கதை…
சார்லி – நிரோஷாவின் மகள் அனுபமா.. இவர் ஐடி கம்பெனியில் வேலை தேடி அலைகிறார்.. அப்போது ஒரு நாள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அப்போது மது அருந்தியதால் நினைவில்லாமல் இருக்கிறார்.. அப்போது அவருக்கே தெரியாமல் ஒரு சம்பவம் நடந்து விடுகிறது..
இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கர்ப்பம் என்பதை அறிந்து கொள்கிறார்.. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும்.. தன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாத நிலையில் இவருக்கு ஒரு தோழி அபார்ஷன் செய்ய சொல்லி உதவுகிறார்.. அப்போது கொரோனா லாக்டவுன் அமலுக்கு வருகிறது..

இதனை அடுத்து அவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. கருவை கலைக்கவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் நாட்கள் கடந்து கொண்டிருக்க என்ன செய்தார் அனுபமா என்பது தான் மீதிக்கதை..
நடிகர்கள்…
Anupama Parameswaran, Charlie, Nirosha, Priya Venkat, Livingston, Indhumathi, Rajkumar, Shamji, Lollu Sabha Maran, Vinayaga Raj, Vidhu, Sanjivie, Priya Ganesh, Asha
அழகும் திறமையும் வாய்ந்த நடிகை அனுபமா.. தமிழில் இவருக்கு பெரிய படங்கள் இல்லை என்றாலும் கேரளாவில் மலையாள சினிமாவில் கலக்கிக் கொண்டிருப்பவர்.. இந்த லாக்டவுன் திரைப்படம் ஒரு பெண்ணின் உணர்வுகளை பேசும் படம் என்பதால் தன் நடிப்பில் சிறந்த உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளார்..
இவரின் பெற்றோர் சார்லி மற்றும் நிரோஷா அனுபவ நடிப்பில் நிஜ பெற்றோர்களின் உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்..
அனுப்பமாவின் தோழியாக வரும் பெண்ணும் ஒரு உற்ற தோழியின் உணர்வுகளை நடிப்பில் வெளிப்படுத்தியுள்ளார்..
Crew
Production House: Lyca Productions Pvt Ltd
Producer: Subaskaran
Head of Lyca Production: G.K.M. Tamil Kumaran
Director: AR Jeeva
Music: NR Raghunanthan & Siddharth Vipin
Director of Photography: K.A. Sakthivel
Editor: V.J. Sabu Joseph
Art Director: A. Jayakumar
Choreography: Sherif & Sri Girish
Stunts: Om Sivaprakash
PRO: Sathish Kumar
ஒளிப்பதிவு இசையும் மிகவும் நேர்த்தியான கையாளப்பட்டுள்ளது. முக்கியமாக பாடல் வரிகள் பெண்ணின் வலியை உணர வைக்கிறது..
ஏ ஆர் ஜீவா இயக்கியுள்ளார்.. எந்த ஒரு இயக்குனரிடமும் உதவியாளராக பணிபுரியாமல் உணர்வுப்பூர்வமான படத்தை கொடுத்து இருக்கிறார்.. கொரானா லாக்டவுன் காலத்தில் நாம் பட்ட நாம் பட்ட சிரமங்களையும் அழகாக திரையில் கொண்டு வந்திருக்கிறார்..
நமக்கு ஒரு பிரச்சனை என்றால் முதலில் நம் குடும்பத்தாரிடம் தெரிவிக்க வேண்டும் அவர்களுக்கு அதை எப்படி கையாள வேண்டும் என்பது தெரியும் என்பதையும் ஒரு சோசியல் மெசேஜாக கொடுத்திருக்கிறார் இயக்குனர் ஜீவா.
——–
