தலைவர் தம்பி தலைமையில் – விமர்சனம்…

இளவரசு மற்றும் தம்பி ராமையா இருவரும் பக்கத்து வீட்டுக்காரர்கள்.. இவர்கள் இருவருக்கும் தீராத பகை நீடித்து வருகிறது.. இந்த சூழ்நிலையில் இளவரசு மகள் பிரார்த்தனாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கிறது.. விடிந்தால் காலை 10:30 மணிக்கு முகூர்த்தம்.

அப்போது ஊர் பஞ்சாயத்து தலைவர் ஜீவா அங்கு வருகிறார்.. என் தலைமையில் உங்கள் மகள் திருமணம் நன்றாக நடக்கும் என்று எல்லா ஏற்பாடுகளும் செய்து வருகிறறார்.. இந்த சூழ்நிலை அடுத்த வீட்டு தம்பி ராமையாவின் தந்தை இறந்து விடுகிறார்.. அவரும் தன் தந்தையின் இறுதி சடங்கை காலை 10:30 மணிக்கு செய்ய வேண்டும் என்கிறார்.

இருவரும் விட்டுக் கொடுக்காமல் ஒரே நேரத்தில் செய்ய வேண்டும் என்று அடம் பிடிக்கின்றனர்.

இந்த சூழ்நிலையில் தலைவர் ஜீவா என்ன செய்தார்.. இரு குடும்பங்களையும் பிரச்சினை எப்படி தீர்த்து வைத்தார் என்பதெல்லாம் கதை..

இந்தப் படத்தில் நாயகன் ஜீவாவுக்கு ஜோடி இல்லை.. கிளைமாக்ஸ் இல் மட்டும் நாயகி நடிகை இருப்பதாக காண்பிக்கப்படுகிறது.. இதனை ஒப்புக்கொண்ட ஜீவாவுக்கு பாராட்டுக்கள்.. ஒரு வீட்டில் கல்யாணம் அடுத்த வீட்டில் மரணம் இரண்டையும் ஜீவா சமாளிக்கும் விதங்கள் அருமை.. கிளைமாக்ஸ் எதிர்பாராத ஒன்று சிறப்பு.

ஜென்சன் திவாகர்.. காமெடி கலந்து வில்லத்தனம் செய்து ஜெயித்திருக்கிறார்..

தம்பி ராமையா இளவரசு இருவரும் போட்டி போட்டு அனுபவ நடிப்பில் ஜொலிக்கின்றனர்..

நாயகி பிரார்த்தனா அவரின் மாப்பிள்ளை உள்ளிட்ட அனைவரும் கேரக்டருக்கு பக்கா.. மார்த்தாண்ட மொழியில் மலையாளம் தமிழ் கலந்து பேசும் நபர்கள் ரசிக்க வைக்கின்றனர்.. அதுபோல தம்பி ராமையாவின் தம்பிகளாக வருபவர்களும் நடிப்பில் கவனிக்க வைக்கின்றனர்..

 

விஷ்ணு விஜய் இசையில் பாடல்களும் பின்னணி இசையும் சிறப்பு.. பப்லு அஜு என்பவர் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார் படத்தின் 90% காட்சிகள் இருட்டில் மட்டும் படமாக்கப்பட்டிருப்பது சிறப்பு.. அதை அழகாகவே ரசிக்கும் வகையில் கொடுத்திருக்கிறார்..

நித்திஷ் சகாதேவ் இயக்கியிருக்கிறார், இவர் ஏற்கனவே மலையாளத்தில் சூப்பர்ஹிட் படங்களை கொடுத்தவர்.. இதில் தமிழுக்கு ஏற்றபடி திரைக்கதையை அமைத்து வசனங்கள் மூலம் சிறப்பு சேர்த்து இருக்கிறார்.. எளிய கதை எளிய மனிதர்கள் ஆனால் அதை ரசிக்கும் வகையில் பொங்கல் விருந்தாக கொடுத்திருப்பது சிறப்பு..

Related posts

Leave a Comment