சார் – திரைப்பட விமர்சனம் – மதிப்பீடு : 3/5

சிறந்த குணச்சித்திர நடிகராக புகழ்பெற்ற நடிகர் போஸ் வெங்கட் ‘கன்னி மாடம்’ எனும் படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானார். அவரது இயக்கத்தில் உருவாகி இருக்கும் இரண்டாவது திரைப்படமான ‘சார்’ அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்திருக்கிறதா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம். மாங்கொல்லை எனும் கிராமப் பகுதியில் 1950- 60 -80 ஆகிய காலகட்டங்களில் அங்குள்ள அரசாங்க பள்ளி ஒன்றின் பின்னணியில் கல்வியின் அவசியம் குறித்து பேசும் படமாக ‘சார்’ உருவாகி இருக்கிறது. கோலோச்சு குடும்பம் எனும் குடும்பம் மாங்கொல்லை பகுதியில் ஆதிக்கம் செலுத்துகிறது. அந்த குடும்பத்தில் மூத்த உறுப்பினராக எழுத்தாளர் ஜெயபாலன் இருக்கிறார். இவர் சாமியாடி. அங்கு வாழும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி அறிவை தருவதற்காக ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் அண்ணாதுரை என்பவர் ஆர்வம் காட்டுகிறார். இதற்காக ஒடுக்கப்பட்ட மக்களும் ஆதரவு தெரிவித்து பள்ளி கட்டிடத்திற்கான நிலத்தை…

Read More

ஆர்யமாலா – திரைப்பட விமர்சனம்

கூத்துக் கலையை முன்னிலைப்படுத்தி தமிழ் சினிமாவில் தற்போது ஏராளமான படைப்புகள் வருகை தந்து.. ரசிகர்களை பரவசப்படுத்துகிறது. அந்த வகையில் தெருக்கூத்தினை மையப்படுத்தி தயாராகி இருக்கும் இந்த ஆர்யமாலா எனும் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து பார்ப்போம். இந்தக் கதை 1982 ஆம் ஆண்டில் நடு நாடு எனப்படும் கடலூர் சுற்றுப்புற பகுதியில் நடந்த உண்மை சம்பவத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட கதை. கதைப்படி கிராமத்தில் வாழும் தம்பதியருக்கு இரண்டு மகள்கள். இதில் மூத்தவள் மனிஷா ஜித். இவளுக்கு தங்கை ஒருவர் இருக்கிறார். மனிஷா பருவ வயதை கடந்த பின்னரும் பூப்படையாமல் இருக்கிறார். இவருடைய தங்கை ஒரு நாள் வயதுக்கு வந்து விடுகிறார். இது மனிஷாவிற்கு சந்தோஷத்தை அளிக்காமல் வருத்தத்தை அளிக்கிறது. ஊர் மக்கள் அனைவரும் மனிஷாவையும், அவரது தாயையும் மறைமுகமாக குறை கூறுகிறார்கள். வயதுக்கு வந்த…

Read More