காதல் என்பது உயிரியல் மற்றும் வேதியியல் கலவையை தவிர வேறு ஏதும் இல்லை என்று நம்புகிற விஞ்ஞான ஆர்வலர் சோபியா, தனது கல்வி அனுபவத்தில் ஒரு காதல் மீட்டரை கண்டுபிடிக்கிறார். உருகி உருகி காதலிக்கிறோம் என்று சொல்லும் காதல் ஜோடிகள் கூட இந்தக் காதல் மீட்டரில் கை வைத்து பரிசோதிக்க பயப்படுகிறார்கள். அவர்களே பலரது காதல் உண்மையாக இல்லாது இருப்பதே இதற்கு காரணம்.
இந்நிலையில் விஞ்ஞானமும் உணர்வுகளும் வேறு வேறு. இயற்கையான காதலை கண்டுபிடிக்க செயற்கையான மெஷின் எதற்கு என்கிறான், வழிப்போக்கனில் தொடங்கி தற்போது நண்பன் வரை வந்துவிட்ட நாயகன்.
நாயகி சோபியாவுக்கு
இதில் நம்பிக்கை இல்லை. நேசித்து மணந்த பெற்றோர் தற்போது பிரிந்து போனதில் அம்மாவை ஒரேடியாக இழந்தவள் அவள். அதனால் காதலை சொல்ல வரும் நாயகனுக்கும் அவள் சில டெஸ்ட் வைக்கிறாள். அந்தத் தேர்வில் அவன் தேறினானா… காதலை கண்டுபிடிக்கும் மிஷினுக்கு அதன் பிறகு வேலை இருந்ததா என்பது மொத்த கதையின் சாராம்சம்.
நடிப்பில் ஹார்ட் பீட் மீட்டரை விட அதிகமாக ஏறி அடிப்பது சோபியாவாக வரும் பாடினி குமார் தான். தனக்குள் மெல்ல மெல்ல காதல் ஊடுருவுவதை மறைக்கும் விதமான அவரது நடவடிக்கைகள் ஒவ்வொன்றும் நடிப்பின் அக்மார்க் ரகம். அன்பான பெற்றோரின் பிரிவு தன்னை எப்படி வேதனைப்படுத்தினது என்பதையும் தாய் தற்கொலை செய்து கொண்டதையும் அவர் நாயகனிடம் கூறும் போது நமக்கே இதயத்தின் லப் டப் எகிறுகிறது. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகையாக சீக்கிரமே தனது நடிப்பு எல்லையை வியாபித்து விடுவார் இந்த பாடினி குமார்.
நாயகனாக குரு லட்சுமணன். நடிப்பில் பல காட்சிகளில் அவரது ரியாக்ஷனை தேட வேண்டியிருக்கிறது.
எழுதி இயக்கி இருக்கிறார் சதாசிவம் செந்தில் ராஜன்.
இந்த இணைய தொடரை டிசம்பர் 16ஆம் தேதி முதல்
ZEE 5 வெப் தளத்தில் காணலாம்.
