கேரள அரசின் சிறந்த ஸ்டண்ட் இயக்குநர் விருது வென்றார் ஸ்டண்ட் சில்வா

  தமிழ் திரையுலகின் முன்னணி ஸ்டண்ட் இயக்குநர் சில்வா. ஸ்டண்ட் சில்வா என அறியப்படும் இவர் தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் இதுவரை 100-க்கும் மேற்பட்ட திரைப்படங்களுக்கு ஸ்டண்ட் இயக்குநராக பணியாற்றி இருக்கிறார். சண்டை காட்சிகளில் தனக்கென ஒரு பாணியை பின்பற்றி வரும் ஸ்டண்ட் சில்வா வித்தியாசம் கலந்த விறுவிறுப்பான ஆக்ஷன் காட்சிகளை படமாக்குவதில் கைத்தேர்ந்தவர். ஸ்டண்ட் மட்டுமின்றி திரையுலகின் பல பரிவுகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார் ஸ்டண்ட் சில்வா. அதன்படி திரைக்கு பிந்தைய பணிகள் தவிர்த்து, பல்வேறு திரைப்படங்களில் முக்கிய வேடங்களில் நடித்து, ரசிகர்களை கவர்ந்துள்ளார். முன்னணி இயக்குநர்கள், திரையுலகின் உச்ச நடிகர்கள் என ஸ்டண்ட் இயக்கத்திலும், வில்லன் கதாபாத்திரத்தில் நடிப்பதிலும் உச்சம் தொட்டவர் ஸ்டண்ட் சில்வா. இவரது தலைசிறந்த பணிகளை பாராட்டி பல்வேறு திரைப்படங்களுக்காக இவர் பலமுறை SIIMA விருது, எடிசன் விருது…

Read More

Crunchyroll மற்றும் Sony Pictures Entertainment வழங்கும் “Demon Slayer: Kimetsu No Yaiba Infinity Castle” தமிழ் டிரைலர் வெளியீடு;

Link: https://youtu.be/Q4zT7PuBpG0 அனிமேஷன் உலகின் மிகப்பெரிய தளமாக விளங்கும் கிரஞ்சிரோல் (Crunchyroll), சோனி பிக்சர்ஸ் எண்டர்டெயின்மெண்ட் (Sony Pictures Entertainment) இணைந்து, எதிர்பார்ப்புகள் நிறைந்த “டீமன் ஸ்லேயர்: கிமெட்ஸு நோ யாய்பா – இன்ஃபினிட்டி கேஸ்டில்” படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலர்களை வெளியிட்டுள்ளன. இந்த மாபெரும் மூன்று பாகத் தொடரின் முதலாவது திரைப்படம், வரும் செப்டம்பர் 12, 2025 அன்று இந்தியாவில் மட்டும் திரையரங்குகளில் வெளியிடப்படுகிறது. IMAX®️ மற்றும் பிற பிரீமியம் திரை வடிவங்களிலும் இப்படம் வெளியாகிறது. படம் ஜப்பானிய மொழியிலும் ஆங்கிலம், ஹிந்தி, தமிழ், தெலுங்கு மொழிகளில் டப் செய்யப்பட்டு திரையிடப்படும் என்று படக்குழு அறிவித்துள்ளது. கதை சுருக்கம், தன்ஜிரோ கமாடோவின் குடும்பம் ஒரு டீமனால் கொல்லப்பட்டதும், தன் தங்கை நெசுகோ டீமனாக மாறுகிறார், அவளை மீண்டும் மனிதராக மாற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன்,…

Read More

“சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் ஆகஸ்ட் 29 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது!!

ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் எங்கள் “சொட்ட சொட்ட நனையுது” திரைப்படம் வரும் ஆகஸ்ட் 29-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருப்பதை மகிழ்ச்சியுடன் அறிவிக்கிறோம். தலைவரின் “கூலி” படத்தின் பிரம்மாண்ட வெற்றியும், கேப்டன் விஜயகாந்த் அவர்களின் மறக்க முடியாத கேப்டன் பிரபாகரன் படத்தின் பிரம்மாண்ட மறுவெளியீட்டையும் கருத்தில் கொண்டு, எங்கள் பட வெளியீட்டு தேதியை மாற்றியமைத்துள்ளோம். பத்திரிகை, ஊடக நண்பர்களின் ஆதரவும், ஊக்கமும் எங்களுக்கு பெரும் உற்சாகத்தைத் தருகிறது. எங்கள் படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க நீங்கள் செய்துள்ள பணிக்கு மனமார்ந்த நன்றிகள். எங்களை அன்போடு தொடர்ந்து ஆதரித்து வரும் ரசிகர்கள் மற்றும் நலன் விரும்பிகளுக்கும் எங்கள் இதயப்பூர்வ நன்றிகள். “சொட்ட சொட்ட நனையுது” படத்தை திரையரங்கில் பார்த்து, மறக்க முடியாத சினிமா அனுபவத்தை நீங்கள் பெறுவதைக் காண ஆவலுடன் காத்திருக்கிறோம். புதிய வெளியீட்டு தேதி…

Read More

மஞ்சும்மல் பாய்ஸ் இயக்குநரின் அடுத்தப் படம் பாலன்

மலையாள திரையுலகில் இயக்குநர் சிதம்பரம் (மஞ்சும்மல் பாய்ஸ்) மற்றும் எழுத்தாளர் ஜித்து மாதவன் (ஆவேஷம்) ஆகியோர் இணையும் திரைப்படம் குறித்த அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இந்த படத்தின் மூலம் திரு.வெங்கட் கே நாராயணா சார்பில் கே.வி.என்.புரொடக்ஷன்ஸ் மற்றும் திருமதி ஷைலஜா தேசாய் ஃபென் சார்பில் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணைந்துள்ளன. பிரம்மாண்டமாக உருவாக இருக்கும் இந்தப் படம் குறித்த புதிய அப்டேட் தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது. அதன்படி கே.வி.என். புரொடக்ஷன்ஸ் மற்றும் தெஸ்பியன் ஃபிலிம்ஸ் இணையும் முதல் திரைப்படம் “பாலன்” என்ற பெயரில் உருவாகிறது என்றும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று அதிகாரப்பூர்வமாக தொடங்கியதாகவும் படக்குழு அறிவித்து இருக்கிறது. இந்தப் படத்திற்கு ஷைஜூ காலித் ஒளிப்பதிவு பணிகளையும், இசையமைப்பாளராக சுஷின் ஷியாம் மற்றும் படத்தொகுப்பு பணிகளை விவேக் ஹர்ஷன் மேற்கொள்கின்றனர். “பாலன்” திரைப்படம் மூலம் கே.வி.என். புரொடக்ஷன்ஸ் நிறுவனம்…

Read More

வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) வழங்கும் “லோகா – சேப்டர் 1 : சந்திரா” திரைப்படத்தை தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் வெளியிடுகிறது!!

துல்கர் சல்மானின் வேஃபரர் பிலிம்ஸ் ( Wayfarer Films ) நிறுவனத்தின் ஏழாவது தயாரிப்பான “லோகா – சேப்டர் 1 : சந்திரா” படம், தமிழ்நாட்டில் ஏஜிஎஸ் சினிமாஸ் மூலம் வெளியாகிறது. ஒணம் பண்டிகை சிறப்பு வெளியீடாக திரையரங்குகளில் இப்படம் வெளியாக உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் மற்றும் நஸ்லென் முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்கும் இந்த படத்தை டொமினிக் அருண் எழுதி, இயக்கியுள்ளார். மிகுந்த பொருட்செலவில் உருவாகியுள்ள இந்த படம், ‘லோகா’ எனும் சூப்பர் ஹீரோ சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் படமாகும். இதில் கல்யாணி பிரியதர்ஷன் ஒரு சூப்பர் ஹீரோவாக நடிக்கிறார். பல பாகங்களாக வெளியாக இருக்கும் சினிமாடிக் யூனிவர்ஸின் முதல் பாகம் இதுவாகும். தென் இந்தியா முழுவதும் EPIQ திரைகளிலும் படம் வெளியாகிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் மற்றும் டீசர் வெளியானதிலிருந்து, படத்தின் மீது பெரும்…

Read More

உலகின் மிகப்பெரிய ஜனநாயக தேசம், நம் இந்தியா. நாம் இந்தியன் என்பதில் பெருமை கொள்கிறோம்.

நம் முன்னோர்கள் தங்கள் உடமைகளையும் உயிர்களையும் தியாகம் செய்து நமக்கு வாங்கிக்கொடுத்த சுதந்திரம்… நாம் சுதந்திரம் பெற்றதின் நோக்கம், நம்மை நாமே ஆளும் குடியாட்சியைப்பெறுவதே. அந்தக்குடியாட்சியின் தத்துவம் என்பதே, நம்மை ஆள்பவர்களை நாமே தேர்ந்தெடுக்கும் உரிமை. அந்த உரிமை நம் ஒவ்வொருவருக்கும் சொந்தமானது. அந்த “வாக்குரிமை” தான், ஜனநாயகத்தின் உயிர் மூச்சு. அந்த உரிமை எந்தவொரு தனிமனிதனுக்கு மறுக்கப்பட்டாலும், அது நம் தேசத்தை சர்வாதிகாரக் குழிக்குள் தள்ளி விடும். அந்த நிலைமை ஏற்பட்டு விடாமல், நம் ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது, ஒவ்வொரு தனிமனிதனின் தார்மீக கடமையாகும். அது தான், நம் நாட்டுக்காகப் போராடி, உயிர்த்தியாகங்கள் செய்த, நம் சுதந்திரப்போராட்ட தியாகிகளுக்கு நாம் செலுத்தும் நன்றிக்கடனும், மரியாதையுமாகும். ஆகவே, சுதந்திர தினத்தை கொண்டாடுவதென்பது, வெறும் கொடிகளை ஏற்றி கலைந்து விடாமல், நம் தேசத்தின் அரசியல் சாசன சட்டத்தையும், அது…

Read More

திரைத் துறையில் தனது நேர்மைக்காக பாராட்டப்பட்ட புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர்;

இந்திய திரைப்படத் துறையில் தன்னுடைய இடைவிடாத தொழில்முறை அணுகுமுறை மற்றும் ஒப்பந்தங்களை முழுமையாகக் காப்பதற்கான அர்ப்பணிப்பிற்காக புகழ்பெற்ற தயாரிப்பாளர் போனி கபூர் பாராட்டப்பட்டுள்ளார். திரைத்துறையின் மூத்த நிபுணரும், Paras Publicity Service நிறுவனத்தின் உரிமையாளருமான ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி, சமீபத்தில் போனி கபூர் தனது நிறுவனத்தின் விற்பனையாளர், தொழில்நுட்பக் குழுவினர், மற்றும் இணைபணியாளர்களுக்கு படத்தின் வணிக வெற்றியோ, தோல்வியோ பொருட்படுத்தாமல், முழு தொகையையும் செலுத்தி வந்த வரலாற்றைப் பாராட்டினார். இந்த நடைமுறை, Koi Mere Dil Se Poochhe, Shakti போன்ற பழைய படங்களில் இருந்து Mili (2022), Maidaan (2024) போன்ற சமீபத்திய தயாரிப்புகளிலும் தொடர்ந்துள்ளதை கவனித்து அங்கீகரித்தார் ராஜேஷ் வ்ரஜ்லால் வசானி. இதன் உதாரணமாக, மறைந்த நடிகர் சஞ்சீவ் குமாரின் குடும்பத்தாருக்கு ₹1.5 லட்சம் தனிப்பட்ட கடனை உடனடியாகத் திரும்ப செலுத்தி, நிலுவையில் இருந்த…

Read More

ஹோம்பாலே பிலிம்ஸ் & PVR INOX – ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ ரசிகர்களை ‘காந்தாரா’ உலகிற்குள் அழைக்கும் வகையில், புகழ்பெற்ற திரை-லோகோவை (logo) – இந்த சுதந்திர தின வார இறுதியில், மறுவடிவமைப்பு செய்து வெளியிட்டுள்ளது !

இந்தியாவின் மிகப் பெரிய, பிரீமியம் திரையரங்க குழுமமான PVR INOX, ஹோம்பாலே பிலிம்ஸுடன் இணைந்து, சினிமா அனுபவத்தை தொடர்ந்து புதிய உச்சத்துக்கு எடுத்து சென்று வருகிறது. இந்த சுதந்திர தின வார இறுதியில், PVR INOX தனது புகழ்பெற்ற லோகோவில் (logo) காந்தாரா திரைப்படத்தின் அசத்தல் அம்சங்களை இணைத்து, அக்டோபர் 2 அன்று வெளியாகும் காந்தாரா: அத்தியாயம் 1க்கு ஒரு கண்கவர் முன்னோட்டத்தை வழங்கியுள்ளது. இன்று முதல், ‘கூலி’ மற்றும் ‘வார் 2’ பார்க்க வரும் ரசிகர்கள், PVR INOX லோகோவை உயர் தரத்திலான ஃபயர் தீம் அனிமேசன் ( fire-themed animation ) வடிவில், அனைத்து திரையரங்குகளிலும் கண்டு ரசிக்க முடியும். அதிநவீன திரை-ப்ரொஜெக்ஷன் முறை மற்றும் நாட்டின் உச்சமான கலை வடிவ ( state-of-the-art ) டிஜிட்டல் மாஸ்டரிங் தொழில்நுட்பத்தின் உதவியால் உருவாக்கப்பட்ட இந்த…

Read More

6 மாதங்களில் தமிழ் நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகள் – நடிகர் சௌந்தரராஜா சொன்ன அசத்தல் திட்டம்

தமிழ் திரையுலகில் பல்வேறு திரைப்படங்களில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. தமிழ் மட்டுமின்றி தென்னிந்திய திரையுலகில் பல மொழிகளில் ஏராளமான திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் சௌந்தரராஜா, நடிப்பு மட்டுமின்றி சமூகம் சார்ந்து பல்வேறு முன்னெடுப்புகளில் தன்னை ஆர்வமுடன் ஈடுபடுத்தி வருகிறார். சமூகம் சார்ந்து செயல்பட ஏதுவாக மண்ணுக்கும் மக்களுக்கும் என்ற சமூகநல அறக்கட்டளையை தொடங்கி, நடத்தி வருகிறார். அதன்படி நடிகர் சௌந்தரராஜா தனது மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளை மூலம் இந்த ஆண்டு ஆகஸ்ட் 11 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுக்க 25,000 மரக்கன்றுகளை நட்டு, வளர்க்க திட்டமிட்டுள்ளார். சென்னை ஆவடியில் உள்ள காவல் துறை கன்வென்ஷன் சென்டரில் நடந்த மண்ணுக்கும் மக்களுக்கும் சமூகநல அறக்கட்டளையின் ஒன்பதாவது ஆண்டு விழாவில் இதற்கான அறிவிப்பை நடிகர் சௌந்தரராஜா வெளியிட்டார். கடந்த 9…

Read More

விஜய்ஶ்ரீ ஜி இயக்கும் ‘பிரெய்ன்’, நவீன் குமார் இயக்கும் ‘ஷாம் தூம்’ ஆகிய இரண்டு படங்களை அறிவித்தார் ஆர் ஜே சாய்

கனடா நாட்டின் டொராண்டோ மாநகரில் வானொலி துறையில் புகழ் பெற்ற தமிழராக திகழும் ஆர் ஜே சாய், தனது பிறந்த நாளான இன்று (ஆகஸ்ட் 12) இரண்டு தமிழ் திரைப்படங்களை தயாரிக்கவுள்ளதாக தெரிவித்தார். ஒரு இயக்குநராகவும் திரை எழுத்தாளராகவும் முத்திரை பதிப்பதை லட்சியமாகக் கொண்ட ஆர் ஜே சாய், முதற்கட்டமாக இரண்டு படங்களை தயாரிக்கிறார். இதையடுத்து தமிழ் திரையுலகில் தொடர்ந்து பயணிக்கவுள்ளார். ஆர் ஜே சாய் இண்டர்நேஷனல் பேனரில் உருவாகவுள்ள இப்படங்களுக்கு ‘பிரெய்ன்’ மற்றும் ‘ஷாம் தூம்’ எனப் பெயரிடப்பட்டுள்ளன. ‘பிரெய்ன்’ திரைப்படத்தை ‘தாதா 87’, ‘பவுடர் ‘, மற்றும் ‘ஹரா’ புகழ் விஜய்ஶ்ரீ ஜி இயக்க, ‘ஷாம் தூம்’ படத்தை நவீன் குமார் இயக்குகிறார். ‘ஷாம் தூம்’ படத்தின் கதை, திரைக்கதையை ஆர் ஜே சாய் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது. இது குறித்து பேசிய ஆர் ஜே…

Read More