத் திரைப்படம் திரையரங்குகளில் ஜூலை 4 அன்று வெளியானது. மிர்ச்சி சிவா முன்னணி கதாநாயகனாக நடித்திருக்க அஞ்சலி, கிரேஸ் ஆண்டனி, குழந்தை நட்சத்திரம் மிதுல் ரயான், பாலாஜி சக்திவேல், விஜய் யேசுதாஸ், அஜூ வர்கீஸ் மற்றும் பலர் நடித்திருந்தனர். ‘பறந்து போ’ படத்தை இயக்குநர் ராம் எழுதி இயக்கி இருக்க, என்.கே. ஏகாம்பரம் ஒளிப்பதிவு செய்திருந்தார். வி.எஸ். மதி படத்தொகுப்பு செய்திருக்க, படத்தின் பாடல்கள் மற்றும் பின்னணி இசையை சந்தோஷ் தயாநிதி கவனித்தார். தந்தை மகன் உறவை அடிப்படையாக வைத்து உருவான இந்தத் திரைப்படத்தை ‘வாழ்வின் சிறு, சிறு தருணங்களில்தான் எதிர்பாராத…

Read More

பான்-இந்தியா பாப் கலாச்சார நிகழ்வான இதன் டிக்கெட்டுகள் KYN -இல் பிரத்தியேகமாக வெளியாகியுள்ளது…இப்போதே உங்கள் டிக்கெட்டிற்கான முன்பதிவை தொடங்குங்கள்!

சென்னை, இந்தியா- ஆகஸ்ட் 04, 2025: தி ப்ரீமியர் குளோபல் ஐபி மற்றும் கம்யூனிட்டி பில்டரான ஸ்கைஸ்போர்ட்ஸ், ஆகஸ்ட் 30-31 தேதிகளில் சென்னை வர்த்தக மையத்தில், பான்-இந்தியா ஃபெஸ்டிவல் சீரிஸான புத்தம் புதிய கேமிங் திருவிழாவை தமிழ்நாட்டிற்கு கொண்டு வருகிறது. இந்த இரண்டு நாள் கொண்டாட்டம் ஸ்கைஸ்போர்ட்ஸ் கேமிங் முயற்சியின் முதல் அத்தியாயத்தைக் குறிக்கிறது. இது சென்னையின் துடிப்பான ரசிகர்களைக் கவருவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. டிக்கெட்டுகள் KYN செயலியில் மட்டுமே பிரத்தியேகமாகக் கிடைக்கும். பல கலாச்சாரங்களின் அனுபவமான இந்த கேமிங் திருவிழாவின் சிறப்பம்சங்கள்: * திறந்த லேன் ( LAN ) போட்டிகளில் கேமிங் மற்றும் காஸ்ப்ளே. * இந்திய காமிக்ஸுடன் அனிமேஷன் ஒன்றிணைகிறது. * நேரடி நிகழ்ச்சிகள் மற்றும் ரசிகர்களுடன் கிரியேட்டர்ஸ் கலந்துரையாடுகிறார்கள் * புனேவில் நடைபெறும் தேசிய அளவிலான இறுதிப்போட்டிக்கு முன்பாக 16 வயதுக்குட்பட்ட…

Read More

~ சுரேஷ் கோபி மற்றும் அனுபமா பரமேஸ்வரன் ஆகியோர் நடிப்பில் நீதி மன்ற பின்னணியில் உருவாகியுள்ள இப்படம் வரும் ஆகஸ்ட் 15 முதல்,  இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் ஸ்ட்ரீமிங் செய்யப்படவுள்ளது ~

இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான  ZEE5,  வரும் சுதந்திர  தினத்தன்று, எளியவர்களுக்குக் குரல் கொடுக்க,  அமைப்பைக் கேள்விக்குட்படுத்தத் துணிந்த, அமைதியாக இருப்பவர்களுக்குக் குரல் கொடுக்கும் ஒரு கதையை ரசிகர்களுக்கு வழங்கவுள்ளது. ஆகஸ்ட் 15 ஆம் தேதி பிரத்தியேகமாகத் திரையிடப்படும் “ஜானகி V/S ஸ்டேட் ஆஃப் கேரளா”  ஒரு அழுத்தமான மலையாள திரைப்படமாகும்.  இப்படத்தினை பிரவீன் நாராயணன் எழுதி இயக்கியுள்ளார் மற்றும் J பனிந்திர குமார் தயாரித்ததுள்ளார். சேதுராமன் நாயர் கன்கோல் இணை தயாரிப்பாளராக பணியாற்றியுள்ளார். சுரேஷ் கோபி தார்மீக ரீதியாக செயல்படும் வழக்கறிஞர் டேவிட் ஆபெல் டோனோவனாகவும், அனுபமா பரமேஸ்வரன் ஜானகி என்ற பாத்திரத்திலும் நடித்துள்ளனர்.  இந்தப் படம், ஒரு கொடூரமான பாலியல் வன்கொடுமையிலிருந்து தப்பிய பிறகு, தனது சுதந்திரத்தை மீட்டெடுக்கப் போராடும் ஒரு இளம் பெண்ணின் உணர்ச்சிகரமான மற்றும் சட்ட ரீதியிலான போராட்டத்தைப் பயணத்தைப் பற்றிச்…

Read More

மஞ்சு விரட்டு பின்னணியில் விமல் நடிப்பில் உருவாகும் “வடம்”!!

மாசாணி பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் R.ராஜசேகர் முதல் தயாரிப்பாக உருவாகும் திரைப்படம் ‘வடம்.’, நடிகர் விமல் கதாநாயகனாக நடிக்க, இயக்குநர் V. கேந்திரன் இயக்கத்தில், தமிழக பாரம்பரியங்களில் ஒன்றான மஞ்சு விரட்டு பின்னணியில், அருமையான கமர்ஷியல் படமாக  “வடம்” உருவாக இருக்கிறது.இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று கோலாகலமாக பூஜையுடன் துவங்கியது. பிரம்மாண்டமாக உருவாகும் “வடம்” படம், கோயம்புத்தூரில் உள்ள மாசாணி அம்மன் கோவிலில்,  படக்குழுவினர் கலந்துகொள்ள 1500 பேருக்கு அன்னதானம் அளித்து, பிரம்மாண்ட பூஜையுடன், இன்று இனிதே துவங்கியது. தமிழக கலாச்சாரத்தின், பாரம்பரியத்தின் முக்கிய அம்சங்களில் வீர விளையாட்டுக்களில் ஒன்று மஞ்சுவிரட்டு, கிராம மக்கள் உயிராக நேசிக்கும் வட மஞ்சு விளையாட்டின் பின்னணியை மையமாக வைத்து இப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இதுவரை ஜல்லிக்கட்டு விளையாட்டை வைத்து பல படங்கள் தமிழ் சினிமாவில் வந்துள்ளது. ஆனால் முதல் முறையாக மஞ்சு விரட்டு…

Read More

மிஷ்கின், அனுராதா ஶ்ரீராம், தமன், உன்னி கிருஷ்ணன் சூப்பர் சிங்கர் சீனியர் சீசன் 11 ஜட்ஜ்கள் அறிவிப்பு

தமிழக மக்களின் நெஞ்சங்களில் தனித்த இடம் பிடித்த, விஜய் டிவியின், சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சி மீண்டும் வருகிறது. 10 வருடங்களைக் கடந்து, வெற்றி நடை போட்டு வரும் சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் சீசன் 11 இதோ வந்துவிட்டது. இம்முறை யாருமே எதிர்பாராத வண்ணம் ஜட்ஜாக இயக்குநர் மிஷ்கின் களமிறங்குகிறார். சூப்பர் சிங்கர் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியமாக, இயக்குநராக புகழ் பெற்று இப்போது இசையமைப்பாளராக மாறியிருக்கும் மிஷ்கின், இம்முறை சூப்பர் சிங்கர் சீனியர் நிகழ்ச்சியின் ஜட்ஜாக களமிறங்குகிறார். இந்த அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த முறை தமிழகத்தின் பல மண்டலங்களைச் சேர்ந்த இசைத்திறமைகளுக்கு இடையேயான இசைப் போராக அமையவிருக்கிறது. இந்த முறை டெல்டா தமிழ், கொங்கு தமிழ், எங்கும் தமிழ், சென்னை தமிழ் என மண்டல வாரியான பிரிவுகளில் பங்கேற்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்படவுள்ளனர்.…

Read More