ஒரு படத்தின் வெற்றி என்பது அது வெளியான காலகட்டத்தை தாண்டியும், ரசிகர்களின் நினைவில் இருப்பதே ஆகும். அந்த வகையில் “வெப்பம்” படத்திற்கு இன்றளவிலும் பெரும் ரசிகர் கூட்டம் உள்ளது. நானி, நித்யா மேனன் நடிப்பில் உருவான “வெப்பம்” படத்தை இயக்கிய இயக்குநர் அஞ்சனா அலி கான் தற்போது “வெற்றி” எனும் ஆக்ஷன் படத்தை இயக்கவுள்ளார். தங்களது முதல் தயாரிப்பாக ஶ்ரீதி நிறுவனம் சார்பில் முத்தமிழ் செல்வி இப்படத்தை தயாரிக்கிறார். முகேன் ராவ் மற்றும் அனு கீர்த்தி முதன்மை கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்கள். இயக்குநர் அஞ்சனா அலி கான் படம் குறித்து கூறியதாவது…. இது எனக்கு கனவு நனவாகிய தருணம். படைப்பின் மீது அதீத ஈடுபாடும், வேட்கையும் கொண்ட ஒரு தயாரிப்பு குழுவுடன் இணைந்து பணியாற்றுவதென்பது வார்த்தைகளில் சொல்ல முடியாத பெரும் சந்தோஷத்தை தந்திருக்கிறது. “வெற்றி” படத்தின் திரைக்கதை எழுதியதென்பது…
Read MoreCategory: சினிமா செய்திகள்
அமேசான் அசல் தொடர் BREATHE: INTO THE SHADOWS தற்போது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கிடைக்கிறது
மயங்க் சர்மா இயக்கி அபுந்தன்டியா என்டர்டெயின்மென்ட்டால் தயாரிக்கப்பட்டுள்ள இந்த 12 பாகங்கள் கொண்ட உளவியல்சார் த்ரில்லரில் அபிஷேக் பச்சன், நித்யா மேனன் ஆகியோர் டிஜிட்டல் அறிமுகத்தை மேற்கொண்டுள்ளதுடன் அமித் சாத் மற்றும் சயாமி கெர் ஆகியோரும் நடித்துள்ளனர் இந்தியாவிலும் 200 க்கும் மேற்பட்ட நாடுகளிலும் பிராந்தியங்களிலும் உள்ள பிரைம் உறுப்பினர்கள் தற்போது Breathe: Into The Shadows அசல் தொடரை, மொழி விருப்பத்தின் அமைப்புகளை மாற்றுவதன் மூலம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளிலும் கண்டு மகிழலாம். சமீபத்திய மற்றும் பிரத்தியேக திரைப்படங்கள், தொலைகாட்சி நிகழ்ச்சிகள், ஸ்டாண்ட்-அப் காமெடி, அமேஸான் ஒரிஜினல் சீரீஸ் ஆகியவற்றின் அன்லிமிடெட் ஸ்ட்ரீமிங், அமேஸான் பிரைம் மியூசிக் வழியாக விளம்பரம் அற்ற இசை கேட்டல், இந்தியாவின் மிகப்பெரிய தயாரிப்புகள் தொகுப்பிற்கான இலவச துரித டெலிவரி, முதன்மையான டீல்களுக்கான முன்கூட்டிய அணுகுவசதி, பிரைம் ரீடிங் வழியாக…
Read Moreஊரடங்கு காலத்தில் உறுப்பினர்களுக்கு மாதந்தோறும் உதவியை வழங்கிவரும் “அம்மா மூவி அசோசியேஷன்”
இயற்கையாக உருவான பேரிடர் கொரானா வைரஸ் இதனை கட்டுப்படுத்த முடியாமல் உலக நாடுகள் முடங்கிபோனது இதன் காரணமாக அனைத்து தொழில்களும் தொடர்ந்து நடத்த இயலாமல்முடக்கப்பட்டதுதிரைப்படத்துறையும் இதற்கு விதிவிலக்கு இல்லை என்றானது தமிழ் சினிமாவில் புதிய படங்களை விற்பனை செய்வதற்குத் தயாரிப்பாளர்கள் – விநியோகஸ்தர்கள்-திரையரங்கு உரிமையாளர்களுக்கு இணைப்பு பாலமாக இருந்து கோடிக்கணக்கான வியாபாரங்கள் முடிவதற்கு காரணமாக உள்ள மீடியேட்டர்கள் உறுப்பினர்களாக உள்ள ‘அம்மா மூவி அசோசியேசன்’ தங்கள் உறுப்பினர்களை பாதுகாக்கும் பொருட்டு ஏப்ரல் 2020 முதல் கடுமையான நிதி நெருக்கடிகளுக்கு இடையிலும் வாழ்வாதாரத்துக்கான அடிப்படை உதவிகளை ஐந்தாவது மாதமாக செய்து வருகிறது மக்களை ஆளும் மத்திய மாநில அரசுகள் ஊரடங்கு அறிவிப்புகள், அதனை அமுல்படுத்த கடுமையான நடவடிக்கைகளை மட்டுமே எடுத்துவருகிறது. மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்கும் நிவாரண உதவிகள் போதுமானதாக இல்லாததுடன் அறிவிக்கப்பட்ட குறைந்தபட்ச நிவாரணங்கள் முழுமையாக அனைத்து மக்களுக்கும்…
Read Moreஏடிஜிபி விஜயகுமார் எழுதிய வீரப்பனின் கதை படமாகிறது
வீரப்பனைப் பற்றிய முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு, வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளை உருவாக்கும் பணியில் E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம் முனைந்துள்ளது. துருவ் விக்ரமின் முதல் படமான ஆதித்ய வர்மா படத்தைத் தயாரித்து வெற்றிபெற்ற E4 என்டர்டெயின்மென்ட் நிறுவனம், ஏற்கெனவே ISHQ போன்ற மாபெரும் வெற்றிப் படங்களை மலையாளத்தில் அளித்திருக்கிறது. தற்போது சந்தனக் கடத்தல் வீரப்பனைப் பற்றி முன்னாள் ஏடிஜிபி விஜயகுமார் ஐ.பி.எஸ். எழுதியிருக்கும் புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டு வெப் சீரிஸ் மற்றும் OTT தளங்களில் படைப்புகளைத் தயாரித்து வெளியிடவிருக்கிறது. இந்த இரு படைப்புகளும் ‘சேஸிங் தி பிரிகண்ட் ’ (Chasing the Brigand) என்ற தலைப்பில் முன்னாள் ஏஜிடிபி விஜ்யகுமார் ஐ.பி.எஸ். எழுதிய பரபரப்பான புத்தகத்தில் இருக்கும் உண்மைச் சம்பவங்களைப் பிரதிபலிக்கும் வகையில் இருக்கும். எங்கள் மீது…
Read Moreதுல்கருக்கு கோடியக்கரை படக்குழு வைத்த செக்
தமிழ்த்திரையுலகில் தனக்கென ஒரு இடத்தைப் பிடிக்கப் போராடி வருகிறார் நடிகர் துல்கர் சல்மான். அவர் சமீபத்தில் நடித்த கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படம் சக்கைப்போடு போட்டது. அதனால் தமிழில் தனக்கென ஒரு இடம் இருக்கும் என சந்தோசப்பட்டார். ஆனால் அவரே அதை க் கெடுத்துக்கொண்டார். மலையாளத்தில் வரனே அவஷ்யமுண்டு என்ற படத்தில் அவர் கதாநாயகனாக நடித்திருந்தார். அந்தப்படத்தில் ஒரு நாய்க்குப் பிரபாகரன் எனப்பெயர் வைத்திருந்தனர். இதனால் தமிழர்கள் கொந்தளித்தனர். அந்தப்படம் மீது வைக்கப்பட்ட விமர்சனத்தில் துல்கரும் சிக்கினார். நிச்சயமாக துல்கர் நினைத்திருந்தால் அப்படியொரு பெயரை நாய்க்கு வைக்க வேண்டாம் எனத்தடுத்திருக்கலாம். ஏனோ அவர் செய்யவில்லை. அந்தக் காரணமா என்னவென்று தெரியவில்லை. இப்போது கோடியக்கரை என்ற பெயரில் தயாராகியுள்ள படத்தில் ஒரு நாய்க்குப் பெயர் துல்கர் என வைத்துள்ளனர். இந்தக் கோடியக்கரைப் படத்தை பாயின்ட் காலிமர் பிலிம்ஸின் ருத்ரம்…
Read Moreசீயான் விக்ரம் – கார்த்தி சுப்புராஜ் – அனிருத் – துருவ் விக்ரம்: பிரம்மாண்டமாக உருவாகிறது ‘சீயான் 60’
ஒரு படம் அறிவிக்கும் போதே, அதற்கான எதிர்பார்ப்பு மக்களிடையே இடம்பெற வேண்டும். அப்படியான அறிவிப்புகள் வெளியாவது கொஞ்சம் தான். சீயான் விக்ரம் தனது ஒவ்வொரு படத்தின் அறிவிப்பையும் எதிர்பார்ப்புகுரிய படமாகவே அமைத்து, அறிவித்து வருகிறார். தற்போது பெரும் பொருட்செலவில் உருவாகும் ‘கோப்ரா’ மற்றும் ‘பொன்னியின் செல்வன்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இதில் ‘கோப்ரா’ படத்தின் படப்பிடிப்பு கொரோனா அச்சுறுத்தல் முடித்து தொடங்கவுள்ளது. ஒவ்வொரு படத்திலுமே தனது நடிப்பால் அசரடித்து வரும் சீயான் விக்ரம் தனது 60-வது படத்தை இன்னும் எதிர்பார்ப்புக்குரிய படமாக அமைத்திருக்கிறார். ஆம்.. முதன் முறையாக தனது மகன் துருவ் விக்ரமுடன் இணைந்து நடிக்கவுள்ளார். ‘ஆதித்ய வர்மா’ படத்தில் தன் நடிப்பால் அனைவரையும் கலங்கடித்த துருவ், தன் அப்பாவுடன் இணைந்து களமிறங்கும் இந்தப் படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவுள்ளார். சூப்பர் ஸ்டாருடன் ‘பேட்ட’ என்ற…
Read Moreஅமேசான் பிரைமில் ‘பொன்மகள் வந்தாள்’ ரிலீஸாகப் போகுது!
2டி எண்டெர்டெயின்மெண்ட் சார்பில் நடிகை ஜோதிகாவும் நடிகர் சூர்யாவும் இனணந்து தயாரித்துள்ள “பொன்மகள் வந்தாள்” படம் வரும் மே 29-ஆம் தேதி அமேசான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது. இப்படத்தில் கதையின் நாயகியாக ஜோதிகா நடிக்க, கே.பாக்கியராஜ், ஆர்.பார்த்திபன், பிரதாப் போத்தன், பாண்டியராஜன், தியாகராஜன் என படத்தின் முக்கியக் கதாப்பாத்திரங்களில் ஐந்து இயக்குநர்கள் நடித்துள்ளனர். சுப்பு பஞ்சுவும் ஒரு முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ஐந்து இயக்குநர்கள் நடித்திருப்பதாலும் தொடர்ச்சியாக வெற்றிப்படங்களைக் கொடுத்து வரும் 2டி எண்டெர்டெயின்மெண்ட் ஜோதிகா கூட்டணி மீண்டும் இணைந்திருப்பதாலும் ரசிகர்களின் ஏகோபித்த எதிர்பார்ப்பை பெற்று இருக்கிறது பொன்மகள் வந்தாள். இணையவாசிகள், இல்லப் பெண்மணிகள் உள்பட அனைத்து தரப்பினராலும் ரசிக்கக் கூடிய வகையில் இப்படத்தை எழுதி இயக்கி இருக்கிறார் ஜே.ஜே ஃபெரெட்ரிக். கோவிந்த் வசந்தா இசையமைத்துள்ளார். ராம்ஜி ஒளிப்பதிவு, ரூபன் எடிட்டிங், கலை இயக்கம் அமரன். ஒவ்வொரு…
Read Moreவிஜய்சேதுபதி குடும்பத்தைப் பற்றியெல்லாம் தப்பா பேசறதெல்லாம் ரொம்ப தப்பு!
நடிகர் விஜய் சேதுபதி சில மாசங்களுக்கு இந்து மதத்தை புண்படுத்தியதாக அவர் மீது சிலர் வழக்கு பதிவு செய்துள்ளனர். இது பற்றி விஜய் சேதுபதி கருத்து கூறாத நிலையில், விஜய் சேதுபதியின் ரசிகர்கள் தற்போது சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்துள்ளனர். அதில் கூறியிருப்பது “விஜய் சேதுபதி அவர்கள் ஒரு ஆண்டுக்கு முன்பு சன் டிவி தொலைக்காட்சியில் ‘நம்ம ஊரு ஹீரோ’ என்ற நிகழ்ச்சியில் மறைந்த கதாசிரியரும் நகைச்சுவை நடிகருமான கிரேசி மோகன் அவர்கள் ஒரு மேடையில் சொன்ன நகைச்சுவை துணுக்கை, இந்த நிகழ்ச்சியில் மறு பதிவு செய்தார். அப்படி எதார்த்தமாக சொன்ன நகைச்சுவை துணுக்கு ஒன்று சொன்ன பொருள் தன்மையிலிருந்து மாற்றி இந்துக்களுக்கு எதிராக அந்த காணொளியை எடிட் செய்து குறிப்பிட்ட சிலர், வதந்திகளைப் பரப்பி வருகின்றனர். இந்த வதந்தியை தொடர்ந்து விஜய் சேதுபதியை எதிர்த்தும்…
Read Moreகொரோனா விழிப்புணர்வு பணியில் தொடர்ந்து விஜய் சேதுபதி ரசிகர் நற்பணி இயக்கம்!
மக்கள் செல்வன் விஜய் சேதுபதியின் சார்பாக கொரானா நோய்த்தடுப்பு பணியில் மக்களுக்காக தொடர்ந்து ஈடுபட்டுக் கொண்டிருக்கும் மரியாதைக்குரிய காவல்துறை அதிகாரிகளுக்கு விஜய்சேதுபதியின் ரசிகர் நற்பணி இயக்கத்தின் அகில இந்திய செயலாளர் J. குமரன் @kumaran4567 அவர்கள் சுமார் 1000 காட்டன் reusable முககவசங்களை இன்று திண்டிவனம் துணைக் காவல் கண்காணிப்பாளர்.(DSP) அவர்களிடம் வழங்கினார்.
Read Moreநடிகை சிருஷ்டிடாங்கே அறிவித்த கவிதைப் போட்டி!.
ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த கட்டில் திரைப்படக்குழுவின் கரோனா விழிப்புணர்வு கவிதைப்போட்டியின் விண்ணப்ப தேதி ஏப்ரல் 10வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. முதல் பரிசு : 25,000 இரண்டாம் பரிசு : 15,000 மூன்றாம் பரிசு : 10,000 ஆறுதல் பரிசு : 20 பேருக்கு கவிதை நூல்கள். மற்றும் சிறந்த 100 கவிதைகள் தொகுக்கப்பட்டு நூலாக வெளியிடும் திட்டம். நமது மத்திய,மாநில அரசுகள் கரோனா வைரஸ் பாதிப்பிலிருந்து, மக்களை மீட்க போர்க்கால நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் , முழுக்க முழுக்க, மக்களிடம் அது சார்ந்த விழிப்புணர்வை மேலும் தூண்டும் விதமாக கட்டில் திரைப்படக்குழு, “கரோனா விழிப்புணர்வு கவிதைப் போட்டி”யை அறிவித்திருக்கிறது.12 வரிகளுக்கு மிகாமல் கவிதை எழுதி, kattiltamilfilm@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். தேர்வுக்குழு முடிவே இறுதியானது. உலகில் எந்த நாடுகளிலிருந்தும், அனைத்து வயதினரும், பங்கேற்கும் இப்போட்டியில் ஒருவர் ஒரு…
Read More
