‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் – ரம்யா ரங்கநாதன் நடிக்கும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் ‘பெரம்பூர் கானா’ வெளியானது !

வடசென்னையின் துள்ளலான முகத்தை இசையில் கொண்டுவந்த ‘பெரம்பூர் கானா’ – வைரலாகும் ‘அன்பே டயானா’ முதல் பாடல்! பெரம்பூரின் மனிதர்கள், மகிழ்ச்சி, மாஸ் லோக்கல் உணர்வுகளை கொண்டாடும் ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வெளியீடு! மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் (Million Dollar Studios) மற்றும் நியோ கேசில் கிரியேஷன்ஸ் (Neo Castle Creations) இணைந்து தயாரித்துள்ள ‘அன்பே டயானா’ (Anbe Diana) திரைப்படத்தின் முதல் சிங்கிள் பாடலான ‘பெரம்பூர் கானா’ வெளியாகி, ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. சத்யா கரிகாலன்,  யுவராஜ் கணேசன் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தில், ‘ஜமா’ புகழ் பாரி இளவழகன் கதாநாயகனாக நடித்துள்ளதுடன், கதை, திரைக்கதை எழுதி இயக்கியுள்ளார். அவருக்கு ஜோடியாக ரம்யா ரங்கநாதன் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் தனித்துவமான கதைகளைக் கொண்டு வெற்றி கண்ட…

Read More

ஜி.வி. பிரகாஷின் கதாநாயகி உள்ளிட்ட இன்ஸ்டா பிரபலங்கள் நடிக்கும் ‘லவ் 3.0’

சினிமா மீதுள்ள ஆர்வத்தால் திரைப்படத் தயாரிப்பில் இறங்கி இருக்கும் தயாரிப்பாளர் சிவக்குமார், புதிதாக ஏதாவது செய்ய வேண்டும் என்று சிந்தித்தவர், இன்ஸ்டாகிராம் மூலம் மக்களிடம் பிரபலமாக இருக்கும் பிரபலங்களைக் கொண்டு படம் தயாரிக்க முடிவு செய்தார் .அந்த வகையில் தனது மங்கி மைண்ட்ஸ் என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் தயாரித்துள்ள படம்தான் ‘லவ் 3.0’ . இப்டத்தை எழுதி இயக்கியுள்ளார் ராஜேஷ் விகே. வேதை பா. மகேஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார்.வைகுந்த் சீனிவாசன் இசையமைத்துள்ளார்.அரவிந்த் படத்தொகுப்பு செய்துள்ளார். கலை இயக்கம் ஜேபி. இந்தப் படத்தில் சக்தி மிக்க சமூக ஊடகங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் உலகில் லட்சக்கணக்கான பின்தொடர்பாளர்களைக் கொண்ட பிரபலங்களாக இருப்பவர்கள் பிரதான பாத்திரங்களை ஏற்று நடித்து உள்ளனர். இன்ஸ்டாகிராமில் மில்லியன் தொடர்பாளர்களைத் தாண்டி பிரபலமாக இருப்பவர் அரனிகா .இவரை அனைவரும் செல்லமாக ரீல்ஸ் அக்கா என்று அழைப்பார்கள். ரீல்ஸ்…

Read More

சந்தீப் கிஷன் நடிப்பில், தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் உருவாகும் பான்-இந்திய ஃபேண்டஸி திரைப்படம்!

தெலுங்கு மொழியில் ரசிகர்களின் பெரும் வரவேற்பைப் பெற்று, பிளாக்பஸ்டர் வெற்றியை பெற்ற ‘சம்பாலா’ படத்தினைத் தொடர்ந்து, அந்தப் படத்தை தயாரித்த Shining Pictures நிறுவனம் மீண்டும் இயக்குநர் உகந்தர் முனியுடன் கைகோர்த்து, மற்றுமொரு பிரம்மாண்டமான புதிய திரைப்படத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர்கள் மகிதர் ரெட்டி மற்றும் ராஜசேகர் அன்னபிமோஜு ஆகியோர் முன்னதாக ஆதி சாய்குமார் நடித்த “சம்பாலா”படத்தின் மூலம் பெரிய வெற்றியை பதிவு செய்திருந்தனர். இந்த புதிய பட அறிவிப்பை முன்னிட்டு, படக்குழு ஒரு கண்கவர் கான்செப்ட் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. அந்த போஸ்டரில், சிங்கம் மற்றும் ஓநாய் நேருக்கு நேர் மோதும் காட்சி இடம்பெற்றுள்ளது. இது அதிகாரம், விதி, மற்றும் உள்ளார்ந்த வலிமையின் மாபெரும் மோதலை சுட்டிக்காட்டுகிறது. இவ்விரண்டுக்கும் நடுவே, மர்மமான போர்க்களப் பின்னணியில் ஒளிரும் ஒரு பழமையான வாள் காட்சியளிக்கிறது. மேலும், “சில போர்கள் ஒருபோதும் முடிவதில்லை……

Read More

பிரதீப் ரங்கநாதன் – விக்னேஷ் சிவன் கூட்டணியில் உருவான LIK திரைப்படம், ஏப்ரல் 3 வெளியாகிறது!

‘ தமிழ் திரையுலகின் நட்சத்திர நடிகரான பிரதீப் ரங்கநாதன் கதையின் நாயகனாக நடிக்க, முன்னணி இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கியிருக்கும் LIK (‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’) திரைப்படம் வரும் ஏப்ரல் 3 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. முன்னதாக வெளியான சிங்கிள் பாடல்களான “தீமா தீமா” , “பட்டும்மா”,மற்றும் “எனக்கென யாருமில்லையே” பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றது. டீசரும் ரசிகர்களை கவர்ந்த நிலையில் தற்போது வெளியீட்டு அறிவிப்பு, திரை ரசிகர்களை பெரிதும் உற்சாகப்படுத்தியுள்ளது. தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கும் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (LIK) திரைப்படம், சயின்ஸ் பிக்ஷன் அம்சங்களுடன் எதிர்காலத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. ஒரு இளைஞன் தனது காதலை காப்பாற்ற போராடும் இந்த கதைக்களம், காதல் அரிதான ஒன்றாக மாறிய உலகில் புதிய கோணத்தில் சொல்லப்படுகிறது. புதுமையான கான்செப்ட், இளம் தலைமுறையை…

Read More

Prime Video Presents 2026: Prime Video இந்தியாவின் இதுவரையிலான மிகப்பெரிய ஒரிஜினல்ஸ் ஸ்லேட்டை அறிவிக்கிறது — பல வடிவங்கள் மற்றும் மொழிகளில் தொடர்கள் மற்றும் திரைப்படங்களின் விரிவான வரிசை

Hrithik Roshan-இன் HRX Films மற்றும் Alia Bhatt-இன் Eternal Sunshine Productions போன்ற தொழில் முன்னணியான நிறுவனங்களுடனான புதிய ஒத்துழைப்புகளுடன், Dharmatic Entertainment, D2R Films, Excel Entertainment, Tiger Baby Films, Emmay Entertainment, Abundantia Entertainment, The Viral Fever மற்றும் Wallwatcher Films உள்ளிட்ட இந்தியாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனங்களிடமிருந்து புதிய கதைகளுடன், இந்தியாவின் படைப்பு பொருளாதாரத்தில் Prime Video தன் முதலீட்டு அறிவிப்பை மீண்டும் உறுதிப்படுத்துகிறது Amazon MGM Studios-இன் உற்சாகமான இந்திய திரைப்பட தொகுப்பு அறிவிப்புகள், திரையரங்கு உலகில் நுழைவதை முன்னிலைப்படுத்தும் இந்த வரிசை, ஆழமான தொழில் ஒத்துழைப்புகளை வளர்க்கிறது 2025-ல் புதிய Prime உறுப்பினர்களை ஈர்ப்பதிலும், Prime Video-ஐ ஸ்ட்ரீம் செய்யும் Prime உறுப்பினர்களின் விகிதத்திலும் Prime Video India உலகளவில் மிக உயர்ந்த பகுதிகளில் ஒன்றாக…

Read More

முதல் முதலாய்’ மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் அறிமுகமாகும் ‘நடன புயல்’ பிரபுதேவாவின் வாரிசு ரிஷி தேவா

நடிகர் பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா ‘முதல் முதலாய் ‘ இன்டி மியூசிக்கல் வீடியோ ஆல்பம் மூலம் தனது கலைப் பயணத்தை தொடங்கி இருக்கிறார்.‌ இந்த ஆல்பத்தில் அசத்தலான நடனமாடி நடிகராக அறிமுகமாகி இருக்கிறார். இசையமைப்பாளர் ரவிச்சந்திரன் ஸ்ரீநிவாஸ் இப்பாடலை எழுதி இசையமைக்க, ஜி.வி பிரகாஷ் குமார் பாடியிருக்கிறார். ரிஷி தேவா, நடிகை கைரா ஆகியோர் இணைந்து நடனமாடி நடித்திருக்கிறார்கள். மெலோடியும், ராப் இசையும் கலந்த இந்த ஆல்பத்தில் உள்ள ராப் பாடலை இசைக் கலைஞர் ஆதித்யா பாடியிருக்கிறார். இந்தப் பாடலில் காதல் -அப்பாவித்தனம் – மறக்க இயலாத தருணங்கள்- ஆகியவை இனிமையான பாடல் வரிகளுடன் இணைந்து இருப்பதால்.. இசை ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்தப் பாடலை ட்ரஸ்டினா ஐசக் இயக்க, ஆர். பி. குருதேவ் ஒளிப்பதிவு செய்ய , சுரேன் நடனம் அமைத்திருக்கிறார். இந்தப்…

Read More

*நெட்ஃபிலிக்ஸ் ‘மேட் இன் கொரியா’ படத்தின் வெற்றிக் கொண்டாட்டம்!*

நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் ஆங்கிலம் அல்லாத உலகளாவிய டாப் 10 படங்களில் ‘மேட் இன் கொரியா’ படம் முதலிடம் பிடித்துள்ளது. குறிப்பாக, உரிமம் பெற்ற மற்றும் நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினல் திரைப்படங்கள் ஆகிய இரண்டிலும் முதலிடத்தைப் பிடித்த ஒரே தென்னிந்தியத் திரைப்படம் இதுவாகும். இந்த மைல்கல் சாதனையை கொண்டாடும் வகையில் நடைபெற்ற சிறப்பு விழாவில் நடிகர்கள் பிரியங்கா மோகன், ரிஷிகாந்த், இயக்குநர் கார்த்திக் மற்றும் ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஸ்ரீநிதி சாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். அவர்களுடன் நெட்ஃபிலிக்ஸ் இந்தியாவின் கண்டெண்ட் துணைத் தலைவர் மோனிகா ஷெர்கில் மற்றும் நெட்ஃபிலிக்ஸ் குழுவினரும் இணைந்து கொண்டாடினர். நடிகர்களின் திறமையான நடிப்பு, கண்ணைக்கவரும் காட்சிகள், தமிழ்நாட்டில் இருந்து சியோல் வரை மனதை நெகிழ வைக்கும் செண்பாவின் பயணம் ஆகியவை ‘மேட் இன் கொரியா’ படத்தை ரசிகர்களுக்கு நெருக்கமாக கொண்டு சென்றுள்ளது.…

Read More

*இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்ட ‘கேம் பிளே’ பட ஃபர்ஸ்ட் லுக் !!*

காளிதாஸ் (2019) படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, இங்கிரெடிபிள் புரொடக்ஷன்ஸ் (Incredible Productions) தனது அடுத்த தயாரிப்பாக உருவாக்கி வரும் சஸ்பென்ஸ் திரில்லர் திரைப்படமான ‘கேம் பிளே’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை, முன்னணி இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் வெளியிட்டுள்ளார். இந்த ஃபர்ஸ்ட் லுக், ரசிகர்களிடையே இப்படம் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. ‘நாளைய இயக்குனர்’ (Season 1–4) நிகழ்ச்சியை இயக்கிய சிவநேசன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். “திரைக்கதைதான் ஹீரோ” எனும் நோக்கில் தனது முதல் படத்திலேயே வித்தியாசமான திரைக்கதை வடிவத்தை மையமாகக் கொண்டு இப்படத்தை உருவாக்கியுள்ளார். பைனான்ஸியல் க்ரைமை மையமாகக் கொண்ட இப்படம், நொடிக்கு நொடி எதிர்பாராத திருப்பங்களைக் கொண்ட சஸ்பென்ஸ் இன்வஸ்டிகேசன் திரில்லராக உருவாகி வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் பார்த்ததிலிருந்து மாறுபட்ட களம் மற்றும் கதை அமைப்புடன், பார்வையாளர்களுக்கு புதிய அனுபவத்தை அளிக்கும் வகையில் இப்படம்…

Read More

கமல்ஹாசன் அவர்களுக்கு தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது வழங்கி கெளரவம்!

‘தெலுங்கான கட்டர் திரைப்பட விருதுகள் 2025’ விழா ஹைதராபாத்தில் 19-03-2026 அன்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் தெலுங்கானா அரசின் உயரிய விருதான ‘பைடி ஜெய்ராஜ்’ விருது கமல்ஹாசன் அவர்களுக்கு வழங்கி கெளரவிக்கப்பட்டது. இந்தியத் திரையுலகில் அறுபது ஆண்டுகளுக்கும் மேலாகப் பங்காற்றி வரும் கமல்ஹாசன் அவர்களின் பங்களிப்பைப் பாராட்டி இந்த விருது வழங்கப்பட்டது. சினிமா முன்னோடி பைடி ஜெய்ராஜ் பெயரில் அமைந்த இந்த விருது, ‘சாகர சங்கமம்’ மற்றும் ‘சுவாதி முத்யம்’ போன்ற காலத்தால் அழியாத திரைக்காவியங்கள் மூலம் தெலுங்கு சினிமாவிற்கு கமல் ஹாசன் ஆற்றிய பங்களிப்பை அங்கீகரிக்கும் விதமாக அமைந்தது. தெலுங்கானா முதலமைச்சர் மாண்புமிகு அனுமுலா ரேவந்த் ரெட்டி அவர்கள், இந்த விருதை திரு. கமல் ஹாசன் அவர்களுக்கு வழங்கினார். இன்று ‘பான்-இந்தியா சினிமா’ (Pan-India Cinema) கொண்டாடப்படும் வேளையில், பல மொழிகளில் கமல் ஹாசன் அவர்கள்…

Read More

இயக்குநர் லோகேஷ் கனகராஜ் வெளியிட்ட யோகி பாபுவின் “அர்ஜுனன் பேர் பத்து” பட டீசர்!!

Dev Cinemas Pvt Ltd சார்பில் கிருத்திகா தங்கபாண்டி S தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ரா. ராஜ்மோகன் இயக்கத்தில், யோகி பாபு கதாநாயகனாக நடிக்கும் “அர்ஜுனன் பேர் பத்து” படத்தின் டீசர் வெளியாகியுள்ளது. இந்த டீசரின் தொடக்கமே தன் வண்டியை பறிகொடுத்து தவிக்கும் நடுத்தர வர்க்கத்து இளைஞனாக மிகவும் உணர்ச்சிபூர்வமாகதோன்றுகிறார் யோகிபாபு. தன் வண்டியை மீட்க யோகிபாபு போராடுவதும் அதே வண்டியை பலர் உரிமை கொண்டாடுவதும் என பல சுவாரஸ்ய திருப்பங்களுடன் விறுவிறுப்பாக அமைந்துள்ள இந்த டீஸர் படத்திற்கான பெரும் எதிர்பார்ப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியுள்ளது.. படம் வெளியானால் பழைய வண்டிகள் வாங்கி விற்பதில் நடக்கும் பெரும் மோசடிகள் அனைத்துமே மக்களுக்கு வெட்டவெளிச்சமாக தெரிந்துவிடும் என அர்ஜுனன் பேர் பத்து படக்குழு தெரிவித்தனர்… மேற்குத் தொடர்ச்சிமலை திரைப்படத்தின் இயக்குநர் லெனின் பாரதி அவர்களிடம் இணை இயக்குநராக பணியாற்றிய ரா.…

Read More