‘லோகா’, ‘களம்காவல்’, ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ படங்களின் தொடர் வெற்றி – ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின்  ஹாட்ரிக் சாதனை!

மலையாளத் திரைப்படங்களை கேரளாவுக்கு அப்பால் இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு கொண்டு செல்லும் நோக்கில் செயல்பட்டு வரும் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், (Future Runup )  ‘லோகா’, ‘களம்காவல்’ மற்றும் ‘பெத்லகேம் குடும்ப யூனிட்’ ஆகிய படங்களின் தொடர் வெற்றியின் மூலம் விநியோகத் துறையில் முக்கிய இடத்தைப் பிடித்து வருகிறது. குறுகிய காலத்திலேயே குறிப்பிடத்தக்க விநியோக நிறுவனமாக உருவெடுத்துள்ள ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ், கேரளத்திற்கு வெளியே மலையாள சினிமாவுக்கான புதிய சந்தைகளை உருவாக்கும் முயற்சியில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. தயாரிப்பாளரும் நடிகருமான அருண் நாராயணன், நடிகரும் இயக்குநருமான திலீஷ் போத்தன் மற்றும் சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர் அனூப் குமார் ஆகியோரால் ஃபியூச்சர் ரன்அப் ஃபிலிம்ஸ் நிறுவப்பட்டது. ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் மலையாளத் திரைப்படங்களை விநியோகிப்பதில் கவனம் செலுத்திய இந்நிறுவனத்தின் முதல் வெளியீடாக டொவினோ தாமஸ் நடித்த ‘நரிவெட்டா’ திரைப்படம் அமைந்தது. தொடர்ந்து…

Read More

ஹிப்ஹாப் தமிழா ஆதி, கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் குரல்களில் உருவான காதல் திருமணப் பாடல்!

ஹிப்ஹாப் தமிழா ஆதியின் இயக்கம் மற்றும் நடிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய ‘மீசைய முறுக்கு 2’ திரைப்படத்தின் இசைக்கு ரசிகர்கள் மத்தியில் கிடைத்து வரும் வரவேற்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ‘ஆரா 10/10’, ‘பப்பாளி பழமே’, ‘கோயிந்தம்மா’, ‘அடி போடி’ ஆகிய பாடல்கள் ஏற்கனவே ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து சார்ட் பஸ்டர்களாக மாறியுள்ள நிலையில், தற்போது படத்தின் 5வது சிங்கிளான ‘கலைவாணியே’ பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை கௌஷிக் கிருஷ்ணா, டி. சத்யபிரகாஷ் மற்றும் ஹிப்ஹாப் தமிழா இணைந்து பாடியுள்ளனர். பாடலுக்கான வரிகளை ஹிப்ஹாப் தமிழா எழுதியுள்ளார். காதல், திருமணம் மற்றும் குடும்ப உணர்வுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்பாடல், படத்தின் கதையோட்டத்தில் முக்கியத்துவம் பெறும் பாடலாக அமைந்துள்ளது. குறிப்பாக, ‘கலைவாணியே’ பாடலில் ஹிப்ஹாப் தமிழா மற்றும் ரம்யா ரங்கநாதன் கதாபாத்திரங்களின் திருமண இணைவு அழகாக…

Read More

திரையரங்குகளில் செப்டம்பர் 17 ஆம் தேதி வெளியாகும் ‘என்ன விலை’ திரைப்படத்தின் மூலம் திரையுலகில் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் நடிகர் கருணாஸ்!

நடிகர் கருணாஸ், தமிழ் திரையுலகில் தனது 25 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்யும் தருணத்தில் வெளியாகவிருக்கும் ‘என்ன விலை’ திரைப்படம் அவரது திரைப்பயணத்தில் முக்கியமான மைல்கல். நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் என பல்வேறு பரிமாணங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தியுள்ள கருணாஸ், ‘என்ன விலை’ திரைப்படம் தனது திரைப்பயணத்தில் மிகவும் சிறப்பான இடத்தைப் பெற்றுள்ளதாக தெரிவித்துள்ளார். படம் குறித்து நடிகர் கருணாஸ் பகிர்ந்து கொண்டதாவது, “திரையுலகில் நான் 25 ஆண்டுகளை நிறைவு செய்யும் இந்த நேரத்தில், ‘என்ன விலை’ திரைப்படம் எனக்கு கிடைத்திருப்பது மறக்க முடியாத ஒன்று. உண்மையாக சொல்வதென்றால், கடந்த 25 ஆண்டுகளாக இப்படியொரு படத்திற்காகவும், இப்படிப்பட்ட ஒரு படக்குழுவிற்காகவும் நான் காத்திருந்தேன். இயக்குநர் சஜீவ் பழூர் என்னிடம் கதை சொன்னபோது, உடனே நடிக்க ஒப்புக்கொண்டேன். இது அழகான மற்றும் உணர்வுப்பூர்வமான கதை.…

Read More

’டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் பாடலான ‘டைகரியன் ரோர்’ பாடலில் ஹிருது ஹரூனின் எனர்ஜியும் கண்கவர் நடனமும் ரசிகர்களை கவர்ந்துள்ளது!

‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தின் முதல் சிங்கிளான ‘டைகரியன் ரோர்’ பாடல் வெளியாகியுள்ளது. குறிப்பாக, பாடலில் ஹிருது ஹரூனின் வசீகரிக்கும் திரையிருப்பு, தொற்றிக்கொள்ளும் உற்சாகம் மற்றும் எனர்ஜிட்டிக்கான நடனம் போன்றவை ரசிகர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளன. ‘தக்ஸ்’ திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான ஹிருது ஹரூன், மிகக் குறுகிய காலத்திலேயே தமிழ், மலையாளம் மற்றும் இந்தி திரையுலகில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து தனது திறமையை வெளிப்படுத்தியுள்ளார். ‘மும்பைகர்’, ‘ஆல் வீ இமேஜின் அஸ் லைட்’, ‘முரா’, ‘மைனே பியார் கியா’, ‘பேட் கேர்ள்’, ‘டியூட்’ உள்ளிட்ட படங்களில் மாறுபட்ட கதாபாத்திரங்களில் நடித்துள்ள அவர், நடிப்புக்கு முக்கியத்துவம் கொண்ட பல்வேறு கதாபாத்திரங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். இந்நிலையில், ‘டெக்ஸாஸ் டைகர்’ திரைப்படத்தில் கமர்ஷியல் என்டர்டெய்னர் ஹீரோவாக ஹிருது ஹரூன் களமிறங்குகிறார் என்பதையே ‘டைகரியன் ரோர்’ பாடல் எடுத்துக்காட்டுகிறது. முதல் பீட்டிலிருந்தே இந்தப்…

Read More

சூரி நடிக்கும் “மண்டாடி” திரைப்படம் வரும் செப்டம்பர் 10, 2026 அன்று இந்தியாவில் IMAX® ஃபார்மேட்டில் வெளியாகிறது– RS Infotainment அதிகாரப்பூர்வ அறிவிப்பு !!

RS Infotainment நிறுவனம் தயாரிப்பில் நடிகர் சூரி நடிப்பில் உருவாகியுள்ள அடுத்த திரைப்படமான “மண்டாடி”, வரும் செப்டம்பர் 10, 2026 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் நிலையில், இந்தியா முழுவதும் உள்ள IMAX® திரைகளிலும் வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இயக்குநர் மதிமாறன் புகழேந்தி இயக்கத்தில் உருவாகியுள்ள “மண்டாடி” திரைப்படம், பாரம்பரிய பாய்மரப் படகு போட்டி மற்றும் தமிழ்நாட்டின் கடலோர சமூகங்களின் கடல்சார் கலாச்சாரத்தை மையமாகக் கொண்ட விளையாட்டு ஆக்‌ஷன் டிராமாவாக உருவாகியுள்ளது. ஆழ்கடல் பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள இப்படம், IMAX®-ன் பிரமாண்டமான ஒலி மற்றும் காட்சித் தொழில்நுட்பத்தின் மூலம் கடலில் நடைபெறும் பரபரப்பான ஆக்‌ஷன் காட்சிகளையும், கதாபாத்திரங்களின் தீவிரமான உடல் உழைப்பையும் இந்தியா முழுவதும் உள்ள ரசிகர்களுக்கு பிரமாண்டமான அனுபவமாக வழங்க உள்ளது. தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறுகையில்.., “மண்டாடி திரைப்படத்தை மிகப்பெரிய…

Read More

‘மொத ராத்திரி’ தேவியாக மனம் கவர்ந்த பானுப்பிரியா – வெற்றிமாறன், மாரி செல்வராஜ், தனுஷ் படங்களில் அடுத்தடுத்து!

சமீபத்தில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற ‘மொத ராத்திரி’ திரைப்படத்தில் தேவி கதாபாத்திரத்தில் நடித்து கவனம் ஈர்த்தவர் நடிகை பானுப்பிரியா. சிறுவயதில் இருந்தே சினிமாவில் நடிக்க வேண்டும் என கனவு கண்டவர் லயோலா கல்லூரியில் விஸ்காம் முடித்திருக்கிறார். பக்ருதீன் மாஸ்டர் நாடக்குழுவில் இணைந்தவர் அங்கிருந்து முன்னணி மீடியா நிறுவனங்களில் வேலை செய்து பின்பு சினிமாவில் நுழைந்தார். தனது சினிமா பயணம் பற்றியும் ‘மொத ராத்திரி’ படம் குறித்தும் பானுப்பிரியா பகிர்ந்து கொண்டதாவது, “பக்ருதீன் சார் மூலமாக ‘கூழாங்கல்‘ திரைப்படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. அந்த திரைப்படம் பல சர்வதேச விருதுகளை வாங்கி குவிக்கும் என அப்போது நான் எதிர்பார்க்கவில்லை. என் கரியரில் அடுத்த நிலைக்கு போகும் வாய்ப்பாக ‘தாய் கிழவி’ படம் அமைந்தது. இப்போது ‘மொத ராத்திரி’ படத்தில் பக்ஸ் சாரின் மனைவி தேவி கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன்.…

Read More

‘நோவா’ — பேயா? அறிவியலா? காலத்தையே கேள்வி கேட்கும்  திரைப்படமா?

ராயல் ஃபார்ச்சுனா கிரியேஷன்ஸ் தயாரிப்பில், ரைசா வில்சன், துருவா, அத்விதி ஷெட்டி, சென்ராயன், ஹிரிதிகா பிஸ்வாஸ் மற்றும் “ஃபைனலி” சுவாதிகா நடிப்பில், மைலோ இயக்கத்தில் விரைவில் வெளிவரவிருக்கும் திரைப்படம் “நோவா” பெயரே வித்தியாசமாக இருக்கிறதே… அதைப் பற்றி தெரிந்துகொள்ள இயக்குநர் மைலோவிடம் கேட்டபோது, தமிழ் சினிமாவில் திகில் என்றாலே பேய், பங்களா, பழிவாங்கல் என்ற வழக்கமான பாதையைத் தாண்டி, காலம், மனிதர்களின் நினைவுகள், அறிவியல் மற்றும் பயம் ஆகியவற்றை ஒன்றிணைத்து ஒரு வித்தியாசமான உலகத்தை உருவாக்க முயற்சி செய்திருப்பதாகக் கூறுகிறார். பார்வையாளர்களுக்கு பதில்களை உடனடியாக வழங்காமல், படம் முழுவதும் கேள்விகளைத் தொடர்ந்து எழுப்பிக்கொண்டே செல்லும் வகையில் திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. “இந்தப் படத்தை ஒரு திகில் திரைப்படமாக மட்டும் பார்க்கக்கூடாது. பயத்தைப் பயன்படுத்தி ஒரு பெரிய மர்மத்தைச் சொல்லும் திரைப்படம் இது. பார்வையாளர்கள் படம் முடிந்த பிறகும் சில…

Read More

அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படம் செப்டம்பர் 25 முதல் இன்ஃபினிட்டி விஷன் திரையரங்குகளில் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில் மார்வெல் ஸ்டுடியோஸ் வெளியிடுகிறது!

மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி சாகாவின் பிரம்மாண்டமான இறுதிப்பகுதியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்- என்கோர்’ திரைப்படம் மீண்டும் பெரிய திரைக்கு வருகிறது. இந்தியா முழுவதும் ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய நான்கு மொழிகளில், வரும் செப்டம்பர் 25, 2026 முதல் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படம் ஐமேக்ஸ் மற்றும் மார்வெல் ஸ்டுடியோஸின் இன்ஃபினிட்டி விஷன் எனும் புதிய பிரீமியம் லார்ஜ் ஃபார்மட் (PLF) திரையரங்குகளிலும் வெளியாகிறது. பெரிய திரைகள், அதிக ஒளிர்வுடன் கூடிய காட்சிகள் மற்றும் சிறப்பான ஒலி அனுபவம் என ரசிகர்களுக்கு மிகச் சிறந்த சினிமா அனுபவத்தை இந்த இன்ஃபினிட்டி விஷன் வழங்குகிறது. சாதனைகளைப் படைத்த இந்த பிரம்மாண்ட திரைப்படத்தை மீண்டும் வெளியிடுவது, ரசிகர்களுக்கு மறக்க முடியாத சினிமா அனுபவத்தை மீண்டும் ஒருமுறை திரையில் காணும் வாய்ப்பை வழங்குகிறது. அதுமட்டுமின்றி, மிகவும் எதிர்பார்க்கப்படும் ‘அவெஞ்சர்ஸ்: டூம்ஸ்டே’ திரைப்படத்தின்…

Read More

குட்வில் எண்ட்ர்டெயின்மெண்ட்ஸ் நிறுவனம் வெளியிட்ட ‘ஆபரேஷன் டிரால்’ டீசர் பரபரப்பான என்ஐஏ அதிகாரி ஜெயசூர்யாவின் உலகத்திற்கு பார்வையாளர்களை அழைத்து செல்கிறது!

அறிமுக இயக்குநர் ரத்தீஷ் வேகாவின் ’ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் முதல் வீடியோ கிளிம்ப்ஸ் வெளியாகியுள்ளது. காஷ்மீரில் உயிரிழப்பை ஏற்படுத்திய கான்வாய் தாக்குதலை மையமாகக் கொண்ட பரபரப்பான விசாரணைக் கதையை இப்படம் மையமாகக் கொண்டுள்ளது. மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய ஐந்து மொழிகளில் டீசர் வெளியாகியுள்ளது. குட்வில் எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்திருக்கும் பான் இந்தியன் இன்வெஸ்டிகேட்டிவ் ஆக்‌ஷன் த்ரில்லரான ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டீசர் மலையாளம், இந்தி, தமிழ், தெலுங்கு மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகியுள்ளது. ஆபத்தான ஒரு பணியின் பின்னணியில் நடைபெறும் பரபரப்பான சம்பவங்களின் அறிமுகம் இந்த டீசரில் இடம்பெற்றுள்ளது. என்ஐஏ அதிகாரியாக ஜெயசூர்யா கதாநாயகனாக நடித்துள்ளார். விசாரணையும் தேசிய பாதுகாப்பும் ஒன்றிணையும் பதற்றமான உலகத்திற்குள் பார்வையாளர்களை இந்த டீசர் அழைத்துச் செல்கிறது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தின் மையக்கருவை சுற்றி…

Read More

தந்தை, மகன் உறவை பேசும் ஆழமான உணர்வுப்பூர்வ பயணம் ‘ஃபாதர்’ திரைப்பட டீசருக்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு!

பிரபல இயக்குநர் R. சந்துரு தயாரிப்பில் உருவாகியுள்ள பெரும் எதிர்பார்ப்புக்குரிய திரைப்படம் ‘ஃபாதர்’. இப்படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பைப் பெற்று வருகிறது. தந்தை – மகன் இடையேயான ஆழமானதும், பல நேரங்களில் வார்த்தைகளால் வெளிப்படுத்தப்படாததுமான உறவை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள இப்படத்தின் டீசர், படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டார்லிங் கிருஷ்ணா மற்றும் பன்முகத் திறமை கொண்ட திரை ஆளுமை பிரகாஷ் ராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள இப்படத்தை ராஜ்மோகன் இயக்கியுள்ளார். டீசர், படத்தின் உணர்வுப்பூர்வமான உலகத்தைப் பற்றிய சுவாரஸ்யமான பார்வையை வழங்குவதோடு, கதையின் மையமாக இருக்கும் தந்தை – மகன் உறவு குறித்த ஆர்வத்தையும் ஏற்படுத்தியுள்ளது. டீசர் படத்தின் முழுக் கதையையும் வெளிப்படுத்தாமல், அதன் உணர்வுப்பூர்வமான களத்தையும், முன்னணி நடிகர்களின் வலுவான நடிப்பையும் மட்டும் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் சமூக…

Read More