பெரும் எதிர்பார்ப்பிலிருக்கும்  “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!

குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான “கேம் சேஞ்சர்” படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…

Read More

பா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி

இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார். இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குனர்…

Read More

‘மாஸ் மகாராஜா’ டாக்டர். சிவராஜ்குமார் தனது புதிய மெகா பட்ஜெட் படத்திற்காக ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் உடன் இணைகிறார்!

கன்னடத் திரையுலகின் பெருமையான டாக்டர். சிவராஜ்குமார் தனது ஹாட்ரிக் வெற்றியின் மூலம், தான் பாக்ஸ் ஆபிஸ் கிங் என்பதை மீண்டும் நிரூபித்துள்ளார். ‘சூப்பர்ஸ்டார்’ ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தில் தனது மாஸ் நடிப்பால் தமிழ் ரசிகர்களின் இதயங்களைக் கவர்ந்தார். பின்னர், தனுஷின் ‘கேப்டன் மில்லர்’ படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்தார். அவரது திரைப்படங்கள் தற்போது தமிழ் மற்றும் பிற மொழி ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. மிக அரிதாக, நடிகர்களை அவர்கள் நடிப்பிற்காக மட்டுமல்லாது அவர்களின் இயல்புக்காகவும் நேசிக்கப்படுகிறார்கள். டாக்டர். சிவராஜ்குமார் அத்தகைய நடிகர்களில் ஒருவர். அவர் #MB என்ற மெகா பட்ஜெட் படத்தில் விரைவில் பணியாற்ற உள்ளார். மும்பையை சேர்ந்த ADD-ONE பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. தயாரிப்பாளர்கள் மனோஜ் பனோட் மற்றும் கெம்சந்த் காட்கி ஆகியோர் பெரிய அளவிலான நிகழ்வுகளை…

Read More

கௌரவத்தின் சின்னமாக கவனம் ஈர்க்கும்  நடிகர் பிரஜ்வல் தேவராஜின் ‘கரவாலி’ பட டீசர்

‘அது சாதாரண நாற்காலி அல்ல. கௌரவத்தின் சின்னம்’ எனும் பின்னணி குரலுடன் வெளியாகி இருக்கும் நடிகர் பிரஜ்வல் தேவராஜ் நடிக்கும் ‘ கரவாலி ‘ படத்தின் டீசர் பார்வையாளர்களின் கவனத்தை கவர்ந்திருக்கிறது.‌ இந்திய திரையுலகில் 2025 ஆம் ஆண்டில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் திரைப்படம் ‘கரவாலி’. இப்படத்தின் போஸ்டர்கள் மற்றும் டீசர் வெளியாகி பெரும் ஆர்வத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த தருணத்தில் புத்தாண்டை முன்னிட்டு இப்படத்தின் தயாரிப்பாளர்கள் அதிரடியான புதிய டீசரை வெளியிட்டு, சினிமா ரசிகர்களை கவர்ந்துள்ளனர். குரு தத் கனிகா இயக்கத்தில் ‘டைனமிக் பிரின்ஸ்’ பிரஜ்வல் தேவராஜ் நடித்துள்ள ‘கரவாலி’ படத்தின் தனித்துவமான டீசர்.. இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை எகிற வைத்திருக்கிறது. பொதுவாக டீசரில் கதாநாயகன்- கதாநாயகி அல்லது முன்னணி கதாபாத்திரத்தின் மீது கவனம் செலுத்துவார்கள். ஆனால் ‘கரவாலி’ படத்தின் அண்மைய டீசரில் கௌரவம் என்ற…

Read More

கலாமயா பிலிம்ஸ் ஜிதேஷ் வி வழங்கும் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ்-நிமிஷா சஜயன் நடிக்கும் ’என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!

இயக்குநர் சஜீவ் பழூர் இயக்கத்தில் கருணாஸ் மற்றும் நிமிஷா சஜயன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள சோஷியல்- பொலிட்டிகல்- திரில்லர் படமான ‘என்ன விலை’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. ராமேஸ்வரம், சென்னை, பாண்டிச்சேரி மற்றும் கொச்சி உள்ளிட்ட 56 இடங்களில் மூன்று ஷெட்யூல்களில் படமாக்கப்பட்டுள்ளது. கலாமயா பிலிம்ஸ் தயாரிப்பாளர் ஜிதேஷ் வி கூறும்போது, ”திறமையான இந்த அணியுடன் இணைந்து பணிபுரிந்ததில் நான் மகிழ்ச்சி அடைகிறேன். தான் எடுத்து நடித்திருக்கும் கதாபாத்திரத்திற்கு நியாயம் சேர்த்திருக்கிறார் நடிகர் கருணாஸ். அவரது அர்ப்பணிப்பு பரவலான பாராட்டுகளையும், ஏராளமான விருதுகளையும் பெற்றுத் தரும் என்பதில் உறுதியாக உள்ளேன். நடிகை நிமிஷா சஜயனும் இந்த கதாபாத்திரத்திற்காக கடுமையான அர்ப்பணிப்புடன் கூடிய நடிப்பைக் கொடுத்திருக்கிறார். இயக்குநர் சஜீவ் பழூருக்கு தமிழ் திரைப்படங்கள் மீது பெரும் காதல் உள்ளது. இந்தப் படத்தில் நிச்சயம் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி…

Read More

மனிதத்தை முன்னே வைப்போம்! அரசியலை பின்னே வைப்போம்!! இயக்குனர் பேரரசு அறிக்கை…

இன்று சாட்டையடி போராட்டத்தை கிண்டலடிக்கும் பல நூறு வாய்களில் ஒரு வாய் கூட அண்ணா பல்கலைக்கழகத்தில் சீரழிக்கப்பட்ட பெண்ணிற்காக ஒரு கண்டனம் கூட தெரிவிக்காத வாய்கள்தான் இவைகள்! கற்பழிக்கப்பட்ட பெண்ணுக்கு ஆதரவான இந்தப் போராட்டம் இவர்களுக்கு நகைச்சுவையாகவும், கிண்டலாகவும் தெரிகிறது என்றால் இவர்கள் எப்படிப்பட்ட மனநிலையில் வாழ்கிறார்கள் என்று தெரியவில்லை? காம குற்றவாளிக்கு எதிரான போராட்டத்தை கிண்டல் செய்வது அவனவன் அவன் முகத்தில் செருப்பால் அடித்துக் கொள்வதற்கு சமம்! இதுவே இவர்களின் சகோதரியை ஒருவன் சீரழித்து, சீரழித்தவன் தன் கட்சிகாரனாக இருந்தால் அவனுக்கு இந்த குரல்கள் ஆதரவாக இருக்குமா? வன்மத்தை கக்கும் வாடகைக்கு கத்தும் இந்த வாய்கள் இப்படி கிண்டலடிக்குமா? பாலியல் குற்றம் செய்தவன் எந்தக் கட்சிக்காரனாக இருந்தாலும் அவன் அனைவராலும் கண்டிக்கப்பட வேண்டிய குற்றவாளி! கட்சிப் பார்த்து கண்டிப்பது மனிதகுணத்துக்கு முரணானது. போராட்டம் எப்படிப்பட்டது என்பது…

Read More

” திருக்குறள் ” படத்திற்காக இசை ஞானி இளையராஜா வித்தியாசமான இசையை கொடுத்திருப்பதாக படக்குழுவினர் பெருமிதம்

பெருந்தலைவர் காமராஜர் வாழ்க்கை வரலாற்றை ‘காமராஜ்’ என்ற பெயரில் திரைப்படமாகத் தயாரித்த ‘ரமணா கம்யூனிகேஷன்ஸ்’ நிறுவனம், தற்போது மிகப் பிரம்மாண்டமாகத் ‘திருக்குறள்’ என்ற திரைப்படத்தைத் தயாரித்துள்ளது. அறம் சார் வாழ்வியலை மானுடர்க்கு போதிப்பதில் உலகில் முன்னிலை வகிக்கும் நூல் திருக்குறள். திருக்குறளின் முப்பாலை மையக் கருவாகக் கொண்டு, இப்படத்திற்கான திரைக்கதை எழுதப்பட்டுள்ளது. படைப்பினூடாக படைப்பாளியைக் கண்டடையும் முயற்சியில் திருவள்ளுவரும் இப்படத்தில் ஒரு பாத்திரமாக வருகிறார். கூடவே வாசுகியும், அதோடு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழரின் வாழ்வியலும் இத்திரைப்படத்தில் முக்கிய அங்கம் வகிக்கிறது. காதலோடு, வீரமும் தமிழர் வாழ்வில் பிரிக்க முடியாத ஒன்றாகும். அன்றைய தமிழரின் வீரத்தைப் பறைசாற்றும் போர்க்களக் காட்சிகளும் மிகுந்த பொருட்செலவில் படமாக்கப்பட்டுள்ளன. இசை கோப்பு பணிகள் முடிந்துவிட்ட நிலையில் இசைஞானி இளையராஜாவை சந்தித்து விட்டு இயக்குனர் பாலகிருஷ்ணன் பகிர்ந்தவை…. இத்திரைப்படத்தைப் பார்த்த இசைஞானி இளையராஜா,…

Read More

ஹபீபி படத்தின் பாடலை வெளியிட்ட தமிழக முதலமைச்சர்!

இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபாவின் நூற்றாண்டு விழாவை தமிழக அரசு மிகச் சிறப்பாக கொண்டாடி வருகிற வேளையில் வி. ஹவுஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி வழங்க, நேசம் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரித்த ‘ஹபீபி ‘ திரைப்படத்தில் செயற்கை நுண்ணறிவு (A I ) தொழில் நுட்பத்தில் இசைமுரசு நாகூர் E.M ஹனீஃபா குரலில் யுகபாரதியின் வரிகளில் சாம் .C.S. இசையில் ஒரு பாடலை உருவாக்கியுள்ளது படக்குழு. இப்படப் பாடலை மாண்புமிகு தமிழக முதல்வர் திரு. மு.க ஸ்டாலின் வெளியிட, அமைச்சர் பெருமக்கள், கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இந்த படத்தை மீரா கதிரவன் இயக்கி உள்ளார்.  

Read More

இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ்

பிரபல இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜை பின்பற்றி அவரது மகன் சாமுவேல் நிக்கோலசும் இசை உலகத்தில் அடியெடுத்து வைத்துள்ளார். சாமுவேல் நிக்கோலஸ் இசையமைத்து, பாடி, நாயகனாக நடித்துள்ள இளமைத் துள்ளும் ‘ஐயையோ’ பாடலை முன்னணி இசை நிறுவனமான திங்க் மியூசிக் வெளியிட்டுள்ளது. இப்பாடல் பல்வேறு தரப்பினரின் பாராட்டுகளை பெற்று வருகிறது.   இக்கால இளைஞர்களின் கொண்டாட்டத்தை உற்சாகம் மற்றும் குதூகலம் குன்றாமல் பதிவு செய்யும் பாடலான ‘ஐயையோ’ மாறுபட்ட குணாம்சங்கள் கொண்ட பெண்களை பற்றியதாகும். ஒரு புதுமுகம் போன்று இல்லாமல் இசையிலும், பாடுவதிலும், நடிப்பிலும் தனது முத்திரையை பதித்துள்ளார் சாமுவேல் நிக்கோலஸ். பாடலைப் பற்றி பேசிய சாமுவேல் நிக்கோலஸ், “ஏழாம் அறிவு படத்தில் கோரஸ் பாடகராக இசைப் பயணத்தை தொடங்கிய நான், எனது தந்தையாரின் இசை நிகழ்ச்சிகளில் கித்தார் கலைஞராகவும் பாடகராகவும் பங்காற்றி இருக்கிறேன். ‘தேவ்’ திரைப்படத்தின் பின்னணி…

Read More

2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமான பாகீரா 25 டிசம்பரிலிருந்து டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் மட்டுமே ஸ்ட்ரீம் செய்யப்படும்

KGF, காந்தாரா மற்றும் சலார் போன்ற சினிமா மைல்கற்களை வழங்கியபின் ஹொம்பாலே பிலிம்சின் சிறப்புத்தன்மையின் பாரம்பரியம் பாகீராவுடன் தொடர்கிறது. தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியிடப்பட்டவுடன் இப்படம் 2024 ஆண்டின் மிக அதிக வசூலை பெற்ற கன்னட படமாக மாறியது. இந்த சமூக காவலன் திரில்லர், உலகெங்கிலுமுள்ள ரசிகர்களுக்காக தனது உலகளாவிய டிஜிட்டல் பிரவேசத்தின் மூலம் ஹிந்தியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் 25 டிசம்பரிலிருந்து அரங்கேறவிருக்கிறது. டாக்டர் சூரியால் இயக்கப்பட்டு பிரஷாந்த் நீல்-ஆல் எழுதப்பட்ட பாகீரா படம், தங்கப்பதக்கம் வென்ற மற்றும் நீதித்துறையின் வரம்புகளினால் மனமயக்கமுற்று சமூக காவலராகும் IPS அதிகாரியான வேதாந்தின் (ஸ்ரீமுரளி) கதையை கூறுகிறது. வேதாந்த் பாகீராவின் முகமூடியை அணிந்த பின் அவர் மிக சக்திவாய்ந்த வில்லனையும் (கருடா ராம்) அயராத ஒரு CBI அதிகாரியையும் (பிரகாஷ் ராய்) நீதிக்கான போர்க்களத்தில் எதிர்கொள்கிறார். அதிரடி காட்டும் ஆக்ஷன்…

Read More