ஜவான், பிகில், மெர்சல் போன்ற வெற்றிப் படைப்புகளைத் தந்த ப்ளாக்பஸ்டர் இயக்குநர் அட்லீ, தற்போது மிகப்பெரிய விளம்பர காம்பெயினாக உருவான சிங்க்ஸ் தேசி சைனீஸ் நிறுவனத்தின் “ஏஜெண்ட் ஜிங் அட்டாக்ஸ்” என்ற விளம்பரபடத்தின் மூலம் தனது விளம்பர அறிமுகத்தை நிகழ்த்தியுள்ளார். இந்த விளம்பரத்தில் சிங்ஸ் மாஸ்காட்டாக தோன்றியிருக்கும் ரன்வீர் சிங், முன்னணி நட்சத்திரங்களான ஸ்ரீலீலா மற்றும் பாபி தியோல் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார். இயக்குநர் அட்லியின் பிரத்தியேகமான ஸ்டைலில் பிரமாண்டம், இதுவரை காணாத விஷுவல் எபெக்ட்ஸ், அதிரடி காட்சிகள் என அனைத்தும் கலந்த இந்தப் படைப்பை, ஒரு சிறந்த குழு இணைந்து, இணையத்ததையே வைரலாக கலக்கும் அளவுக்கு உருவாக்கியுள்ளது! இது குறித்து இயக்குநர் அட்லீ கூறுகையில்.., “அன்பு தான் என் படைப்புகளின் அடிநாதம். சிங்ஸ் இந்தியாவில் எல்லோரும் பார்க்க வேண்டுமென ஒரு விசயத்தை உருவாக்க விரும்பவில்லை, இந்திய…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் சுவாரஸ்யம்
தமிழ்த்திரைப்பட பத்திரிகையாளர் சங்க தீபாவளி மலர் வெளியீட்டு விழா,வழக்கம்போல் சென்னை பிரசாத் லேப்பில் சிறப்பாக நடந்தது. 2025ம் ஆண்டு சங்க தீபாவளி மலர் வெளியீட்டுவிழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன்(தொழிலாளர் நலன், திறன்மேம்பாட்டுதுறை), பூச்சி.எஸ்.முருகன்( தமிழ்நாடு வீட்டுவசதிவாரியதலைவர், நடிகர் சங்க துணைத்தலைவர்) மற்றும் நா.இளங்கோவன் (அசிஸ்டென்ட் கமிஷனர் ஆப் போலீஸ், ஆவடி), தேசியவிருது பெற்ற நடிகர் எம்.எஸ்.பாஸ்கர், கடலோரகவிதைகள் ரேகா, தயாரிப்பாளர் கே.சம்பத்குமார்(எஸ்.கே.பிக்சர்ஸ்) ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். மேலும் விழாவில் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் தங்கள் குடும்பத்துடன் மகிழ்ச்சியுடன் கலந்துகொண்டனர். விழாவில் மாண்புமிகு அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில்‘, முதல்வர், துணைமுதல்வர் ஆகியோருக்கு நன்றியும், வணக்கமும். அண்ணன் சகோதரர் பூச்சிமுருகன் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ள வேண்டும் என்றார். அவர் மீது மிகுந்த மதிப்பு வைத்துள்ளேன்.அவர் தமிழ்நாட்டின் முதலமைச்சரின் உள்ளத்தில் தனிஇடம் பெற்றுருக்கிறார். அவர் ஒரு மாமனிதர்.அரசு அதிகாரிகள், கட்சி…
Read Moreஉலக சாதனை படைத்த “ஆண் பாவம் பொல்லாதது”
டிரம்ஸ்டிக்ஸ் புரொடெக்ஷன்ஸ் தயாரிப்பில் , பிளாக்ஷிப் இயக்குனர் கலையரசன் தங்கவேல் இயக்கத்தில் , ரியோ ராஜ்- மாளவிகாவின் வெற்றிக் கூட்டணியில் உருவாகியுள்ள படம் தான் “ஆண் பாவம் பொல்லாதது” … இந்த படத்தினுடைய டிரெய்லர் லாஞ்ச் நிகழ்வு , ஒரு உலக சாதனையை புரிந்துள்ளது … இதன் மூலம் , “உலகிலேயே அதிகபட்ச நபர்களால் ஒரே நேரத்தில் வெளியிடப்பட்ட திரைப்பட டிரெய்லர் “ எனும் பெருமையைப் பெற்றிருக்கிறது ஆண் பாவம் பொல்லாதது திரைப்படம் … இதுவரை எந்த உலக சினிமாவும் தொட்டிடாத உயரம் இது … இந்த நிகழ்வில் 8000 மாணவர்கள் சிறப்பு விருந்தினர்களாக பங்கெடுத்து சரியாக காலை 11.30 மணிக்கு அனைவரும் ஒன்று சேர்ந்து , தங்கள் சமூக ஊடக கணக்குகளிலிருந்து ஆண் பாவம் பொல்லாதது திரைப்படத்தின் டிரெய்லரை பதிவேற்றம் செய்தனர் … இந்நிகழ்வு ஈரோடு…
Read Moreமெகாஸ்டார் சிரஞ்சீவி, இளம் கிரிக்கெட் நட்சத்திரம் திலக் வர்மாவை கௌரவித்தார்!
ஆசியக் கோப்பையில் புரிந்த சாதனைகளுக்காக, “மன சங்கர வர பிரசாத் காரு” படப்பிடிப்பு தளத்தில் சிறப்பு பாராட்டு விழா! மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள மெகாஸ்டார் சிரஞ்சீவியின் புதிய திரைப்படம் “மன சங்கர வர பிரசாத் காரு”, இயக்குநர் அநில் ரவிபுடி இயக்கத்தில் மிக வேகமாக உருவாகி வருகிறது. இப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில், சிரஞ்சீவி தனது படப்பிடிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, இந்தியாவின் இளம் கிரிக்கெட் சென்சேஷனான திலக் வர்மாவை சந்தித்து அவரைக் கௌரவித்தார். சமீபத்தில் நடைபெற்ற ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா பெற்ற வெற்றியில் திலக் வர்மாவின் தீவிரமான ஆட்டமும், மிக அழுத்தமான நேரத்தில் காட்டிய நிதானமும் முக்கிய பங்காக இருந்தது. இயல்பிலேயே மிகச்சிறந்த பாராட்டும் மனம்கொண்டவராக கொண்டாடப்படும் சிரஞ்சீவி, திலக் வர்மாவை அன்புடன் வரவேற்று, கௌரவிக்கும் விதமாக அவரின் தோளில் சால்வை…
Read Moreநல்ல படங்களுக்கு வாய்ப்பு கொடுங்கள்: திரையரங்கு உரிமையாளர்களுக்கு தயாரிப்பாளர் வேண்டுகோள்!
கோதை என்டர்டெய்ன்மென்ட் மற்றும் எஸ். எம். மீடியா பேகடரி இணைந்து தயாரித்துள்ள திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’. இது விறுவிறுப்பான க்ரைம் திரில்லர் ரகத் திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தில் சித்து, தர்ஷிகா,ரித்விகா, வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, அருள்ஜோதி, ஜெயக்குமார், ஷரண், ஜானகிராமன் ,விஜய் சத்யா, ஆர்த்தி, சுமித்ரா, அலெக்ஸ், தீபன், சிவ சதீஷ்,டேனி மற்றும் பலர் நடித்துள்ளனர். பாலாஜி எழுதி இயக்கி உள்ளார். இவர் ஏற்கெனவே ‘டி3’ படத்தை இயக்கியவர். இந்தப் படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கிரீன் பார்க் ஹோட்டலில் நடைபெற்றது.படக்குழுவினர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் படத்தின் ஒளிப்பதிவாளர் மணிகண்டன் பேசும்போது, “ஒரு படத்திற்கு விஷூவல் முக்கியமானது. எனவே இயக்குநர் படப்பிடிப்பிற்கான இடங்களைத் தேடித் தேடிச்சென்று படப்பிடிப்பு நடத்தினார் .ஜீப் கூட போக முடியாத பகுதிகளில் இவ்வளவு சாதனங்களை எடுத்துக் கொண்டு நாங்கள்…
Read More‘டீசல்’ படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு!
தேர்ட் ஐ எண்டர்டெயின்மெண்ட் & எஸ்பி சினிமாஸ் தயாரித்து வழங்க, சண்முகம் முத்துசாமி இயக்கத்தில் நடிகர்கள் ஹரிஷ் கல்யாண், அதுல்யா ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘டீசல்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் பத்திரிக்கையாளர்கள் சந்திப்பு நடைபெற்றது. ஒளிப்பதிவாளர் ரிச்சர்ட், “‘கட்டா குஸ்தி’ படத்திற்கு பின்பு ஒப்பந்தமான படம் இது. படம் எல்லாம் முடிந்து ரீலீஸ் ஆக பல நாட்கள் ஆகிவிட்டது. என்னுடைய முதல் படமான ‘அங்காடித்தெரு’, ‘மதகஜராஜா’ எல்லாம் படப்பிடிப்பு முடிந்தும் பல வருடங்கள் காத்திருந்து வெளியாகி ஹிட்டான படங்கள். அதனால், நான் வேலை பார்த்த படம் ரிலீஸ் ஆக தாமதம் ஆனாலும் அது ஹிட்டாகும் என்ற நம்பிக்கை எனக்குண்டு. ஒட்டுமொத்த படக்குழுவினருக்கும் நன்றி”. எடிட்டர் சான் லோகேஷ், ” இந்த தீபாவளிக்கு…
Read Moreடியூட்’ படத்தின் இசை வெளியீட்டு விழா!
மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் நடிகர்கள் பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘டியூட்’. தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வரும் அக்டோபர் 17ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா பிரம்மாண்டமான சென்னையில் இன்று நடைபெற்றது. ஏஜிஎஸ் எண்டர்டெயின்மெண்ட் தயாரிப்பாளர் ஐஸ்வர்யா கல்பாத்தி, “மைத்ரி மூவி மேக்கர்ஸூக்கு முதலில் நன்றி! மைத்திரியுடன் எங்களுடைய நான்காவது படம் இது. இந்த படத்தில் அறிமுகமாகும் இயக்குநர் கீர்த்தீஸ்வரன், இசையமைப்பாளர் சாய் அபயங்கருக்கு வாழ்த்துக்கள். இதைப்போல பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜூ என ஒட்டுமொத்த குழுவினருக்கும் வாழ்த்துக்கள். திறமையாளர்கள் மற்றும் நல்ல கதைகளை ஏஜிஎஸ் நிறுவனம் எப்போதும் ஆதரிக்கும். அந்த வகையில், இந்தப் படத்தின் சிறு பகுதியாக இருப்பதில் மகிழ்ச்சி” என்றார். பின்னணி பாடகர்கள் திப்பு & ஹரிணி, “இந்தத் தருணம்…
Read Moreபரபரப்பான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள “வில்” பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !! Foot Steps Production தயாரிப்பில்,
Foot Steps Production தயாரிப்பில், Kothari Madras International Limited இணைந்து வழங்க, இயக்குநர் S சிவராமன் இயக்கத்தில், சோனியா அகர்வால், விக்ராந்த் நடிப்பில், முழுமையான கோர்ட் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “வில்” (உயில்). இப்படம் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் பற்றிப் பகிர்ந்து கொண்டனர். இயக்குநர் S சிவராமன் பேசியதாவது.., இந்த திரைப்படம் உருவாகக் காரணம் என் எடிட்டர் தினேஷ் தான். அவரிடம் கோர்டில் நடந்த ஒரு உண்மைச் சம்பவத்தைப் பற்றிச் சொன்ன போது, சார் இதைப் படமாக்கலாம் என்றார். ஜட்ஜாக நடிக்க யாரை அணுகலாம் என நினைத்த போது சோனியா அகர்வால் மேடம் ஞாபகம் வந்தது, மிகச்சிறப்பாகச் செய்துள்ளார். சோனியா அகர்வால் சகோதரர் சௌரப் அகர்வால் இசை கற்றுக்கொண்டிருப்பதைப் பார்த்து, அவரை இப்படத்தில்…
Read Moreகம்பி கட்ன கதை” படத்தின் டிரைலர் மற்றும் இசை வெளியீட்டு விழா உரைகள்:
👤 தயாரிப்பாளர் ரவி அவர்கள் பேசியது: இங்கு வந்த அனைத்து ஊடக நண்பர்களுக்கும் என் அன்பான நன்றி. இந்த படத்துக்கு “கம்பி கட்டுன கதை” என்று தலைப்பு வைத்ததற்கு ஒரு காரணம் இருக்கிறது. கதை அமைப்பை மேலும் சிறப்பாக உருவாக்க, பல விவாதங்களை நடத்தினோம். இந்தப் படம் கடந்த 22 ஆண்டுகளாக என்னுடன் பயணித்து வந்த ஒரு கனவு. ஒரு காமெடி சாமியாரை மையமாகக் கொண்டு கதை உருவாக்கியிருந்தோம். நட்டி சார் இப்படத்திற்கு ஒப்புதல் அளித்ததும், நாங்கள் எழுதிய கதையே முழுமையாக மாறிவிட்டது. எல்லாருடைய வாழ்க்கையும் இப்படத்தில் மாறுபட்ட வகையில் வெளிப்பட்டிருக்கிறது. இந்த படம் எனது நண்பர்களுக்காக ஒரு வாய்ப்பாக அமைந்தது. ஆனால் இவர்கள் அனைவருமே அவர்களது துறைகளில் சிறந்தவர்கள். இந்த படம் மங்காத்தா பிக்சர்ஸ் தளத்தில் மிகவும் வலிமையாக உருவாகியுள்ளது. அனைவரும் மிகச் சிறப்பாக வேலை…
Read Moreலைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) – சாதனை
சென்னையில் லைட்ஸ் ஆன் அவார்ட்ஸ் (LIGHTZ ÖN AWARDS) இதுவரை 100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனைப் படைத்துள்ளது, ஏழு வருடங்களாக தொடர்ந்து LIGHTZ ÖN AWARDS நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது. இந்த விழாவில் அயலான் திரைப்பட இயக்குநர் ரவிக்குமார், பிளாக் பட இயக்குநர் பாலசுப்பிரமணி, பாம் திரைப்பட இயக்குநர் விஷால் வெங்கட் மற்றும் யாத்திசை திரைப்பட இயக்குநர் தரணி ராஜேந்திரன் மற்றும் மக்கள் தொடர்பாளர் நிகில் முருகன் மற்றும் நடிகர் வினோத் கிஷன் மற்றும் நடிகர்-இயக்குநர் ஆனந்த் ராம் ஆகியோர் கலந்து கொண்டு குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகளை கொடுத்து வாழ்த்துகளை வழங்கினார். இதுவரை பல புதிய இயக்குநர்களை LIGHTZ ÖN AWARDS உருவாக்கியுள்ளது. சினிமா மீது ஆர்வம் கொண்ட திறமை உள்ள இளைஞர்கள் சினிமாவிற்குள் வர காரணமாக LIGHTZ ÖN இருக்கிறது. புதிதாக இரண்டு…
Read More
