Adler Entertainment தயாரிப்பில், அறிமுக இயக்குநர் நவீத் s ஃபரீத் இயக்கத்தில், நிஷாந்த் ரூஷோ, வர்ஷிணி, ஷாலினி நடிப்பில், இன்றைய தலைமுறை கதையை, கலக்கலான் காமெடி எண்டர்டெய்ன்மெண்ட் படமாக உருவாகியுள்ள திரைப்படம் “சொட்ட சொட்ட நனையுது”. படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோ அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. திரையுலகின் முன்னணி நட்சத்திரங்களான இயக்குனர் வெங்கட் பிரபு, நடிகர்கள் காளிதாஸ் ஜெயராம், ரியோ ராஜ், ரோபோ சங்கர், ரக்ஷன், நிதின் சத்யா, மா க ப ஆனந்த், KPY புகழ், KPY தீனா, KPY பாலா, பிக் பாஸ் பிரபலம் முத்துக்குமரன், இசையமைப்பாளர் ஜிப்ரான், தீபக், தயாரிப்பாளர் சி வி குமார், லிப்ரா ரவிச்சந்திரன், மற்றும் நடிகை செளந்தர்யா ஆகியோர் தங்கள் சமூக வலைத்தள பக்கம் வழியே இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் டைட்டில் ப்ரொமோவை வெளியிட்டுள்ளனர். இன்றைய தலைமுறையின் முக்கிய…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நடிகர் ஜிவி பிரகாஷின் ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது!
ஸ்கைமேன் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் வழங்கும் இயக்குநர் சீனு ராமசாமி இயக்கத்தில், ஜிவி பிரகாஷ் குமார் நடிப்பில் உருவாகியுள்ள ’இடிமுழக்கம்’ படத்தின் இரண்டாவது சிங்கிள் ‘கானா விளக்கு மயிலே’ பாடலை நடிகர்கள் ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இணைந்து வெளியிட்டுள்ளனர். இசையமைப்பாளராகவும் நடிகராகவும் தொடர்ந்து வெற்றிப்படங்களைக் கொடுத்து வருகிறார் ஜிவி பிரகாஷ். அடுத்து, இவர் இயக்குநர் சீனு ராமசாமியுடன் இணைந்திருக்கும் ‘இடிமுழக்கம்’ திரைப்படம், திரைப்பட ஆர்வலர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தப் படத்தை ஸ்கைமேன் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் கலைமகன் முபாரக் தயாரித்துள்ளார். தற்போது படத்தில் இருந்து எனர்ஜிடிக்கான இரண்டாவது பாடலான ‘கானா விளக்கு மயிலே’ வெளியாகியுள்ளது. வைரமுத்து எழுதியுள்ள இந்த நாட்டுப்புறப் பாடலை ஆண்டனி தாசன் பாடியுள்ளார். என்.ஆர். ரகுநந்தன் இசையமைத்துள்ளார். திரையுலகின் முன்னணி நடிகர்களான ஆர்யா மற்றும் மக்கள் செல்வன் விஜய்…
Read Moreபுரட்சி தளபதி விஷால் மக்கள் நல இயக்கம் – தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்
மக்கள் நல இயக்கத்தின் அன்பிற்கிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம் மக்கள் பணியே மகத்தான பணி என்ற உயரிய சிந்தனையுடன் செயல்படுவோம் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பிறக்கும் தமிழ் புத்தாண்டு அனைவருக்கும் நிறைந்த வளம், வளர்ச்சி, ஆரோக்கியம், சந்தோஷம் அனைத்தும் கிடைத்திட இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள்! எந்த அரசியல் ஆதாயம் எதிர்பார்ப்பும் இன்றி எப்போதும் மக்கள் நலனில் அக்கறை கொண்ட மக்கள் நல இயக்கத்தின் அன்பிற்கினிய சொந்தங்கள் அனைவருக்கும் வணக்கம், புரட்சி தளபதி விஷால் அவர்களின் ஆணைக்கிணங்க மக்கள் நல இயக்கத்தின் சார்பில் “டாக்டர் அண்ணல் அம்பேத்கர்” அவர்களின் பிறந்த நாளில் திருவுருவ படத்திற்கு மலர் தூவி மரியாதை செய்தல். பொது மக்களின் தாகம் தீர்க்க கோடைகால தண்ணீர் பந்தல் “மக்கள் பணியே மகத்தான பணி” என்னும் மக்கள் நல இயக்கத்தின் சார்பில் ஆண்டுதோறும் கோடைக்காலங்களில் மக்களின்…
Read Moreநடிகர் ஹிர்து ஹாரூன் நடிக்கும் ‘மைனே பியார் கியா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!!
அறிமுக இயக்குநர் ஃபைசல் எழுதி இயக்கும் ‘மைனே பியார் கியா’ எனும் திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த திரைப்படத்தை ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் சஞ்சு உன்னிதன் தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் ஹிர்து ஹாரூன், பிரீத்தி முகுந்தன், அஸ்கர் அலி ,மிதுன், அர்ஜு , ஜெகதீஷ், முஸ்தபா மற்றும் ஜெரா ஆகியோர் நடித்திருக்கிறார்கள். கடந்த ஆண்டு வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘மந்தாகினி’ எனும் படத்தை தொடர்ந்து ஸ்பைர் புரொடக்ஷன்ஸ் தயாரித்திருக்கும் இரண்டாவது திரைப்படம் இது. ‘முரா’ எனும் வெற்றி படத்தினை தொடர்ந்து நடிகர் ஹிர்து ஹாரூன் ‘மைனே பியார் கியா’ படத்தில் முக்கிய வேடத்தில் நடித்திருக்கிறார். ‘ஸ்டார்’ எனும் தமிழ் படத்திலும், ‘ஆசை கூடை’ எனும் சூப்பர் ஹிட்டான வீடியோ ஆல்பத்திலும் நடித்த நடிகை ப்ரீத்தி முகுந்தன் இப்படத்தின் மூலம் மலையாளத்தில் கதாநாயகியாக…
Read Moreஅழகு மூவி மேக்கர்ஸ் உருவாக்கும் “பூங்கா”
‘பூங்கா’ என்பது வெறும் பொழுதுபோக்கு அல்ல. அது ஒரு வாழ்வியல். பலதரப்பட்ட மக்கள் ஒன்று கூடும் சங்கமம். சொர்க்கம் ஆகாயத்தில் இருக்கிறது என்பார்கள், பூங்கா மண்மீது உள்ள சொர்க்கம் என்கிறார் இயக்குனர் K.P.தனசேகர். ஒரு நாலு பசங்க பிரச்சனைகளோடு பூங்கா வருகிறார்கள். அங்கு அவர்களின் பிரச்சனை தீர்ந்ததா என்பதுதான் கதை. கதாநாயகனாக கௌசிக் நடிக்கிறார். கதாநாயகியாக ஆரா நடிக்கிறார். இவர்களுடன் சசி தயா, பிரணா, பாலசுப்பிரமணியம், பூங்கா ராமு, திண்டுக்கல் மணிகண்டன், நோயல் ரெஜி, மேஜிக் சரவணகுமார், ஸ்மூல் ராஜா, சாய் ஜேபி, வரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் K.P.தனசேகர். ஒளிப்பதிவு R.H.அசோக், இசை அகமது விக்கி, எடிட்டிங் முகன் வேல், கலை குணசேகர், சண்டை பயிற்சி S.R.ஹரி முருகன், நடனம் சுரேஷ் சித், PRO கோவிந்தராஜ். தயாரிப்பு K.P.தனசேகர், பூங்கா R.ராமு…
Read Moreதமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் – பெப்சி அமைப்பு இடையே நிலவும் பிரச்சினை தொடர்பாக போலீசில் புகார்!
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து நிர்வாகிகள் ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்கள் அதில் 09.04. 2025 அன்று தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளன தலைவர் திரு ஆர் கே செல்வமணி அவர்கள் பத்திரிகையாளர் சந்திப்பில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தினை பற்றி மீண்டும் அவதூறாக பேசியுள்ளார் அது மிகவும் கண்டனத்துக்குரிய ஒன்றாகும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து தொழிலாளர்கள் சங்கம் ஆரம்பிக்கக் கூடாது என்பதற்காக தாய் சங்கத்தின் வழிகாட்டுதலின் பெயரில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் நலன் கருதியும் தமிழ்நாடு தொழிலாளர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்க வேண்டியும் தமிழ்நாட்டில் படித்துவிட்டு வேலை தேடும் இளைஞர்களுக்கு ஒரு வாய்ப்பு ஏற்படுத்தித் தரும் விதமாகவும் தென்னிந்திய திரைப்பட தொழிலாளர்கள் சம்மேளனத்தின் உள்ள எல்லா சங்கங்களிலும் அதிருப்தி அடைந்திருக்கும் பல உறுப்பினர்களும் சேர்ந்து இந்த தமிழ் திரைப்பட தொழிலாளர்கள் கூட்டமைப்பு உருவாக்கியுள்ளார்கள். அதற்கு தயாரிப்பாளர்…
Read Moreசான்ஃப்ரான்சிஸ்கோவில் சந்தித்துக்கொண்ட சாதனைத் தமிழர்கள்!
பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனர் அரவிந்த் ஶ்ரீநிவாஸை அமெரிக்காவில் சந்தித்துப் பேசினார் கமல்ஹாசன்! இந்த பெர்ப்லெக்ஸிடி ஏஐ நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்காவின் சான்ஃப்ரான்சிஸ்கோ நகரில் உள்ளது. அங்கு சென்று பெர்ப்லெக்ஸ் ஏஐ நிறுவனத்தின் தலைமைச் செயலதிகாரியான அரவிந்த் ஸ்ரீநிவாசனைச் சந்தித்து, வளர்ந்துவரும் ஏஐ தொழில்நுட்பம் குறித்து விரிவாகக் கேட்டறிந்தார் இந்திய திரைவானின் உச்சநட்சத்திரமான கமல்ஹாசன். இந்தச் சந்திப்பைக் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட கமல்ஹாசன், சினிமா தொடங்கி கணினித் துறை வரை உபகரணங்கள் வளர்ச்சி அடைந்திருக்கின்றன. ஆனால், அடுத்து என்ன என்கிற நமது தேடல் தொடர்ந்துகொண்டே இருக்கிறது. ‘ஒரு சமயத்தில் ஒரு கேள்வி’ என்ற முறையில் எதிர்காலத்தை நிர்ணயிக்கவிருக்கும் அரவிந்த் ஸ்ரீநிவாசன் மற்றும் அவரது குழுவினர் உருவாக்கிய இந்திய மேதைமையால் ஒளிரும் பெர்ப்லெக்ஸிடி நிறுவனத்தின் சான்ஃப்ரான்சிஸ்கோ தலைமையகத்துக்குச் சென்றதில் எனக்குள் பேரார்வம் ஏற்பட்டிருக்கிறது. க்யூரியாசிடி கில்ஸ் த கேட்…
Read Moreமக்கள் செல்வன் விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத், சார்மி கவுர், பூரி கனெக்ட்ஸ் இணையும், பான் இந்தியா திரைப்படத்தில், நடிகை தபு இணைந்துள்ளார் !!
கமர்ஷியல் இயக்குநர் பூரி ஜெகன்நாத் சமீபத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிப்பில், தனது அடுத்த கனவுப்படமாக உருவாகும், பான்-இந்தியா திரைப்படத்தின் அறிவிப்பினை வெளியிட்டார். உகாதி திருநாளில் அறிவிக்கப்பட்ட இந்த பிரம்மாண்டத் திரைப்படத்தை, பூரி ஜெகன்நாத் மற்றும் சார்மி கவுர் அவர்களின் தயாரிப்பு நிறுவனமான பூரி கனெக்ட்ஸின் சார்பில் பிரம்மாண்டமாக தயாரிக்கவுள்ளனர். நடிகர் விஜய் சேதுபதிக்காக இயக்குநர் பூரி ஜெகன்நாத் மிகவும் தனித்துவமான ஒரு கதையை மிக நுணுக்கமாக வடிவமைத்துள்ளார். இதில் விஜய் சேதுபதி இதுவரை எவரும் பார்த்திராத ஒரு மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் உணர்வுப்பூர்வமான கதை, அழுத்தமான பாத்திரம், விஜய் சேதுபதியின் புதிய அடையாளத்தை திரையுலகிற்கு வெளிப்படுத்துவதாக இருக்கும். இந்தப் படத்தில் மிக முக்கியமான ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க நடிகை தபு ஒப்பந்தமாகியுள்ளார். தனித்துவமான கதைத் தேர்வுகளுக்கு பெயர் பெற்ற தபு, இப்படத்தின் கதாபாத்திரத்தாலும்,…
Read Moreஃபேண்டஸி ஹாரர் காமெடி படமாக உருவாகி இருக்கும் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES)
கதையின் நாயகனாக தர்ஷன் நடித்திருக்கிறார் . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் நடித்திருக்கிறார். இவர்களுடன் இணைந்து அர்ஷா சாந்தினி பைஜூ , வினோதினி , தீனா , அப்துல் லீ , மாஸ்டர் ஹென்ரிக் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர். T. ராஜவேல் எழுதி , இயக்கி இருக்கிறார். இத்திரைப்படத்தை PLAYSMITH STUDIOS நிறுவனம் சார்பில் S.விஜய பிரகாஷ் தயாரித்து உள்ளார் .இவருடன் இணைந்து இயக்குனர் S.P.சக்திவேல் ( SOUTH STUDIOS ) படைப்பு தயாரிப்பாளராக களம் கண்டுள்ளார். தற்போது இத்திரைப்படத்தை பார்த்த முன்னணி நடிகர் மற்றும் தயாரிப்பாளர் சிவகார்த்திகேயன் படக்குழுவை வாழ்த்தி, பாராட்டியுள்ளார். மேலும் இப்படத்தின் உலக வெளியீட்டு உரிமையை கைப்பற்றி தனது தயாரிப்பு நிறுவனமான சிவகார்த்திகேயன் புரொடக்சன்ஸ் மூலம் உலகம் முழுவதும் விரைவில் வெளியிட உள்ளார்.
Read Moreசத்யா மூவிஸ் தயாரிக்கும் அருளாளர் இராம வீரப்பன் குறித்த ஆவணப்படத்தின் முன்னோட்டாம் வெளியீடு.
உலகத்தரத்திற்கு இணையாக மிக பிரம்மாண்டாமாக உருவாகி வரும் , அருளாளர் ஐயா திரு.இராம வீரப்பன் அவர்களின் ‘ king maker ‘ என்னும் ஆவணப்படம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது . சமீபத்தில் மறைந்த மூத்த அரசியல் தலைவரும் , சத்யா மூவிஸின் நிறுவனர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளருமான திரு.இராம வீரப்பன் ஐயா அவர்கள் குறித்த ஆவணப்படம் மிக பிரம்மாண்டமாகவும் வரலாற்றில் நாம கவனிக்க தவறிய முக்கிய நிகழ்வுகளை நம் கண்முன் நிறுத்தும் விதமாக மிக நேர்த்தியாகவும் தயாராகி வருகிறது . தமிழகத்தின் அரசியல் மற்றும் திரையுலக வரலாற்றில் முக்கிய ஆளுமையாக இருந்த ஐயா அவர்களின் ஆவணப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் வேளையில், சூப்பர் ஸ்டார் மற்றும் உலக நாயகன் உள்ளிட்ட திரையுலகத்தின் முன்னணி பிரபலங்கள் மற்றும் தமிழக முதல்வர் ஐயா திரு மு.க.ஸ்டாலின் உட்பட அனைத்து…
Read More