நடிகை அம்மு அபிராமி பல நம்பிக்கைக்குரிய கதாபாத்திரங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவரது இந்த அர்ப்பணிப்பு ரசிகர்கள் மத்தியில் பாராட்டுகளைப் பெற்று வருகிறது. அந்த வகையில், வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளிவரவிருக்கும் ‘ஜமா’ திரைப்படத்திலும் இவர் நம்பிக்கைக்குரிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகை அம்மு அபிராமி கூறும்போது, “எந்தச் சூழலிலும் தைரியமாகவும் வெளிப்படையாகவும் பேசத் தயங்காத டாம்பாய் கேரக்டரில் நடித்திருக்கிறேன். இந்த கதாபாத்திரம் நிச்சயம் உங்களுக்குப் பிடிக்கும். ஒரு நடிகையாக என் முழுத்திறனையும் வெளிப்படுத்தும் வாய்ப்பு இந்தப் படத்தில் கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன். ’ஜமா’ எனக்கு மறக்க முடியாத பல அனுபவங்களை அளித்துள்ளது, இந்த சிறந்த வாய்ப்புக்காக நான் இயக்குநர் பாரி இளவழகன் மற்றும் தயாரிப்பாளர்களுக்கு நன்றி கூறுகிறேன். இசையமைப்பாளர் இளையராஜா சாரின் இசையில் நடிக்க வேண்டும் என்பது ஒவ்வொரு நடிகரின் கனவாக இருக்கும். எனக்கு…
Read MoreCategory: சினிமா செய்திகள்
பிரபு சாலமன் படத்தில் நாயகனாகும் வனிதா விஜயகுமாரின் மகன்.. நிஜ சிங்கத்துடன் படப்பிடிப்பு!!
தமிழ் சினிமாவின் மெலோடி கூட்டணி என்று அழைக்கப்படுபவர்கள் இசையமைப்பாளர் இமான் மற்றும் இயக்குனர் பிரபு சாலமன்.. இவர்கள் இருவரும் தற்போது மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைந்துள்ளனர். இயக்குநர் பிரபு சாலமன் அடுத்ததாக MAMBO ‘மாம்போ’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். இந்தப் படம் உண்மையான சிங்கத்தை வைத்து எடுக்கப்பட்ட முதல் ஆசியப் படம் என படக்குழு தெரிவித்துள்ளது. படத்தில் நடிகர் விஜயகுமாரின் பேரனும், வனிதா விஜயகுமார் – ஆகாஷ் தம்பதிகளின் மகனுமான விஜய் ஸ்ரீ ஹரி நாயகனாக நடிக்கிறார். யோகிபாபு படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். ’பெண்ணின் மனதை தொட்டு’, ’தேவதையை கண்டேன்’, ’பேரரசு’ போன்ற சிறந்த திரைப்படங்களை தயாரித்த தமிழ் சினிமாவின் பாரம்பரியமிக்க தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, தயாரிப்பாளர் எம்.காஜா மைதீனின் ‘ரோஜா கம்பைன்ஸ்’ நீண்ட வருடங்களுக்கு பிறகு மீண்டும் திரைப்பட தயாரிப்பை தொடங்கியுள்ளது. இந்தப்…
Read More‘விடுதலை’ பிறகு, ’ஜமா’ படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி – நடிகர் சேத்தன்
நடிகர் சேத்தன் பல்வேறு வகையான கதாபாத்திரங்களில் தனது நடிப்புத் திறமையை வெளிப்படுத்தி வருபவர். சின்னத்திரையில் மக்கள் மனங்களைக் கவர்ந்தவர், ‘விடுதலை பார்ட் 1’ உள்ளிட்ட திரைப்படங்களில் தனது அட்டகாசமான நடிப்பால் பாராட்டுகளைப் பெற்றார். இதனை அடுத்து இவர் நடித்திருக்கும் திரைப்படம் ‘ஜமா’. வரும் ஆகஸ்ட் 2, 2024 அன்று வெளியாக இருக்கும் இந்தப் படம் குறித்து அவர் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டார். நடிகர் சேத்தன் கூறும்போது, ”இதுபோன்ற அற்புதமான திரைப்படத்தை உருவாக்கிய பாரி இளவழகன் மற்றும் எஸ்எஸ்பிவி லேர்ன் அண்ட் டீச் புரொடக்ஷன் பிரைவேட் லிமிடெட் தயாரிப்பாளர்கள் இருவரையும் முதலில் பாராட்டுகிறேன். கோல்ட்- ப்ளெட்டட் க்ரைம்-த்ரில்லர் அல்லது மேற்கத்திய கருப்பொருளை கதைக்களமாகத் தேர்ந்தெடுப்பது பல புது இயக்குநர்களின் பொதுவான நடைமுறையாகிவிட்ட நிலையில், நமது கலாச்சாரத்தின் நெறிமுறை அழகியலை கதையாக்கிய பாரியின் துணிச்சலான முடிவு தனித்துவமானது. ஒரு…
Read Moreஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி நடிக்கும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவு!!
ட்ரம்ஸ்டிக்ஸ் புரொடக்ஸன்ஸ் தயாரிப்பில், ஜோ படத்தின் வெற்றிக்குப் பிறகு ரியோ- மாளவிகா மனோஜ் ஜோடி மீண்டும் இணைந்து நடிக்க, புதுமுக இயக்குனர் “பிளாக்ஷிப்” கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் உருவாகும் ரொமான்ஸ் திரைப்படத்தின் படப்பிடிப்பு இனிதே நிறைவடைந்துள்ளது. திருமணமான ஆண்களின் பிரச்சினைகளை பெண்களும் ஏற்றுக்கொள்ளும்படியாக சொல்லும், ரொமான்ஸ் காமெடி ஜானரில், அனைத்து தரப்பினரும் ரசிக்கும் படியான கமர்ஷியல் படமாக இப்படம் உருவாகிறது. ரியோ- மாளவிகா மனோஜ் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடிக்க பிளாக்ஷிப் ஆர்.ஜே.விக்னேஷ் , ஷீலா ராஜ்குமார், டைரக்டர் ஏ.வெங்கடேஷ், Stills பாண்டியன், ஜென்சன் திவாகர் , ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் இணைந்து நடித்துள்ளனர். மாதேஷ் மாணிக்கத்தின் ஒளிப்பதிவு , சித்துகுமார் இசை, வருண் கே.ஜி.யின் எடிட்டிங், வினோத் ராஜ்குமாரின் கலையமைப்பு , சந்துருவின் டிசைன், மீனாட்சியின் ஆடை வடிவமைப்பு , என ஒரு மெகா இளைஞர்கள் கூட்டணி…
Read Moreமிகப்பெரிய பான் இந்திய சூப்பர் ஸ்டாராக ஜொலிக்கும் பெல் ஸ்டார் பிரபாஸ் – பாகுபலி முதல் கல்கி வரை !!
கல்கி கி.பி 2898 இல் நடித்த இந்தியாவின் சூப்பர்ஸ்டார் அமிதாப் பச்சன், பிரபாஸை ‘கடவுளுக்கு நிகரானவர்’ என்று அழைத்தது, பிரபாஸுக்கு கிடைத்த மிகப்பெரிய பாராட்டாகும். சமீபமாக பிரபாஸின் அபரிமிதமான புகழ் பிராந்திய எல்லைகளைக் கடந்து இந்தியா முழுமைக்குமான ஒரு மறுக்க முடியாத சூப்பர்ஸ்டாராக மாற்றியுள்ளது. படமோ தலைப்போ பிரமாண்டமோ, எதுவும் முக்கியமில்லை, பிரபாஸ் எனும் வெறும் பெயர் மட்டுமே திரையரங்கிற்குக் கூட்டம் கூட்டமாக ரசிகர்களைக் குவிக்கிறது. மிகக்குறைந்த பப்ளிசிட்டியுடன் அதிக கூட்டத்தை வரவழைக்கும் பிரபாஸின் திறமை, அவரது நட்சத்திர பலத்திற்குச் சான்றாகும். சமீபத்தில் அவர் நடித்த “கல்கி” திரைப்படம் இதற்கு ஒரு சிறந்த உதாரணமாகும். ஒரே ஒரு விளம்பர நிகழ்வில் பங்கேற்ற போதிலும், திரைப்படம் மிகப்பெரிய அன்பையும் வரவேற்பையும் பெற்றது, நடிகரின் ஈடு இணையற்ற செல்வாக்கை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. இந்த நிகழ்வு இந்தியாவில் மட்டும் அல்ல;…
Read Moreயோகி பாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” டிஸ்னி+ ஹாட்ஸ்டார் சீரீஸ்: தனித்துவமான விளம்பரங்கள் ..!
யோகிபாபு நடிப்பில், “சட்னி சாம்பார்” சீரிஸிற்கான டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் தனித்துவமான விளம்பரங்கள் பார்வையாளர்களின் கவனத்தை ஈர்க்கின்றது. இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், இயக்குநர் ராதாமோகனின் இயக்கத்தில், ரசிகர்களின் எதிர்பார்ப்பைத் தூண்டியிருக்கும் ‘சட்னி – சாம்பார்’ சீரிஸை, ஜூலை 26 முதல் ஸ்ட்ரீமிங் செய்யத் தொடங்கியுள்ளது. இந்நிலையில் தற்போது இந்த சீரிஸின் சாராம்சத்தை படம்பிடித்து காட்டும் வகையில், ஒரு பெப்பி ராப் பாடலை வெளியிட்டுள்ளது. நடிகர் யோகி பாபு முதல் முறையாக ஒரு முழு நீள வெப் தொடரில் கதாநாயகனாக நடிக்கிறார், ஆதலால் இந்த வெப் சீரிஸ் ரசிகர்கள் மற்றும் பார்வையாளர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. வழக்கமான ராதாமோகன் பாணியில் சிரிப்பு சரவெடி நிறைந்த ஒரு அழுத்தமான பொழுதுபோக்கு குடும்ப சித்திரமாக இந்த சீரிஸ் உருவாகியுள்ளது. இதயம் கவரும் இந்த பெப்பி ராப் பாடல்,…
Read More‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!
7 ஸ்கிரீன் ஸ்டுடியோ லலித் குமார் – இயக்குநர் விக்னேஷ் சிவன் – பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் தயாராகும் புதிய படத்திற்கு “லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநரும், நடிகருமான பிரதீப் ரங்கநாதனின் பிறந்த நாளை முன்னிட்டு அவர் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) எனும் திரைப்படத்தில் பிரதீப் ரங்கநாதன், எஸ் ஜே சூர்யா, சீமான், கிரித்தி ஷெட்டி, யோகி பாபு, ஆனந்த் ராஜ், மாளவிகா, சுனில் ரெட்டி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொண்டிருக்கிறார். இன்றைய…
Read Moreகர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்குக் கொண்டாட்டாட்டம்… தயாராகிறது 131வது படம்!!
கர்நாடக சக்கரவர்த்தி சிவண்ணா ரசிகர்களுக்கு பெரும் உற்சாகம் தரும், புதிய அப்டேட் வந்துள்ளது, சிவண்ணாவின் 131வது படம் இனிதே துவங்கவுள்ளது. சமீபத்தில், சிவண்ணாவின் பிறந்தநாளில் அறிமுக டீசரை வெளியிட்டு அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தியது தயாரிப்பு குழு. தற்போது படத்தைத் தயாரிக்கத் தயாராகி விட்டது. சிவன்னாவின் 131வது படத்தின் பூஜை (மங்கல ஆரம்பம்) விரைவில் நடக்கவுள்ளது. சிவண்ணாவின் 131வது படத்தின் படப்பிடிப்பு துவங்கவுள்ளது ஹாட்ரிக் ஹீரோ சிவராஜ்குமாரின் 131வது படத்திற்கான படப்பிடிப்பை பிரமாண்டமாக துவங்கிட படக்குழு தயாராகி வருகிறது. இந்நிலையில் இன்று ஒட்டுமொத்த படக்குழுவும் இன்று சிவண்ணாவைச் சந்தித்தது. இயக்குநர் கார்த்திக் அத்வைத், தயாரிப்பாளர்கள் N.S. ரெட்டி மற்றும் சுதீர், ஒளிப்பதிவாளர் A.J.ஷெட்டி, மற்றும் எடிட்டர் தீபு S.குமார் ஆகியோர் ஹாட்ரிக் ஸ்டார் சிவண்ணாவை அவரது நாகவாரா இல்லத்தில் சந்தித்தனர். இந்த சந்திப்பு புகைப்படங்களை ரசிகர்கள் இணையத்தில்…
Read Moreபெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் -இன் 12ஆவது படம் குறித்த அறிவிப்பு வெளியானது.
*பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ், மகேஷ் சந்து, சிவன் ராமகிருஷ்ணா, லுதீர் பைரெடி மூன்சைன் பிக்சர்ஸ் இணையும் பான் இந்திய திரைப்படம் #BSS12 அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது !!* லெஜண்ட் கோடி ராமகிருஷ்ணாவின் 75வது பிறந்தநாளை நினைவுகூறும் வகையில், ஆக்ஷன்-அதிரடி ஸ்டார் பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸின் 12வது படம் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது. #BSS12 என்று தற்காலிகமாகத் தலைப்பிடப்பட்டுள்ள இந்தப் படம், 10 வருடங்களைத் திரையுலகில் முடித்த பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸுக்கு ஒரு மதிப்புமிக்க திரைப்படமாக உருவாகவுள்ளது. #BSS12 மிகப்பெரிய பட்ஜெட் மற்றும் உயர்தர தொழில்நுட்ப தரத்துடன் மிகப் பிரமாண்டமான திரைப்படமாக இப்படம் உருவாகிறது. மூன்ஷைன் பிக்சர்ஸ் மூலம் மகேஷ் சாந்து தயாரிக்கும் இப்படத்தை அறிமுக இயக்குனர் லுதீர் பைரெட்டி இயக்குகிறார். பெல்லம்கொண்டா சாய் ஸ்ரீனிவாஸ் திரைவாழ்வில் மிக அதிக பொருட்செலவில் உருவாக்கப்படும் இப்படத்தை சிவன் ராமகிருஷ்ணா வழங்குகிறார். …
Read More16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி
சென்னையில் உள்ள எம்ஜிஆர் அரசு திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி கல்லூரியின் (அடையார் திரைப்பட கல்லூரி) நான்காம் ஆண்டு இளநிலை விஷுவல் ஆர்ட்ஸ் (பிவிஏ – BVA) மாணவர்கள் உருவாக்கி உள்ள ஆவண குறும்படம் 16வது கேரள சர்வதேச ஆவணப்பட மற்றும் குறும்பட விழாவின் (IDSFFK) அதிகாரப்பூர்வ பட்டியலில் சிறு குறும்படதிற்கான போட்டியில் இடம்பிடித்துள்ளது. ‘கலர்ஸ் ஆஃப் கோலிவுட் – எ மெலனின் டெஃபிசியன்ஷி’ எனப் பெயரிடப்பட்டுள்ள இந்தப் படத்தை பாரோ சலில் இயக்கியுள்ளார். இருபது வயதே ஆன அவரும் அவரது கல்லூரி குழுவினரும் ஐந்தாவது செமஸ்டர் பயிற்சியின் ஒரு பகுதியாக இந்த ஆவணப்படத்தை உருவாக்கியுள்ளனர். ஆவணப்படம் பற்றி பரோ சலில் கூறுகையில், “வெள்ளை சருமத்தின் மீதான விருப்பம் இந்தியர்களின் ஆழ்மனதில் பதிந்துள்ளது, தமிழ் சினிமாவும் இதற்கு விதிவிலக்கல்ல. தொழில் வல்லுநர்கள், கலைஞர்கள், சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்களுடனான…
Read More