ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனலின் பிரம்மாண்டமான பீரியட் டிராமாவாக உருவாகி இருக்கும் இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வரவேற்பு பெற்ற ‘யாத்திசை’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இயக்குநர் தரணி ராசேந்திரன் தனது அடுத்த திரைப்படத்தின் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளார். ஜே.கே. ஃபிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் ஜே. கமலகண்ணன் தயாரித்திருக்கும் இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் மீது எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. இந்தப் படத்தில் இயக்குநரும் நடிகருமான சசிகுமார், இந்திய தேசிய இராணுவ (INA) அதிகாரியாக முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். படக்குழுவின் ஒட்டுமொத்த அர்ப்பணிப்பும், கடின உழைப்பும் இப்படத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் பிரதிபலித்துள்ளது. இயக்குநரின் பிரம்மாண்டமான கதையை திரையில் உயிர்ப்பிக்க, அனைத்து துறைகளும் இணைந்து கடினமாக பணியாற்றியுள்ளன. சசிகுமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள இந்தப் படத்தில் சமுத்திரக்கனி,…
Read MoreCategory: சினிமா செய்திகள்
லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது
உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி வெளியான லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவோடு பெரும் வெற்றி பெற்று இந்த ஆண்டின் பிளாக்பஸ்டர் படங்களின் பட்டியலில் இடம் பிடித்தது. ஆர்.எஸ். துரை செந்தில்குமாரின் விறுவிறுப்பான எழுத்து மற்றும் பரபரப்பான இயக்கத்தில் உருவான இப்படத்தில் லெஜெண்ட் சரவணனின் அதிரடி சண்டைக் காட்சிகளும் உணர்ச்சிப்பூர்வமான நடிப்பும் பார்வையாளர்கள் மற்றும் பத்திரிகையாளர்களின் பாராட்டுகளை பெற்றது. ‘லீடர்’ திரைப்படம் ஓடிடியில் எப்போது வெளியாகும் என்று பலதரப்பட்ட ரசிகர்களும் ஆர்வமுடன் கேட்டு வந்த நிலையில் இது குறித்து அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. வரும் வெள்ளிக்கிழமை மே 29 அன்று அமேசான் பிரைம் தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் ‘லீடர்’ திரைப்படம் வெளியாகிறது. திரையரங்குகளில் கொண்டாடப்பட்டது போன்றே ஓடிடியிலும் இப்படம் ரசிகர்களால் வரவேற்கப்படும் என்று…
Read Moreசிலம்பரசன் TR நடிக்கும் ‘அரசன் ‘ படத்தின் அப்டேட்
தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் TR முதன்மையான கதாபாத்திரத்தில் நடித்து வரும் ‘அரசன்’ திரைப்படம் – எதிர்வரும் தீபாவளி திருநாளன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியிடப்படுவதற்காக படத்தின் படப்பிடிப்பு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்ற தகவல்கள் வெளியாகி இருக்கிறது. இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘அரசன்’ திரைப்படத்தில் சிலம்பரசன் TR, பிரியங்கா மோகன் , இயக்குநர்களும் நடிகர்களுமான அமீர்- சமுத்திரக்கனி, கிஷோர், நடிகை ஆண்ட்ரியா உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். வெற்றி மாறனின் வடசென்னை யுனிவர்ஸிலிருந்து புதிய கேரக்டர்களுடன் பிரம்மாண்டமான ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி வரும் இந்தத் திரைப்படத்தை வி கிரியேசன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கிறார். இப்படத்தின் முதல் கட்ட படப்பிடிப்பு கோவில்பட்டியில் தொடங்கியது. தற்போது இரண்டாவது கட்டப் படப்பிடிப்பு விறுவிறுப்பாக சென்னையில் நடைபெற்று, விரைவில் நிறைவடையும்…
Read More‘எல்லம்மா’ படத்திற்கு என்னை சம்மதிக்க வைத்த கிராமம் இது’- ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நெகிழ்ச்சி!
ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் நடிகராக அறிமுகமாகும் ‘எல்லம்மா’ திரைப்படம் அறிவிக்கப்பட்ட நாளில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு உள்ளது. இந்த நிலையில், தேவி ஸ்ரீ பிரசாத் சமீபத்தில் தனது சொந்த ஊரான வேதுருபாகாவிற்கு சென்று, அந்த ஊரின் பாரம்பரியம், உணர்வுகள் மற்றும் திருவிழா கொண்டாட்டங்களில் கலந்து கொண்டார். இவை அனைத்தும், ‘எல்லம்மா’ திரைப்படத்தின் ஆன்மாவுடன் நெருக்கமாக இணைந்துள்ளதாகவும் தெரிவித்தார். ஜாத்தாரா திருவிழா கொண்டாட்டங்களின் போது, ஊரில் உள்ள தனது பூர்வீக இல்லத்தில் தங்கி, கிராம மக்களுடன் அன்பாக உரையாடி, விழாவின் ஆன்மிக மற்றும் கலாச்சார உற்சாகத்தில் முழுமையாக கலந்து கொண்டார். அந்த அனுபவங்களையும், நினைவுகளையும், திருவிழாவின் கலாச்சார கொண்டாட்டத்தையும் பதிவு செய்த உணர்ச்சிப்பூர்வமான வீடியோவை அவர் தனது சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அதில் தேவி ஸ்ரீ பிரசாத் கூறியிருப்பது, “என் அப்பா பிறந்த கிராமம்…
Read MoreArshad Warsi recalls Vir Hirani as ‘ShortCircuit’ from Munna Bhai ahead of Pritam and Pedro release:
What began years ago with a child actor sharing screen space with Arshad Warsi has now come full circle with Pritam and Pedro. A newly unveiled visual comparing an old frame of young Vir Hirani with Arshad to the duo now standing side by side in Rajkumar Hirani’s upcoming series has instantly struck a nostalgic chord online. Titled “Lap Se Laptop Tak,” the moment perfectly captures the journey from childhood innocence to stepping into an entirely new world of chaos, comedy, and companionship together. Years Later, The Duo Returns This…
Read Moreபொற்காலம், வெற்றிக்கொடி கட்டு, காலம் மாறிப்போச்சு போன்ற படங்களில் நடித்த தமிழ் செல்வி கடந்த மாதம் காலமானார்!
அவரது கணவரும், தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்க தலைவருமான பிரேம்நாத், நடிகை தமிழ் செல்வியின் 30’ம் நாள் நினைவு தினத்தை முன்னிட்டு, (27.05.2026) நாளை காலை 10′ மணிக்கு, சென்னை வடபழனி, கங்கை அம்மன் கோவில் தெருவில் உள்ள தமிழ்நாடு மேடை நடன கலைஞர்கள் முன்னேற்ற தலைமை சங்கத்தில், நடிகையும், சங்க உறுப்பினருமான தமிழ் செல்வி திருவுருவ படத்திறப்பு நிகழ்வும், அதனை தொடர்ந்து, 1000 பேருக்கு அன்னதானமும் வழங்குகிறார்! மனிதநேயம் லயன் டாக்டர் EG.சுவாமிநாதன் மற்றும் இளம் தொழிலதிபர் துபாய் மதன் ஆகியோர் தலைமையில், முன்னாள் அமைச்சர் பா.வளர்மதி, முன்னாள் எம்எல்ஏக்கள் தி.நகர் பி.சத்யா, வி.என்.ரவி, இயக்குநர்கள் ஆர்.வி.உதயகுமார், செந்தில்நாதன், நடிகர்கள் மன்சூர் அலிகான், ஜீவா, தாமு, கிங்காங், விஜய் கணேஷ், நாமக்கல் எம்ஜிஆர் ஆகியோர் மறைந்த நடிகை தமிழ் செல்வியின் திருவுருவ…
Read Moreகிளைமாக்ஸ் முதல் கதாபாத்திரங்கள் வரை “பெத்தி” படத்தில் பல ஆச்சரியங்கள் காத்திருக்கிறது – சிவராஜ்குமார் !!
கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள “பெத்தி” திரைப்படம் குறித்து அவர் பகிர்ந்துள்ள கருத்துகள் தற்போது ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிப்பில் உருவாகியுள்ள இந்த கிராமத்து ஆக்ஷன் திரைப்படத்தை இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் சுகுமார் ரைட்டிங்ஸ் வழங்கும் இப்படத்தை, விருத்தி சினிமாஸ் நிறுவனம் சார்பில் வெங்கட சதீஷ் கிலாரு மிக பிரம்மாண்டமாக தயாரித்துள்ளார். ஏற்கனவே வெளியான பாடல்கள் மற்றும் டிரெய்லர் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், ஜூன் 4ஆம் தேதி உலகம் முழுவதும் படம் வெளியாகிறது. இந்த படத்தில் “கௌர்நாயுடு” என்ற முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ள சிவராஜ்குமார், இப்படத்தின் கதை தான் தன்னை மிகவும் கவர்ந்ததாக தெரிவித்துள்ளார். குறிப்பாக தனது கதாபாத்திரத்திற்கு தெளிவான நோக்கம் மற்றும்…
Read Moreகார்த்தி – மீனாட்சி சௌத்ரி இணைந்து நடிக்கும் புதிய படம்
தென்னிந்திய சினிமாவின் மிகவும் பிரபலமான மற்றும் பல்துறை திறமைகள் கொண்ட நடிகர்களில் ஒருவரான கார்த்தி, தயாரிப்பாளர் சூர்யதேவரா நாக வம்சி தலைமையிலான பிரபலமான சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் நிறுவனத்துடன் இணைந்து புதிய தமிழ்-தெலுங்கு இருமொழி திரைப்படத்தில் நடிக்கிறார். இந்த படத்தை திறமையான இயக்குநர் கல்யாண் சங்கர் இயக்க, நடிகை மீனாட்சி சௌத்ரி கதாநாயகியாக நடிக்கிறார். #Karthi30 என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் பிரமாண்டமாக நடைபெற்றது. தற்போது படப்பிடிப்பு வேகமாக முன்னேறி வருகிறது. படத்தின் முக்கிய காட்சிகள் தீவிரமாக படமாக்கும் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. வாத்தி, லக்கி பாஸ்கர், விஸ்வநாத் & சன்ஸ் ஆகிய வெற்றிப் படங்களுக்கு பிறகு, சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் மீண்டும் ஒரு பிரமாண்டமான படைப்புடன் வருகிறது. தொழில்துறை வட்டாரங்களிலும், ரசிகர்கள் மத்தியிலும் ஏற்கெனவே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்தக் கூட்டணி பெரும்…
Read More100 மில்லியன் பார்வைகளைக் கடந்து சர்வதேச அளவில் மெகா ஹிட் அடித்துள்ள ஆரா 10/10!
பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே ஹிப்ஹாப் தமிழா கதை- திரைக்கதை-வசனம்- இயக்கத்தில் “மீசைய முறுக்கு-2” படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் ஹிப்ஹாப் தமிழா ஆதி, பாலிவுட் நடிகை கேட்டிகா சர்மா, சைத்ரா ஜே. ஆச்சார், யோகி பாபு, கருணாஸ், ஹர்ஷத் கான் , ‘ஆடுகளம்’ நரேன், நாசர், ரம்யா ரங்கநாதன், ஷா ரா உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம், மாதேஷ் மாணிக்கம் ஆகியோர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஹிப்ஹாப் தமிழா இசையமைத்திருக்கிறார். கமர்சியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை பென்ஸ் மீடியா பிரைவேட் லிமிடெட் மற்றும் அவ்னி மூவிஸ் ஆகிய நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் ஏ.சி.எஸ் அருண்குமார் மற்றும் குஷ்பூ சுந்தர் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் இறுதி கட்டப் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் தருணத்தில் டைட்டில் டீசர்- ஃபர்ஸ்ட் லுக் ஆகியவை…
Read Moreஇளைஞர்களின் காதல் வாழ்க்கையை புதுமையாக பேசும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!
AP இண்டர்நேஷனல் மற்றும் விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், அறிமுக இயக்குநர் விக்கி பாஸ்கர் இயக்கத்தில், “ஓஹோ எந்தன் பேபி” புகழ் ருத்ரா மற்றும் ப்ரீத்தி அஸ்ரானி நடிக்கும் “யெல்லோ யெல்லோ டர்டி ஃபெல்லோ” திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. குறும்படங்கள் மற்றும் திரைப்படங்களில் பணியாற்றிய அனுபவம் கொண்ட விக்கி பாஸ்கர், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். இன்றைய நவீன கால இளைஞர்களின் காதல் மற்றும் வாழ்க்கை முறையை மையமாகக் கொண்டு, மனதை வருடும் ஃபீல் குட் கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கியுள்ளார். தற்போது வெளியாகியுள்ள ஃபர்ஸ்ட் லுக்கில், இன்றைய Gen Z தலைமுறையின் வாழ்க்கை முறை, காதல் உறவுகள் மற்றும் அதனால் உருவாகும் சிக்கல்கள் புதுமையான முறையில் வெளிப்படுத்தப்பட்டுள்ளன. ஒரு நவீன கால காதலியிடம் மாட்டிக்கொள்ளும் அப்பாவி இளைஞன்…
Read More