” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ” ஆங்கில புத்தாண்டை வரவேற்கும் தயாரிப்பாளர் ” ராக் போர்ட் முருகானந்தத்தின் அடுத்தடுத்த அதிரடி படைப்புகள் ” கொரோனாவின் கோரத்தாண்டவத்தால் “சினிமா” துறை பெரும் நெருக்கடியை சந்தித்துள்ளது… ஊரடங்கு முடிந்து வரும் நிலையில் படபிடிப்புகளும், நின்று போன படங்களும் துவங்கப்பட்டுள்ளன.. இந்நிலையில் “ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் ” திரு. முருகானந்தம், 2021-2022 சினிமா துறைக்கு சிறந்த ஆண்டாக அமையும். என புதுப் படங்களுடன் புத்தாண்டை வரவேற்க களமிறங்கியுள்ளார். மேலும் தற்போது ராக் போர்ட் என்டர்டெயின்மெண்ட் கைவசம் “குருதியாட்டம்” படத்தை தயாராக வைத்துள்ளது, அதோடு “பிளாக் ஷீப்” ல் ஒரு படம் தயாராகி வருகிறது, அது மட்டுமின்றி இயக்குனர் மிஷ்கின் அவர்களின் இயக்கத்தில் பெரும் எதிர்பார்ப்புக்குரிய படமாக பிசாசு2 தயாராகி வருகிறது. ஏப்ரல் அல்லது மே ல் இது…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
‘ பேய் இருக்க பயமேன் ‘ சினிமா விமர்சனம்
‘பேய் இருக்க பயமேன்’ சினிமா விமர்சனம். அந்த இளம் ஜோடி தங்களுக்குத் திருமணம் முடிந்ததும், ஒரு பெரிய பங்களாவுக்குள் குடியேறுகிறார்கள். அவர்களுக்கு ஒருவரை ஒருவர் பிடிக்கவில்லை. அதனால் சின்னச் சின்ன சண்டை. தனித்தனி அறைகளில் தங்குகிறார்கள். அந்த பங்களாவுக்குள் நுழைந்ததில் இருந்தே பேய்களின் அட்டகாசம்; பயப்படுகிறார்கள். பேய்களால் இவர்களுடைய நிம்மதி பறிபோகிறது. பேய் ஓட்டுகிற சிலரைக் கூட்டிவர, பேய்கள் அவர்களைத் தெறிக்கவிடுகிறது. வெறுத்துப் போன அந்த இளம் ஜோடி, தாங்களே பேய்களை விரட்டும் முயற்சியில் இறங்குகிறார்கள். அவர்களின் முயற்சிக்கு நல்ல பலன் கிடைக்கிறது. அந்த முயற்சிகள் கலகலப்புக்கு கேரண்டி தருகின்றன. பேய்ப் படங்களுக்கே உரிய அரதப் பழசான காட்சிகளால் படத்தின் முன்பாதி நிறைந்திருந்தாலும், பின்பாதியில் கதையோட்டத்தை சற்றே வித்தியாசமான கோணத்தில் நகர்த்தியிருப்பதற்காக இயக்குநர் கார்த்தீஸ்வரனுக்கு அழுத்தமான கை குலுக்கல்! இயக்குநரே ஹீரோவாகவும் நடித்திருக்கிறார். அவரது அப்பாவித் தோற்றமும்…
Read Moreஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்”
ஐஸ்வர்யா ராஜேஷ் வெளியிட்ட குறும்பட டைட்டில் “மலர்” பர்ஸ்ட் லுக்! பிரபல பத்திரிகையாளரும், பசும்பொன் தேவர் வரலாறு ஆவணபட இயக்குனருமான கோடங்கி ஆபிரகாம் குறும்படம் ஒன்றை எழுதி இயக்கி இருந்தார். இந்த படத்தின் டைட்டில் பர்ஸ்ட் லுக் புத்தாண்டு தினமான இன்று வெளியிடப்பட்டது. பிரபல நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் “மலர்” டைட்டிலையும், பர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட புதுமுக நடிகர் சந்தோஷ் பிரபாகர், இயக்குனர் கோடங்கி ஆபிரகாம், பத்திரிகையாளர் ஒற்றன் துரை ஆகியோர் பெற்றுக் கொண்டனர். சமூகத்தால் தவறான பாதையில் தள்ளப்பட்ட ஒரு பெண் அதே சமூகத்தை போராடி எப்படி எதிர்கொள்கிறார் என்பதுதான் மலர் குறும்படத்தின் கதை. கயல்விழி என்ற புதுமுக நடிகை மலர் குறும்பட நாயகியாக அறிமுகம் ஆகிறார். இவர்களோடு “திடீர் தளபதி” சதீஷ்முத்து, ஜோயல்,ஹிதயத்துல்லா , ஒற்றன் துரை ஆகியோர் நடித்திருக்கிறார்கள். அனீஷ் ஒளிப்பதிவில்…
Read Moreதமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!
தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை!. தியேட்டர்களில் 100% மக்களை அனுமதிக்க வேண்டும்! -‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம்’ முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை! தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் நிர்வாகிகள் 28.12.2020 இன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தனர். அப்போது அவர்கள், தமிழ்நாடு முதலமைச்சருக்கு பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, சங்கத்தின் பொதுச்செயலாளர் ஆர். பன்னீர்செல்வம் கையெழுத்திட்ட கடிதத்தை வெளியிட்டனர். ‘தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கம் சமர்ப்பிக்கும் கோரிக்கை விண்ணப்பம்’ என்ற தலைப்பில் விடுக்கப் பட்டிருக்கும் அந்த கடிதத்தில் இடம்பெற்றுள்ள கோரிக்கைகள் இதோ:- எங்களது தமிழ்நாடு திரையரங்கு உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் எங்களது புத்தாண்டு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறோம். தங்களின் பொன்னான ஆட்சியில் தமிழ்த் திரையுலகம் நல்ல வளர்ச்சி நிலைமைக்கு வரும் என்பதில் ஐயமில்லை. தற்போதுள்ள தற்போதுள்ள சூழ்நிலையில் திரையரங்குகளை நடத்துவதே மிகவும் சிரமமாக…
Read Moreபடப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி
படப்பிடிப்பில் ஆர்யாவுக்கு விழுந்த பலத்த அடி. எனிமி படப்பிடிப்பின் சண்டைக்காட்சியில் ஆர்யாவிற்கு ஏற்பட்ட காயம் ! விஷால் மற்றும் ஆர்யா நடிப்பில் உருவாகும் எனிமி படத்தின் .படப்பிடிப்பு தற்போது EVP பிலிம் சிட்டியில் பிரமாண்ட செட் அமைப்புகளுடன் நடைபெற்றுவருகிறது . விஷாலுக்கும் ஆர்யாவுக்கும் இடையே நடக்கும் சண்டைக்காட்சிகள் டூப் இல்லாமலால் எடுக்கப்பட்டு வந்த நிலையில் படப்பிடிப்பின்போது ஆர்யாவிற்கு கையில் பலத்த அடிபட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சைக்கு பெற்று மீண்டும் இன்று படப்பிடிப்பில் ஆர்யா கலந்துகொண்டார் . அரிமா நம்பி’, இருமுகன்’, நோட்டா உள்ளிட்ட படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் இப்படத்தை இயக்குகிறார் .மினி ஸ்டுடியோஸ் தயாரிப்பு நிறுவனம் சார்பில் S வினோத்குமார் தயாரிக்கிறார் . கதாநாயகியாக மிர்னாலினி ரவி நடிக்கிறார் .தமன் இசையமைக்க RD ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார் .சண்டைக்காட்சிகள் – ரவிவர்மா .
Read MoreNew Year Wishes from Music Director Vishal Chandrasekar
New Year 2021 Wishes from Music Director Vishal Chandrasekar. தன்னுடைய தனித்திறமையால் அடுக்கடுக்கான வெற்றிகளை குவித்து வரும் இளம் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் தன் ரசிகர்களுக்கு மகிழ்ச்சி பொங்கும் புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்துள்ளார்… கொரோனா காலம் வெகுவாக பாதித்த துறைகளில் சினிமாவும் ஒன்று, ஆனால் திறமை வெளிக்கொணர ஊரடங்கு ஒரு தடை அல்ல என நிரூபித்துள்ளார் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர் திரையரங்குகள் திறக்காததால் ஆன்லைன் தளங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்நிலையில் இந்தாண்டு ஆன்லைனில் வெளிவந்த தமிழ் வெப் சீரிஸில் , சாரு கே சேகர் இயக்கத்தில் ஜெய் , வாணிபோஜன் நடிப்பில் வெளியான “ட்ரிப்பிள்ஸ்” இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது, மேலும் மறைந்த நடிகர் “கிரேஸி மோகனுக்கு” மரியாதை செலுத்தும் விதமாக இம்மாதம் இந்த வெப் சீரிஸ் வெளியானது, முழு…
Read MoreJackie Chan’s Vanguard releasing on 25th December
Ravindran and Indo Overseas Films releases Jackie Chan’s Vanguard. Jackie Chan’s VanGuard Releasing in Indian Subcontinent by Trident Arts R.Ravindran & Indo Overseas Films Simultaneously in Tamil,English,Telugu,Malayalam,Kannada & Hindi On 25th December in Eve of Christmas VANGUARD Stills – Google drive Download link (39 stills):* https://drive.google.com/drive/folders/1-MSHk7qZ9GAD0BUtXeTC-jGO-SDjYspR?usp=sharing Tamil Press Release: ஜாக்கி சானின் “வேன்கார்ட் “படத்தை இந்திய துணை கண்டம் முழுவதும் (ஆங்கிலம்,தமிழ்,தெலுங்கு,கன்னடம்,மலையாளம் மற்றும் ஹிந்தி மொழிகளில்) ட்ரைடன்ட் ஆர்ட்ஸ் R.ரவீந்திரன் மற்றும் இண்டோ ஓவர்சீஸ் நிறுவனம் வெளியிடுகின்றனர் ஆக்ஷன் களத்தில் மீண்டும் ‘அதிரடி மன்னன்’ ஜாக்கி சான்: டிச.25-ல் உலகம் முழுவதும் ரிலீஸாகிறது ‘வேன்கார்டு ‘ ஆக்ஷன் களத்தில் மீண்டும் மிளிர வருகிறார்…
Read MoreKombhu movie Review
Kombhu movie ‘கொம்பு’ சினிமா விமர்சனம் திகில், திரில், கிரைம் கலந்து செய்த கலவை. அந்த கிராமத்தில் மாட்டுக் ‘கொம்பு’ மூலம் ஆவிகளின் அட்டகாசத்துக்கு முற்றுப் புள்ளி வைத்து வருகிறார் ஒரு சாமியார். அந்த கொம்பு ஒரு பெண்ணின் கைக்கு வருகிறது. அவள் தற்கொலை செய்து கொள்கிறாள். கொம்பு செய்யும் சதியால் இன்னொரு பெண்ணுக்கும் நேர்கிறது அதே கதி! பெண்கள் தங்கள் உயிரை மாய்த்துக்கொள்ள என்ன காரணம்? தெரிந்துகொள்ள பேய்கள் பற்றி ஆராய்ச்சி செய்யும் மாணவி திஷா பாண்டே களத்தில் இறங்குகிறார். அவருடன் ஜீவா, பாண்டியராஜன், புவிஷா டீம் இணைகிறார்கள். தற்கொலைகளுக்குப் பின்னே ஒளிந்திருக்கும் அதிர்ச்சியான சம்பவங்களைக் கண்டுபிடிக்கிறார்கள். திகிலும் திரில்லுமாய் கதை, திரைக்கதை எழுதி இயக்கியிருக்கிறார் இ. இப்ராஹிம். ஹீரோவாக லொள்ளுசபா’ ஜீவா. வீட்டுக்குள் பேய் நுழைந்தது போன்ற செட்டப்போடு அவர் என்ட்ரி கொடுப்பதாகட்டும், பேய்…
Read Moreவிஜய் ஆண்டனி நடிப்பில் T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய பட படப்பிடிப்பு தொடக்கம்!
விஜய் ஆண்டனி நடிப்பில் செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல் – T . D ராஜா தயாரிப்பில் ஆனந்த கிருஷ்ணன் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று துவங்கியது . காந்தக்கோட்டை ,வல்லக்கோட்டை ஆகிய படங்களின் தயாரிப்பிற்கு பிறகு TD ராஜா தயாரிக்கும் ராஜவம்சம் திரைப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது .இதைத்தொடர்ந்து இவர் தயாரிக்கும் பெயரிடாத படத்தில் விஜய் ஆண்டனி கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக ஆத்மிகா நடிக்கிறார் . ” மெட்ரோ ” பட புகழ் இயக்குநர் ஆனந்த கிருஷ்ணன் இப்படத்தை இயக்குகிறார் . இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்க Dr . தனஞ்செயன் இப்படத்தை வெளியிடுகிறார் . உரு படத்திற்கு இசையமைத்த ஜோகன் என்பவர் இப்படத்திற்கு இசையமைக்கிறார். N .S உதயகுமார் ஒளிப்பதிவு செய்கிறார் .இணை தயாரிப்பு – ராஜா சஞ்சய் . இந்த திரைப்படத்தின்…
Read Moreபிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும்!
பிரபல யூடியூப் சேனல் பிளாக் ஷீப் தயாரிக்கும் முதல் படத்தின் பூஜையும் படப்பிடிப்பும் இன்று நடைபெற்றது. ராக்போர்ட் என்டர்டைன்மென்ட் முருகானந்தம் அவர்களுடன் இணைந்து இப்படம் தயாரிக்கப்படுகின்றது. நடிகர் சிவகார்த்திகேயன், எஸ்கே புரோடக்சன்ஸ் கலை, இயக்குனர் பத்ரி வெங்கடேஷ், நடிகர்கள் ரியோ, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பல பிரபலங்கள் பூஜையில் கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றினார். இந்த படத்தில் பேச்சாளர் ராஜ்மோகன் இயக்குனராக அறிமுகமாகிறார். இவரது தமிழ் பேச்சு வீடியோக்கள் புட்சட்னி, தமிழ் வணக்கம் உள்ளிட்ட யூடியூப் சேனல்களில் மிகவும் பிரபலம். பொதுவாக பள்ளிக்கூட திரைப்படம் என்றால் பழைய நினைவுகளை குறித்து எடுக்கப்படும். ஆனால் இந்த திரைப்படம் தற்கால 2k கிட்ஸ் தலைமுறையின் கொண்டாட்டத்தை மையமாக கொண்டு எடுக்கப்பட உள்ளது. இதில் மைக்செட் ஸ்ரீராம், பிளாக் ஷீப் அயாஸ், அம்மு அபிராமி, தேஜு ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முக்கிய…
Read More