தயாரிப்பாளர்கள் சி. வி. குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோரின் தயாரிப்பில், இயக்குநர் எஸ். ஜே. அர்ஜுன் இயக்கத்தில்,’ மிர்ச்சி சிவா நாயகனாக நடித்திருக்கும் ‘சூது கவ்வும் 2’ திரைப்படம் டிசம்பர் 13 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தை சண்முகம் சினிமாஸ் கே. சுரேஷ் வெளியிடுகிறார். ‘சூது கவ்வும் 2’ திரைப்படத்தில் மிர்ச்சி சிவா, வாகை சந்திரசேகர், கருணாகரன், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர், அருள்தாஸ், ரமேஷ் திலக், யோக் ஜேபி, ஹரிஷா ஜஸ்டின், கராத்தே கார்த்தி, கல்கி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கார்த்திக் தில்லை ஒளிப்பதிவு செய்திருக்கும் இப்படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் – ஹரி ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். திருக்குமரன் என்டர்டெய்ன்மென்ட் மற்றும் தங்கம் சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் சி. வி.குமார் மற்றும் எஸ். தங்கராஜ் ஆகியோர் இணைந்து…
Read MoreCategory: சினிமா செய்திகள்
ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில் உருவான “பிரதர்” திரைப்படம், ZEE5 இல் நவம்பர் 29 முதல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது!
ரசிகர்களின் காத்திருப்பு இறுதியாக முடிவுக்கு வந்துள்ளது ! தமிழின் முன்னணி நட்சத்திரம் ஜெயம் ரவி மற்றும் பிரியங்கா மோகன் நடிப்பில், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட பிரதர் திரைப்படம் ZEE5 இல் ஸ்ட்ரீமிங் செய்யப்படுகிறது. இந்தத் திரைப்படத்தின் ஓடிடி வெளியீட்டை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். காமெடி படங்களுக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. அவர்களுக்கு விருந்தாக இப்போது உங்கள் வீட்டுத் திரைகளில், பரவசத்துடன் ZEE5 இல் பிரதர் திரைப்படத்தைக் கண்டுகளியுங்கள். கமர்ஷியல் காமெடி படங்களுக்கு பெயர் பெற்ற இயக்குநர் ராஜேஷ் இயக்கியுள்ள ‘பிரதர்’ திரைப்படத்தில், ஜெயம் ரவி, பிரியங்கா மோகன், பூமிகா, நட்டி நடராஜன், விடிவி கணேஷ், சரண்யா பொன்வண்ணன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அக்கா, தம்பி பாசத்தை மையமாக வைத்து, குடும்ப பொழுதுபோக்கு திரைப்படமாக உருவான இப்படம், தீபாவளியை முன்னிட்டு கடந்த அக்டோபர் 31ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களை…
Read Moreகாஃபி மில்தி ஜூல்தி ஹை நா எஹ் கஹானி” – முஃபாசாவின் தி லயன் கிங் –ஒரு புதிய வீடியோவில் முஃபாசா:வின் பயணத்திற்கு இணையான ஒன்றை ஷாருக்கான் வெளிப்படுத்துகிறார்
கிங் மீண்டும் கர்ஜிக்கத் தொடங்கிவிட்டது அத்துடன் சேர்த்து பார்வையாளர்களுக்கு தனது சொந்த பயணத்தின் ஒரு பார்வையை வழங்குவதையும் ஷாருக்கான் உறுதி செய்திருக்கிறார்! இந்த ஆண்டின் மிகப்பெரிய மற்றும் மிகவும் ஆவலோடு எதிர்பார்க்கப்பட்ட குடும்ப பொழுதுபோக்குக்குத் திரைப்படம், முஃபாசா: தி லயன் கிங், ஹிந்தி, தெலுங்கு மற்றும் தமிழ் ஆகிய மொழிகளில் அதன் ஒளிரும் நட்சத்திரக் குரல் மூலம் ரசிகர்களின் மனதைக் கவர்ந்திழுத்துள்ளது . இதன் இந்தி பதிப்பில் முஃபாசாவுக்கு குரல் கொடுக்கும் ஷாருக்கான், வனங்களின் ராஜாவாக வெற்றிகரமாக வளர்ச்சி காணும் முஃபாஸாவின் மன எழுச்சியூட்டும் பயணத்தோடு ஒன்றிணைந்து ஆழ்ந்து சென்று இந்த மிகச்சிறந்த அடையயாளச் சின்னமாக விளங்கும் கதாபாத்திரத்துடனான தனது உள்ளார்ந்த பிணைப்பை சிறப்பாக வெளிப்படுத்தும் வகையில் பார்வையாளர்களோடு பகிர்ந்து கொள்கிறார். புதிதாக வெளியிடப்பட்ட இந்த வீடியோவில், இந்தியாவின் மிகவும் அதிகளவில் அன்பு காட்டப்பட்ட சூப்பர்…
Read More‘மாடர்ன் மாஸ்ட்ரோ’ யுவன் சங்கர் ராஜாவின் ‘ஸ்வீட் ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு
தமிழ் திரையுலகின் வளர்ந்து வரும் நம்பிக்கைகுரிய நட்சத்திர நடிகரான ரியோ ராஜ் காதல் நாயகனாக நடித்திருக்கும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான சிலம்பரசன் டி. ஆர் மற்றும் யுவன் சங்கர் ராஜா ஆகியோர் இணைந்து வெளியிட்டனர். அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட் ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை…
Read More.A.P. ஷர்வின் இயக்கத்தில் டிட்டோ நடிக்கும் ‘மறைமுகம்’ விரைவில் திரைக்கு!
ABICKA ARTS சார்பில் படைப்பாக மறைமுகம் என்ற திரைப்படம் முற்றிலும் வித்தியாசமாக ஆக்சன் திரில்லர் கலந்த ஹாரர் படம் 70 வருட தமிழ் திரை உலகம் கண்டிராத புதிய கதைக்களம் கொண்ட படமாக உருவாகி இருக்கிறது இந்த படத்தில் டிட்டோ கதாநாயகனாகவும் நிஷித்தா தனுஜா இருவரும் கதாநாயகிகளாகவும் இணைந்து நடித்திருக்கிறார்கள் காமெடி நடிகர் பாவா லஷ்மணன் நந்தா சரவணன் பறியேறும் பெருமாள் வெங்கடேஷ் பிரியதர்ஷினி தேவி கண்ணன் அறிமுகம் ஜீவகன் உமேரா பேகம் குழந்தை நட்சத்திரம் ஜானவ் மற்றும் முன்னணி நடிகர் நடிகைகள் நடித்துள்ளனர் இப்படத்தில் கதை திரைக்கதை வசனம் பாடல் எழுதி இயக்கியுள்ளார் A P ஷர்வின் ஏற்கனவே துள்ளும் காலம் சோக்காலி என்ற இரு படங்களை இயக்கியுள்ளார் டைரக்டர் ஒளிப்பதிவு விஜய் திருமூலம் இசையமைப்பாளர் வசந்த் இந்த படத்தை வி ஜீவகன் A P…
Read More“தமிழ் படத்தில் நடிக்க ஆசைப் பட்டேன்…அது இந்த படம் மூலம் நிறைவேறியது” –ஜீப்ரா திரைப்பட வெற்றி விழாவில் நடிகர் சத்யதேவ் மகிழ்ச்சி
இளம் முன்னணி நடிகர் சத்யதேவ் மற்றும் கன்னட பிரபலம் டாலி தனஞ்சயா இணைந்து நடிக்க, இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் பான் இந்திய க்ரைம் ஆக்ஷன் என்டர்டெயினராக கடந்த வாரம் அக்டோபர் 22 ஆம் தேதி வெளியான திரைப்படம் ஜீப்ரா. புதுமையான களத்தில், பரபர திரைக்கதையுடன் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, இப்படம் பிளாக்பஸ்டர் வெற்றியைப் பெற்றுள்ளது. இந்நிலையில் சென்னையில் படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து நன்றி தெரிவித்தனர். தயாரிப்பாளர் தினேஷ் பேசியதாவது… பத்திரிகை நண்பர்களே நாங்கள் அனைவரும் தமிழ்க்காரர்கள். இந்தக்கதை இங்கு சென்னையில் தான் உருவானது. நான் முதலில் மீடியாவில் தான் வேலை பார்த்தேன். நான் முதன்முதலில் அஞ்சறைப்பெட்டி நிகழ்ச்சியில் வேலை பார்த்தேன், அடுத்தடுத்து வேலை பார்த்து, இந்தப்படம் செய்துள்ளேன். இந்தப்படத்திற்காக ஐந்து படமெடுக்குமளவு திரைக்கதையைத் தந்தார் ஈஸ்வர். அவ்வளவு ஸ்டஃப் இருக்கிறது…
Read Moreசென்னையில் நடந்த ‘புஷ்பா 2’ நிகழ்ச்சியில் தமிழை போற்றிய பான் இந்தியன் ஸ்டார் அல்லு அர்ஜுன்!
பாட்னாவில் நடந்த ‘புஷ்பா 2: தி ரூல்’ டிரெய்லர் வெளியீட்டு நிகழ்ச்சியின் மூலம் தென்னிந்திய நடிகர் அல்லு அர்ஜூன் மிகப்பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியதை ஒட்டுமொத்த சினிமா ரசிகர்களும் மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கிட்டத்தட்ட ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வையாளர்கள் நிகழ்வை கண்டுகளித்தனர். இந்த நிகழ்வு ‘புஷ்பா’ திரைப்படம் எந்தளவிற்கு ரசிகர்கள் மத்தியில் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்பதை உணர்த்துகிறது. தனது நடிப்பால் மட்டுமல்லாது திறமையான நடனம் மூலமும் புஷ்பா கதாபாத்திரத்தின் மூலமும் உலகம் ரசிகர்களைக் கவர்ந்திருக்கிறார் நடிகர் அல்லு அர்ஜூன். படத்திற்கான புரோமோஷன்களின் ஒரு பகுதியாக கடந்த நவம்பர் 24 அன்று ‘புஷ்பா2’ படக்குழு சென்னை வந்தடைந்தது. தாம்பரம், சாய்ராம் கல்லூரியில் நடைபெற்ற இந்த ப்ரீ ரிலீ ஈவண்ட்தான் இப்போது ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. படத்தை விநியோகிக்கும் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் நிகழ்வு நடக்கும் ஏரியா முழுவதும் ‘புஷ்பா2’ தீம்…
Read Moreதிருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசனின் ‘டிராப் சிட்டி’ மூலம் ஹாலிவுட்டில் தடம் பதிக்கிறார் யோகி பாபு
திருச்சியை பூர்வீகமாகக் கொண்ட டெல் கே.கணேசன், கைபா பிலிம்ஸ் பேனரில் தடைகளைத் தகர்த்து இந்தியத் திறமைகளை உலகப் பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்தி, ஹாலிவுட்டில் முக்கிய ஆளுமையாக உருவெடுத்துள்ளார். ரசிகர்களிடம் தாக்கத்தை ஏற்படுத்தும் திரைப்படங்களைத் தயாரிப்பதில் தொடங்கி சிறந்த இந்திய மற்றும் மேற்கத்திய சினிமாவை ஒன்றிணைப்பது வரை, கணேசனின் பயணம் தமிழ்நாடு மற்றும் ஹாலிவுட் இடையே ஒரு கலாச்சாரப் பாலத்தை உருவாக்குவதற்கான அவரது அர்ப்பணிப்பை எடுத்துக்காட்டுகிறது. கணேசனின் முயற்சிகள் சர்வதேச அரங்கில் இந்திய திறமைகளை தொடர்ந்து வெளிச்சம் போட்டுக் காட்டி வருகின்றன. பிரபல தமிழ் நடிகர் நெப்போலியனை ‘டெவில்ஸ் நைட்: டான் ஆஃப் தி நைன் ரூஜ்’ படத்தின் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகப்படுத்திய அவர், புகழ்பெற்ற தமிழ் இசையமைப்பாளரும் நடிகருமான ஜி.வி. பிரகாஷ் குமாரையும் ஹாலிவுட்டிற்கு தனது திரைப்படங்கள் மூலம் அழைத்து சென்றார். அவரது அடுத்த படைப்பான ‘டிராப்…
Read Moreரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் வழங்கிய குளோபல் ஐகான் விருது – டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனுக்கு சிறப்பான அங்கீகாரம்
மலேசிய நாடாளுமன்ற உறுப்பினர் மற்றும் மலேசிய இந்திய காங்கிரஸின் துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் எம். சரவணனின் வெற்றிப் பயணத்தில் மற்றுமொரு மைல்கல்லாக, ரோட்டரி கிளப் ஆஃப் மெட்ராஸ் நார்த் அவருக்கு மதிப்புமிக்க குளோபல் ஐகான் விருதை வழங்கி கௌரவித்தது. நவம்பர் 24ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) சென்னையில் உள்ள எத்திராஜ் கல்லூரியில் நடைபெற்ற டான்ஸ் ஆஃப் டிஸ்ட்ரிக்ட் சீசன் 12 நிகழ்ச்சியில் அவருக்கு விருது வழங்கப்பட்டது. விழாவில் ரோட்டரி சங்க தலைவர் ஷபீர் நசீர், செயலர் மேரி அமுதா, டிஓடி தலைவர் ஜோசப் ராஜா, வொகேஷனல் இயக்குநர் பிரியதர்ஷினி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பிராந்திய ஒத்துழைப்பை வளர்த்தல், ஒற்றுமையை ஊக்குவித்தல், எல்லைகளை தாண்டி ஆதரவற்றோரை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் டாக்டர் சரவணனின் முன்மாதிரியான தலைமைத்துவத்திற்காகவும், அரசியல், ஆன்மிகம் மற்றும் இலக்கியம் போன்ற துறைகளில் பன்முக ஆளுமைக்காகவும் இந்த…
Read Moreசீர் வாசகர் வட்டம் வெளியீடு: உலக சினிமாவின் பொக்கிஷம் ரூ.200க்கு!
முன்பதிவு அறிவிப்பு. முதல் 5,000 படிகள் மட்டும். 100 இடங்களில் முன்பதிவு. #உலக_சினிமா #செழியன் #மக்கள்_பதிப்பு #சீர்_வாசகர்_வட்டம் வாசக தோழமைகளுக்கு வணக்கம். சீர் வாசகர் வட்டத்தின் மக்கள் பதிப்பு நூல்களின் வரிசையில் ஒரு மகுடமாக இயக்குநர் – ஒளிப்பதிவாளர் செழியனின் ‘உலக சினிமா’ வர உள்ளது. விகடனில் தொடராக வெளிவந்து இலட்சக்கணக்கான வாசகர்களின் சினிமா ரசனையை மாற்றிய தொடர் அது. தமிழ் வாசகர்களுக்கு உலக சினிமாவைப் பற்றிய நல்ல திறப்பை ஏற்படுத்திய 93 நல்ல படங்களைப் பற்றிய கட்டுரைகளையும் 93 நல்ல சிறுகதைகள் என்றுகூட சொல்லலாம். மூன்று பாகங்களாக நூல்வடிவம் பெற்று லட்சம் படிகளுக்கு மேல் விற்பனையான நூல் இப்போது சீர் வாசகர் வட்டம் வெளியீடாக 760 பக்கங்களில் கெட்டி அட்டையில் ஒரே நூலாக 200 ரூபாய் விலையில் நல்ல தரத்தோடு வெளிவர உள்ளது. சாத்தியமில்லாத இந்த…
Read More