கதை… நாயகன் நாயகி காதலிக்கிறார்கள்.. ஒரு கட்டத்தில் காதல் முறிவு வருகிறது.. அட அதான்பா லவ் பிரேக்கப்.. பிரிந்து வேறு வேறு பாதையில் பயணிக்கும் இவர்களுக்கு தீராத வலி.. தோல்வி வலியை மறக்க பல வழிகளில் முயற்சிக்கின்றனர்.. ஆனாலும் இவர்களால் முடியாத பட்சத்தில் மற்றொரு காதலை தேடுகின்றனர்.. இறுதியில் என்ன ஆனது என்பதுதான் இப்படத்தின் கிளைமாக்ஸ்.. நடிகர்கள்… விஜய் ஆண்டனி தயாரித்திருக்கும் இந்த படத்தில் இவரது உறவினர் பையன் தான் இந்தப் படத்தின் கதாநாயகன் அஜய் திஷன்.. கம்பீரக் குரலில் ரசிகைகளை கவர்ந்து விடுவார்.. இவரது குரல் இவருக்கு பிளஸ் பாயிண்ட்.. ஆட்டம் பாட்டம் துள்ளல் உணர்ச்சி என மெச்சூரிட்டியான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. தனுஷா.. இவருக்கு தமிழில் இதுதான் முதல் படம்.. ஆனால் தன் அழகான எக்ஸ்பிரஷன் மூலம் ரசிகர்களை காந்தம் போல கவர்ந்து விடுகிறார்.. நடனத்தில்…
Read MoreCategory: விமர்சனம்
மை லார்ட் – விமர்சனம்..
கதை… மத்திய அமைச்சர் ஆஷா சரத்.. இவரது இரண்டு சிறுநீரகங்களும் சரியாக இயங்காத காரணத்தினால் சிகிச்சை மேற்கொள்ள இருக்கிறார்.. ஆனால் இவரது ரத்த வகை குரூப் அரிதானது என்பதால் நாடு முழுவதும் தேடி அலைகின்றனர்.. அப்போது இவரது ரத்த வகையைச் சேர்ந்த சசிகுமாரை கண்டறிகின்றனர். எனவே அமைச்சரின் உதவியாளர்கள் சசிகுமாரை வரவழைத்து சிகிச்சை மேற்கொள்ள நினைக்கின்றனர்.. அப்போது சசிகுமார் விதிக்கும் நிபந்தனை தான் படத்தின் ஹைலைட்ஸ்.. தன்னை நாடி வந்த அமைச்சருக்கு சசிகுமார் போடும் கட்டளை என்ன.? அவரது நிபந்தனை சுயநலமா.? பொதுநலமா.? அதை அமைச்சர் நிறைவேற்றி கொடுத்தாரா என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… சமீபகாலமாக நடிகர் சசிகுமாரின் கதை தேர்வு நம்மை வியக்க வைக்கிறது.. அயோத்தி, நந்தன், டூரிஸ்ட் ஃபேமிலி என ஹாட்ரிக் வெற்றி அளித்த இவர் தற்போது இந்த MY LORD படத்தின் மூலம் தொடர்…
Read MoreRED LABEL – ரெட் லேபிள் விமர்சனம்…
கதை… நாயகன் லெனின் இவர்தான் இந்த படத்தின் தயாரிப்பாளர்.. இவர் கோவையில் உள்ள பிரபல கல்லூரியின் முன்னாள் மாணவர்.. அந்த கல்லூரியில் தேர்தல் நடக்க உள்ளது இந்த நிலையில் அந்த பள்ளியில் படிக்கும் மாணவர்கள் இவரின் உதவியை நாடுகின்றனர்.. அப்போது இவர் அந்த கல்லூரியில் பர்னிச்சர் ஒர்க் செய்வது போல உள்ளே வந்து அந்த தேர்தல் பணிகளை கவனிக்கிறார்.. எதிர்பாராத விதமாக அப்போது தன் காதலிக்கு நிச்சயிக்கப்பட்ட மணமகனை கொன்றுவிடுகிறார்… ஏற்கனவே இவர் மீது சில வழக்குகள் நிலுவையில் இருக்க இந்த கொலை குற்றத்திற்காக உள்ளே சென்றால் வெளியே வர முடியாது என்ற சூழ்நிலை ஏற்படுகிறது. அதனை எடுத்து அந்த கொலையை மறைக்க திட்டமிடுகிறார்.. அதன் பிறகு நடந்தது என்ன என்பதெல்லாம் கதை.. நடிகர்கள்… Lenin, Azmin, R.V. Udhayakumar, Munishkanth, Anu Mohan…
Read Moreகாந்தி டாக்ஸ் – விமர்சனம்.. பணம் படுத்தும் பாடு
ஒரு விஷயத்தை நாம் சொல்ல விரும்பினால் அதற்கு மொழி அவசியமாகிறது.. அப்படி இருக்கையில் இன்று திரைப்படத்தில் வசனங்கள் முக்கியமானது.. ஆனால் வசனங்கள் இல்லாமல் வந்துள்ள படம் ‘காந்தி டாக்ஸ்’.. கதை… வறுமையில் தவிக்கிறார் விஜய் சேதுபதி.. என்ன செய்தாலும் வருமானம் இன்றி வறுமையில் தவிக்கும் இவருக்கு ஒரு காதலி அதிதி ராவ்.. மற்றொரு பக்கம் தொழிலதிபர் அரவிந்த்சாமி.. பல கோடி வருமானத்தில் உயர்ந்த இவர் இன்று நஷ்டத்தில் ஆண்டியாகிறார்.. இதனை அறியாத விஜய் சேதுபதி கொள்ளையடிக்க திட்டம் போட்டு அரவிந்தசாமி மாளிகையில் நுழைகிறார்.. அதே நேரத்தில் இந்த மாளிகையை தீ வைத்து எரிக்க முயல்கிறார் அரவிந்தசாமி.. அதற்கு பின்னணியில் ஒரு காரணமும் இருக்கிறது.. இறுதியில் என்ன ஆனது.? இவர்கள் பணத்தால் பட்ட கஷ்டத்திற்கு பணம் கிடைத்ததா.? பணம் இவர்களுக்கு கை கொடுத்ததா.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… விஜய்…
Read Moreக்ரானி – விமர்சனம்…
கதை… தமிழில் பாட்டி என்ற சொல்.. ஆங்கிலத்தில் கிராண்ட் மதர்.. அது சுருக்கமாக கிரானி.. நாக ஆனந்த் மற்றும் அவரது மனைவி இருவரும் தங்களின் மாற்று திறனாளி குழந்தைகளுடன் ஒரு பங்களா வீட்டுக்கு குடியேறுகின்றனர்.. ஐடி நிறுவனத்தில் பணிபுரிந்த இவர்கள் இயற்கை விவசாயத்தில் நம்பிக்கை வைத்து அதில் ஆர்வம் வைத்து விவசாயம் செய்து குடும்பத்தை வழி நடத்தி வருகின்றனர். இந்த சூழ்நிலையில் அந்த வீட்டில் வடிவுக்கரசி பாட்டி தவறுதலாக வந்து விடுகிறார்.. அவர் வந்த பிறகு தான் அந்த வீட்டில் பல பிரச்சனைகள் ஏற்படுகிறது.. குழந்தைகளையும் கணவன் மனைவியும் கொல்ல முயல்கிறார்.. அவர்கள் இதயத்தை எடுக்கிறார்.. இவரின் நோக்கம் என்ன என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… வடிவுக்கரசி, கஜராஜ், சிங்கம்புலி, திலீபன், ஆனந்த்நாக் இந்த வயதிலும் கதையின் நாயகியாக வடிவக்கரசி.. இவரின் பெயர் டைட்டில் கார்டில் வரும்போது…
Read Moreகருப்பு பல்சர் – விமர்சனம்…
கதை… மேட்ரிமோனியில் பெண் பார்த்து ரேஷ்மாவை காதலிக்கிறார் தினேஷ்.. ஒரு கட்டத்தில் தன்னிடம் கருப்பு பல்சர் பைக் இருப்பதாக பொய் சொல்லி விடுகிறார். எனவே நான் உன்னிடம் கருப்பு பல்சரில் ஊர் சுற்ற வேண்டும் என காதலி வேண்டுகோள் வைக்கிறாள்.. இதனை எடுத்து உடனடியாக மன்சூரிடம் இருக்கும் கருப்பு பல்சரை செகண்ட் ஹேண்டில் விலைக்கு வாங்குகிறார் தினேஷ்.. ஆனால் அதன் பிறகு ரேஷ்மாவுடன் பைக்கில் சுற்றும்போதெல்லாம் இவருக்கு சில பிரச்சனைகள் வருகிறது.. கண் மங்கலாக தெரிகிறது விபத்து ஏற்படுகிறது.. தனியாக சுற்றினால் பிரச்சனை இல்லை.. ஒரு பெண்ணுடன் சுற்றினால் அந்த கருப்பு பல்சர் பிரச்சனை செய்கிறது.. அப்படி என்றால் என்ன காரணம் என்பதுதான் படத்தின் மீதிக்கதை.. நடிகர்கள்… இப்படத்தில் தினேஷ் இரு வேடங்களில் நடித்துள்ளார்.. ரேஷ்மா வெங்கடேஷ், மதுனிகா, சரவணன் சுப்பையா, மன்சூர் அலிகான், உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.…
Read Moreமெல்லிசை – விமர்சனம் !!
கதை… ஸ்கூல் பிடி மாஸ்டர் கிஷோர்.. இவரின் மனைவி சுபத்தரா-வும் இதே பள்ளியில் ஆசிரியராக பணிபுரிகிறார்.. கிஷோருக்கு நல்ல பாடும் திறமை இருப்பதால் டிவி ரியாலிட்டி ஷோகளில் கலந்து கொள்கிறார்.. எனவே நிறைய தினங்களில் ஸ்கூலுக்கு லீவு போட வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.. இதனால் ஸ்கூல் பிரின்சிபாலுக்கும் இவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது.. நீங்கள் வேலை விட்டு செல்லுங்கள் உங்களிடத்தில் நாங்கள் வேறு PT மாஸ்டர் வைத்துக் கொள்கிறோம் என்கிறார்.. இதனால் மனைவி.. நீங்கள் பாட வேண்டாம் ஸ்கூல் வேலையை கவனியுங்கள் என்று சொல்கிறார்.. இந்த சூழ்நிலையில் கிஷோர் என்ன செய்தார்.? குடும்பத்தை கவனித்துக் கொண்டாரா அல்லது தன் திறமையை நிரூபித்து வெளியே வந்து வாழ்வில் உயர்ந்தாரா.? என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள்… G.Kishore Kumar – As Rajan Subatra Robert – As Vidya George…
Read MoreLockdown – விமர்சனம்
கதை… சார்லி – நிரோஷாவின் மகள் அனுபமா.. இவர் ஐடி கம்பெனியில் வேலை தேடி அலைகிறார்.. அப்போது ஒரு நாள் இரவு நேர பார்ட்டியில் கலந்து கொள்கிறார்.. அப்போது மது அருந்தியதால் நினைவில்லாமல் இருக்கிறார்.. அப்போது அவருக்கே தெரியாமல் ஒரு சம்பவம் நடந்து விடுகிறது.. இரண்டு மாதங்களுக்குப் பிறகு அவர் கர்ப்பம் என்பதை அறிந்து கொள்கிறார்.. வீட்டிற்கு தெரிந்தால் பிரச்சனையாகிவிடும்.. தன் கர்ப்பத்திற்கு யார் காரணம் என்று தெரியாத நிலையில் இவருக்கு ஒரு தோழி அபார்ஷன் செய்ய சொல்லி உதவுகிறார்.. அப்போது கொரோனா லாக்டவுன் அமலுக்கு வருகிறது.. இதனை அடுத்து அவர்கள் வெளியே செல்ல முடியாத சூழ்நிலை ஏற்படுகிறது.. கருவை கலைக்கவும் முடியாமல் வெளியே செல்லவும் முடியாமல் நாட்கள் கடந்து கொண்டிருக்க என்ன செய்தார் அனுபமா என்பது தான் மீதிக்கதை.. நடிகர்கள்… Anupama Parameswaran,…
Read Moreவங்காள விரிகுடா – திரைப்பட விமர்சனம்
கதை… தூத்துக்குடி மாவட்டத்தில் மிகப்பெரிய ஆள் அண்ணாச்சி (குகன் சக்கரவர்த்தியார்.) ஒரு பக்கம் நல்லவர் என்ற போர்வையில் இருந்தாலும் திரை மறைவாக பல கொலை சம்பவங்களை செய்பவர் இவர். இவரின் நண்பரின் மகளே இவரை கட்டிக் கொள்ள ஆசைப்பட கல்யாணம் செய்து கொள்கிறார்.. அதே சமயத்தில் இவரது முன்னாள் காதலியும் இவரை தேடி வருகிறார்.. ஆக இரண்டு மனைவிகளுடன் வாழும் இவருக்கு பல பிரச்சனைகள் வருகிறது.. அதாவது முன்னாள் காதலியின் கணவர் பேய் ரூபத்தில் மர்ப நபராக வருகிறார்.. அவர் யார்.? அந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்.? இவர் போட்ட வேஷம் கலைந்ததா என்பதெல்லாம் மீதிக்கதை.. நடிகர்கள் & தொழில்நுட்பக் கலைஞர்கள் குகன் சக்ரவர்த்தியார், அலினா ஷேக், வையாபுரி, பொன்னம்பலம், வாசு விக்ரம், டிப் லெனா, அலிஷா படத்தில் ஏகப்பட்ட துணை நட்சத்திரங்கள் இருந்தாலும்…
Read Moreதிரௌபதி 2 – விமர்சனம்
கதை… திருவண்ணாமலையை தலைநகராகக் கொண்ட பகுதியை ஆட்சி செய்கிறார் மன்னர் வல்லாளர் நட்டி நடராஜ்.. இவர் தீவிர சிவன் பக்தர்.. தென்னாடுடைய சிவனே போற்றி என்பதை அடிக்கடி உச்சரிப்பவர்.. இவருக்கு விசுவாசியான போர்படை தளபதி கருட படையைச் சேர்ந்தவர் ரிச்சர்ட் ரிஷி.. வீரசிம்ம காடவராயர்.. தளபதி நடவடிக்கை பிடித்து போனதால் அவருக்கு ஒரு பெண் பார்த்து திரௌபதியை (ரக்ஷனா) திருமணம் முடித்து வைக்கிறார்.. இந்த சூழ்நிலையில் வட இந்தியாவில் ஆட்சி செய்யும் இஸ்லாமியர்கள் தென்னிந்தியாவில் இருக்கும் இந்துக்களை மதம் மாற சொல்கின்றனர்.. கப்பம் கட்டு இல்லையேல் மதம் மாறு என்பதே அவர்களின் கொள்கையாக இருக்கிறது.. குழந்தைகள் முதல் பெண்கள் வரை அனைவரையும் பாலியல் பலாத்காரம் செய்கின்றனர். சிலரும் வேறு வழியின்றி மதம் மாறுகின்றனர்.. இந்த சூழ்நிலையில் மன்னரை இஸ்லாமிய மன்னர் கொலை செய்து விடுகிறார்..…
Read More