பள்ளிச்சட்டம்பி (Pallichattambi) திரைப்படத்தில் கயாடு லோஹரின் விண்டேஜ்  (vintage)தோற்றம் வெளியானது

இயக்குநர் டிஜோ ஜோஸ் ஆண்டனி ( ( Dijo Jose Antony) இயக்கத்தில் டொவினோ தாமஸ்  கதாநாயகனாக நடிக்கும் ‘பள்ளிச்சட்டம்பி எனும் திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது. இப்படத்தில் கயாடு லோஹர் ( Kayadu Lohar ) கதாநாயகியாக நடிக்கிறார். தற்போது நடிகையின் கேரக்டர் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் பகிரப்பட்ட அந்த போஸ்டரில் கயாடு லோஹர் ஒரு விண்டேஜ்  தோற்றத்தில் காட்சியளிக்கிறார். இருப்பினும் படத்தில் அவரது கேரக்டரின் பெயரை படக்குழுவினர் இன்னும் வெளியிடவில்லை. கன்னட திரைப்படமான ‘முகில்பேட் ‘ ( Mugilpete) படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான கயாடு, ‘பத்தொன்பதாம் நூற்றாண்டு’ படத்தின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமானார். அப்படத்தில் அவரது நடிப்பு பலரது கவனத்தைக் கவர்ந்தது. பின்னர் கடந்த ஆண்டு வெளியான ‘டிராகன்’ எனும் தமிழ் திரைப்படம் – அவருடைய வாழ்க்கையில் மிகப் பெரிய திருப்புமுனையாக அமைந்தது. பள்ளிச்சட்டம்பி – கயாடு லோஹரின்…

Read More

பெருங்குடியில் Interiors by DeX Flagship அனுபவ மையத்தை நடிகர்கள் பிரஜின், சாண்ட்ரா & இயக்குநர்-நடிகர் கரு. பழனியப்பன் திறந்து வைத்தனர்!!

சென்னை பெருங்குடியில் Interiors by DeX Flagship அனுபவ மையத்தை நடிகர்கள் பிரஜின், சாண்ட்ரா & இயக்குநர்-நடிகர் கரு. பழனியப்பன் திறந்து வைத்தனர். 5 ஆண்டு ‘கேள்வியே இல்லாத’ மாற்று உத்தரவாதம் அறிமுகம். நுணுக்கமான வடிவமைப்பு, அன்றாட வாழ்க்கைக்குத் தேவையான பயன்பாடு மற்றும் நீண்டகால பொறுப்புணர்வு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் வகையில், Interiors by DeX தனது Flagship அனுபவ மையத்தை OMR, Perungudi-யில் நடிகர்கள் பிரஜின் சாண்ட்ரா மற்றும் இயக்குநர்-நடிகர் கரு பழனியப்பன் முன்னிலையில் திறந்து வைத்தது. நிகழ்ச்சி பாரம்பரிய குத்துவிளக்கு ஏற்றுதல் மற்றும் ரிப்பன் வெட்டுதல் மூலம் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து நடைபெற்ற ஸ்டூடியோ சுற்றுப்பயணத்தில், DeX நிறுவனத்தின் நவீன சமையலறைகள்(Modular kitchen), அலமாரிகள் (வார்ட்ரோப்கள்) மற்றும் முழுமையான வீட்டு இன்டீரியர் தீர்வுகள் — தினசரி வாழ்க்கையை மையமாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டவை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. சாதாரண…

Read More

நடிகர் அல்லு அர்ஜுனின் ’புஷ்பா2’ திரைப்படம் ஜப்பானில் ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூலுடன் 17000 பார்வையாளர்களையும் கவர்ந்து சாதனை படைத்துள்ளது!

’புஷ்பா2: தி ரூல்’ திரைப்படம் ஜப்பானில் வெளியான வெறும் 14 நாட்களிலேயே ரூ. 6.1 கோடி (¥105 மில்லியன்) வசூல் செய்துள்ளது. இந்திய நடிகர்களில் உலக அளவில் செல்வாக்கு பெற்றவர் ஐகான் ஸ்டார் அல்லு அர்ஜுன் என்பதை இந்த சாதனை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. உலகெங்கிலும் உள்ள தனித்துவமான நல்ல திரைப்படங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டு வரும் ஜப்பான், தற்போது நடிகர் அல்லு அர்ஜூனையும் அவரது ‘புஷ்பா2’ திரைப்படத்தையும் கொண்டாடி வருகிறது. ஜப்பான் திரைப்படங்களின் வழக்கத்திற்கு மாறாக ’புஷ்பா2’ திரைப்படம் 3 மணி 40 நிமிடங்கள் என்ற ரன்டைம் இருந்தபோதிலும், படம் அங்கு வெளியான 14 நாட்களிலேயே கிடைத்திருக்கும் வரவேற்பும் வசூலும் உலகளவில் நடிகர் அல்லு அர்ஜூனுக்கு அதிகரித்திருக்கும் ரசிகர்கள் பட்டாளத்தையும் ‘புஷ்பா2’ திரைப்படத்தின் புகழையும் காட்டுகிறது. கடந்த சில ஆண்டுகளில், நடிகர் அல்லு அர்ஜுன் இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த…

Read More

எங்கள் தலைவர் விஜய்யை எம்.ஜி.ஆர் போல பார்க்கிறோம் – நடிகர் சௌந்தரராஜா

தென்னிந்திய திரையுலகில் பல்வேறு படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. திரைத்துறை மட்டுமின்றி சமூகம் சார்ந்தும் பல்வேறு முன்னெடுப்புகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகிறார். மேலும், “மண்ணுக்கும் மக்களுக்கும்” என்ற பெயரில் அறக்கட்டளை மூலம் இயற்கையை பாதுகாக்கும் பல்வேறு நடவடிக்கைகளில் தன்னை ஈடுபடுத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றிக் கழகத்தின் 3வது ஆண்டு தொடக்கம் மற்றும் தமிழக வெற்றிக் கழகத்திற்கு தேர்தல் ஆணையம் விசில் சின்னம் வழங்கப்பட்டுள்ளதை முன்னிட்டு நடிகர் சௌந்தரராஜா வடபழனி முருகன் கோவிலில் விசில் சின்னத்தை வைத்து சிறப்பு சாமி தரிசனம் செய்தார். மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மற்றும் த.வெ.க. கட்சியை சேர்ந்த பலர் நடிகர் சௌந்தரராஜாவுடன் வடபழனி கோவிலில் சாமி தரிசனம் செய்தனர். சிறப்பு வழிபாடு முடித்து வெளியே வந்த நடிகர் சௌந்தரராஜா கோவிலை சுற்றியுள்ள பிரதான சாலைகளில்…

Read More

“சென்னையில் ஜென் இஷின்ரியு கராத்தே வரலாற்றுச் சாதனை நிகழ்வு”

சென்னை, பிப்ரவரி 1, 2026, புகழ்பெற்ற கராத்தே மாஸ்டர் கேரிபாலாவின் வழிகாட்டுதலின் கீழ் சென்செய்ஸ் எஸ். ரோஷன், பி. பிரணவ், பி. பத்மநாபன் தீரஜ் ஆகியோரால் மெய் சிலிர்க்கும் கராத்தே சாதனைகள் நிகழ்த்தப்பட்டன. இந்த நிகழ்வு ஒழுக்கமான கலையான, கராத்தே மற்றும் குருவின் மீதான மிகுந்த மரியாதை, நன்றியுணர்வு மற்றும் பொறுப்புணர்வை வெளிப்படுத்தும் நோக்கதுடன் மறைந்த மாபெரும் குருவான ஷிஹான் ஹுசைனி – ஹு (இந்திய இஷின்ரியு கராத்தேயின் தந்தை) அவர்களின் நினைவாக மற்றும் அவரை பெருமை படுத்தும் விதமாக நடத்தப்பட்டது. எங்கள் ஜென் இஷின்ரியு கராத்தே மாணவர்கள் – 18 வயதுக்குட்பட்டோர் பிரிவில் சென்செய் பி. பத்மநாபன் தீரஜின் மார்பின் மீது 101 பாராங்கற்கள் உடைக்கப்பட்டன., சென்செய்ஸ் பி. பிரணவ் மற்றும் எஸ். ரோஷன் ஆகியோர் தலா 101 தொகுப்பு ( sets) நெருப்பு ஓடுகளை…

Read More

“டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு !!

“டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு !! “டார்க் ஜெயின்ட்” திரைப்படத்தின் டைட்டில் வெளியீடு நேற்று பரணி ஸ்டுடியோவில் நடைபெற்றது. இத்திரைப்படத்தில் சோனியா அகர்வால், இயக்குனர் பாக்யராஜ், லிவிங்ஸ்டன், லிவிங்ஸ்டன் மகள் ஜோவிட்டா, அயலி மதன், விஜய் டிவி அமுதவாணன், ஆதர்ஷ், ஆகியோருடன் ஹாலிவுட் நடிகர் ரபிக் பாட்சா முக்கிய கதாபாத்திரத்தில் தமிழ் சினிமாவில் அறிமுகம் ஆகிறார். இத்திரைப்படத்தை இயக்குனர் KS கிஷன் இயக்குகிறார். விக்னேஷ் ராஜா இசையமைக்க, ஒளிப்பதிவு சங்கீத் மணிகோபால் கவனிக்கிறார். இப்படத்தினை ஓய்வு பெற்ற ராணுவ வீரர் லோகேஸ்வரன், பயோவன் கிரியேஷனிசம் எனும் பேனரில் தயாரிக்கிறார். இப்படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு கோபிசெட்டி பாளையத்திலும், சென்னையிலும் முடிவடைந்துள்ளது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பிப்ரவரி இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளது. இது ஒரு வித்யாசமான ஹாரர் திரில்லர் படமாக உருவாகி உள்ளது. படப்பிடிப்பு நிறைவடைந்ததும் முதல்…

Read More

திறமைசாலிகளை மட்டுமே தேடினேன் தயாரிப்பாளரைத் தேடவில்லை: ‘ட்ரீம் கேர்ள்’ இயக்குநர் எம். ஆர். பாரதி!

சாருலதா பிலிம்ஸ் தயாரிப்பில் எம். ஆர் .பாரதி கதை எழுதி இயக்கியிருக்கும் படம் ‘ட்ரீம் கேர்ள்’. இப்படத்தில் ஜீவா நாயகனாக நடித்திருக்கிறார். நாயகியாக பிரபல ஸ்டண்ட் நடிகர் ஜெஸ்டின் பேத்தியும் நடிகை பபிதாவின் மகளுமாகிய ஹரிஷ்மிதா நடித்திருக்கிறார். மற்றும் பிரபு சாஸ்தா, துருவன், இந்திரா ஆகியோரும் நடித்துள்ளனர். படம் பற்றி இயக்குநர் எம். ஆர். பாரதி பேசும்போது, ” இது ஒரு காதல் கதை.கதாநாயகனுக்கு சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்பது கனவு.கதாநாயகிக்கோ தான் ஒரு பாடகியாக வேண்டும் என்று கனவு. இப்படி இருவரும் கனவைத் துரத்திக் கொண்டிருக்கிறார்கள்.மற்றபடி இருவருமே ஜாலியாக வாழ்க்கையை, அதன் போக்கில் போகவிட்டு மகிழ்ச்சியின் தருணங்களை ஒரு சொட்டு கூட வீணடிக்காமல் வாழத் துடிப்பவர்கள் . நவீன உலகத்தின் சமகாலப்பிரதியாகவும் பிரதிநிதியாகவும் அந்த இருவரும் இருக்கிறார்கள்.அவர்களுக்குள் காதல் வருகிறது. கனவைத் துரத்தும் அவர்களுக்குள் ஒரு…

Read More

ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘லக்கி’ திரைப்படம் Hotstar Specials-ஆக, JioHotstar தளத்தில் பிப்ரவரி 20 அன்று வெளியாகிறது!

நேரடி ஓடிடி ஒரிஜினல் திரைப்படமான ‘லக்கி’, Hotstar Specials-ஆக பிப்ரவரி 20, 2026 அன்று, பிரத்யேகமாக JioHotstar-ல் வெளியாகும் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பை JioHotstar வெளியிட்டுள்ளது. JioHotstar சவுத் அன்பவுண்ட் நிகழ்வில் முதன்முறையாக ‘லக்கி’ திரைப்படத்தின் தனித்துவமான உலகம் அறிமுகப்படுத்தப்பட்டது. பார்ப்பதற்கு அப்பாவியான நாய்க்குட்டி ஒன்று அரசியல் அதிகார மையங்களின் கவனத்தை ஈர்க்கும் போது உருவாகும் குழப்பங்கள்தான் மையக்கரு என்பதை ‘லக்கி’ டீசர் வெளிப்படுத்துகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய போஸ்டர், நகைச்சுவை, குழப்பம் மற்றும் உணர்வுப்பூர்வமான குடும்ப பொழுதுபோக்கு படமாக ‘லக்கி’ இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறது. உதய் மகேஷ் இயக்கியுள்ள இந்த திரைப்படத்தில் ஜிவி பிரகாஷ் குமார் மற்றும் அனஸ்வரா ராஜன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்க, இவர்களுடன் நடிகை தேவதர்ஷினி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நகைச்சுவை, அரசியல், ஆக்‌ஷன் மற்றும் மனதைத் தொடும் உணர்வுப்பூர்வமான தருணங்களுடன் அப்பாவித்தனமும்…

Read More

13 ஆண்டுகளின் உறுதி: கௌதம் ராம் கார்த்திக்கின் நிலைத்த திரைப்படப் பயணம்

வெற்றியும் தோல்வியும் ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் எனப் பெரும்பாலும் கூறப்படுவது உண்டு. ஆனால் சினிமா என்பது Sprint ஓட்டப்பந்தயமோ அல்லது லிமிட்டெட் ஓவர்ஸ் கிரிக்கெட் மேட்ச்சோ அல்ல — அது மனஉறுதி, நீடித்த பொறுமை மற்றும் இடைவிடாத ஆர்வம் கொண்ட ஒரு கடினமான டெஸ்ட் போட்டி. விமர்சனங்களை எதிர்கொள்வது, தடைகளை உடைப்பது, பல்வேறு வகை சினிமா ஜானர்களை ஆராய்வது, தொடர்ந்து பார்வையாளர்களுடன் இணைவதற்காக முயற்சிப்பது — இதுவே திரைப்படத் துறையில் நீடித்திருப்பதற்கான உண்மையான அடையாளம். இந்த மனோபாவத்தின் உயிர்ப்பான சான்றாக நடிகர் கௌதம் ராம் கார்த்திக் திகழ்கிறார். கடந்த 13 ஆண்டுகளாக, தைரியத்துடனும் உறுதியுடனும் தமிழ் சினிமாவில் கௌதம் தனக்கென ஒரு பாதையை உருவாக்கியுள்ளார். சவாலான கதாபாத்திரங்களை ஏற்றுக்கொள்வதிலிருந்து, வணிக ரீதியான பொழுதுபோக்குப் படங்கள், அழுத்தமான கதாபாத்திரங்கள், உள்ளடக்கத்தை மையமாகக் கொண்ட படங்கள் என பல்வேறு…

Read More

பெசன்ட் நகர் கடற்கரையில் ஒளிர்ந்த ‘வித் லவ்’ – ரசிகர்களை வியப்பில் ஆழ்த்திய ட்ரோன் ஷோ!!

திரைப்பட விளம்பரத்தில் புதிய அத்தியாயம் தொடங்கிய ‘வித் லவ்’ டிரோன் நிகழ்ச்சி!! தமிழ் சினிமா விளம்பர வரலாற்றில் புதுமையான ஒரு தருணமாக, ‘வித் லவ் (With Love)’ திரைப்படக் குழு சென்னை பெசன்ட் நகர் கடற்கரையில் பிரம்மாண்டமான ட்ரோன் ஷோ ஒன்றை பொதுமக்கள் முன்னிலையில் நடத்தி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. சுமார் 250 டிரோன்கள் ஒருங்கிணைந்து, படத்தின் டைட்டிலும், படக்குழுவின் பெயர்களும் வானில் ஒளிச்சித்திரங்களாக வரைந்த காட்சி, கடற்கரையில் கூடியிருந்த மக்களை வியப்பில் ஆழ்த்தியது. பொதுமக்கள் பெரும் உற்சாகத்துடன் கைதட்டி ரசித்ததுடன், அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தள பக்கங்களில் பகிர்ந்து மகிழ்ந்தனர். Zion Films சார்பில் சௌந்தர்யா ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment இணைந்து வழங்க, பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன்…

Read More