யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீடு

நடிகர் ரியோ ராஜ் நடித்திருக்கும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘ ஆஸம் கிஸா..’ எனும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ். சுகுமார் இயக்கத்தில் உருவாகி வரும் ‘ஸ்வீட்ஹார்ட்’ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், அருணாசலேஸ்வரன், ரெஞ்சி பணிக்கர், துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் நகைச்சுவை நடிகர் ரெடின் கிங்ஸ்லி சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமான்டிக் ஜானரில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஒய் எஸ் ஆர் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இப்படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி பெரும்…

Read More

4த் ஃப்ளோர் – ஆரி அர்ஜூனன் நடிக்கும் படத்தின் தலைப்பு வெளியானது.

மனோ கிரியேஷன் சார்பில் A. ராஜா தயாரிப்பில், ஆரி அர்ஜூனன், தீப்ஷிகா, பவித்ரா, தலைவாசல் விஜய், ஆதித்யா கதிர் நடிக்கும் படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில், அதன் தலைப்பினை, படக்குழு படத்தின் நாயகன் ஆரி அர்ஜூனன் பிறந்தநாளான பிப்ரவரி 12 – இல் அறிவித்தது. முன்னதாக அவருடைய பிறந்தநாளை பூந்தமல்லியில் உள்ள பார்வைத்திறன் குன்றியோர் பள்ளியில் கேக் வெட்டியும், விருந்து பரிமாறியும் கொண்டாடப்பட்டது. அதனைத் தொடர்ந்து படத்தின் தலைப்பினை பார்வைத்திறன் குன்றிய வயதானவர்கள் மற்றும் மாணவர்கள் முன்னிலையில் ஆரி அர்ஜூனன் வெளியிட்டார். பரபரப்பான திரில்லர் திரைப்படமாக உருவாகியிருக்கும் இப்படத்தின் பர்ஸ்ட் லுக் விரைவில் வெளியிடப்படும் என படக்குழு தெரிவித்தது. 4த் ஃப்ளோர் திரைப்படத்தை மனோ கிரியேஷன் சார்பில் A. ராஜா தயாரித்துள்ளார். L.R. சுந்தரபாண்டி எழுதி இயக்கியுள்ளார். J. லக்ஷ்மன் ஒளிப்பதிவு செய்துள்ளார். தரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பு…

Read More

விக்ரம் பிரபு நடிக்கும் ‘லவ் மேரேஜ்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு

அறிமுக இயக்குநர் சண்முக பிரியன் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘லவ் மேரேஜ்’ எனும் திரைப்படத்தில் விக்ரம் பிரபு, கௌதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் மம்முட்டி படப் புகழ் நடிகை சுஷ்மிதா பட், மீனாட்சி தினேஷ், ரமேஷ் திலக், அருள்தாஸ், கஜ ராஜ், முருகானந்தம், கோடாங்கி வடிவேலு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சத்யராஜ் சிறப்பு தோற்றத்தில் நடித்திருக்கிறார். தமிழ் திரை இசையின் கரண்ட் சென்சேஷன் இசையமைப்பாளர் ஷான் ரோல்டன் இசையமைக்கும் இந்த திரைப்படத்திற்கு மதன் கிறிஸ்டோபர் ஒளிப்பதிவு செய்திருக்கிறார் . படத்தொகுப்பு பணிகளை பரத் விக்ரமன் மேற்கொள்ள, தயாரிப்பு வடிவமைப்பை எம். முரளி கவனிக்கிறார். கிராமிய பின்னணியில் பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய இந்த திரைப்படத்தை கடந்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகி சூப்பர் ஹிட்டான ‘ஸ்டார்’ படத்தை தயாரித்த ரைஸ் ஈஸ்ட் என்டர்டெய்ன்மென்ட் ( Rise East Entertainment)…

Read More

விஜய் தேவரகொண்டாவின் VD 12 படத்தின் தலைப்பு ‘கிங்டம்’ பட டீசர் ரசிகர்களுக்கு மாஸ்டர் பீஸ் அனுபவத்தை தருவதை உறுதியளிக்கிறது!

கௌதம் தின்னனுரி இயக்கத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டாவின் ‘VD12’, இந்த ஆண்டின் மிகவும் எதிர்பார்க்கப்படும் படங்களில் ஒன்று. இந்தப் படத்தின் தலைப்பு தற்போது ‘கிங்டம்’ என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு டீசர் வெளியாகியுள்ளது. தீவிர ஆக்‌ஷன் மற்றும் உணர்வுகள் நிரம்பிய படமாக இது உருவாகியுள்ளது. சீட்டின் நுனியில் பார்வையாளர்களை அமர வைக்கும் வகையிலான த்ரில்லர் மற்றும் பிரம்மாண்ட திரையனுபவத்தை பார்வையாளர்களுக்கு இந்தப் படம் வழங்க இருக்கிறது. டீசரில் ஜூனியர் என்டிஆர் தெலுங்கிற்கும் சூர்யா தமிழுக்கும், ரன்பீர் கபூர் இந்திக்கும் குரல் கொடுத்துள்ளார்கள். இது ரசிகர்களுக்கும் சிறந்த டீசர் அனுபவத்தைக் கொடுத்திருக்கிறது. இந்தப் படம் சிறப்பாக வர நடிகர் விஜய் தேவரகொண்டா தனது கடின உழைப்பைக் கொடுத்துள்ளார். உலகம் முழுவதும் உள்ள அவரது ரசிகர்கள் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் சரியான கதையாக இந்தப் படத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.…

Read More

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் ‘சாரி’ திரைப்படத்தின் டிரெய்லர் முத்திரை பதிக்கிறது!

இயக்குநர் ராம் கோபால் வர்மாவின் வெளியாக இருக்கும் ‘சாரி’ திரைப்படம் அதன் அறிவிப்பு வந்ததில் இருந்தே இந்திய திரையுலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. படத்தின் முதல் பார்வை மற்றும் டீசர் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் டிரெய்லர் அதன் எதிர்பார்ப்பை இன்னும் பல மடங்கு அதிகரித்துள்ளது. இயக்குநர் ராம் கோபால் வர்மா ‘சைக்கலாஜிக்கல் த்ரில்லர்’ வகை ஜானர் எடுப்பதில் வல்லவர். அந்த ஜானரில் அமைந்திருக்கும் இந்தக் கதையில் பல திருப்பங்கள் அமைந்திருப்பது ரசிகர்களுக்கு நிச்சயம் சிறந்த விருந்தாக அமையும் என்பதையே டிரெய்லர் காட்டுகிறது. இதை இயக்குநர் கிரி கிருஷ்ணா சரியாகத் திரையில் கொண்டு வந்திருக்கிறார். ‘சாரி’ திரைப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் மலையாளம் ஆகிய மொழிகளில் பிப்ரவரி 28, 2025 அன்று ஒரே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்தில் ஆராத்யா…

Read More

ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !!

அனைத்து தரப்பும் ரசிக்கும் படியான புதிய ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ் “ உலகம் முழுவதும் ஃபேண்டஸி ஹாரர் காமெடி திரைப்படங்களுக்கு அனைத்து தரப்பு ரசிகர்களும் விரும்பி திரையரங்குகளுக்கு குடும்பத்துடன் விசிட் அடிப்பது வழக்கம். அதற்கு கடந்த சில வருடங்களில் வந்து வெற்றி பெற்ற படங்களை நாம் வரிசையாக கூறலாம் , அவ்வரிசையில் இப்போது முற்றிலும் புதிய களத்துடன் திரைக்கு வர இருக்கும் திரைப்படம் “ஹவுஸ் மேட்ஸ்” (HOUSE MATES). இத்திரைப்படத்தில் கதையின் நாயகனாக தர்ஷன் நடிக்கிறார் , இவர் ஏற்கனவே கனா , தும்பா போன்ற படங்களில் முதன்மை கதாப்பாத்திரங்களில் நடித்தவர் . விஜய் டிவியின் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பெரும்பான்மையாக அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது . இவருடன் மிக முக்கியமான கதாப்பாத்திரத்தில் காளி வெங்கட் அவர்களும் நடித்திருக்கிறார். இவர்களுடன்…

Read More

டாடா புகழ்  இயக்குநர் கணேஷ் K பாபு  கதையில்,  இயக்குநர் கல்யாண் K ஜெகன் இயக்கத்தில், “டார்க்” பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !!

MG STUDIOS & FiveStar தயாரிப்பில், டாடா இயக்குநர் கணேஷ் K பாபு கதையில் உருவாகியுள்ள “டார்க்” படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது !! MG STUDIOS சார்பில் தயாரிப்பாளர் APV. மாறன் மற்றும் FiveStar நிறுவனம் சார்பில் செந்தில் ஆகியோருடன் இணைந்து டாடா புகழ் இயக்குநர் கணேஷ் K பாபு, கதை எழுதி தயாரிக்க, இயக்குநர் கல்யாண் K ஜெகன் திரைக்கதை, இயக்கத்தில், அறிமுக நடிகர் அஜய் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள “டார்க்” திரைப்படத்தின், அதிரடியான ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகிறது. இளைஞன் ஒருவனுக்கு ஏற்படும் அமானுஷ்ய விசயங்களும் அதைத்தொடர்ந்து நடக்கும் சம்பவங்களும் தான் இப்படத்தின் கதை. ரசிகர்களை இருக்கை நுனியில் இருத்தி வைக்கும், அதிரடி திருப்பங்களுடன் கூடிய சைக்கலாஜிகல் ஹாரர் திரைப்படமாக இப்படம் உருவாகியுள்ளது. காமெடி பேய்ப்படங்களுக்கு மத்தியில், மாறுபட்ட களத்தில்,…

Read More

நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ ஃபோட்டோ சீரிஸ்!

நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை இயக்குநர் ராம் கோபால் வர்மா இன்று காலை 11 மணிக்கு வெளியிட்டார்! பிரபல புகைப்படக் கலைஞர் நவீன் கல்யாண் ‘சாரி கேர்ள்’ ஆராத்யாவை வைத்து ’அனிமல் ஆராத்யா’ என்ற புரட்சிகரமான ஃபோட்டோ சீரிஸை எடுத்துள்ளார். இதன் வெளியீட்டு நிகழ்வில் சிறப்பு விருந்தினராக இயக்குநர் ராம் கோபால் வர்மா கலந்து கொண்டார். நிகழ்வில் ராம் கோபால் வர்மா பேசியதாவது, “நவீன் கல்யாணின் ’அனிமல் ஆராத்யா’ என்ற ஃபோட்டோ சீரிஸை வெளியிடும் நிகழ்வில் நான் சிறப்பு விருந்தினராக இருப்பதில் பெருமைப்படுகிறேன். இதுபோன்ற புகைப்படங்கள் இதுவரை எடுக்கப்படவில்லை என்பதுதான் இந்தப் புகைப்படங்களின் சிறப்பு. இந்த ஃபேஷன் ஃபோட்டோ சீரிஸ் ஆராத்யாவை இயற்கையுடன் இணைக்கும் வகையில் மக்காவ் பறவை, இகுவானா, அரிய மஞ்சள் நிற பைதான், கருப்பு நிற ஸ்வான்ஸ், பெரிய பந்தய…

Read More

இயக்குநர் சுசீந்திரனின்  “2K லவ்ஸ்டோரி” திரைப்பட டிரெய்லர் வெளியீட்டு விழா  !!

City light pictures தயாரிப்பில், தமிழ் திரையுலகின் பெருமை மிகு படைப்பாளியான இயக்குநர் சுசீந்திரன் இயக்கத்தில்,  இன்றைய நவ நாகரீக இளைஞர்களின் வாழ்வைச் சொல்லும் படைப்பாக, ரொமான்ஸ் ஜானரில் உருவாகியுள்ள திரைப்படம்   “2K லவ்ஸ்டோரி”. வரும் பிப்ரவரி 14 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா,  படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை, ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் திரு பேசியதாவது…. தயாரிப்பாளர் தனஞ்செயன் அவர்களுக்கும், இயக்குநர் சுசீந்திரன் அவர்களுக்கும் எனது வாழ்த்துக்கள்.  அவர்கள் இருவருமே எனது குடும்பம் போல் தான்.  அவர்களைப் போலவே நானும் இப்படத்தின் ரிசல்ட்டுக்காக காத்திருக்கிறேன். தனஞ்செயன் சார் இருக்கும் அபார்ட்மெண்டில் தான் நானும் வசிக்கிறேன், தினமும் வாக்கிங் செல்லும் போது அவர் யாரிடமாவது ஃபோனில் பேசிக் கொண்டே இருப்பார், அப்படித்தான் போன் செய்து, 2K…

Read More

தமிழ் சினிமாவில் திறமையான நடிகையாக அறிமுகமாகி இருக்கும் சான்வே மேக்னா!

இந்த வருடம் 2025ல் வெளியான ‘குடும்பஸ்தன்’ திரைப்படம் பல தரப்பிலும் பாராட்டுகளைப் பெற்றது. இந்தப் படத்தின் வெற்றியில் நடிகை சான்வே மேகன்னாவுக்கும் மிகப்பெரிய பங்குண்டு. வெண்ணிலா கதாபாத்திரத்திற்கு அவரது இயல்பான மற்றும் ஆழமான நடிப்பு, ரசிகர்களுக்கு அந்தக் கதாபாத்திரத்தை மறக்க முடியாததாக மாற்றியுள்ளது. ‘குடும்பஸ்தன்’ திரைப்படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, அவருக்கு அடுத்தடுத்து திரைத்துறை வாய்ப்புகள் குவிந்து வருகிறது. சினிமாவில் நடிப்பதற்கான வாய்ப்பு அவருக்கு எதிர்பாராத விதமாகதான் வந்தது. ஹைதராபாத்தில் சான்வே படித்துக் கொண்டிருக்கும்போது அவரிடம் ஏதோ ஒன்று சிறப்பாக இருப்பதை கணித்த நடிகை ஜெயசுதா சான்வேக்கு முதல் பெரிய வாய்ப்பை கொடுத்தார். அந்த தருணம்தான் சான்வேக்கு நடிப்பின் மீது ஆர்வத்தைத் தூண்டியது. கடந்த ஏழு ஆண்டுகளில் ’பிட்ட காதலு’ (நெட்ஃபிலிக்ஸ்), ’புஷ்பக விமானம்’ மற்றும் ’பிரேம விமானம்’ ஆகிய படங்களின் மூலம் அவர் தனது சினிமா கரியரில்…

Read More