அஜீத்குமார் சம்பளத்துக்காக வியாபாரம் செய்யப்பட்ட வலிமை

நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும் மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்றும், அதன் பின் படத்தின் வியாபாரம், புரமோஷன் வேலைகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 29ஆம் தேதி இரவு வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் மதுரை கோபுரம் சினிமாஸ் ஆகியோருக்கு கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார். நேர்கொண்ட பார்வை…

Read More

நேர்கொண்ட பார்வை வக்கில் சாப் ஆக தெலுங்கில் ரீமேக்கானது

ஒரு மொழியில் பெரிய வெற்றியைப் பெரும் படங்கள் மற்ற இந்திய மொழிகளில் ரீமேக் செய்யப்படும். அப்படி, இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான திரைப்படம் பிங்க். பாலிவுட்டில் மிகப்பெரியளவில் கவனம் ஈர்த்தது. மிகப் பெரிய வெற்றியையும் பெற்றது. இந்நிலையில், படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் இந்தக் கதையை தமிழுக்கு எடுத்துவந்தார். சர்ப்ரைஸ் விஷயம் என்னவென்றால், ஒரு ரீமேக் படத்தில் நடிக்க அஜித் ஒப்புக் கொண்டார். அதன்பிறகு, அஜித், ஷ்ரத்தா கபூர் நடிப்பில் நேர்கொண்டப் பார்வை திரைப்படம் உருவானது. வயதான லுக்கில் அஜித் நடித்திருந்தார். பின்னணி இசையில் யுவன் ஷங்கர் ராஜா மிரட்டியிருப்பார். படத்தை ஹெச்.வினோத் இயக்கியிருந்தார். தமிழுலும் பெரிய வெற்றியைப் பெற்றது. பிங்க் படத்துக்கும் நேர்கொண்டப் பார்வைப் படத்துக்கும் இடையே திரைக்கதையில் சில வித்தியாசங்கள் இருந்தது. தமிழின் உச்ச நடிகர் அஜித் என்பதால், அவருக்கென ஒரு காதல்…

Read More

வலிமை படத்தில் சில மாற்றங்கள்

அஜித் ரசிகர்கள் மத்தியில் வலிமை படம் குறித்த மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. படத்திலிருந்து ஒரு ஸ்டில்லாவது வெளியாகிவிடாதா என தவியாய் தவித்து வருகிறார்கள். சமீபத்தில் தயாரிப்பாளர் போனிகபூர் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், அஜித் 50வது பிறந்த தினமான மே 1ஆம் தேதி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகும். அதன்பிறகு, படம் குறித்த அப்டேட்டுகள் ஒன்றன்பின் ஒன்றாக வரும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்த தகவலுக்கு பிறகே, அஜித் ரசிகர்கள் பெருமூச்சு விட்டனர். படத்துக்கான 90சதவிகித படப்பிடிப்பு முடிந்துவிட்டது. இன்னும், ஸ்பெயின் நாட்டில் எடுக்க வேண்டிய ஆக்‌ஷன் காட்சிகளை எடுத்துமுடித்துவிட்டால் மொத்தப் படமும் முடிந்துவிடும். இதுவரை படமாக்கப்பட்ட காட்சிகளுக்கான ஃபைனல் எடிட்டையும் முடித்துவிட்டார்கள் படக்குழுவினர். சமீபத்தில், டப்பிங் மற்றும் பின்னணி இசை கோர்ப்பு செய்யப்படாத முழு படத்தையும் படக்குழுவினர்கள் பார்த்திருக்கிறார்கள். அதோடு, நெருங்கிய வட்டாரத்தினர் சிலரும் படத்தைப்…

Read More

சசிகுமார் பெருமைப்படுத்திய கவிஞர்

சினிமாவில் சக கலைஞர்களின் திறமையை, வெற்றியை அங்கீகரிப்பது, உரிய நேரத்தில் வாழ்த்துவது மிக மிக குறைவு இதில் இருந்து வித்தியாசப்பட்ட மனிதராக, இயக்குனராக, நடிகராக தன்னை வெளிப்படுத்தி வருகிறார் நடிகர் சசிகுமார் தன் குருநாதர் இயக்குனர் பாலாவின் குருநாதர் பாலுமகேந்திராபட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பதை அறிந்து அவருக்கு பொருளாதார ரீதியாக உதவி செய்ய மற்றவர்கள் முயற்சித்தபோது”தலைமுறைகள்” படத்தை தயாரித்து அந்த படத்தில் நடித்து இயக்கும் வாய்ப்பை இயக்குனர் பாலுமகேந்திராவுக்கு உருவாக்கி கொடுத்து பெருமைப்படுத்தியவர் சசிக்குமார் வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், சீமராஜா படங்களைத் தொடர்ந்து பொன்ராம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ள படம் எம்.ஜி.ஆர் மகன். சசிகுமார், சத்யராஜ், சமுத்திரக்கனி, மிர்ணாளினி மற்றும் பலர் நடிப்பில் தயாராகியுள்ள இப்படத்தின் மூலம் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோணிதாசன் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார். எம்.ஜி.ஆர் மகன் படத்தின் பாடல்கள் சமீபத்தில்…

Read More

இயக்குனர் சரவண சக்தி மீது தயாரிப்பாளர் சிங்காரவேலன் “கதை திருட்டு”குற்றசாட்டு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளரும், தமிழ்நாடு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க துணை தலைவருமான சிங்காரவேலன் நாயகன், பில்லா பாண்டி படங்களை இயக்கியவரும், நடிகருமான சரவண சக்தி மீது கதை திருட்டு குற்றசாட்டு சுமத்தியுள்ளார் இது சம்பந்தமாக அவர் விடுத்துள்ள அறிக்கையில் கொரானா ஊரடங்கின்போது என்னை தொடர்பு கொண்ட துணை நடிகர் மற்றும் இயக்குனருமான சரவணஷக்தி படப்பிடிப்பு இல்லாததால் பொருளாதார ரீதியாக சிரமப்படுவதாகவும், பணஉதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்”மீன் வாங்கி கொடுப்பதை காட்டிலும் மீன்பிடிக்க கற்றுகொடுப்பது சிறப்பானது” என்கிறகொள்கையுடையவன்நான் அதனால் நான்ஒரு கதை சொல்கிறேன் அதற்கு திரைக்கதை அமைத்து தாருங்கள் அதற்காக  50,000 ம் ரூபாய் சம்பளம் தருவதாகவும் கூறினேன் அதற்கு சரவண சக்தி  சம்மதித்தார் “எல்லாம் அவன் செயல்” “பைரவா” படங்கள் பாணியில் மருத்துவ கல்லூரி மாணவியை அந்த கல்லூரி உரிமையாளர், மற்றும் தாளாளர் இருவரும் கற்பழித்து கொலை செய்துவிடுகிறார்கள்…

Read More

கல்லாகட்டும் காட்ஸில்லா வெர்சஸ் காங்

மான்ஸ்டர்வெர்ஸ் பட வரிசையின் அடுத்த படமான ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ உலகம் முழுவதும் வெளியாகி பட்டையைக் கிளப்பி வருகிறது. லெஜண்ட்ரி பிக்சர்ஸ் நிறுவனத்தின் மான்ஸ்டர்வெர்ஸ் (MonsterVerse) வரிசையில் நான்காவது படமாக ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ என்ற திரைப்படம் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ‘காட்ஸில்லா’ (2014), ‘காங்: தி ஸ்கல் ஐலேண்ட்’ (2017), ‘காட்ஸில்லா: கிங் ஆஃப் மான்ஸ்டர்ஸ்’ (2019) உள்ளிட்ட படங்கள் வெளியாகி அமோக வரவேற்பு பெற்றன. இந்த வரிசையில் தற்போது ‘காட்ஸில்லா வெர்சஸ் காங்’ வெளியாகியுள்ளது. ஆடம் விங்கார்ட் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்தப் படம் கோவிட் லாக்டெளனுக்குப் பிறகு வெளியான ஹாலிவுட் படங்களிலேயே அதிக வசூலை ஈட்டியுள்ள படம் என்னும் பெருமையைப் பெற்றுள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரையில் மட்டும் வெளியான முதல் நாளிலேயே பல கோடி வசூலைக் குவித்துள்ளது. காட்ஸில்லா படத்துக்கும், கிங்காங் படத்துக்கும் தனித்தனியாக பெரிய…

Read More

இசையமைப்பாளர் ரஹ்மானின் இந்தி எதிர்ப்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் கதை எழுதி தயாரித்திருக்கும் படம் 99 பாடல்கள். இந்தப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று (மார்ச் 25,2021) நடந்தது. இயக்குநர் ஷங்கர், சிவகார்த்திகேயன்,யுவன் ஷங்கர் ராஜா, ஜி.வி.பிரகாஷ், அனிருத், எஸ்.ஜே.சூர்யா உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்நிகழ்ச்சியில் இந்தித் திணிப்பை எதிர்க்கும் வகையில் ஏ.ஆர்.ரகுமான் நடந்துகொண்டது பெரும் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. ஏ.ஆர்.ரகுமானிடம் தமிழில் பேசி விட்டு அருகே இருந்த படத்தின் நாயகனிடம் இந்தியில் பேசுகிறார் நெறியாளர். சட்டென புருவம் உயர்த்தும் ஏ.ஆர்.ரகுமான், “இந்தி?” எனக்கேட்டுவிட்டு இந்தியில் பேசியவரிடமிருந்து விலகிப் போய் தூர நிற்கிறார். கரகோஷம் அரங்கை அதிர வைக்கிறது. மேடையிலிருந்து இறங்குகையில் நெறியாளரை பார்த்து, “தமிழ் தெரியுமான்னு அப்பவே கேட்டேன்ல!” என்கிறார் ஏ.ஆர்.ரகுமான்.’அந்த இன்னொரு நபரை வரவேற்கவே இந்தி.. மன்னித்து விடுங்கள்’ என்கிறார் நெறியாளர். தமிழின் முக்கியத்துவத்தை உணர்த்தும் அக்காணொளி பலராலும் பகிரப்பட்டு வருகிறது. மகாதானம்…

Read More

அன்பு கலந்த நன்றிகள் – ஓமை கடவுளேஅசோக் செல்வன்

நடிகர்கள் மட்டுமே, ஒரு பிறப்பில் பல வாழ்க்கை பாத்திரங்கள் வாழ ஆசிர்வதிக்கப்பட்டவர்கள். ஒவ்வொரு படத்திலும் ஒவ்வொரு புதிய பிறப்பாக  பிறந்து, அதில் வாழ்ந்து பார்க்கும், ஆசி அவர்களுக்கு கிடைக்கிறது. இந்த சுழற்சி திரையில் தொடர்ந்து நிகழ்ந்து கொண்டே இருந்தாலும் சிலது மட்டுமே  நடிகர்களின் மனதிற்கு நெருக்கமான பாத்திரமாக இருக்கும். அதில் சில பாத்திரங்கள் வசூலில்  மிகப்பெரும் வெற்றியை பெறுகிறது. சில பாத்திரங்கள் விமர்சகர்களிடம் சிறப்பான பாராட்டுகளை பெறுகிறது. சில பாத்திரங்களை ரசிகர்களின் நெஞ்சங்களை கவர்கிறது. மிக சொற்பமான பாத்திரங்களே அனைத்து வகையிலும் முழுமையடைகிறது. அம்மாதிரியான பாத்திரங்கள் நடிகர்களின் அடையாளமாகிவிடும். என்னுடைய “மரக்கர் அரபிக்கடலிண்டே சிம்ஹம்” அந்த   வகையிலான ஒரு அழகான திரைப்படம். இந்திய அளவில்  எல்லாவகையிலும் சிறந்ததொரு நடிகரென, புகழ்பெற்ற நடிகர் மோகன்லால் அவர்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்த  போது, நான் மிகப்பெரும் மகிழ்ச்சியடைந்தேன். அந்த நொடியை…

Read More

மஞ்சனத்தியாக மாறிய பண்டாரத்தி பாடல்

கர்ணன் படத்தில் பண்டாரத்தி பாடல்வரிகள் மாற்றப்பட்டது சம்பந்தமாக படத்தின் இயக்குனர் மாரிசெல்வராஜ் வெளியிட்டிருக்கும் அறிக்கை கர்ணன் திரைப்படம் தொடங்கிய நாளிலிருந்து இன்று வரை நீங்கள் அளித்துவரும் ஆதரவும் நம்பிக்கையும் எனக்கு பெரும் உத்வேகத்தையும் மகிழ்ச்சியையும் அளிக்கிறது. ஒரு இளம் இயக்குநரான என் மீதும் நீங்கள் காட்டும் எதிர்பார்ப்பும் மரியாதையும் தான் சினிமா என்னும் மாயக்கலையை எவ்வளவு பொறுப்போடு நான் அணுக வேண்டும் என்பதை எனக்கு கற்றுகொடுக்கிறது. அத்தகைய பொறுப்புணர்ச்சியோடும் கலைத்தன்மையோடும்தான் நான் என் காட்சி படிமங்களை பெரும் சிரத்தையோடு உருவாக்குகிறேன். பண்டாரத்தி புராணமும் அப்படி உருவாக்கபட்டதுதான். சொந்த அத்தையாக அக்காவாக ஆச்சியாக பெரியம்மாவாக என் நிலத்தோடும் என் இரத்தத்தோடும் கலந்து காலத்தின் தேவதைகளான பண்டாரத்திகளின் கதைகளைத்தான் நான் என் திரைக்கதையின் கூழாங்கற்களாக சிதறவிட்டு காட்சிபடுத்தினேன். ஆனால் நம் சமூக அடுக்குமுறை உளவியலில் சில பெயர்கள் ஏற்படுத்தும் தாக்கம்…

Read More

காடன் திரைப்பட விமர்சனம்

இயற்கை வளங்களை அழிக்கும் கார்ப்பரேட் நிறுவனங்களும் மக்களின் எதிர்ப்பும் என்ற ஒன்லைனில் யானைகளின் வாழ்க்கைப் போராட்டத்தை கலந்துகட்டி, தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தியில் தயாராகியுள்ள ‘காடன்.’ அஸ்ஸாமில் காட்டைக் கூறுபோட்டு யானைகளின் வாழ்வாதாரத்தை அழித்த உண்மைச் சம்பவத்தை மையப்படுத்தி,  பிரமாண்ட காட்சிகளோடு இயக்கியிருக்கிறார் பிரபு சாலமன். அது யானைகள் சுதந்திரமாக வாழ்ந்து வருகிற பல கிலோ மீட்டர் சுற்றளவுள்ள அந்த அடர்ந்த காடு. அந்த காட்டையும், காட்டில் வாழ்கிற உயிரினங்களை குறிப்பாக யானைகளை தனி மனிதனாக – தனது சொந்த குழந்தைகளைப் போல் கட்டிக் காக்கிற மனிதன் ‘காடன்.’ பல நூறு பேருக்கு வேலை வாய்ப்பு தருகிற நிறுவனம் கட்டுவதாக சொல்லி அந்த காட்டை அழிக்கிற முயற்சியில் ஈடுபடுகிறார் செல்வாக்கு மிகுந்த அமைச்சர் ஒருவர். அந்த நிறுவனத்தின் கட்டுமானப் பணிகள் தொடங்கும்போது யானைகளின் வழித்தடம் தடுக்கப்பட்டு யானைகள்…

Read More