படையாண்ட மாவீரா – திரை விமர்சனம்

பாட்டாளி மக்கள் கட்சி எம் எல் ஏ காடுவெட்டி குருவின் வாழ்க்கையை திரை மொழியில் தந்திருக்கிறார்கள். ஒருவர் வாழ்வில் நடந்த நிகழ்வுகளை அப்படியே பதிவு செய்வது தான் வரலாறு. அப்படிப் பதிவு செய்யப்பட்டுள்ள ஒருவரின் வாழ்க்கை வரலாறு, அவரைப் பற்றி சரிவர அறிந்திராத மக்கள் கொண்டிருந்த எண்ணங்களை முழுசாக மாற்றுமா … மாற்றி இருக்கிறது இந்த படம் ‘ பாட்டாளி மக்கள் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் உட்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் காடுவெட்டி குரு. .தான் பிறந்த சமூகத்துக்காக மட்டுமின்றி பட்டியலின மக்களின் உரிமைக்காகவும் தீவிரமாகப் பாடுபட்டவர். கார்ப்பரேட் நிறுவனங்கள் சிமெண்ட் ஆலையை கொண்டு வருவதற்காக அரியலூர் பகுதி மக்களின் நிலங்களைப் பிடுங்கி, அவர்களை அடித்து துரத்த, அதற்கு நியாயம் கேட்கிறார். அரசு அதிகாரிகளின் அத்துமீறல்களை எதிர்த்து போராடுகிறார். சாராயக்கடையை திறந்தே தீருவேன் என்று அதிகாரத் தொனியில்…

Read More

KISS – திரை விமர்சனம்

நமது நாயகன் கவினுக்கு ஒரு விசேஷ பவர். எங்காவது காதல் ஜோடிகள் முத்தமிடுவதை பார்த்தாலே அவர்களின் பிந்தைய வாழ்க்கை எப்படி இருக்கும் என்பது மின்னலாக வந்து போகும். அதனால் காதல் என்றாலே அவரை யும் அறியாமல் ஒருவித பயம் வந்து விடுகிறது. ஒருவேளை நமக்குள்ளும் காதல் வந்துவிட்டால் நம் பிந்தைய கதை தெரிய வரும். அது விபரீதமாக இருந்து விட்டால் எஞ்சியுள்ள நாட்கள் நரகமாகிவிடும். அதனால் தேடி வந்த காதலையும் போ போ என்கிறார் ஆனால் இதையெல்லாம் | தாண்டி அவருக்குள் பூ பூக்கிறது காதல். ஒரு சந்தர்ப்பத்தில் காதலி நம் நாயகனுக்கு அன்பாய் ஒரு முத்தம் தர… இப்போது நாயகனின் பார்வையில் காதல் ஜோடிகளான இவர்களின் எதிர்காலம் கண்முன் வந்து போகிறது.அது மோசமான எதிர்காலத்தை காட்டுகிறது. இதனால் பயந்து போகும் நாயகன் காதலுக்கு டாட்டா காட்டி…

Read More

சக்தித் திருமகன் – திரை விமர்சனம்

தமிழ்நாட்டில் அரசியல் தரகராக இருக்கிறார் நாயகன் விஜய் ஆண்டனி. பணமிருந்தால் எல்லா வேலைகளையும் கச்சிதமாக முடித்துக் கொடுத்து விடுவார். வேலை வாங்கி தருவதாக லட்சங்களில் பணத்தை பெற்றுக் கொண்டு வேலை வாங்கி கொடுக்காமல் பணத்தை ஆட்டையை போடும் ஒருவர், அமைச்சருக்கே நெருக்கமானவராக இருந்தாலும் அவரும் விஜய் ஆண்டனிடம் சிக்கினால் கதை கந்தல் தான். அவரது அடுத்தடுத்த அணுகுமுறையில் ஓடோடி வந்து வாங்கிய பணத்தை திரும்ப ஒப்படைப்பார். இப்படி கிடைக்கிற கமிஷனில் சில பல சமூக சேவைகளையும் ஓசைப்படாமல் செய்து வருகிறார். இந்திய அளவில் இதே வேலையைச் செய்து அடுத்த குடியரசுத்தலைவர் இவர் தான் என்ற இடத்தில் இருக்கும் காதல் ஓவியம் கண்ணனுக்கும் ( ஒரிஜினல் பெயர் சுனில் கிருபாளினி) விஜய் ஆண்டனிக்கும் மோதல் ஏற்படுகிறது.. அது ஏன்? அதன் விளைவுகளென்ன? என்பதைச் சொல்லியிருப்பது தான் இந்த சக்தித்…

Read More

தண்ட காரண்யம் – திரை விமர்சனம்

நக்சல் பாரிகள் என்ற பெயரில் அப்பாவி இளைஞர்களை போலி என்கவுண்டரில் அதிகார வர்க்கம் போட்டுத்தள்ளிய கதை. உண்மை சம்பவத்தை அதன் உணர்வுக்கு கொஞ்சமும் குறையாத விதத்தில் தந்திருக்கிறார்கள். எளிய மக்களின் உயிரை கிள்ளுக்கீரையாக நினைத்து அதிகார வர்க்கம் போடும் ஆட்டத்தைத் தோலுரித்துக் காட்டுவதே இந்த ’தண்டகாரண்யம்.’ கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழுவப்பட்டு என்ற கிராமத்தில் பழங்குடியின மக்கள் வாழ்ந்து வருகிறார்கள் . அந்த ஊரைச் சேர்ந்த ஒரு குடும்பத்தின் அண்ணன் தம்பிகள் தினேஷ், கலையரசன். கலையரசன் வனத்துறையில் தற்காலிகமாக வேலை பார்த்து வருகிறார்..உள்ளூர்ப் பெண் பிரியாவோடு காதலும் உள்ளது. வேலை நிரந்தரமானதும் திருமணம் என்ற கனவோடு காதலர்கள் காத்திருக்க.,. நடந்தது வேறு. அண்ணன் தினேஷால் ஒரு பிரச்சினை ஏற்பட, அதுவே தம்பியின் வேலை இழப்புக்கு காரணமாகிறது. இந்த நேரத்தில் கலையரசன் ராணுவத்தில் சேரலாம் என்று ஒருவர் வழிகாட்ட இருந்த…

Read More

தணல் – திரை விமர்சனம்

காவல்துறையில் புதிதாக காவலர்களாக சேரும் நாயகன் அதர்வா உள்ளிட்ட 6 பேர் அன்று இரவே ரோந்து பணிக்கு அனுப்பப் படுகிறார்கள். அப்போது சாலையில் உள்ள கழிவுநீர் சுரங்கத்தில் இருந்து ஒருவர் வெளியேறுவதை பார்த்து அவரிடம் விசாரிக்க முயல… அந்த நபர் தப்பித்து ஓட… அவரை துரத்தியபடி ஓடும் ஆறு பேரும், ஆள் நடமாட்டம் இல்லாத குடிசைப்பகுதிக்குள் வசமாக சிக்கிக் கொள்கிறார்கள். அப்போது தான் அவர்கள் திட்டமிட்டு கடத்தப்பட்டு இருப்பது தெரிய வர,. அங்கு அஸ்வின் தலைமையிலான ஒரு குழுவினர் மிகப்பெரிய சதிதிட்டத்தை செயல்படுத்தும் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள். காவலர்கள் 6 பேரும் அவர்களை விசாரிக்க முயற்சிக்க, அஸ்வின் தனித்தனியாக சிக்கும் 3 காவலர்களை கொன்று விடுகிறார். அவர்களிடம் இருந்து நாயகன் அதர்வா உள்ளிட்ட மற்ற காவலர்கள் தப்பிக்க முடியாமல் சிக்கிக் கொள்கிறார்கள். காவலர்கள் அங்கிருந்து தப்பித்தார்களா?, அஸ்வின்…

Read More

பிளாக் மெயில் – திரைப்பட விமர்சனம்

ஒரு குழந்தை கடத்தல் தான் கதையின் கரு. அதை சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் வேகத்தில் தந்திருக்கிறார்கள். ஸ்ரீகாந்த்-பிந்து மாதவி தம்பதிகளின் பெண் குழந்தை கடத்தப் பட்டதிலிருந்து படத்தை தொடங்குகிறார்கள். இன்னொரு புறம் கொரியர் கம்பெனி ஒன்றில் வேலை பார்க்கும் நாயகன் ஜி.வி.பிரகாஷ் தனது பாஸ் கொடுத்த பார்சல் ஒன்றை உரியவரிடம் சேர்க்கப் போகும் இடத்தில் திருடர்களிடம் பார்சலோடு சேர்த்து வேனையும் பறி கொடுக்கிறார். அந்த பார்சலில் விலையுயர்ந்த போதைப்பொருள் இருந்ததை ஜிவி தான் திருடியிருக்க வேண்டும் என சந்தேகப்படும் உரிமையாளர், ஜிவியின் காதலியை கடத்துகிறார். பார்சலை கொடுத்துவிட்டு காதலியை மீட்டுப் போ என்கிறார். அந்தக் குழந்தையைக் கடத்தியது யார்? கடத்தப்பட்ட குழந்தை ஜிவியுடன் எந்த விதத்தில் சம்பந்தப்படுகிறது? ஜிவி தன் காதலியை மீட்டாரா? கேள்விகளுக்கு விடை அதிரடி திருப்பங்களுடன் கூடிய சஸ்பென்ஸ் கதை. இரவுக்கு ஆயிரம் கண்கள்,…

Read More

உருட்டு உருட்டு – திரை விமர்சனம்

நாயகன் கஜேஷ் நாகேஷ் வேலை வெட்டி இல்லாமல் இருப்பவர். அவரையும் ஒரு பெண் விரும்புகிறாள். காதல் கிடைத்த பிறகு காதல் போதை தானே வரவேண்டும் ஆனால் நாயகனுக்கு மது போதை தான் முன்நிற்கிறது. காதல் நாயகி ரித்விகா ஸ்ரேயாவுக்கு காதலரின் குடிப் பழக்கம் கவலை தர, காதலனை திருத்த முயற்சி எடுக்கிறார். ஆனால், நாயகனோ குடிபோதையில் இன்னும் தீவிரமாகிறார். போதை இறங்குவதற்குள் மறுபடியும் குடித்துக் குடித்து காதலியை எரிச்சல் படுத்துகிறார். இதற்கிடையில் தன் அழகால் நாயகனை வசீகரிக்க நாயகி பல முயற்சிகள் செய்தாலும், மாது போதையை மது போதை வென்று விட… அதை தனக்கு நேர்ந்த மிகப்பெரிய அவமானமாக கருதுகிறார் நாயகி. இந்நிலையில் காதலனை வெளியூரில் உள்ள தன் மாமா வீட்டுக்கு அழைத்து செல் கிறார். அங்கும் காதலன் குடியை விடுவதாக இல்லை. இதனால் காதலனை மதுவிடம்…

Read More

மிராய் – திரை விமர்சனம்

மாயாஜாலக் கதைகள் எப் போதுமே ரசிகர்களின் கொண்டாட்டம் ஆகிவிடும். இந்த கொண்டாட்டத்தில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இருப்பார்கள். இப்படியான ஒரு கதையை வரலாற்று பின்னணியும் புராணமும் இணைத்து சொன்னால் அது காவியம். அப்படி ஒரு காவியம் இந்த மிராய்.  கதை சமகாலத்தில் நடக்கிறது. பேரரசர் அசோகன் சாகாவரம் பெறக்கூடிய ரகசியத்தை 9 புத்தகங்களில் மறைத்து வைக்கிறார். தீயசக்திகள் இந்த 9 புத்தகங்களைக் கைபற்றாமல் இருக்க 9 வீரர்களையும் நியமிக்கிறார்.பல ஆயிரம் ஆண்டுகளுக்குப் பின்,தற்போதைய நவீன காலகட்டத்தில், மந்திர சக்திகள் மூலம் உலகை ஆட்டிப்படைக்க நினைக்கும் மனோஜ் மஞ்சு இந்த 9 புத்தகங்களை அடைய முயல்கிறார். மிராய் என்ற அதீத சக்தி படைத்த கோள் உதவியுடன் மனோஜின் முயற்சியை முறியடிக்க நாயகன் தேஜா சஜ்ஜா புறப்படுகிறார். சர்வ சக்தியும் ஒன்றிணைந்த வில்லனை தெய்வ சக்தி துணையுடன் போரில்…

Read More

குமார சம்பவம் – திரை விமர்சனம்

சினிமாவில் இயக்குநராக வேண்டும் என்ற கனவுடன் இருக்கும் நாயகனுக்கு அந்த முயற்சி கைகூடி வரும் நேரத்தில் எதிர்பாராத சோதனை. தாத்தாவின் நண்பராக அந்த வீட்டில் பல வருடம் இருந்து வந்த சமூக சேவகர் திடீர் மரணம் அடைகிறார்.அது இயற்கை மரணமா அல்லது கொலையா? என்று போலீஸ் விசாரிக்க தொடங்குகிறது. முதல் கட்டமாக காவல் துறையின் பார்வை நாயகன் பக்கம் திரும்புகிறது. போலீசின் சந்தேகப் பார்வையிலிருந்து தப்பிக்க சில தடாலடி முயற்சிகள் மேற்கொள்கிறார் நாயகன். அந்த சமூக சேவகரின் விரோதிகள் யார்? அவரால் பாதிக்கப்பட்ட யார் அவரை கொல்லும் அளவுக்கு போயிருப்பார்கள்? என்று தனது நண்பர்களுடன் சேர்ந்து துப்பறிகிறார். இந்த முயற்சியில் அவர் கொலையாளியை கண்டுபிடித்தாரா?அவர் நினைத்தபடி இயக்குநர் ஆனாரா? கேள்விகளுக்கான விடை எதிர்பாராத கிளைமாக்ஸ். பாண்டியன் ஸ்டோர்ஸ் தொலைக்காட்சி தொடர் மூலம் புகழ் பெற்ற குமரனுக்கு சினிமாவில்…

Read More

காயல் – திரை விமர்சனம்

காயல் என்பது கடல் சார்ந்த இடம். கடலையும் ஒரு கதாபாத்திரமாக்கி ஒரு காதல் கதைக்கு வடிவம் கொடுத்து இருக்கிறார் இயக்குனர் தமயந்தி. கடல் சார்ந்த ஆராய்ச்சியில் இருக்கும் நாயகன் லிங்கேஷ் தாழ்த்தப்பட்ட சமுதாயத்தைச் சேர்ந்தவர். அவருக்கும் உயர்சாதி நாயகி காயத்ரிக்கும் காதல். காதலன் பெற்றோரை இழந்தவன் என்பதால் அவன் பக்கம் ரூட் கிளியர். ஆனால் காதலி தரப்பிலோ தந்தை சம்மதம் தர, தாய் மட்டும் பிடிவாதம் காட்டுகிறார். தாயை கன்வின்ஸ் பண்ண மகள் எவ்வளவோ முயன்றும் பலன் இல்லாமல் போக, வேறு வழியின்றி மகள் தற்கொலை முடிவை எடுத்து விடுகிறாள். இதன்பின்பு எதிர்ப்பு தெரிவித்த அந்தத் தாயின் நிலை என்ன? போலீஸ் உயர் அதிகாரியான தந்தையின் நிலை என்ன? அந்தக் காதலன், தனது காதலியின் மரணத்தை எப்படி எடுத்துக் கொண்டான் என்பதை உளவியல் ரீதியாகவும் உணர்வு பூர்வமாகவும்…

Read More