நேர்கொண்ட பார்வை படத்தைத் தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் படம் ‘வலிமை’. போனி கபூர் தயாரிக்கும் இந்தப் படத்தின் ஒளிப்பதிவாளராக நீரவ்ஷா, இசையமைப்பாளராக யுவன் ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். ஸ்பெயின் நாட்டில் இன்னும் சில நாட்கள் படப்பிடிப்பு முடிந்தால் ‘வலிமை’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பு வேலைகளும் முடிந்துவிடும்
மே 1 ஆம் தேதி அஜித்தின் 50 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ‘வலிமை’ படத்தின் முதல் பார்வை வெளியாகும் என்றும், அதன் பின் படத்தின் வியாபாரம், புரமோஷன் வேலைகள் தொடங்கப்படலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மார்ச் 29ஆம் தேதி இரவு வலிமை படத்தின் தயாரிப்பாளர் போனிகபூர் வெளியிட்டுள்ள அறிவிப்பில், எங்கள் வலிமை படத்தின் தமிழக திரையரங்கு உரிமையை ரோமியோ பிக்சர்ஸ் ராகுல் மற்றும் மதுரை கோபுரம் சினிமாஸ் ஆகியோருக்கு கொடுத்திருக்கிறோம் என்று கூறியிருந்தார்.
நேர்கொண்ட பார்வை படத்தை வெளியிட்டவர்களை ஒருங்கிணைத்து மும்பை வரை அழைத்து சென்று வந்தவர் ராகுல் அதுவரையிலும் சாதாரண மீடியேட்டராக அறியப்பட்டார், பின்னர் நேர்கொண்ட பார்வை படம் மூலம் தமிழ் சினிமாவில் உயர்மட்ட தொடர்பாளர்களில் ஒருவர். ஆனால் அந்தப்படத்தின் வரவு செலவில் போனி கபூருக்கு உண்மையான கணக்குகள் சென்றடையவில்லை என்கிற விவாதம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பிரபலம்
இந்த சூழ்நிலையில் வலிமை படத்தின் தமிழக உரிமை விஷயத்தில் ராகுல் முன்னிலைப் படுத்தபட்டுள்ளா.ர் தமிழ் சினிமாவில் தயாரிப்பு, பைனான்ஸ், விநியோகம் இவற்றில் தனிப்பெரும் சக்தியாக இருந்து வரும் சி.என். அன்புசெழியன் இரண்டாம் நபராகக் குறிப்பிடப்பட்டிருப்பது பல்வேறு வினாக்களை கோடம்பாக்கம் சினிமாவில் எழுப்பியது
வலிமை படத்திற்கு வாங்கிய முன்பணத்தில் ராகுல் தரப்புக்கு போனி கபூர் பாக்கி கொடுக்க வேண்டி இருப்பதால் வலிமை படத்தை 60 கோடி ரூபாய் முன் தொகை பெற்றுக்கொண்டு கொடுத்திருப்பதாகவும், அந்த தொகையும் மதுரை அன்புச்செழியனிடம் ராகுல் கடனாகப் பெற்றுள்ளதால் அவரை சேர்த்திருப்பதாகக் கூறப்படுகிறது
நள்ளிரவு நேரத்தில் வலிமை படத்தின் வியாபாரம் முடிந்ததாக அறிவித்தது போனி கபூர் நட்பு, அலுவலக வட்டாரங்களையே அதிர வைத்திருக்கிறது. படம் முடிவடையும் முன்னரே இவ்வளவு அவசரமாக வியாபாரத்தை முடித்து அறிவிப்பதற்கு என்ன காரணம் என்ற கேட்ட போது,
உண்மையில் வலிமை படம் அடமான பொருளாக மாற்றப்பட்டிருக்கிறது என்பதுதான் பொருத்தமானது. கொரோனாவுக்கு பின் வலிமை படத்தின் படப்பிடிப்பு நடைபெற்ற போது இதே கூட்டணியில் அடுத்த படத்தையும் தயாரிக்கலாம் என்று அஜித்குமார் தரப்பில் கூறப்பட்டுள்ளது . இதற்கு சம்மதம் தெரிவித்துள்ளார் தயாரிப்பாளர் போனி கபூர்.
அஜித்குமார் நாயகனாக நடிக்கும் படங்களை இயக்க முன்னணி இயக்குநர்கள் தயாராக இருந்தாலும் தமிழ் சினிமாவில் தயாரிப்பாளர்கள் தயாராக இல்லை என்பதே யதார்த்தம். அஜித்குமாரை பொறுத்தவரைத் தனது சம்பளத்தில் எந்தவிதமான சமரசமும் செய்துகொள்ள விரும்பவில்லை. அதனால் 50 கோடி ரூபாய் சம்பளமாகக் கேட்கிறார் அஜித். இதில் 60சதவிகிதம் வரை முன்பணமாகக் கேட்டு வாங்கிவிடுவார் அஜித்குமார் என்கிறது அவரது வட்டாரம்.
இந்தியில் படம் தயாரித்துக் கொண்டிருக்கும் போனி கபூர் போன்ற தயாரிப்பாளரிடம் சம்பளத்தைப் பட வெளியீட்டுக்கு முன்பு பெற்றுக்கொள்ளலாம். ஆனால் அஜித் படம் முடிகிறபோது தனது சம்பள பாக்கியைக் கறாராகக் கேட்டு வாங்கி விடுவாராம். எனவே வலிமை படத்தின் பாக்கி அடுத்து அஜித் கால்ஷீட் கொடுக்க உள்ள படத்திற்கு அட்வான்ஸ் பணம் எல்லாமுமாகச் சேர்ந்த காரணத்தினால் வலிமை படத்தின் தமிழக உரிமை நள்ளிரவில் பேசிமுடிக்கப்பட்டு அதனையும் உடனடியாக போனி கபூரைஅறிவிக்க வைத்திருக்கிறார்கள். இது போனி கபூர் விரும்பி எடுத்த முடிவல்ல, எடுக்க வைக்கப்பட்டிருக்கிறார் என்கிறது அவரது அலுவலக வட்டாரம்