பரமு, செல்பிஷ் படங்களை இயக்கிய மாணிக் ஜெய்.N இயக்கத்தில் மூன்றாவதாக உருவாகியுள்ள படம் ‘கைமேரா’. ‘வச்சுக்கவா’ படத்தில் கதாநாயகனாக நடித்த இவர் ‘பரமு’ என்கிற படத்தின் மூலம் இயக்குநராக மாறினார். தற்போது தமிழ் மற்றும் கன்னட மொழியில் உருவாகி வரும் செல்பிஷ் என்கிற படத்தை இயக்கி நடித்துள்ளார். இந்நிலையில் தற்போது கைமேரா என்கிற படத்தை தயாரித்து, இயக்கி முடித்துள்ளார் மாணிக் ஜெய். இத்திரைப்படத்தில் அறிமுக நாயகனாக LNT எத்திஷ் நடிக்கிறார்.. மாறுபட்ட வேடங்களில் தாரை கிருஷ்ணன், ரஞ்சித் குமார் மற்றும் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் மாணிக் ஜெய் நடித்துள்ளனர்.. கதையின் நாயகிகளாக சௌமியா, கிருஷ்ண நந்து, ஞானேஸ்வரி உள்ளிட்ட மூன்று பேர் நடித்திருக்கின்றனர்.. மனித உடம்புக்குள் மிருகங்களின் செல்கள் புகுத்தப்பட்டால், மனிதனின் குணம் மிருகக் குணமாக மாறினால் அதன் தாக்கம் எப்படி இருக்கும் என்பதை மையமாக…
Read MoreCategory: சினிமா செய்திகள்
திரை பிரபலங்களின் பங்கேற்பில் நடைபெற்ற பிக்கிள் பால் திருவிழா!
இந்த ஞாயிறு, சென்னை பிக்கிள் பால் ரசிகர்களுக்கு சிறப்பான ஒரு ஞாயிறு திருவிழாவாக அமைந்தது. Ballpark Padel Club-க்காக, திரைத்துறை பிரபலங்கள் கலந்துகொண்ட PickleBall போட்டிகளை, Ceri Digital நிறுவனம், மாலை 5 மணி முதல் இரவு 9:30 மணி வரை, ரசிகர்களின் உற்சாகத்தில் சென்னையில் பிரம்மாண்டமாக நடத்தியது. டென்னிஸ் மற்றும் ஸ்குவாஷ் என இரண்டையும் கலந்த பிக்கிள் பால் விளையாட்டு, இந்தியாவில் தற்போது பிரபலமாகி வருகிறது. இந்த விளையாட்டை மேலும் பரப்பும் நோக்கில் Ballpark Padel Club இந்தியா முழுவதும் பல நகரங்களில் அரங்குகளை அமைத்துள்ளது. இதன் ஒரு பகுதியாகவே, Ceri Digital சார்பில் இந்த ஞாயிறு சென்னை நிகழ்வு நடைப்பெற்றது. இந்நிகழ்வில் சிறப்பு விருந்தினர்களாக, நடிகை கௌரி கிஷன், தேஜு அஷ்வினி, பிக்பாஸ் புகழ் அனன்யா ராவ், ஐரா, VJ பிரதூ, சுழல் 2…
Read More‘மக்கள் செல்வன் ‘விஜய் சேதுபதி- பூரி ஜெகன்நாத் -சார்மி கார் -பூரி கனெக்ட்ஸ் -கூட்டணியில் இணைந்த நடிகை சம்யுக்தா
‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதி – இயக்குநர் பூரி ஜெகன்நாத்- சார்மி கவுர் – பூரி கனெக்ட்ஸ் கூட்டணியில் தயாராகும் பான் இந்திய திரைப்படத்தில் நடிகை சம்யுக்தா இணைந்திருக்கிறார். அற்புதமான இயக்குநர் பூரி ஜெகன்நாத், பல் துறை திறமை கொண்ட ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியை முன்னணி வேடத்தில் நடிக்க வைத்து, தன்னுடைய இலட்சிய பான் இந்திய படத்தின் படப்பிடிப்பை தொடங்க உள்ளார். தனது அதி நவீன பாணியிலான கதை சொல்லலுக்கு பெயர் பெற்ற பூரி ஜெகன்நாத் – தனது தனித்துவமான வெகுஜன மற்றும் வணிகத்தனம் மிக்க பாணியை, ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியின் காந்தம் போன்ற திரை தோற்றத்துடன் இணைந்து தனித்துவமான சினிமா அனுபவத்தை வழங்க உறுதியளிக்கிறார். இந்த திரைப்படத்தை பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் ஆகியோர் பூரி கனெக்ட்ஸ் நிறுவனத்தின் கீழ் தயாரிக்கின்றனர்.…
Read Moreடிஸ்னி பிக்சார் புதிய விஷுவல் ஸ்பெக்டக்கிள் “எலியோ” – தமிழ் ட்ரெய்லர் வெளியீடு! ஜூன் 20, 2025 அன்று திரையரங்குகளில் வெளிவரவுள்ளது!
இன்சைட் அவுட் 2 மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து, டிஸ்னி மற்றும் பிக்சார் இணைந்து மற்றுமொரு கனவுபோன்ற அதிரடியான திரைப்படத்தை வழங்க உள்ளன – “எலியோ”! இந்த இன்டர்கலக்ஸி அத்தியாயம் வரும் ஜூன் 20, 2025 அன்று ஆங்கிலம், தமிழ், ஹிந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் உலகமெங்கும் வெளியாகிறது. இன்க்ரெடிபிள்ஸ், டாய் ஸ்டோரி, ஃபைண்டிங் நீமோ, இன்சைட் அவுட் போன்ற கனவுகளை ரசிகர்களுக்கு வழங்கிய புகழ்பெற்ற ஸ்டூடியோ, இப்போது நம்மை விண்வெளிக்கு அப்பால் அழைத்துச் செல்லும் புதிய அனுபவத்தை வழங்குகிறது. எலியோ – விண்வெளியை பற்றிய ஆசையுடன் வாழும் ஒரு சிறுவன், எதிர்பாராத விதமாக அண்டாரங்கள் முழுவதும் பயணம் செய்யும் புது அவதாரத்தில், பூமியின் தூதராக பரிசீலிக்கப்படுகிறான்! வித்தியாசமான கிரகங்கள், வினோதமான உயிரினங்கள் மற்றும் பிரபஞ்சத்தை பாதிக்கும் ஒரு பெரும் சிக்கலை சந்திக்கிறான் எலியோ. இந்த பயணத்தில், தனக்கென…
Read Moreரஜினிகாந்தின் பாராட்டால் உற்சாகமடைந்த ‘கண்ணப்பா’ படக்குழு!
தெலுங்கு திரையுலகின் மிகப்பெரிய பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘பெத்தராயுடு’ வெளியாகி 30 ஆனடுகள் நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில் சந்தித்துக் கொண்டனர். 1995 ஆம் ஆண்டு ஜூன் 15 ஆம் தேதி வெளியான ‘பெத்தராயுடு’ திரைப்படம் சக்திவாய்ந்த கதை சொல்லல், மறக்க முடியாத நடிப்பு மற்றும் இந்தியாவின் மிக முக்கியமான இரண்டு நட்சத்திரங்களின் திரை இருப்பு ஆகியவற்றால் தெலுங்கு திரையுலக வரலாற்றில் மிக முக்கியமான திரைப்படமாக உள்ளது. ‘பெத்தராயுடு’ படத்தின் 30 வது வருடத்தின் நிறைவை கொண்டாடும் விதமாக நடிகர் ரஜினிகாந்த் மற்றும் நடிகர் டாக்டர்.எம்.மோகன் பாபு சென்னையில், சந்தித்துக் கொண்டு தங்களது திரை பயணத்தை கொண்டாடினர். மேலும், அதே நாளில், விஷ்ணு மஞ்சுவின் நடிப்பில் வரும் ஜூன் 27 ஆம் தேதி உலகம் முழுவதும், பல மொழிகளில் வெளியாக…
Read Moreரேவதி இயக்கத்தில் நடிகர்கள் பிரியாமணி மற்றும் சம்பத் ராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘குட் வொய்ஃப்’ சீரிஸின் டீசரை ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது!
சென்னை, ஜூன் 16, 2025: ஜியோஹாட்ஸ்டார் ஸ்பெஷலாக வெளியாக இருக்கும் ‘குட் வைஃப்’ தொடரின் டீசரை ஜியோ ஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளது. இது சமூகவலைதளங்களில் ரசிகர்கள் மத்தியில் பேசுபொருளாகியுள்ளது. இந்தத் தொடர் சர்வதேச அளவில் பாராட்டப்பட்ட ’குட் வைஃப்’ என்ற தொடரின் தமிழ் வடிவம். தேசிய விருது வென்ற நடிகை பிரியாமணி மற்றும் திறமையான நடிகர் சம்பத் ராஜ் நடித்திருக்கும் இந்தத் தொடரை நடிகை-இயக்குநர் ரேவதி இயக்கியுள்ளார். இதன் மூலம் இயக்குநராக ரேவதி ஓடிடியில் அறிமுகமாகிறார். இதே சீரிஸ் இந்தியிலும் ‘தி டிரையல்- பியார், கணூன், தோகா’ என்ற பெயரில், நடிகர்கள் கஜோல் மற்றும் ஜிஷூ சென்குப்தா நடிப்பில் உருவானது. இது ஜியோஹாட்ஸ்டாரில் வெளியாகி வெற்றிப்பெற்றது. இப்போது தமிழ் ரசிகர்ளுக்கு ஏற்றபடி இந்த தொடர் உருவாகியுள்ளது. ஓடிடியில் இயக்குநராக அறிமுகவாது குறித்து நடிகை- இயக்குநர் ரேவதி மகிழ்ச்சியுடன் பகிர்ந்து…
Read Moreதமிழ்செல்வி தன் கனவை வெல்ல 1 லட்சம் திரட்டுவாளா ? – விஜய் டிவி “சின்ன மருமகள்” தொடரின் நெஞ்சைத் தொடும் கதை!
தமிழ் மக்களின் நெஞ்சங்களில் இடம்பிடித்த தமிழின் முன்னணி தொலைக்காட்சியான விஜய் தொலைக்காட்சியில், திங்கள் முதல் வெள்ளி வரை இரவு தோறும் 9.30 மணிக்கு ஒளிபரப்பாகி வரும் நெடுந்தொடர் “சின்ன மருமகள்”. பெண் ரசிகர்கள் தனித்த வரவேற்பைப் பெற்றுள்ள இத்தொடர், அதிரடி திருப்பங்களுடன் உச்சகட்டத்தை எட்டியுள்ளது. பெண்களை மையப்படுத்திய தமிழ் சீரியலுக்கு எப்போதுமே தமிழக பெண்களிடம் பெரும் வரவேற்பு உள்ளது. குடும்ப பிரச்சனைகளை அழுத்தமாக பேசி, பெண் சக்தியின் பெருமையைப் பேசும் சின்ன மருமகள் தொடர், பெண்களிடம் பெரும் பாராட்டுக்களைப் பெற்று வருகிறது. அதிலும் கடந்த வாரம், வீட்டை விட்டு வெளியே வந்து, கணவனையும் தகப்பனையும் உதறி, தன் கனவைச் சாதிக்க தமிழ்செல்வி மேற்கொண்ட பயணம், ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த நிலையில் இந்த வார தொடரில், தமிழ்செல்வி மருத்துவராகும் தன் கனவை நிறைவேற்ற, அவளுக்குத் தேவைப்படும்…
Read Moreகொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள், பிரியாணி வழங்கி கௌரவிப்பு
கேப்டன் என்று ரசிகர்கள், தொண்டர்கள் மற்றும் மக்களால் அன்புடன் அழைக்கப்பட்டவர் விஜயகாந்த். முன்னணி நடிகராக திகழ்ந்த அவர், தனது ஒவ்வொரு படத்தின் படப்பிடிப்பு நிறைவு நாளின் போதும் படக்குழுவினர் அனைவருக்கும் அறுசுவை உணவும், புது உடைகளும் வழங்குவதை வாடிக்கையாக கொண்டவர். தற்போது, சின்ன கேப்டன் என்று அழைக்கும் விதத்தில் சிறப்பான செயல் ஒன்றை செய்துள்ளார் விஜயகாந்தின் மகன் சண்முகபாண்டியன். தான் நடிக்கும் ‘கொம்புசீவி’ படப்பிடிப்பு நிறைவை முன்னிட்டு படக்குழுவினர் அனைவருக்கும் புதிய உடைகள் மற்றும் பிரியாணி வழங்கி அவர் கௌரவித்துள்ளார். இது குறித்து பேசிய சண்முகபாண்டியன், “இயன்றதை செய்வோம் இல்லாதவர்க்கே என்பதை தனது வாழ்நாள் லட்சியமாக கொண்டு அனைவருக்கும் அள்ளி கொடுத்தவர் எனது தந்தையார். அவரது அடிச்சுவற்றை பின்பற்றி ‘கொம்புசீவி’ படம் உருவாக கடுமையாக உழைத்த குழுவினருக்கு என்னால் முடிந்த சிறிய அன்பளிப்பாக இன்று உணவையும், உடைகளையும்…
Read Moreபுன்னகை சொன்ன கதை – ஒற்றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்
சோஷியல் டிராமா வகைமையைச் சேர்ந்த, “புன்னகை சொன்ன கதை” குறும்படத்தை D RAM Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக்கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் முயற்சியைத் தங்கள் ஒற்றுமையால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism) கூறுகளைக் கொண்டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்களின் ஒற்றுமையே சமூக அரணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வைக்கிறது. பாடலாசிரியரும் வசனகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். குறும்படத்தைப் பற்றி இயக்குநர் தினேஷ் ராம் கூறுகையில், “சில சமயம், முன்னால் செல்லும் காரின் பின்புற கண்ணாடியின் வழியாக ஒரு குழந்தை கையை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சிரிக்கும். அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும். அன்றைய நாள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டது போலிருக்கும். இப்படி…
Read Moreபுன்னகை சொன்ன கதை – ஒற்றுமையையும் அன்பையும் பேசும் குறும்படம்
சோஷியல் டிராமா வகைமையைச் சேர்ந்த, “புன்னகை சொன்ன கதை” குறும்படத்தை D RAM Films தயாரித்துள்ளது. வடக்கே இருந்து எழும் குரலால் வசீகரிக்கப்பட்டு அடிப்படைவாதியாகும் ஒரு கலாச்சாரக் காவலரின் முயற்சியைத் தங்கள் ஒற்றுமையால் முறியடிக்கின்றனர் கிராம மக்கள். மாய யதார்த்த (Magical Realism) கூறுகளைக் கொண்டுள்ள இக்குறும்படம், அன்பை முதன்மை அறமென்றும், மக்களின் ஒற்றுமையே சமூக அரணிற்கான வாய்ப்பென்றும் ஒரு வலுவான கருத்தை முன் வைக்கிறது. பாடலாசிரியரும் வசனகர்த்தாவும் நடிகருமான M. ஜெகன் கவிராஜ், இக்குறும்படத்தின் மூலமாக வில்லனாக அறிமுகமாகியுள்ளார். குறும்படத்தைப் பற்றி இயக்குநர் தினேஷ் ராம் கூறுகையில், “சில சமயம், முன்னால் செல்லும் காரின் பின்புற கண்ணாடியின் வழியாக ஒரு குழந்தை கையை ஆட்டி நம்மைப் பார்த்துக் குதூகலமாகச் சிரிக்கும். அந்த மகிழ்ச்சி நம்மையும் தொற்றிக் கொள்ளும். அன்றைய நாள் கடவுளால் ஆசிர்வதிக்கப்பட்டது போலிருக்கும். இப்படி…
Read More