நந்தன் இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா

Era Entertainment தயாரிப்பில், Trident Arts ரவீந்திரன் வெளியிடும், இயக்குநர் இரா சரவணன் இயக்கத்தில், சசிகுமார் நடிப்பில் மாறுபட்ட களத்தில், மக்களின் அடிப்படை அரசியலை பேசும் சமூக அக்கறை மிக்க படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் நந்தன். எதிர்வரும் இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் இப்படத்தின் டிரெய்லர் மற்றும் இசை வெளியீட்டு விழா இன்று படக்குழுவினர் கலந்துகொள்ள பத்திரிக்கை- ஊடக -பண்பலை- நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … ஒளிப்பதிவாளர் சரண் பேசியதாவது… முதலில் இந்த திரைப்படத்தில் பணிபுரிய அழைத்த, நண்பர், இயக்குநர் சரவணன் அவர்களுக்கு, நன்றி. இதற்கு முன் ‘கிடாயின் கருணை மனு’, ‘விழித்திரு’ திரைப்படங்களில் மட்டுமே பணியாற்றி இருந்தேன். அதைப் பார்த்துவிட்டு, என்னை அழைத்து இந்தப் படத்தில் பணியாற்றும் வாய்ப்பபை அளித்தார். அவருக்கு என் நன்றிகள். நடிகர் சசிகுமார் எனக்கு மிகவும்…

Read More

சிபி சக்ரவர்த்தி – ஸ்ரீ வர்ஷினி சிபி திருமணத்திற்கு பின் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர்!

எஸ்.கே. புரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் வெளிவந்த ‘டான்’ படம் மூலம் இயக்குநராக அறிமுகமான சிபி சக்ரவர்த்திக்கும் இன்ஃபோசிஸ் நிறுவனத்தில் சாஃப்ட்வேர் இன்ஜினியராக பணிபுரியும் ஸ்ரீ வர்ஷினிக்கும் இந்த மாதம் ஐந்தாம் தேதி ஈரோட்டில் திருமணம் இனிதே நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டு புதுமணத் தம்பதிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்தனர். திருமணத்திற்குப் பின் சிபி சக்கரவர்த்தியும் அவரது மனைவி ஸ்ரீ வர்ஷினி சிபியும் இன்று மதியம் பத்திரிக்கையாளர்களை சந்தித்தனர். ‘டான்’ படத்திற்கு பத்திரிக்கையாளர்கள் கொடுத்த ஆதரவிற்கு நன்றி தெரிவித்த சிபி, அடுத்த படத்திற்கும் பத்திரிக்கையாளர்கள் மற்றும் ரசிகர்கள் ஆதரவு தேவை என்றார். வெளியூரில் திருமணம் நடந்ததால் யாரையும் அழைக்க முடியவில்லை என்பதற்காகவே இந்த சந்திப்பு என்றார்.

Read More

நடிகர் ஏகன் மற்றும் யோகிபாபு நடிக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ இசை வெளியீட்டு விழா

விஷன் சினிமா ஹவுஸ் பட நிறுவனம் சார்பில் டாக்டர் பி அருளானந்து மற்றும் மேத்யூ அருளானந்து தயாரிப்பில் தேசிய விருது பெற்ற படைப்பாளி சீனு ராமசாமி இயக்கத்தில் அறிமுக நாயகன் ஏகன் நடித்திருக்கும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ திரைப்படத்தின் இசை வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. சீனு ராமசாமி இயக்கத்தில் உருவாகி, இருபதாம் தேதியன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகும் ‘கோழிப்பண்ணை செல்லத்துரை’ படத்தில் ஏகன், யோகி பாபு, பிரிகிடா, சத்ய தேவி, பவா செல்லத்துரை, லியோ சிவகுமார், ‘குட்டி புலி’ தினேஷ் , மானஸ்வி கொட்டாச்சி, ரியாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். அசோக் ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு என். ஆர். ரகுநந்தன் இசையமைத்திருக்கிறார்.‌ தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் ஃபேக்டரி சார்பில் பிரபல விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடும் இத்திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில்…

Read More

நன்கொடை வழங்குவதற்காக அம்மா அனாதை இல்லத்திற்கு நேரில் சென்ற, சாய் துர்கா தேஜ் !!

சுப்ரீம் ஹீரோ சாய் துர்கா தேஜ், அவரது மாமா, ஆந்திரப் பிரதேச துணை முதல்வர் பவன் கல்யாண் போலவே சமூக அக்கறை மிக்க உதவிகள் வழங்குவதில் பெயர் பெற்றவர். இரு தெலுங்கு மாநிலங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நிவாரணப் பணிகளில் சாய் துர்கா தேஜ் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்து வருகிறார். ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு தலா ரூ. 10 லட்சம், என மொத்தம் ரூ.20 லட்சத்தை அவர் வழங்கியுள்ளார், கூடுதலாக, அவர் மேலும் ஐந்து லட்சங்களை அம்மா அறக்கட்டளை மற்றும் பிற அமைப்புகளுக்கு நன்கொடையாக வழங்கியுள்ளார். அவர் உறுதியளித்த தொகையை நன்கொடையாக வழங்க விஜயவாடாவிற்கு நேரில் வருகை தந்தது, அவரது கருணை மனதை காட்டுவதாக, ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர். விஜயவாடாவை பாதித்த சமீபத்திய வெள்ளத்தைத் தொடர்ந்து, சாய் துர்கா தேஜ் தனது துர்கா…

Read More

“கடைசி உலகப்போர்” திரைப்பட   முன் வெளியீட்டு நிகழ்ச்சி!!

ஹிப்ஹாப் தமிழா என்டர்டெயின்மென்ட் சார்பில், ஹிப்ஹாப் தமிழா ஆதி எழுதி, தயாரித்து, இயக்கி இசையமைத்திருக்கும் புதிய திரைப்படம் “கடைசி உலகப்போர்”.  மாறுபட்ட களத்தில் போரின் கொடுமைகளைப் பேசும் அழுத்தமிகு படைப்பாக உருவாகியுள்ளது இப்படம். ராப் பாடகராக அறிமுகமாகி மக்கள் மனதில் இடம்பிடித்து, இசையமைப்பாளராக, நடிகராக, இயக்குநராகப் புகழ் பெற்றிருக்கும் ஹிப் ஹாப் தமிழா ஆதி இப்படம் மூலம் தயாரிப்பாளராக அறிமுகமாகிறார். இப்படம் வரும் செப்டம்பர் 20 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் முன் வெளியீட்டு நிகழ்ச்சி, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் நடைபெற்றது. இந்நிகழ்வினில்… இயக்குநர் சுந்தர் சி பேசியதாவது… என்னோட மகள் கல்லூரியில் புதிதாக அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்கிறார், அதை என் மனைவி வீடியோ எடுத்து அனுப்பி வைத்தார். அதைப்பார்த்த போது, எனக்குக் கண்ணீர் வந்தது. அதே…

Read More

நடிகர் ஷபீர் கல்லரக்கல் பகிர்ந்த அனுபவம் -நடுக்கடலில் படமாக்கப்பட்ட ‘கொண்டல்’!

‘சார்பட்டா பரம்பரை’ படத்தில் ‘டான்ஸிங் ரோஸா’க பலரது கவனத்தை ஈர்த்தவர் நடிகர் ஷபீர் கல்லரக்கல். அதன்பிறகு துல்கர் சல்மானின் ‘கிங் ஆஃப் கோத்தா’ மற்றும் கடந்த ஆண்டு தெலுங்கில் வெளியான நடிகர் நாகர்ஜூனாவின் ‘நா சாமி ரங்கா’ ஆகிய ஹிட் படங்களிலும் ஷபீர் தனது கலக்கலான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். தென்னிந்தியாவின் மிக முக்கிய நட்சத்திர நடிகர்களான பெப்பே, ராஜ் பி ஷெட்டி மற்றும் பலர் நடிக்கும் ‘கொண்டல்’ என்ற மலையாளத் திரைப்படத்தில் நடிகர் ஷபீர் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கிட்டத்தட்ட 80% நடுக்கடலில் படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தில் பணிபுரிந்த அனுபவத்தைப் பகிர்ந்து கொண்ட ஷபீர், “இந்தப் படம் சவாலாகவும் அதே சமயம் ஆச்சரியமாகவும் இருந்தது. தினமும் காலையில், நாங்கள் நடுக்கடலுக்குப் புறப்படுவோம். அது கிட்டத்தட்ட ஒன்றரை மணிநேரம் எடுக்கும். படகில் படப்பிடிப்பு முடித்துவிட்டு மதிய…

Read More

நடிகர் ராணாவின் ஸ்பிரிட் மீடியா மற்றும் நடிகர் துல்கரின் வேஃபேரர் (Wayfarer) இணைந்து தயாரிக்கும் ‘காந்தா’ படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது!

நடிகர் துல்கர் சல்மானின் வேஃபேரர் பிலிம்ஸுடன் இணைந்து 60 வருடங்கள் பாரம்பரியம் மிக்க சுரேஷ் புரொடக்ஷன்ஸின் ஒரு அங்கமான ராணா டகுபதியின் ஸ்பிரிட் மீடியா தனது முதல் அறிமுகப் படமான ‘காந்தா’ படப்பிடிப்பைத் தொடங்கியுள்ளது. செல்வமணி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர்கள் துல்கர் சல்மான், பாக்யஸ்ரீ மற்றும் சமுத்திரக்கனி ஆகியோர் நடிக்கும் இந்தப் படம் ஸ்பிரிட் மீடியாவின் சினிமா தொடக்கத்திற்கு அற்புதமான விஷயம் எனப் படக்குழு மகிழ்ச்சி தெரிவித்துள்ளது. படம் பற்றி நடிகர்- தயாரிப்பாளர் ராணா டகுபதி தெரிவித்திருப்பதாவது, “’காந்தா’வுக்காக வேஃபேரர் ஃபிலிம்ஸுடன் இணைந்திருப்பது இந்தத் படத்திற்கு ஒரு புதிய பரிமாணத்தை சேர்க்கிறது. தரமான சினிமாவுக்கான அவர்களின் அர்ப்பணிப்பு, ஸ்பிரிட் மீடியாவில் எங்களின் பார்வையுடன் சரியாக ஒத்துப்போகிறது. சுரேஷ் புரொடக்ஷன்ஸின் 60வது ஆண்டு நிறைவைக் கொண்டாடவும், ஸ்பிரிட் மீடியாவுடன் ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கத்தைக் குறிக்கவும் சிறந்த படமாக…

Read More

ஆந்திர வெள்ளம்: ரூ.1 கோடி நன்கொடை கொடுத்த நடிகர் அல்லு அர்ஜூன்!

ஆந்திராவில் பெய்து வரும் கனமழையால் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவும் வகையில் நடிகர் அல்லு அர்ஜுன் ரூ. 1 கோடி நன்கொடை வழங்கி இருக்கிறார். ஆந்திரா, தெலங்கானா மாநிலங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளத்தால் வீடுகள் மற்றும் உடைமகளை இழந்தவர்களுக்கு உதவ ரூ. 1 கோடி வழங்கியுள்ளார். வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள துயரங்களுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்த அவர், இந்த சூழ்நிலையில் இருந்து மக்கள் விரைவில் மீண்டு வர வேண்டும் என்றார். ”ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட இழப்பு மற்றும் துன்பம் குறித்து நான் வருத்தமடைகிறேன். இந்த சவாலான நேரத்தில், நிவாரணப் பணிகளுக்கு ஆதரவாக இரு மாநில முதல்வர்களின் நிவாரண நிதிக்கு மொத்தம் ரூ. 1 கோடி நன்கொடையாக வழங்குகிறேன். அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்கிறேன். ஒவ்வொருவரின் பாதுகாப்புக்காகவும் நான் இறைவனிடம் வேண்டுக் கொள்கிறேன்” என்று அல்லு அர்ஜுன்…

Read More

நாடக கலை வளரும், வளர்ந்து கொண்டே இருக்கும் – நடிகர் சமுத்திரக்கனி

   விஜய் நடிப்பில் வெளியான நண்பன் படத்தில் ஜீவாவின் சகோதரியாகவும், கடல் படத்தில் கவுதம் கார்த்திக்கின் சிறு வயது தாயாகவும் நடித்து கவனம் பெற்றவர் தேவி. இவர் தேவிரிக்ஷா என்ற பெயரில் நடிப்பு பயிற்சி பள்ளி நடத்தி வருகிறார். இந்த பள்ளியின் 15 ஆவது ஆண்டு நாடக திருவிழா சென்னையில் நடைபெற்றது. இரண்டு நாட்கள் நடைபெற்ற இந்த திருவிழாவில் சிறப்பு நாடகம், துடும்பாட்டம், கதை சொல்லி மற்றும் பல நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் நாடகத்துறை மற்றும் திரைத்துறை சார்ந்த பிரபலங்கள் கலந்து கொண்டனர். திருவிழாவின் இறுதி நிகழ்ச்சியில் இயக்குநர்கள் சேரன், சமுத்திரக்கனி, நடிகர் சௌந்தரராஜா, பட்டிமன்ற பேச்சாளர் திண்டுக்கல் ஐ லியோனி மற்றும் மறைந்த விஜே ஆனந்த கண்ணன் மனைவி ராணி கண்ணா ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். நடிகர், இயக்குநர் சேரன் பேசும் போது, “எல்லோருக்கும்…

Read More

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்!!

பவர் ஸ்டார் கதாநாயகனாக நடிக்கும் படம் முன்தினம், இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று நடிகர்கள் விமல் மற்றும் நமோ நாராயணா வெளியிட பவர் ஸ்டார் அதை பெற்றுக்கொண்டார். இப்படத்தை விழுப்புரத்தை சேர்ந்த மருத்துவர் லோகநாதன் என்பவர் எல். வி. கிரேஷன்ஸ் என்ற நிறுவனம் சார்பில் தயாரித்து இயக்குகிறார். இந்த படத்தில் இயக்குனர் வேலு பிரபாகரன், சங்கர் கணேஷ் மற்றும் ராம் ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. அது மற்றும் இன்றி இப்படத்தில் யுவராஜ், ஷமிதா , சாவித்ரி, நெல்லை பெருமாள் , சித்திக் பாஷா, சில்வெஸ்டர் சிம்பு மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். இந்த படத்திற்கு இசை அமைத்தது இசை அமைப்பாளர் ஜீவாவர்ஷினி ஆவார். இந்த படத்தை 2S என்டேர்டைன்மெண்ட் சார்பில் திரு எஸ்.வினோத் குமார் அவர்கள் வெளியிடவுள்ளார்.

Read More