இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத் திரையுலகில் தனது திறமையான நடிப்பால் ரசிகர்களைக் கவர்ந்த நடிகர் முரளி ஷர்மா, விரைவில் வெளியாகவுள்ள பான்-இந்தியன் இன்வெஸ்டிகேஷன் த்ரில்லர் திரைப்படமான ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் நடிக்கிறார். நடிகர் முரளி ஷர்மாவின் பிறந்தநாளை முன்னிட்டு, இப்படத்தில் அவர் இணைந்திருப்பதை படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ‘ஆபரேஷன் டிரால்’ திரைப்படத்தில் ஜெயசூர்யா கதாநாயகனாக நடிக்கிறார். இப்படத்தை ரதீஷ் வேகா எழுதி இயக்குகிறார். பல மொழிகளில் பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்து வரும் முரளி ஷர்மா, இந்திய சினிமாவின் பன்முகத்தன்மை கொண்ட நடிகர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்தியுள்ளார். அழுத்தமான உணர்வுப்பூர்வமான கதாபாத்திரங்கள் முதல் ஆக்ஷன் கதாபாத்திரங்கள் வரை, தனது தனித்துவமான நடிப்பால் திரையில் தனக்கென தனியிடத்தை உருவாக்கியுள்ளார். ‘ஆபரேஷன் டிரால்’ படத்தில் அவர் இணைந்திருப்பது படத்திற்கு பலம் சேர்த்திருப்பதுடன் பான்-இந்திய அளவில் படம் மீதான எதிர்பார்ப்பையும் மேலும்…
Read MoreCategory: சினிமா செய்திகள்
விஜய் சேதுபதி – பூரி ஜெகன்நாத் கூட்டணியில் தயாராகி, பெரும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஆக்சன் டிராமா ‘ஸ்லம் டாக்: 33 டெம்பிள் ரோடு’.
இப்படத்தில் சக்தி வாய்ந்த அதிகாரி கௌரி ஹெக்டேவாக நடிக்கும் நடிகை தபு கதாபாத்திரத்தை, சுவராசியமான பிரத்யேக முன்னோட்டத்தின் மூலம் படக்குழு அறிமுகப்படுத்தி இருக்கிறது. துடிப்பான திரைப்பட இயக்குநர் பூரி ஜெகன்நாத்தையும், புகழ் பெற்ற நடிகரான ‘மக்கள் செல்வன்’ விஜய் சேதுபதியையும் முதல் முறையாக ஒன்றிணைத்துள்ள பான் இந்திய ஆக்சன் என்டர்டெய்னர் படமான ‘ஸ்லம் டாக் : 33 டெம்பிள் ரோடு’ திரைப்படம் – உண்மையான உணர்ச்சிகள் – அதிரடியான சண்டைக் காட்சிகள்- புதிரான மர்மம்- ஆகியவற்றின் கலவை என உறுதியளிக்கிறது. கௌரி ஹெக்டேவாக நடிக்கும் தபுவின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்ட பிறகு, படக் குழுவினர் தற்போது அவரது ஆளுமை மிக்க கதாபாத்திரத்தை மேலும் விவரிக்கும் வகையில்… ஒரு ஆற்றல் பெற்ற பிரத்யேக முன்னோட்டத்தை வெளியிட்டுள்ளனர். நகரின் சேரி பகுதிகளை பின்னணியாகக் கொண்ட இந்த முன்னோட்டம்.. படத்தின் கடினமான…
Read Moreஉறுப்பினராக நியமித்த தமிழக முதல்வர், அறநிலையத்துறை அமைச்சர் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி
தமிழ்நாடு அரசின் அறநிலையத்துறையால் பராமரிக்கப்படும் திருக்கோயில்களுக்கு பரம்பரை முறைவழி சாரா அறங்காவலர்களை நியமனம் செய்திட தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்களை தெரிவு செய்து உரிய பெயர்ப்பட்டியலை தயாரித்து வழங்கும் குழுவின் உறுப்பினராக பிரபல பாடகர் த. வேல்முருகன் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு ச. ஜோசப் விஜய், மாண்புமிகு இந்து அறநிலையத்துறை அமைச்சர் திரு. எஸ். ரமேஷ், இந்து அறநிலையத்துறை ஆணையர் திரு. ஜெ. குமரகுருபரன் உள்ளிட்டோருக்கு வேல்முருகன் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து மேலும் பேசிய அவர், “இதை ஒரு பதவியாக நினைக்காமல் பொறுப்பாக நினைத்து பணியாற்றுவேன். இறைவனுக்கு பணி செய்ய இந்த வாய்ப்பு கிடைத்தது மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது. ஒரு பாமரனாக திருக்கோயில்களில் பாடி வரும் எனக்கு இப்படி ஒரு வாய்ப்பு கிடைத்ததற்கு உண்மையிலேயே இறைவனுக்கும், அரசுக்கும், முதல்வருக்கும் நன்றி தெரிவித்து…
Read More‘ராக்கிங் ஸ்டார்’ யாஷின் ‘டாக்ஸிக்’ டிரெய்லர் வெளியானது! ஆக்ஷன், மீட்சி, அழிவு என பிரம்மாண்ட உலகத்தை அறிமுகப்படுத்துகிறது!
மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்த ‘டாக்ஸிக்’ ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது. கட்டுப்பாடற்ற இரண்டு சக்திகள் மோதும் பிரம்மாண்டமான உலகம், சோதிக்கப்படும் விசுவாசங்கள் மற்றும் ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் பின்னால் இருக்கும் தனித்துவமான கதை என, இப்படத்தின் உலகத்தை முதன்முறையாக இந்த டிரெய்லர் ரசிகர்களுக்கு அறிமுகப்படுத்துகிறது. ‘ராக்கிங் ஸ்டார்’ யாஷ் கதையின் மையக் கதாபாத்திரமாக நடிக்கும் இப்படத்தின் டிரெய்லர், பிரம்மாண்டமான ஆக்ஷன் காட்சிகள் மற்றும் மிகப்பெரிய திரை அனுபவத்துடன், காதல், அதிகாரத்தின் மீதான பேராசை, துரோகம் மற்றும் மீட்சி ஆகியவற்றை மையமாகக் கொண்ட உணர்வுபூர்வமான கதையையும் இணைக்கும் பிரம்மாண்ட படைப்பாக ‘டாக்ஸிக்’ திரைப்படத்தை வெளிப்படுத்துகிறது. கண்கவர் காட்சிகள், வெடிக்கும் ஆக்ஷன் காட்சிகள், பல அடுக்குகளைக் கொண்ட கதாபாத்திரங்கள் மற்றும் தீவிரமான உறவுகள் என, இந்த டிரெய்லர் உணர்வுபூர்வமான அதே நேரத்தில்…
Read Moreநடிகர் மகேஷ்பாபுவின் பிறந்தநாளை முன்னிட்டு, அப்டேட்டை வெளியிட்ட ‘வாரணாசி- #VARANASI’ படக் குழு
நடிகர் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு ‘வாரணாசி- #VARANASI”- ‘ருத்ரா’வின் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்ட படக்குழு தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ் பாபுவின் பிறந்த நாளை முன்னிட்டு, பெரிதும் எதிர்பார்க்கப்படும் காவிய திரைப்படமான ‘வாரணாசி’ படக்குழு – ‘ருத்ரா’வின் கதாபாத்திரத்தை உலகுக்கு முதன்முறையாக அறிமுகப்படுத்தும் வகையில் இரண்டு பிரத்யேக புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. முதல் புகைப்படம்- அடர்ந்த வனப்பகுதியின் நடுவே மூங்கில் தெப்பத்தில் ஓய்வெடுக்கும் ருத்ராவை காண்பிக்கிறது. இதில் அவர் இயல்பான கம்பீரத்துடனும், கவனம் ஈர்க்கும் தன்மையுடனும் தனது கதாபாத்திரத்திற்கே உரித்தான அமைதியான தோற்றத்துடனும் காட்சியளிக்கிறார். இரண்டாவது புகைப்படம்- நம்மை கென்யாவின் மாசாய் மாரா ( Maasai Mara) சமவெளிகளுக்கு அழைத்துச் செல்கிறது. அங்கு ஒட்டகச்சிவிங்கிகள் மற்றும் வைல்ட்பீஸ்ட் ( Wildebeest) விலங்குகளுக்கு நடுவே நிற்கும் ருத்ரா மறுக்க முடியாத – அதிகார தோரணையில் பின்னோக்கி…
Read Moreசீனு ராமசாமியின் ‘பெரும் மௌனங்கள்’ நூல் வெளியீடு
திரைப்பட இயக்குநரும் கவிஞருமான சீனு ராமசாமி எழுதிய ‘பெரும் மௌனங்கள்’ எனும் அனுபவக் கட்டுரைகளின் தொகுப்பு நூல், வம்சி பதிப்பகம் சார்பில் ஈரோடு புத்தகக் கண்காட்சியில் விரைவில் வெளியாகிறது. ‘இடம் பொருள் ஏவல்’, ‘இடி முழக்கம்’ ஆகிய திரைப்படங்களின் வெளியீட்டுப் பணிகளில் தீவிரமாக இருக்கும் சீனு ராமசாமி, தமிழ் இலக்கிய உலகிற்கு ஏற்கெனவே 13 கவிதைத் தொகுப்புகளை வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது. “மனிதர்கள் தங்கள் மௌனம் கலைத்து தங்களை முழுமையாக ஒப்புக்கொடுத்துப் பேசுவது அரிது. அப்படித்தான் தோழர் சீனு ராமசாமி, தான் எதிர்கொண்ட மனிதர்கள், ஆசான்கள், உறவுகள் மற்றும் நண்பர்கள் குறித்த தன் ஆழமான நினைவுகளையும் உணர்வுகளையும் இந்நூல் வழியே பதிவு செய்துள்ளார்” என்று ‘பெரும் மௌனங்கள்’ நூலுக்கு முன்னுரை எழுதியுள்ள எழுத்தாளரும் பதிப்பாசிரியருமான கே.வி. சைலஜா தெரிவித்துள்ளார்.
Read Moreமன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் “மன்னாரு”;
தமிழ் இசை உலகில் புதிய அத்தியாயத்தை தொடங்கும் வகையில், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பாக மன்னர் முத்து மற்றும் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் முதல் இசை வெளியீடான ‘மன்னாரு’ பாடலை ரசிகர்களுக்கு வழங்குகின்றனர். இந்தப் பாடலை, தனது தனித்துவமான குரலால் மன்னர் முத்து பாடியுள்ளார் மற்றும் கென் ராய்சன் இயக்கியுள்ளார். இந்தப் பாடல் விறுவிறுப்பான காட்சிகளும், உற்சாகமான இசையும் இணைந்த ஒரு புதுமையான அனுபவத்தை ரசிகர்களுக்கு வழங்கும். மேலும், மன்னர் முத்து மற்றும் இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இணைந்து வழங்கும் இந்த ‘மன்னாரு’ பாடல், ரகிட என்டர்டெயின்மென்ட் சார்பில் ஆகஸ்ட் 8 இன்று முதல் அனைத்து முக்கிய இசைத் தளங்களிலும் வெளியானது. இசை ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘மன்னாரு’ பாடல், புதிய இசைப் பயணத்தின் சிறப்பான தொடக்கமாக அமையும் என குழுவினர் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். …
Read Moreஆகஸ்ட் 21 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது ‘ONE MAN’ திரைப்படம்
உலகில் யாரும் செய்திடாத முயற்சியாக, சங்ககிரி ராஜ்குமாரின் பெரும் முயற்சியில் *ONE MAN* திரைப்படம் உருவாகியுள்ளது. ஒரு திரைப்படத்திற்குத் தேவையான 70-க்கும் மேற்பட்ட துறை சார்ந்த பணிகளை எந்தவித உதவியாளர்களும் இல்லாமல், தொடக்கம் முதல் இறுதிவரை ஒற்றை மனிதனாகச் செய்து முடித்திருக்கிறார். ஒவ்வொரு துறையிலும் பத்துக்கும் மேற்பட்ட உதவியாளர்கள் இணைந்து பணியாற்றும் நிலையில், இத்தனை பணிகளையும் தனி ஒருவராகச் செய்து முடித்திருப்பது பெரும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. தனி ஒரு மனிதனால் உருவாக்கப்பட்ட படம் என்பதால், இது திரைப்பட விழாக்களுக்கான படமாக இருக்கும் என்று சிலர் நினைத்திருக்கக்கூடும். ஆனால், இதில் பரபரப்பான ஹெலிகாப்டர் சேசிங் காட்சி, ஒரு ரயில் இன்னொரு ரயிலில் மோதும் விபத்துக் காட்சி, அமெரிக்காவில் படமாக்கப்பட்ட கார் சேசிங் காட்சி, பெரிய அருவியில் குதித்து ஐந்து பேர் தப்பிப் பிழைக்கும் காட்சி போன்றவை இடம்பெற்றுள்ளன. இவை…
Read Moreசூர்யாவின் விஸ்வநாத் & சன்ஸ் படத்தின் டிரெய்லர்: மனதிற்கு இதமான திரையரங்க அனுபவத்தை உறுதி செய்கிறது
சூர்யா நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஸ்வநாத் & சன்ஸ் திரைப்படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. இது மகிழ்ச்சி- உணர்வு பூர்வமான தருணங்கள்- இனிமையான சூழல் கொண்ட முழுமையான திரைப்பட அனுபவத்தை அளிக்கும் வகையில் அமைந்துள்ளது. இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் தயாரிப்பாளர்கள்சூர்யதேவர நாக வம்ஷீ மற்றும்சாய் சௌஜன்யா ஆகியோரின் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்த திரைப்படம் – இந்த ஆண்டின் மிகச்சிறந்த குடும்ப பொழுதுபோக்கு திரைப்படங்களில் ஒன்றாக அமைய உள்ளது. நாற்பது வயதை கடந்தும் தனது கனவுகளை துரத்தும் சர்வதேச துப்பாக்கி சுடும் வீரரான சஞ்சய் விஸ்வநாத்தின் உலகத்தை இந்த ட்ரெய்லர் அறிமுகப்படுத்துகிறது. ஸ்டைல் -கனிவு- நகைச்சுவை- உணர்ச்சிகள் – ஆகியவற்றை சூர்யா மிக சிறப்பாக கையாண்டு, பார்வையாளர்களின் மனதை உடனடியாக கவரும் வகையிலான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அவரது கவனம் ஈர்க்கக்கூடிய திரை ஆளுமையும்… வெங்கி அட்லூரியின் உணர்வுபூர்வமான…
Read More10 ஆண்டுகளின் வெற்றிப் பயணத்தை கொண்டாடும் பிக்பாஸ் தமிழ் சீசன் 10; ஆண்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு திருவிழாவிற்கு ரசிகர்களை வரவேற்கும் விஜய் சேதுபதி
சென்னை, ஆகஸ்ட் 07,2026: பிக்பாஸ் தமிழ் 10 ஆண்டுகள் நிறைவை கொண்டாடும் மைல்கல் சீசனான பிக்பாஸ் தமிழ் சீசன் 10 புதிய லாஞ்ச் புரோமோவை ஸ்டார் விஜய் மற்றும் ஜியோஹாட்ஸ்டார் வெளியிட்டுள்ளன. கடந்த 10 ஆண்டுகளில், பிக்பாஸ் தமிழ் ஒரு ரியாலிட்டி நிகழ்ச்சியைத் தாண்டி, தமிழ்நாட்டின் மிகப்பெரிய பொழுதுபோக்கு அனுபவமாக வளர்ந்துள்ளது. ஆண்டுதோறும் 100 நாட்கள் குடும்பங்களை ஒன்றிணைத்து, தொலைக்காட்சி மற்றும் டிஜிட்டல் தளங்களில் பரவலான உரையாடல்களை உருவாக்கி, ரசிகர்களின் மனதில் நீங்கா இடம்பிடித்த ஒரு கலாச்சார நிகழ்வாக இது மாறியுள்ளது. 10வது சீசனை முன்னிட்டு, கடந்த ஒரு தசாப்தமாக பிக்பாஸை வெற்றிப் பாதையில் வழிநடத்திய ரசிகர்களுக்கு “பத்தாண்டு வாழ்த்துகள்” தெரிவிக்கப்படுகிறது. அவர்களுக்காகவே உருவான ‘கார்னிவிழா’, பிக்பாஸ் ரசிகர்கள் விரும்பும் அனைத்து அம்சங்களையும் ஒருங்கிணைக்கும் பிரம்மாண்ட பொழுதுபோக்கு கொண்டாட்டமாக அமைகிறது. இந்த லாஞ்ச் புரோமோ, பிக்பாஸ் ஒரு…
Read More
