கதை…
துப்புரவு தொழில் செய்பவர் நாயகி அபர்ணதி.. இவர் கணவனை இழந்தவர்.. தன் மகன் ஆசைப்பட்டபடி அவனை சதுரங்க (செஸ்) போட்டியில் சாம்பியனாக உயர்த்த பாடுபடுகிறார்.. இவரின் தொழில் காரணமாக அவரது மகன் லட்சியத்திற்கு நிறைய பிரச்சனைகள் வருகிறது.
அம்மா மகன் இருவரும் எப்படி போராடினார்கள்.? அவர்கள் லட்சியத்தில் வென்றார்களா என்பது தான் திரைக்கதை..
நடிகர்கள்…
நாயகி அபர்ணதிக்கு அழுத்தமான கதாபாத்திரம்.. வலுவாக தாங்கி இந்த கேரக்டருக்கு சிறப்பு சேர்த்து இருக்கிறார்.. கணவனை இழந்த ஒரு மனைவி தன் மகனை வளர்க்க எப்படி எல்லாம் சிரமப்படுவார் என்பதை உணர்வுபூர்வமாக நடித்திருக்கிறார்.. மகனுக்காக போராடும் தாயின் வலியை உணரச் செய்திருக்கிறார்..
அபர்ணதியின் கணவராக லிங்கேஷ்.. வில்லனாக சுரேஷ் மேனன், அபர்ணதியின் மகனாக அஸ்வின், தமிழரசி, அன்பு என மற்ற கதாபாத்திரங்கள் அனைத்தும் சிறப்பாக செய்துள்ளனர்..
தொழில்நுட்பக் குழு…
ஒளிப்பதிவாளர்கள் அர்ஜுன் ரவி மற்றும் ஞானசேகரன்.ஆர்.எஸ்.. நேர்த்தியாக படம் பிடித்துள்ளனர்..
தினேஷ் ஆண்டனியின் இசையில் பாடல்கள் பின்னணி இசையும் ஓகே..
இயக்குநர் வெற்றி செழியன்… பெரும்பாலும் இது போன்ற திரைக்கதைகளை நிறைய முறை பார்த்து விட்டோம்.. கீழ் சாதி பிரிவினர் விளையாட்டு துறையில் சாதிக்க அவர்கள் போராடும் போராட்ட களமே இந்த கிராண்ட் மாஸ்டர்..
விளையாட்டுத்துறையில் இருக்கும் அதிகார மைய பிரச்சனை.. சாதிய பாகுபாடுகள் ஏற்றத்தாழ்வுகள் உள்ளிட்ட பல பிரச்சினைகளை இந்த படத்தின் மூலம் அலசி இருக்கிறார் இயக்குனர்..
