கதை… சித்தப்பாக்களின் பணத்தாசை வெறியால் தன் குடும்பத்தை இழந்து தவிக்கிறார் நாயகன் வெற்றி.. பின்னர் இவரது அப்பாவின் நண்பர் உதவியுடன் சென்னைக்கு சென்று ஒரு மேன்ஷனில் தங்குகிறார்.. ஆனால் அங்கே தங்க மனமில்லாமல் காசிக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கே பல வருடங்களை கழிக்கும் அவர் ஆன்மீகத்திலும் ஆர்வமில்லாமல் தாத்தாவின் சொல்படி எழுத்து உலகிற்கு திரும்புகிறார். அங்கு ஜெர்மனி நாட்டைச் சேர்ந்த பெண்ணை சந்தித்து அவருடன் காதல் கொள்கிறார்.. அந்தப் பெண்தான் இனி தன் வாழ்க்கை என்று காதல் வாழ்க்கையில் திளைக்கும் இவர் திடீரென காதலின் மரணத்தால் குழம்பி தவிக்கிறார். அதன் பிறகு இவர் என்ன செய்தார்..? குடும்ப அதன் பிறகு இவரது பாதை ஆன்மீக பாதையா? குடும்ப வாழ்க்கையா? எழுத்து உலகமா? என்பதெல்லாம் மீதிக்கதை. நடிகர்கள்… கமர்சியல் ஆக்சன் என பாதைகளை தேர்ந்தெடுக்காமல் படத்திற்கு படம் வித்தியாசமான…
Read MoreCategory: விமர்சனம்
ராக்கெட் டிரைவர் விமர்சனம்… ஆட்டோவில் அப்துல் கலாம்
கதை… நாயகன் விஷ்வத் ஒரு ஆட்டோ டிரைவர்.. ஆனாலும் இவர் விஞ்ஞானியாக ஆசைப்பட்டு வறுமையின் காரணமாக அது முடியாமல் போகவே ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். டிராபிக் போலீஸ் நாயகி சுனைனா.. கண்டிப்பான காவல்துறை அதிகாரியாக இல்லாமல் கருணை உள்ள கொண்ட நாயகியாக நாயகனுக்கு உறுதுணையாக இருந்து வருகிறார். ஒருநாள் விஷ்வத் ஆட்டோவில் சவாரி செய்ய இளவயது அப்துல் கலாம் வருகிறார்.. இதனால் அவருக்கு சந்தேகம் வரும் நிலையில் ஒரு கட்டத்தில் அப்துல் கலாம் தான் டைம் ட்ராவல் செய்து தற்போது தன் ஆட்டோவில் சவாரி செய்ய வருகிறார் என்பதை உணர்ந்து கொள்கிறார். ஆனால் அப்துல் கலாம் டைம் ட்ராவல் செய்ய வந்த நோக்கம் என்ன என்பது புரியாமல் குழம்பி நிற்கிறார். தான் டைம் ட்ராவல் செய்து இந்த காலகட்டத்திற்கு வந்த நோக்கம் என்ன?என்பதை அறிய…
Read More