கதை…
1980 கால கட்டங்களில் நடக்கும் கதை இது.. பக்தவச்சலம் என்ற பெயரின் சுருக்கம் தான் பத்தா.. நாயகன் விஜய்சேதுபதி அந்த ஏரியாவில் கெத்தான கேங்ஸ்டர்.. இவரின் மனைவி லிஜோ மோல்..
கோடை விடுமுறை சமயத்தில் ஒரு பள்ளிக்கு சென்ற இவர் அங்கு பாத்ரூமில் சிக்கிக் கொள்கிறார்.. அந்த சமயத்தில் அந்த பள்ளிக்கு வேறொரு காரணமாக வந்த மாணவன் ( சாய் பிரித்திவிராஜ் )
இவரை பாத்ரூமில் வைத்து அடைத்து விட்டு சென்று விடுகிறான்..
கோடை விடுமுறை என்பதால் அந்த பள்ளிக்கு யாரும் வரவில்லை.. அங்கேயே அடைப்பட்டு கிடக்கிறார் கெத்து நாயகன் விஜய் சேதுபதி..
அதன் பிறகு என்ன நடந்தது.? அவரை யாராவது காப்பாற்றினார்களா.? அவரால் வெளியே வர முடிந்ததா.? என்ன நடந்தது என்பதெல்லாம் வித்தியாசமான சுவாரசியமான மீதிக்கதை..
நடிகர்கள்…
விஜய் சேதுபதி @ பத்தா
லிஜோமோல் ஜோஸ் @ கண்ணிமா
சாய் பிரித்வி ராஜ் @ சபரி
தான் ஒரு சிறந்த நடிகர் என்பதை நிரூபித்திருக்கிறார் விஜய் சேதுபதி.. எந்த ஹீரோவும் ஏற்க மறுக்கும் ஒரு கேரக்டர்.. பாத்ரூமில் மாட்டிக் கொண்ட ஹீரோ நிலை என்ன? இதை ஒப்புக்கொண்டு நடித்து விஜய் சேதுபதிக்கு வெகுவான பாராட்டுக்கள்…
ஒரு கட்டத்தில் அந்த சிறுவன் யார் என்று தெரிந்த பிறகு விஜய் சேதுபதி அவருக்குள் ஏற்படும் மாற்றங்கள்… அவர் ஸ்கூல் பாத்ரூமுக்கு சென்ற காரணம்… இப்படி ஒவ்வொரு சுவாரசியங்களை அடக்கி படத்தை சிறப்பாக கொண்டு சென்றிருக்கிறார் இயக்குனர்..
சாய் பிருத்திவிராஜ்க்கு இது முதல் படம் என்றாலும் முதல் படம் என்று சொல்ல முடியாத அளவுக்கு மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார். அவனுக்கு நிச்சயம் சிறந்த குழந்தை நட்சத்திரக்கான விருது கிடைக்கும் என எதிர்பார்க்கலாம்..
கதவைப் பூட்டியது நான்தான் என்று தெரிந்து விடுமோ என்ற எண்ணத்தில் அவன் காட்டும் ஒவ்வொரு முகபாவனைகளும் அந்த திருட்டு மொழியும் ரசிக்க வைக்கிறது… ஒரு கட்டத்தில் ஒப்புக்கொள்ளும் அந்த காட்சியில் நம்மையும் அழ வைத்து விடுகிறான்..
1980 களில் நாம் பார்த்து ரசித்த அழகான ஹீரோயின்கள் போல லிஜோமோல் தேவதையாக வருகிறார்.. சின்ன சின்ன முக பாவனைகள் கூட கவர்ந்து விடுகிறார்..
சஹஸ்ரா @ தேன்மொழி
அர்ஜுன் சிதம்பரம் @ ஜோதி
ஹரி கிருஷ்ணன் @ திருநாவுக்கரசு
சாண்டி பாலச்சந்தர் @ செல்வி
விஷ்ணு கோவிந்த் @ தில்லி
பாலமுருகன் @ துரை
உள்ளிட்ட அனைவரும் படத்தின் கேரக்டருக்கு பெரிய பலமாக அமைந்துள்ளனர்..
*தொழில்நுட்பக் குழு:*
இயக்கம்: பாலாஜி தரணிதரன்
தயாரிப்பு: முராத் கெதானி , பிரியா அட்லீ, அலோக் ஜெயின் & அஜித் அந்தாரே
தயாரிப்பு நிறுவனம் – ஸ்டார் ஸ்டுடியோ18 ,ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ், சினி 1 ஸ்டுடியோஸ் புரொடக்ஷன்
இசை: சாய் அப்யங்கர்
ஒளிப்பதிவு: செல்வகுமார் எஸ்.கே
படத்தொகுப்பு: ஆர். கலைவாணன்
செல்வகுமார் ஒளிப்பதிவு செய்து இருக்கிறார்.. 1980 காலகட்டங்களில் நம் கண் முன்னே கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.. அதுபோல கலை இயக்குனரும்… சைக்கிள் முதல் ஹேர் ஸ்டைல் வரை அனைத்தையும் அழகாக காட்டியிருக்கிறார்… முக்கியமாக இப்போது பெண்கள் மறந்து இருக்கும் கனகாம்பரம் மலரை அழகாக ஒவ்வொரு காட்சியிலும் காட்டி இருக்கின்றனர்..
தயாரிப்பு வடிவமைப்பாளர் : டி. முத்துராஜ்
ஆடை வடிவமைப்பு: ஸ்ருதி மஞ்சரி
கலை இயக்குநர்: கண்ணன்.எஸ்
சண்டைப் பயிற்சி: ஸ்டன் சிவா, யு. பிருத்வி, கெவின் குமார்
நடன அமைப்பு: ராஜு சுந்தரம்
பாடல்கள்: கார்த்திக் நேத்தா, கே.கே. நகர் கானா ஜீவா, தமிழ்
ஒலி வடிவமைப்பு: குணால் ராஜன்
ஒப்பனை: வினோத் சுகுமாரன்
ஆடை வடிவமைப்பாளர்: முகமது சுபீர்
மக்கள் தொடர்பு : யுவராஜ்
சாய் அபயங்கர் இசையமைத்திருக்கிறார்.. 1980களில் கானா பாடல் ஒலிக்கிறது.. அப்போது கானா பாட்டை கேட்ட நினைவு இல்லை.. பின்னணி இசை மிரட்டல் ரகம்..
எத்தனையோ கேங்ஸ்டர் படங்களை பார்த்திருப்போம்.. கெத்து காட்டும் ஹீரோ ஒரு கட்டத்தில் திருந்தி வாழுவார்.. ஆனால் இதில் எந்த வன்முறையும் இல்லாமல் ஒரு வித்தியாசமான கேங்ஸ்டர்.. அவருக்குள் ஏற்படும் மன மாற்றங்களை எதார்த்தமாக உணர்வுபூர்வமாக சொல்லி இருக்கிறார் இயக்குனர் பாலாஜி தரணிதரன்..
