‘மகரிஷி’ திரைப்படத்தின் வரலாற்று வெற்றியை தொடர்ந்து, ராக்ஸ்டார் தேவி ஸ்ரீ பிரசாத் தனது இசை குழுவினருக்காக ஒரு ‘நன்றி தெரிவிப்பு’ வீடியோ வெளியிடுகிறார். டிஎஸ்பி, தேவி ஸ்ரீ பிரசாத், இன்றைய இளைய தலைமுறையின் இசையமைப்பாளர். பல்வேறு வெற்றி படங்களுக்கு இசையமைத்த பெருமைக்குரியவர். அவரது ஆட வைக்கும் இசைக்காகவே ‘ராக்ஸ்டார்’ என புகழ் பெற்றவர். இந்த வருடத்தின் மாபெரும் வெற்றித் திரைப்படமான ‘மகரிஷி’ படத்திற்கான பங்களிப்பின் மூலம், மீண்டும் இசைத்துறையின் பேசுபொருளாக மாறி, அனைவரின் கவனத்தையும் தன்பக்கம் ஈர்த்திருக்கிறார். ‘மகரிஷி’ திரையரங்குகளில் இன்றுடன் தனது வெற்றிகரமான 30வது நாளை நிறைவு செய்கிறது. இத்திரைப்படம் சூப்பர் ஸ்டார் மகேஷின் திரையுலக பயணத்தின் ஒரு முக்கியமான மைல்கல் என்பதோடு அவரது ‘வெள்ளி விழா’ படமும் கூட. இப்படம் ‘மகரிஷி’ மகேஷின் ரசிகர்களுக்கு ஒரு மிகப்பெரிய வரமாக அமைந்ததோடு மட்டுமின்றி, அவர்கள் இப்படத்தை…
Read MoreCategory: சினிமா செய்திகள்
நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா – இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்
பார்வையாளர்களுக்கு மிக நெருக்கமாக இருக்கும் நடிகரை பற்றி புகழ்ந்து சொல்ல அதிகமாக பயன்படுத்தப்படும் ஒரு சொற்றொடர் தான் ‘Boy Next Door”. அவர்கள் மக்கள் மத்தியில் ஒருவராக அடையாளம் காணப்படும் ஒரு மந்திரத்தை கொண்டிருப்பர், ஆனால் ‘நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா’ படக்குழுவில் உள்ள அத்தனை பேருமே “நம்ம வீட்டு பசங்க” என்ற அடைமொழிக்கு ஏற்றவர்களாக கருதப்படுகிறார்கள். அவர்கள் சின்னத்திரை மற்றும் Youtube என இரண்டிலும் தங்களது பகுத்தறிவுடன் கூடிய நகைச்சுவையால் பிரபலமானவர்கள். உண்மையில், இது தான் படத்திற்கு மிகப்பெரிய எனர்ஜியை மக்களிடையே உருவாக்குகிறது. சிவகார்த்திகேயன் புரொடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இந்த படம் வரும் ஜூன் 14ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன் ரசிகர்கள் படத்தை எப்படி வரவேற்பார்கள் என்பதை அறிய மிகவும் ஆர்வமாக உள்ளார். இந்த படத்தின் மூலம் அறிமுகமாகும் இயக்குனர் கார்த்திக் வேணுகோபாலன்…
Read Moreஜூன்-25 முதல் மலேசியாவில் சிம்புவின் ‘மாநாடு’ படப்பிடிப்பு ஆரம்பம்!
அமைதிப்படை-2, கங்காரு ஆகிய படங்களை தயாரித்த தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சியின் வி ஹவுஸ் புரொடக்சன்ஸ், தற்போது மிக மிக அவசரம் என்கிற படத்தை தயாரித்துள்ளது. விரைவில் இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில், இதையடுத்து வெங்கட் பிரபு டைரக்சனில் சிம்பு நடிக்க, ‘மாநாடு’ என்கிற படத்தை மிக பிரம்மாண்டமான பொருட்செலவில் இந்த நிறுவனம் தயாரிக்கிறது. கதாநாயகியாக பிரபல இயக்குனர் பிரியதர்ஷன் மகள் கல்யாணி பிரியதர்ஷன் நடிக்க இருக்கிறார்.. இவர்கள் தவிர இன்னும் சில முன்னணி நட்சத்திரங்கள் இந்தப்படத்தில் இடம்பெறுகின்றனர்.. யுவன் சங்கர் ராஜா இந்தப்படத்திற்கு இசையமைக்கிறார். முழுக்க முழுக்க அரசியல் கதைக்களத்தில் அதிரடி அரசியல் படமாக இந்தப்படம் உருவாகிறது. சிம்பு இதுவரை நடித்த படங்களிலேயே படங்களிலேயே அதிக பட்ஜெட்டில் உருவாக இருக்கும் படம் இது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படம் அறிவிக்கப்பட்டு பல நாட்கள் ஆனதால் படம் அவ்வளவுதான் டைட்டில்…
Read Moreரெஜினா கசான்றா நடிப்பில் வெளியாகவுள்ள தெலுங்கு த்ரில்லர் “ எவரு “ !
பிவிபி சினிமா நிறுவனம் தயாரிப்பில் பேர்ல் வி பொட்லூரி , பரம் வி பொட்லூரி , கவின்அன்னே தயாரிக்கும் திரைப்படம் “ எவரு “. சீட் எட்ஜ் த்ரில்லராக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகை ரெஜினா கசான்ரா , “ சனம் “ புகழ் ஆத்வி ஷேஷ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இவர்களோடு பல தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்த புகழ் பெற்ற நடிகரான முரளி சர்மா நடித்துள்ளார். அறிமுக இயக்குனரான வெங்கட் ராம்ஜி இப்படத்தை இயக்கியுள்ளார். கொடைக்கானல் , ஹைதரபாத் உள்ளிட்ட பல இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது. இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து படத்தின் கேரக்டர் போஸ்டர்கள் மற்றும் ட்ரைலர் விரைவில் வெளியாகவுள்ளது. எவரு வருகிற ஆகஸ்ட் 23ஆம் தேதி உலகமுழுவதும் பிரமாண்டமாக வெளியாகியுள்ளது.
Read Moreஜீவனின் அசரீரி!
அறிவியல் புனைவு திரைப்படங்கள் எப்போதுமே அனைத்து தரப்பு ரசிகர்களையும் ஈர்த்து விடும். அதற்கு காரணம் வெறுமனே அதன் தொழில்நுட்ப அம்சங்கள் மட்டுமல்ல, அதில் பிணைந்திருக்கும் உணர்ச்சி கூறுகளும் தான். அறிமுக இயக்குனர் ஜி.கே இயக்க, பிக் பிரிண்ட் பிக்சர்ஸ் ஐபி கார்த்திகேயன் தயாரிக்கும் அசரீரி படத்தில் நடிகர் ஜீவன் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் ஐ.பி. கார்த்திகேயன் கூறும்போது, “டிஜிட்டல் தளங்களின் வளர்ச்சியினால், புராண குறிப்புகளை கூட தொழில்நுட்பம் சார்ந்து வழங்குவதில் தற்போதைய தலைமுறை கவனம் செலுத்துகிறது. தனிப்பட்ட முறையில், அத்தகைய விஷயங்களில் நான் எளிதில் கவனம் செலுத்தி விடுவேன், இயக்குனர் ஜி.கே. ஸ்கிரிப்ட்டை எனக்கு விவரிக்கும்போது எனக்கு மிகவும் ஆர்வம் தொற்றிக் கொண்டது. அறிவியல் புனைவு கதைகளை கேட்கும்போது ஒவ்வொருவர் மனதில எழும் முதல் கேள்வி, இதை எந்த அளவுக்கு இயக்குனர்…
Read Moreநடிகர் சங்கத் தேர்தலில் மீண்டும் போட்டியிடும் நாசர் & விஷால் அணி!
தென்னிந்திய நடிகர் சங்கத்தில், நாசர் தலைமையிலான நிர்வாகக் காலம் முடிவடைந்ததை யடுத்து, 2019 -2022 ஆண்டுகளுக்கான நிர்வாக குழுவைத் தேர்வு செய்யும் தேர்தல் ஜூன் 23 அன்று நடைபெறவுள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் ஜூன் 8-ஆம் தேதி தொடங்கி 10-ஆம் தேதி நிறைவு பெறுகிறது. மேலும், ஜூன் 14-ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும். இந்தத் தேர்தல், சென்னை அடையாறு ஜானகி எம்.ஜி.ஆர். கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 7 மணிக்குத் தொடங்கும் வாக்குப்பதிவு, மாலை 5 மணி வரை நடைபெறும். மாலை 6 மணிக்கு மேல் வாக்கு எண்ணிக்கை தொடங்கி உடனடியாக முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. இந்நிலையில் இந்தத் தேர்தலில் நாசர் – விஷால் அணி மீண்டும் போட்டியிடவுள்ளது.இதற்கான 26 பேர் கொண்ட பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்கு நாசரும் பொதுச்செயலாளர் பதவிக்கு விஷாலும்…
Read Moreநான், சலீம், பிச்சைக்காரன் வரிசையில் கொலைகாரன்
விஜய் ஆண்டனி முரட்டுத் தனமான கேரக்டரில், நான், சலீம் படங்கள் இரண்டும் நன்றாக ஓடி கல்லா கட்டி இருக்கிறது. மேலும் பக்கா செண்டிமெண்ட் ஆக நடித்த பிச்சைக்காரன் படமும் இண்டஸ்ட்ரி ஹிட் ஆகி தூள் கிளப்பியது. தற்போது வரும் ஜுன் 7 ஆம் தேதி வெளிவர இருக்கும் கொலைகாரன் படமும் அந்த வரிசையில் சேரும் என்கிறார்கள் படக்குழுவினர். ஏனென்றால் கொலைகாரன் படத்தில் நான் சலீம் படங்களில் போல் பக்கா திரில்லர் விசயங்களும் இருக்கிறதாம், பிச்சைக்காரன் படத்தைப் போல பக்கா செண்டிமெண்ட் மேட்டரும் இருக்கிறதாம். அதனால் படம் எப்படியும் பட்டயக் கிளப்பும் என்கிறார்கள். காத்திருப்போம்
Read Moreபோட்றா புக்கிங்கை. NGK தெறிக்கும் முன்பதிவு
இந்த வாட்டி சொல்லி அடிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார் சூர்யா. தொடர்ந்து தனது படங்கள் பாக்ஸ் ஆபிஸை நொறுக்கத் தவற விட்டதால் இந்தமுறை அடிச்சித் தூக்க வேண்டும் என்ற வேட்கை அவரது வேகத்தில் தெரிகிறது. வேகமென்றால் படத்தின் ட்ரைலர் ப்ரோமோ எல்லாவற்றிலும் சூர்யா அவ்ளோ எனர்ஜியாக இருக்கிறார். செல்வராகவன் சூர்யா சாய்பல்லவி என இக்கூட்டணியே பலே கூட்டணியாக இருப்பதால் கோடம்பாக்கம் தாண்டி உலகம் எங்கும் எதிர்பார்ப்பு எகிறிக்கிடக்கிறது. நேற்றே புக்கிங் ஓப்பனாகும் என்று ரசிகர்கள் தவங்கிடந்த நிலையில் இப்போது தான் புக்கிங் ஓப்பனாகியுள்ளது. ரசிகர்களும் வெறித்தனமாக முன்பதிவு செய்து வருகிறார்கள். எப்படியாவது இந்தப்படம் மூலமாக சூர்யா செல்வராகவன் இருவருக்கும் திருப்புமுனை கிடைச்சா சரி. அப்படியே எஸ். ஆர் பிரபுவும் நல்லாருக்கணும். ஆமா அவர் தானே தயாரிப்பாளர்
Read Moreகொலைவெறியில் வரும் கொலைகாரன்
எப்படியும் ஹிட்டு கொடுத்தே ஆகணும் என்ற வேட்கையோடு இருக்கிறார் விஜய் ஆண்டனி. ஏனென்றால் காளி, திமிரு பிடிச்சவன் ஆகிய படங்கள் அவருக்கு சரிவர கை கொடுக்கவில்லை. அதனாலே கொலைகாரனை பெரிதாக நம்பி இருக்கிறார். படத்தின் ட்ரைலர் ஸ்னீக்பீக் எல்லாம் பெரிய அளவில் ரீச் ஆகி இருப்பதால் படம் எப்படியும் ஹிட்டடிக்கும் என்று நம்புகிறார் விஜய் ஆண்டனி. அவரின் நம்பிக்கைக்கு உரமூட்டுவது போல படத்தைப் பார்த்த தயாரிப்பாளர் பாப்டா தனஞ்செயன் கொத்தாக படத்தை ரேட் பேசி அள்ளிக்கொண்டார். அதனால் கொலைகாரன் எப்படியும் கொலவெறி ஹிட்டடிக்கும் என்பது கன்பார்ம். மேலும் படம் வெளியாகும் நாள் விடுமுறை தினமான ரம்ஜான் என்பதால் வசூலுக்குப் பஞ்சம் இருக்காது என்கிறார்கள். நல்லது நடக்கட்டும்.
Read Moreலாரன்ஸ் இடத்தை நோக்கி எஸ்.ஜே சூர்யா
குழந்தைகள் விரும்பும் ஹீரோக்கள் தமிழ்சினிமாவில் மிகவும் குறைவு. ரஜினி, விஜய், சிவகார்த்திகேயன் என வெகுசிலர் தான் குழந்தைகளை ஈர்த்து இருக்கிறார்கள். அந்த வரிசையில் காஞ்சனா சீரிஸ் படங்கள் மூலமாக லாரன்ஸும் இடம் பிடித்து விட்டார். அவரது படங்கள் தொடர்ந்து குழந்தைகளை ஈர்த்து வருகிறது. தற்போது அவர் இடத்தை நோக்கி வருவதற்கான முதல் கல்லைப் போட்டிருக்கிறார் நடிகர் எஸ்.ஜே சூர்யா. சமீபத்தில் அவர் நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் குழந்தைகள் மத்தியில் நல்ல ரீச் ஆகியுள்ளது. எஸ்.ஜே சூர்யாவும், “திரையில் குழந்தைகள் என்னைக் கண்டு மகிழ்வதைப் பார்க்கும் போது உண்மையிலே பெரும் சந்தோஷமாக உள்ளது” என்று கூறி இருக்கிறார். அதனால் இனி அவர் குழந்தைகளை கவரும் விதமான படங்களில் அவ்வப்போது நடிப்பார் என்று எதிர்பார்க்கலாம். ஒருவேளை இந்த மான்ஸ்டர் படம் கூட இரண்டாம் பாகம் வந்தாலும் வரலாம். எப்படி…
Read More