வேலம்மாள் நெக்சஸ் மற்றும் மாற்று ஊடக மையம் இணைந்து 12-வது வீதி விருதுவிழா நிகழ்வை 2025, ஜனவரி 4 மற்றும் 5 ஆம் தேதிகளில் பெருமையுடன் நடத்தியது. இந்தக் கலைத் திருவிழா, தமிழ்நாட்டின் பாரம்பரியக் கலை வடிவங்களைக் கெளரவப்படுத்தவும், மீண்டும் உயிர்ப்பிக்கவும், ஊக்குவிக்கவும் நோக்கமாகக் கொண்டது. தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் சுமார் 5,000க்கும் மேற்பட்ட நாட்டுப்புறக் கலைஞர்கள் வருகைதந்து தங்கள் கலைத்திறன்களை மிகுந்த ஆர்வத்துடன் வெளிப்படுத்தினர். இந்தக் கலைத் திருவிழா, சென்னை, முகப்பேர் கிழக்கில் உள்ள வேலம்ம்மாள் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப் பள்ளியில் சிறப்பாக நடந்தது… தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக் கழகத்தின் துணைவேந்தர் கர்னல். பேராசிரியர் (டாக்டர்) என். எஸ். சந்தோஷ் குமார், வேலம்மாள் நெக்சஸ் குழுமத்தின் தாளாளர் திருமிகு. எம். வீ. எம். வேல்மோகன், மாற்று ஊடக மையத்தின் நிறுவனர் பேராசிரியர் (டாக்டர்)…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
சினிமாவில் அரசியல் இருக்கலாம் அரசியலில் சினிமா இருக்கக் கூடாது – இயக்குநர் ஆர் வி உதயகுமார் !!
உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் More 4 Production தயாரிப்பில், இயக்குநர் கதிரவென் எழுதி இயக்கி, நாயகனாக நடித்துள்ள படம் ” கண்நீரா “. மாறுப்பட்ட களத்தில் வித்தியாசமான காதல் கதையாக உருவாகியுள்ள இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில்…. கதையாசிரியர் கௌசல்யா நவரத்தினம் பேசியதாவது… இந்த தருணம் மிக மகிழ்ச்சியாக உள்ளது. எங்களை மாதிரி வெளிநாட்டு வாழ் தமிழர்களுக்கு இத்தனை ஆதரவு கிடைப்பது மகிழ்ச்சி. உத்ரா ப்ரொடக்ஷன்ஸ் மற்றும் கதிரவென் ஆகியோருக்கு நன்றி. என்னை நம்பி நான் எழுதிய கதையை, இத்தனை பெரிய படைப்பாக, இங்கு கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி. இந்தப்படம் வெற்றியடைய வேண்டுமெனக் கடவுளை வேண்டிக்கொள்கிறேன். நடிகர் ரோபோ சங்கர் பேசியதாவது… கண்நீரா படக்…
Read More” படப்பிடிப்பு தொடங்கிய முதல் நாளில் இருந்தே ஒரு நடிகராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டு விட்டார் ஆகாஷ்” – டைரக்டர் விஷ்ணுவர்தன் பெருமிதம்
XB பிலிம் கிரியேட்டர்ஸ் சேவியர் பிரிட்டோ தயாரிப்பில், விஷ்ணு வர்தன் இயக்கத்தில் நடிகர்கள் ஆகாஷ் முரளி, அதிதி ஷங்கர், சரத்குமார், குஷ்பு உள்ளிட்டப் பலர் நடிப்பில் ஜனவரி 14 அன்று வெளியாக இருக்கும் திரைப்படம் ‘நேசிப்பாயா’. இதன் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இணைத்தயாரிப்பாளர் சிநேகா பிரிட்டோ, “எங்கள் படம் ‘நேசிப்பாயா’ வருகிற 14ஆம் தேதி வெளியாகிறது. இந்தப் படம் நன்றாக உருவாக முக்கிய காரணம் சேவியர் பிரிட்டோ சார். அடுத்தது படத்தின் இயக்குநர் விஷ்ணு வர்தன். அவருடைய கனவுதான் இந்தப் படம். நீங்கள் எல்லோரும் இந்தப் படத்தைப் பார்க்க நான் ஆவலுடன் காத்திருக்கிறேன். விஷ்ணு வர்தன் ஸ்டைலிஷான இயக்குநர். இந்தப் படமும் அப்படியே வந்திருக்கிறது. கேமரூன் அழகாக ஒளிப்பதிவு செய்திருக்கிறார். கலை இயக்குநர் சரவண வசந்தும் சிறப்பாக செய்திருக்கிறார். சரத்குமார் சார், குஷ்பு மேம், அதிதி…
Read More”நல்ல கருத்து…, சிறப்பான மேக்கிங்…!” – ‘சீசா’ படத்தை பாராட்டிய பத்திரிகையாளர்கள்
விடியல் ஸ்டுடியோஸ் சார்பில் டாக்டர்.கே.செந்தில் வேலன் தயாரித்து கதை எழுதியிருக்கும் படம் ‘சீசா’. அறிமுக இயக்குந்=அர் குணா சுப்பிரமணியம் திரைக்கதை எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் நட்டி நட்ராஜ் கதையின் நாயகனாக நடிக்க, மற்றொரு நாயகனாக நிஷாந்த் ரூசோ நடித்திருக்கிறார். நாயகியாக பாடினி குமார் நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆதேஷ் பாலா, மூர்த்தி, மாஸ்டர் ராஜநாயகம், தயாரிப்பாளர் டாக்டர்.செந்தில் வேலன் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திறையிடல் நிகழ்வு வெளியீட்டு முன்னதாக ஜனவரி 2 ஆம் தேதி நடைபெற்றது. இதில், பங்கேற்று படம் பார்த்த பத்திரிகையாளர்கள் படத்தை வெகுவாக பாராட்டியுள்ளனர். குறிப்பாக, “படத்தில் நல்ல கருத்து சொல்லப்பட்டிருப்பதோடு, மேக்கிங்கும் சிறப்பாக உள்ளது” என்று அனைத்து பத்திரிகையாளர்களும் இயக்குநரை பாராட்டினார்கள். பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய இயக்குநர்…
Read Moreபிரபலங்கள் வெளியிட்ட “உசுரே” படத்தின் ஃபர்ஸ்ட் லுக்
“உசுரே” ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷனில் அறிமுக இயக்குனர் நவீன டீ கோபால் இயக்கத்தில் தமிழ் தெலுங்கு bilingual-களாக மற்றும் எதார்த்தமான களத்தையும் திரைக்கதையையும் கொண்டு எடுக்கப்பட்ட திரைப்படத்தின் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிவடைந்தது. அதைத்தொடர்ந்து “உசுரே” திரைப்படத்தின் First Look-க்கை இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் விஜய் சேதுபதி, நடிகை ஸ்ருதி ஹாசன், இயக்குனர் நித்திலன் சாமிநாதன் மற்றும் நடிகர் சண்முக பாண்டியன் விஜயகாந்த் போன்ற பிரபலங்களால் வெளியிடப்பட்டுள்ளது. இப்படத்தில் முன்னணி நடிகர்களான டீஜய் அருணாசலம், ஜனனி, ராசி மந்த்ரா, கிரேன் மனோகர், செந்திகுமாரி, சூப்பர் குட் சுப்பிரமணி, பாவல் நவகீதன் நடித்துள்ளனர் மற்றும் ஆதித்யா கதிர் தங்கதுரை நகைச்சுவையில் அசத்தியுள்ளனர். இந்த கதை உண்மையான சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, தமிழ்நாடு-ஆந்திர எல்லையான சித்தூரில் எடுக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது
Read Moreபோதைக்கு அடிமையாகும் இளைய தலைமுறையினரை காப்பாற்றும் ஒரு படம் ‘கலன்…’ – எச்.ராஜா பாராட்டு
ராஜலெக்ஷ்மி புரொடக்ஷன்ஸ் சார்பில் ராஜேஷ்வரி சந்திரசேகரன் தயாரிப்பில், ’கிடுகு’ பட புகழ் இயக்குநர் வீரமுருகன் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘கலன்’. தீபா, அப்புக்குட்டி ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இப்படத்தில் காயத்ரி, சம்பத் ராம், சேரன் ராஜ், யாசர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள். வரும் ஜனவரி 3 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ள இப்படத்தின் சிறப்பு திரையிடல் நிகழ்வு டிசம்பர் 31 ஆம் தேதி சென்னை, பிரசாத் லேபில் நடைபெற்றது. இதில், பத்திரிகையாளர்களுடன், பாரதிய ஜனதா கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் எச்.ராஜா மற்றும் பத்திரிகையாளர், நடிகர், திரைப்பட விமர்சகர் பயில்வான் ரங்கநாதன் கலந்து கொண்டார்கள். படம் பார்த்த பிறகு பத்திரிகையாளர்களிடம் படம் குறித்து பேசிய எச்.ராஜா, “இன்றைய தினம் தமிழகத்தின் அவலமான நிலையை படம் பிடித்து காட்டியிருக்கிறார் இயக்குநர் வீரமுருகன். இதற்கு முன்பு…
Read Moreவிடுதலை 2; வெற்றிமாறனுக்கு மாலை அணிவித்த படக்குழுவினர்!
‘விடுதலை பாகம் 2’ படத்தின் பிரம்மாண்ட வெற்றியை ஒட்டுமொத்த படக்குழுவினரும் சிறப்பாகக் கொண்டாடியுள்ளனர். இந்த நிகழ்வில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். ‘விடுதலை பாகம்2’ படம் மாபெரும் வெற்றியடையச் செய்ததற்காக, குழுவில் உள்ள அனைவருக்கும் ஆர்எஸ் இன்ஃபோடெயின்மெண்ட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமார் நன்றி தெரிவித்தார். இப்படம் டிசம்பர் 20, 2024 அன்று உலகம் முழுவதும் வெளியானது. உலகம் முழுவதும் உள்ள விமர்சகர்கள் மற்றும் பார்வையாளர்களிடமிருந்து நல்ல வரவேற்பைப் பெற்றது.
Read Moreபெரும் எதிர்பார்ப்பிலிருக்கும் “கேம் சேஞ்சர்” படத்தின் டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது !!
குளோபல் ஸ்டார் ராம்சரண், பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் கூட்டணியில், மிகவும் எதிர்பார்க்கப்படும் பான்-இந்தியா திரைப்படமான “கேம் சேஞ்சர்” படத்தின் அதிரடி டிரெய்லர் ஜனவரி 1 ஆம் தேதி வெளியாகிறது. இப்படம் ஜனவரி 10 ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகிறது. சமீபத்தில், தயாரிப்பாளர்கள் டல்லாஸில் பிரமாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்தினர். அந்நிகழ்வு ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. அமெரிக்காவில் நடைபெற்ற ஒரு இந்தியப் படத்தின் முதல் ப்ரீ-ரிலீஸ் நிகழ்வு இதுதான். தற்போது, கேம் சேஞ்சர் மற்றொரு சாதனையைப் படைத்துள்ளது. விஜயவாடா பிருந்தாவன் காலனியில் உள்ள, வஜ்ரா மைதானத்தில் 256 அடி உயரத்தில் ராம் சரண் நிற்கும் வகையில் மிக உயரமான கட்-அவுட், இன்று ஆயிரக்கணக்கான மெகா ரசிகர்கள் முன்னிலையில் அமைக்கப்பட்டது. இந்த விழாவில் படத்தின் தயாரிப்பாளர் தில் ராஜு சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டார்.…
Read Moreபா.இரஞ்சித் முன்னெடுக்கும் மார்கழியில் மக்களிசை நிகழ்ச்சி முக்கியமான ஒரு பண்பாட்டு முயற்சி -விஜய்சேதுபதி
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் நடத்தும் மார்கழியில் மக்களிசை எனும் இசை நிகழ்ச்சி ஒவ்வொரு வருடமும் மார்கழிமாதத்தில் நடைபெற்றுவருகிறது. ஐந்தாவது வருடமாக 2024 ம் வருடத்திற்கான நிகழ்ச்சி டிசம்பர் 27, 28, 29 ஆகிய நாட்களில் சென்னை மைலாப்பூர் சாந்தோம் பள்ளியில் நடைபெற்றது. ஐநூறுக்கும் மேற்பட்ட கலைஞர்கள் கலந்துகொண்ட இந்த நிகழ்வில் மேடையேற்றப்படாத கலைஞர்கள் பலர் கலந்துகொண்டனர். பல்வேறு அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் பலரும் நிகழ்ச்சிக்கு வந்து கலந்துகொண்டனர். நிறைவு நாளில் நடிகர் விஜய்சேதுபதி கலந்துகொண்டு மக்களிசை மாமணி விருதுகளை கூத்து ஆசிரியர் செல்லமுத்து, ராஜாராணி ஆட்டக்கலைஞர் முப்பிலி இருவருக்கும் வழங்கினார். இது போன்ற மக்களிசை நிகழ்ச்சிக்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி . மிகவும் பெருமையாக இருக்கிறது கவனிக்கப்படாத கலைஞர்களை கவனித்து அவர்களுக்கு மேடை அமைத்து கொடுப்பது மிகவும் பெருமைக்குறிய விசயம். இயக்குனர்…
Read Moreகத்தாரில் நடிகர் யோகிபாபுவிற்கு ” SIGTA ” விருது
உலகளாவிய அளவில் சாதனைகள் புரிந்திட்ட தென்னிந்திய திறமையாளர்களை கௌரவிக்கும் SIGTA விருது கடந்த மூன்று ஆண்டுகளாக சிறப்பான முறையில் நடத்தி வருகிறார் கத்தார் வாழ் தமிழர் சாதிக்பாஷா. 2024 இந்த வருடம் கத்தாரின் தலைநகரான தோகாவில் உள்ள QNCC அரங்கத்தில் சிறப்பாக நடைபெற்றது இதில் தென்னிந்திய திரைப்பட நடிகர், நடிகைகளுக்கு விருது வழங்கப்பட்டது. தமிழில் திரையுலகில் நடிகை குஷ்பு, காமெடி நடிகர் யோகி பாபு, நடிகர் விமல், காயத்ரி, ஜீவாரவி, ரியாஸ் கான், விச்சு, T.S.K , கன்னட திரையுலகில் நடிகையாக மிகப்பெரிய சாதனையை படைத்து அரசியலில் இருந்து வரும் சுமலதா மற்றும் பிரம்மாண்ட தயாரிப்பாளர் நடிகர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு விருது வழங்கப்பட்டது. அம்மு மற்றும் அஸார் இருவரும் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்கள். கத்தாரில் இந்தியத் தூதரக அதிகாரிகள் மற்றும் கத்தார் அரசு அதிகாரிகள் பங்கேற்க,…
Read More