ஜேக்ஸ் பிஜாய் (Jakes Bejoy) – டொவினோ தாமஸ் காம்போ மீண்டும் ட்ரெண்டிங்கில் இடம் பிடித்திருக்கிறது. டிஜோ ஜோஸ் ஆண்டனியின் ( Dijo Jose Antony) ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் தமிழ் பதிப்பு பாடலான ‘காட்டு செண்பகம்’ வெளியிடப்பட்டிருக்கிறது டிஜோ ஜோஸ் ஆண்டனி இயக்கத்தில் டொவினோ தாமஸ் கதாநாயகனாக நடித்த ‘பள்ளிச்சட்டம்பி’ படத்தின் முதல் பாடலான ‘காட்டு செண்பகம்’ எனும் பாடலின் தமிழ் பதிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்தப் பாடல் இசையமைப்பாளர் ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்து ஏற்கனவே இசை ஆர்வலர்களிடையே கவனத்தை ஈர்த்து வருகிறது. இப்பாடலின் தமிழ் பதிப்பின் வரிகளை மோகன் ராஜா எழுதியுள்ளார். இது பாடலுக்கு ஒரு புதிய பாடல் வரிகளையும், அழகியலையும் வழங்குகிறது. இந்த பாடலை அகில் ஜே சந்த் மற்றும் ஆவணி மல்ஹார் ( Avani Malhar) பாடியுள்ளனர். இவர்களின் ஆத்மார்த்தமான குரல்கள்.. இசையமைப்பின் உணர்ச்சி…
Read MoreCategory: சினிமா செய்திகள்
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – ஸ்ரீகாந்த் ஓடெலா – சுதாகர் செருகுரி – SLV சினிமாஸ் – கூட்டணியில் தயாராகும் ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் வெளியாகிறது. ‘தசரா’ புகழ் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடெலா இயக்கிய ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தை SLV சினிமாஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி தயாரித்திருக்கிறார். இந்த ஆண்டின் மிகவும் பிரபலமான பான் இந்திய திரைப்படங்களில் ஒன்றாக ‘தி பாரடைஸ்’ உருவாகி வருகிறது. படக் குழுவினர் ஹைதராபாத்தில் படத்தின் பணிகளில் வேகமாக முன்னேறி வரும் நிலையில்.. தயாரிப்பாளர்கள் நன்மைகள் அதிகம் தரும் வகையில் இப்படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர். அந்த வகையில் ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடித்த ‘தி பாரடைஸ்’ திரைப்படம் ஆகஸ்ட் 21 ஆம் தேதி முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில்…
Read MoreMoonwalk திரைப்படத்தின் ‘Yethu’ பாடலுக்கு ஆப்பிரிக்கன குழந்தைகளின் இசைக்குழு நடமாடி வீடியோ பதிவிட்ட நிலையில் அதற்கு ஏ.ஆர்.ரஹ்மான் கமெண்ட் செய்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார்.
மூன்வாக் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ஏத்து’ வீடியோ பாடல் இன்ஸ்டாகிராமை அதிர வைத்துள்ளது. இது ஒரு பெரிய நடன ட்ரெண்டாக மாறி, உலகம் முழுவதும் வேகமாக வைரலாகி வருகிறது. ஆப்பிரிக்கா, ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐக்கிய அரபு எமிரேட்ஸ், பிரான்ஸ், ஸ்வீடன் உள்ளிட்ட பல நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த ட்ரெண்டில் உற்சாகமாக கலந்து கொண்டு, பாடலின் உணர்வை காப்பாற்றியபடி அதிக ஆற்றலுடன் ரீல்ஸ் செய்து பதிவிட்டு வருகின்றனர். Yethu பாடல் வெளியான இரண்டு வாரங்களிலேயே யூடியூபில் 11 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது. மேலும், சர்வதேச விமர்சகர்கள் Yethu பாடலை பார்த்து ஆர்வத்துடன் கருத்து தெரிவித்து வருகின்றனர். தற்போது சமூக ஊடகங்களில் “Yethu” பாடலை கொண்டு செய்யப்பட்ட ரீல்கள் 100 மில்லியன் பார்வைகளை கடந்து படுவைரலாகி வருகிறது. ஜனவரி 27ஆம் தேதி தொடங்கிய இந்த ட்ரெண்ட், இன்றளவும் சற்றும் குறையாமல்…
Read Moreஒரு கோடி ரூபாய் காசோலை வழக்கில் தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் விடுவிப்பு
தயாரிப்பாளர்/நடிகர்/இயக்குனர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் மீது ரூ.1 கோடி மற்றும் அதற்கும் மேலான தொகைக்காக தவறாக காசோலை வழக்கு தொடரப்பட்டதாக கூறப்படுகிறது. ககன் போத்ரா மற்றும் அவரது சகோதரர் சந்தீப் போத்ரா ஆகியோரிடம் ரூ.15 லட்சம் கடன் பெற்றதற்காக வழங்கப்பட்ட பாதுகாப்பு காசோலையை அடிப்படையாக கொண்டு இந்த வழக்கு பதிவு செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. இதேவேளை, பெற்ற கடன் ரூ.15 லட்சம் கொடுத்தபின்பும் தவறான கோரிக்கை தொடர்பாக அவர்களுக்கு எதிராக குற்றவியல் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருந்தது. இருப்பினும், காசோலை வழக்கு மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல்முறையீட்டு மனுவை விசாரித்த XXI கூடுதல் நீதிமன்றம், தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே சதீஷ்குமார் குற்றமற்றவர் எனக் கருதி அவரை விடுவித்தது. மேலும், மேல்முறையீட்டு கால அவகாசம் முடிந்த பின், இருந்தால் பாதுகாப்புத் தொகையை திருப்பி வழங்கவும்…
Read Moreபிக்சல் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் நடிகர் நிகில் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘சுயம்பு’ படத்தின் டீசர் வெளியான குறுகிய காலத்திலேயே 12 மில்லியனுக்கும் அதிகமான பார்வைகள் கடந்து சாதனை படைத்துள்ளது!
நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர் நிகில் சித்தார்தா முன்னணி நடிகராக வளர்ந்து வருகிறார். பக்கத்து வீட்டு பையன் போன்ற எளிய தோற்றமும், அவரது திறமையான நடிப்பும் பல ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. ஒவ்வொரு படத்திலும் சவாலான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் தனது நடிப்பு திறமையை நிரூபித்து வருகிறார். தற்போது இயக்குநர் பரத் கிருஷ்ணமாச்சாரி இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் ’சுயம்பு’ திரைப்படத்தின் மூலம் நடிகர் நிகில் ரசிகர்களை மீண்டும் கவர வருகிறார். பிக்சல் ஸ்டூடியோஸ் நிறுவனம் சார்பில் புவன் மற்றும் ஸ்ரீகர் தயாரிக்கும் இப்படத்தை தாகூர் மது வழங்குகிறார். பிரம்மாண்டமான பீரியட் ஆக்ஷன் கதையாக உருவாகி இருக்கும் இந்தத் திரைப்படத்தின் டீசர் பன்மொழிகளில் வெளியான குறுகிய காலத்திலேயே 10 மில்லியனுக்கும் அதிக பார்வைகளை கடந்து படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. டீசரின் பிரம்மாண்ட…
Read Moreதமிழ் சினிமாவின் மைல்கல்… ‘விசாரணை’க்கு 10 ஆண்டுகள்; ஒன்று கூடிய படக்குழு !!
தமிழ் சினிமாவில் வெளியான சில படங்கள் வெறும் திரைப்படங்களாக இல்லாமல், ஒரு காலகட்டத்தின் குரலாகவும், சமூக சாட்சியாகவும் மாறிவிடும். அந்த வகையில், 2015ஆம் ஆண்டு வெளியான விசாரணை திரைப்படம் இன்று வெளியாகி 10 ஆண்டுகளை நிறைவு செய்துள்ளது. இந்த சிறப்பான தருணத்தை நினைவுகூறும் விதமாக, அப்படத்தின் படக்குழு இயக்குனர் பாலுமகேந்திரா ஸ்டூடியோவில் ஒன்று கூடி கலந்துரையாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளனர். இந்நிகழ்வினில் இயக்குநர் வெற்றிமாறன், எழுத்தாளர் சந்திரகுமார், நடிகர் வே.இர.தினேசு, இயக்குனர் & நடிகர் சமுத்திரக்கனி, கருணாஸ், இயக்குனர் சரவண சுப்பையா, மூணார் ரமேஷ், திலீப் சுப்பராயன், இயக்குநர் தமிழ், ஒளிப்பதிவாளர் ராமலிங்கம் மற்றும் பல முக்கிய பிரபலங்கள் கலந்துகொண்டனர் Wunderbar Films மற்றும் Grass Root Film Company நிறுவனங்களின் தயாரிப்பில் எழுத்தாளர் M சந்திரகுமார் அவர்களின் ”லாக்கப்” புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு உருவான ”விசாரணை”…
Read MorePhars Film நிறுவனம் ‘டாக்ஸிக்’ படத்தின் இந்திய மொழி பதிப்புகளுக்காக வரலாற்றுச் சாதனை மிக்க வெளிநாட்டு ஒப்பந்தத்தை உறுதி செய்துள்ளது – !
பாக்ஸ் ஆபிஸ் வசூல் தொடங்கும் முன்னரே, “டாக்ஸிக்” படம் இது வரையிலான சாதனைகளை உடைத்து விதிகளை மாற்றி எழுத ஆரம்பித்துவிட்டது. தெலுங்கு அல்லாத ஒரு திரைப்படமாக, AP–TG சந்தையில் தில் ராஜுவின் தயாரிப்பு நிறுவனமான ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் (SVC) உடன் ₹120 கோடி மதிப்பிலான வரலாற்றுச் சாதனை விநியோக ஒப்பந்தத்தை கைப்பற்றியதன் மூலம் இந்தப் படம் செய்திகளில் இடம்பிடித்தது. இது இந்திய திரைப்படத் துறையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இப்போது அடுத்ததாக வெளிநாட்டு ஒப்பந்தம் அதை விட பெரிய சாதனையைப் படைத்துள்ளது. சர்வதேச அளவில், “டாக்ஸிக்” திரைப்படத்தை Phars Film என்ற முன்னணி வெளிநாட்டு விநியோக நிறுவனம் கைப்பற்றியுள்ளது. இது படத்தின் அபூர்வமான முன்-வெளியீட்டு பயணத்தில் இன்னொரு மிகப்பெரிய மைல்கல்லாகும். இந்த ஒப்பந்தம் இந்திய திரைப்பட வரலாற்றில் மிக உயர்ந்த வெளிநாட்டு ஒப்பந்தங்களில் ஒன்றாகப் பார்க்கப்படுகிறது.…
Read Moreசூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட் வழங்கும் “மை லார்ட்”
ஒலிம்பியா மூவிஸ் தயாரிப்பில் இயக்குநர் ராஜூமுருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் “மை லார்ட்.” நடிகர் சசிகுமார் மற்றும் சைத்ரா முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து இருக்கும் இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளார். இந்தப் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் முதல் அதன் டிரெய்லர் வரை ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்திற்கான எதிர்பார்ப்பையும் அதிகரித்துள்ளது. இந்தத் திரைப்படம் வருகிற 13ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த நிலையில், “மை லார்ட்” திரைப்படத்தை 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் வழங்குகிறது. இந்தப் படத்தை வழங்குவதை பெருமையாக கருத்துவதாக 2டி நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து அந்நிறுவனம், “அன்பையும், நம்பிக்கையையும் முன்வைத்து நல்ல படைப்புகளுக்கு எப்போதும் 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பிரத்யேக இடம் உண்டு. சினிமா என்பது பொழுதுபோக்கு, வியாபாரம் என்பதையும் தாண்டி பார்வையாளர்கள் மனதில் நல்ல எண்ணங்களை…
Read Moreஇன்வெஸ்டிகேஷன் திரில்லராக உருவாகும் ‘பரீட்’ பட்டத்தின் படப்பிடிப்பு நிறைவு
ட்ரீம் ஹவுஸ் நிறுவனம் மற்றும் ஜெயின் கிரியேஷன்ஸ் சார்பில் ஹாரூன் மற்றும் மஹேந்தர் குமார் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘பரீட்’ (Buried). ‘வெப்’ படத்தை இயக்கிய இயக்குநர் ஹாரூண் இந்த படத்தின் கதை எழுதி இயக்கியுள்ளார். ‘8 தோட்டாக்கள்’ வெற்றி இப்படத்தில் கதாநாயகனாக ஒரு என்கவுண்டர் போலீஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். கதையின் நாயகிகளாக ஹைதராபாத்தை சேர்ந்த அக்ஷிதா மற்றும் சாந்தினி தமிழரசன் நடிக்கின்றனர். பாலாஜி சக்திவேல், சிங்கம் புலி, சரவண சுப்பையா, ‘லப்பர் பந்து’ ஜென்சன் திவாகர், கோடாங்கி வடிவேலு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்டான போலீஸ் அதிகாரி ஒருவர் தன்னுடைய பணியில் என்னென்ன சவால்களை எதிர்கொள்கிறார், அதனால் அவரது குடும்ப வாழ்க்கையில் எந்தவிதமான பாதிப்புகளை சந்திக்கிறார், அதிலிருந்து எப்படி மீள்கிறார் என்பதை மையப்படுத்தி இன்வெஸ்டிகேஷன் திரில்லாராக இப்படம் உருவாகிறது. படத்திற்கு…
Read MoreKala Ghoda Art Festival-இல் சிறப்பு நிகழ்ச்சியுடன் இப்பட டிரெய்லர் வெளியிடப்பட்டது ~
இந்தியாவின் முன்னணி வீடியோ ஸ்ட்ரீமிங் தளமான ZEE5, புகழ்மிகு இயக்குநர் அனுராக் காஷ்யப் இயக்கத்தில், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட திரில்லர் படமான ‘கென்னடி’ படத்தின் அதிரடியான டிரெய்லரை வெளியிட்டுள்ளது. சர்வதேச திரைப்பட விழாக்களில் பாராட்டுகளைக் குவித்த ‘கென்னடி’ திரைப்படம், பிப்ரவரி 20 அன்று ZEE5-ல் இந்தியப் பார்வையாளர்களுக்காக பிரத்தியேகமாக பிரீமியர் ஆகிறது. ‘கென்னடி’ மும்பையை மையமாகக் கொண்டு, நாயர் பாணியில் உருவான ஒரு அதிரடியான திரில்லர் கதை. முன்னாள் காவலராக இருந்து ஒப்பந்தக் கொலையாளியாக மாறிய கென்னடி உதய் ஷெட்டி (Rahul Bhat) என்பவரின் இரட்டை வாழ்க்கையைப் படம் பின்தொடர்கிறது. பகலில் டாக்சி டிரைவராகவும், மறைவில் ஊழல் போலீஸ் கமிஷனர் ரஷீத் கானுக்காக கொலை ஒப்பந்தங்களை நிறைவேற்றுபவராகவும் வாழும் கென்னடி, தனது மகன் இழப்பினால் உண்டான வலி மற்றும் அவருடைய சிதைந்து போன குடும்பத்தின் நினைவுகளால் துரத்தப்படுகிறார். கடந்த…
Read More