“பூக்கி” திரைப்பட பத்திரிக்கையாளர் சந்திப்பு !!

Vijay Antony Film Corporation சார்பில், ஃபாத்திமா விஜய் ஆண்டனி தயாரிப்பில்,  மீரா விஜய் ஆண்டனி வழங்கும், அஜய் திஷான் நடிப்பில், அறிமுக இயக்குநர் கணேஷ் சந்திரா இயக்கத்தில், ரொமான்ஸ் காமெடி ஜானரில், இளைஞர்களை கவரும் படைப்பாக உருவாகியுள்ள திரைப்படம் “பூக்கி”.  இப்படம் காதலர் தினக் கொண்டாட்டமாக வரும் 2026 பிப்ரவரி 13 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. பட வெளியீட்டை முன்னிட்டு படக்குழுவினர் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில் தயாரிப்பாளர் விஜய் ஆண்டனி பேசியதாவது.., நீங்கள் இல்லாமல் நான் இல்லை. எப்போதும் எனக்கு துணையாக இருந்த அனைவருக்கும் என் மனமார்ந்த நன்றி. இந்த விழாவின் நாயகன் கணேஷ் சந்திரா. அவரை நான் முதலில் ஒளிப்பதிவாளராக அறிமுகப்படுத்தினேன் என்பதில் எனக்கு பெருமை. இன்று அவரை இயக்குநராக மீண்டும் அறிமுகப்படுத்துவது இன்னும்…

Read More

மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்கும் புரொடக்ஷன் நம்பர் 1

Fire Fox Film House நிறுவனம் சார்பில் சரணிகா தயாரிப்பில், மணிகண்டன் செல்வராஜ் இயக்குநராக அறிமுகமாகி  நடிக்கும் படம் புரொடக்ஷன் நம்பர் 1. இயக்குனர் அறிவழகன் அவர்களிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த மணிகண்டன் செல்வராஜ் இயக்கி, கதாநாயகனாக நடிக்க, முக்கியமான கதாப்பாத்திரத்தில், ஆ.வெங்கடேஷ், அருவி மதன் ஆகியோர் இணைந்து நடிக்கிறார்கள். தமிழ் சினிமாவில் ரசிகர்கள் புதுவிதமான கதைகளம், சுவாரஸ்யமான கதைகளுக்கு முக்கியத்துவம் கொடுத்து வருகின்றனர். அந்த வகையில் ஒரு போலீஸ் ஸ்டேஷன் பின்னணியில், ஒரு காதல் ஜோடியை மையப்படுத்தி, அனைத்து தரப்பினரும் விரும்பக்கூடிய வகையில் இப்படத்தின் திரைக்கதை உருவாக்கப்பட்டுள்ளது. விறுவிறுப்பான கதை நகர்வு, ஆக்ஷனும் சம அளவில் கலந்து ஒரு அசத்தலான கமர்ஷியல் எண்டர்டெயினராக இப்படத்தை உருவாக்கி வருகிறார் அறிமுக இயக்குநர் மணிகண்டன் செல்வராஜ். இப்படத்தில் மணிகண்டன் செல்வராஜ் நாயகனாக நடிக்க, இயக்குனரும், நடிகருமான ஆ.வெங்கடேஷ் திருப்புமுனை பாத்திரத்தில்…

Read More

பத்திரிகையாளர்கள் மற்றும் ரசிகர்கள் முன்னிலையில் வெளியிடப்பட்ட லெஜெண்ட் சரவணனின் ‘லீடர்’ படத்தின் டைட்டில் & கிளிம்ப்ஸ்

இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும், பிரபல நடிகருமான லெஜெண்ட் சரவணன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘லீடர்’ என பெயரிடப்பட்டு, அதன் டைட்டில் மற்றும் முதல் பார்வைக்கான பிரத்யேக காணொலி வெளியிடப்பட்டிருக்கிறது. இயக்குநர் ஆர். எஸ். துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘லீடர்’ திரைப்படத்தில் லெஜெண்ட் சரவணன், ஷாம், ஆண்ட்ரியா, சந்தோஷ் பிரதாப், பாயல் ராஜ்புத், லால், பிரபாகரன், அமிர்தா ஐயர், வி டி வி கணேஷ், பேபி இயல் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். எஸ். வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜிப்ரான் வைபோதா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை பிரதீப் ஈ. ராகவ் மேற்கொள்ள கலை இயக்கத்தை ஜி. துரைராஜ் கையாண்டிருக்கிறார். கமர்ஷியல் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்திருக்கிறது. ஏப்ரல் மாதம் உலகம் முழுவதும்…

Read More

‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி அறிமுக விழா!!

கலைமாமணி மதுரை R. முரளிதரன் வழங்கும் ‘மருதிருவர் – A Dance Musical’ மேடை நிகழ்ச்சி, இயல், இசை, நடனம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு, மருது சகோதரர்களின் வாழ்வை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ள ஒரு இசை–நாடக வடிவ மேடை நிகழ்ச்சியாகும். இதற்கான திரைக்கதை எழுதி, இசையுடன் கூடிய நாடக வடிவில் இந்த நிகழ்ச்சி, வரும் பிப்ரவரி 7, 2026 (சனி) அன்று சென்னை சர் முத்தா வெங்கட சுப்பா ராவ் கச்சேரி அரங்கில் நடைபெறுகிறது. இந்த மேடை நிகழ்ச்சியை மக்களுக்கு அறிமுகப்படுத்தும் வகையில், பத்திரிகையாளர்கள் முன்னிலையில் இன்று ஒரு அறிமுக விழா நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இயக்குநர் K. பாக்யராஜ், தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற உறுப்பினர் மற்றும் செயலாளர் விஜயா தாயன்பன், பத்திரிகையாளர் ராம்ஜி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். கலைமாமணி மதுரை R.…

Read More

‘ரெட் லேபில்’ திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  !

இந்தப் படத்தை கே .ஆர். வினோத் இயக்கியுள்ளார். ரெவ்ஜென் பிலிம் பேக்டரி சார்பில் லெனின் தயாரித்துள்ளார்,இப்படத்தின் கதையை பொன்.பார்த்திபன் எழுதியுள்ளார்,சதீஷ் மெய்யப்பன் ஒளிப்பதிவு செய்துள்ளார். கைலாஷ் மேனன் இசையமைத்துள்ளார்.லாரன்ஸ் கிஷோர் படத்தொகுப்பு செய்துள்ளார். நாயகனாக லெனின், நாயகியாக அஸ்மின் ஆகியோர் நடித்துள்ளனர். இவர்களுடன் முக்கியமான கதாபாத்திரத்தில் இயக்குநர் ஆர். வி. உதயகுமார் நடித்துள்ளார். கெளரவ வேடத்தில் முனிஷ்காந்த் நடிக்க,இயக்குநர் அனுமோகன் தருண், கெவின், கார்மேகம் சசி,அனுஷா ஆகியோரும் நடித்துள்ளனர். வருகிற பிப்ரவரி 6ஆம் தேதி வெளியாக இருக்கும் இந்த ‘ரெட் லேபில்’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு  இன்று பிரசாத் லேபில் நடைபெற்றது. *நிகழ்ச்சியில் படத்தின் தயாரிப்பாளரும் கதாநாயகனாக நடித்துள்ள  லெனின் பேசும் போது,* “நான் எப்போதும் நேரம் தவறாமையைக் கடைப்பிடிப்பவன்.சினிமா விலும் அதைப் பின்பற்ற நினைத்தேன்.சரியான நேரத்தில் வந்ததால்தான் இந்த இயக்குநரையை தேர்வு செய்தேன்.எதையும் முறைப்படி செய்ய…

Read More

சிலம்பரசனுக்காக என் வாழ்க்கையையே விட்டுக் கொடுப்பேன்.. உருகிய டி.ஆர்!

STR பிறந்தநாளைத் தொடர்ந்து அவரது ரசிகர்களை உற்சாகப்படுத்தும் வகையில், லக்ஷ்மி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பில் உருவான பிளாக்பஸ்டர் படமான சிலம்பாட்டம் திரைப்படம், வரும் பிப்ரவரி 6 ஆம் தேதி திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகிறது. முன்னணி வெளியீட்டு நிறுவனமான எல்மா பிக்சர்ஸ் தமிழகமெங்கும் வெளியிடுகிறது. மறுவெளியீட்டை ஒட்டி படக்குழு மற்றும் திரை பிரபலங்கள் பத்திரிக்கை ஊடக நண்பர்களைச் சந்தித்தனர். இந்நிகழ்வினில்… விநியோகஸ்தர் எல்மா பிக்சர்ஸ் எத்தில் ராஜ் பேசியதாவது.., ரசிகர்கள் அனைவருக்கும் நன்றி. இப்படத்தை அனைவரும் கொண்டாடுவீர்கள் என நம்புகிறேன் நன்றி. ட்ரீம் வாரியர்ஸ் பிக்சர்ஸ் குகன் பேசியதாவது.., இந்தப்படத்தை மீண்டும் வெளியிடுவதாக வந்த தகவல் பெரும் உற்சாகத்தைத் தந்தது. இப்படத்திற்கு ரசிகர்களிடம் பெரும் வரவேற்பு இருக்கிறது. இப்படத்தை விஜய் சாரும் அஜித் சாரும் பார்த்து பாராட்டியிருக்கிறார்கள். இப்படத்தில் பல சுவாரஸ்யமான விசயங்கள் உள்ளது. யுவன் இசையில் இப்படத்தில்…

Read More

தன்ஷிகா விஜயசாந்தி போல் மாஸ் காட்டியுள்ளார்- யோகிடா அப்டேட்

ஶ்ரீ மோனிகா சினி ஃபிலிம்ஸ் சார்பில் செந்தில்குமார் தயாரிப்பில், கௌதம் கிருஷ்ணா எழுதி இயக்கி இருக்கக்கூடிய படம் யோகி டா. இந்த படத்தில் சாய் தன்ஷிகா அவர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். வரும் பிப்ரவரி 6ம் தேதி திரையரங்குகளில் படம் வெளியாக உள்ள நிலையில், படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்துகொண்டு பேசினர். படத்தை எழுதி இயக்கிய கௌதம் கிருஷ்ணா அவர்கள் பேசும்போது, பத்திரிகையாளர்கள் அனைவருக்கும் வணக்கம். மேடையில் அமர்ந்திருக்கும் அனைவருக்கும் நன்றி. இந்த படம் டெக்னீசியன்களால் சாத்தியமாகி இருக்கிறது. இந்த மேடையில் கதாநாயகி சாய் தன்ஷிகாவிற்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில் ஹீரோவை வைத்து தான் இந்த படத்தை எடுக்க திட்டமிட்டேன். ஆனால் நான்கு ஹீரோ சேர்ந்து செய்தால் எப்படி ஆக்சன் வருமோ அதை சாய் தன்ஷிகா இந்த படத்தில் செய்துள்ளார்கள்.…

Read More

வித் லவ் ( With Love )” திரைப்பட முன் வெளியீட்டு விழா !!

Zion Films சார்பில் சௌந்தர்யா  ரஜினிகாந்த் மற்றும் MRP Entertainment  இணைந்து வழங்கும், பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் தயாரிப்பில், டூரிஸ்ட் ஃபேமிலி’  இயக்குநர் அபிஷன் ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா  ராஜன் நடிப்பில் உருவாகியுள்ள,  “வித் லவ் ( With Love )” திரைப்படம் வரும் 2026 பிப்ரவரி 6 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது. இப்படத்தின் முன் வெளியீட்டு விழா படக்குழுவினருடன் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக பண்பலை நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்றது இந்நிகழ்வினில்.., உடை வடிவமைப்பாளர் ப்ரியா ரவி பேசியதாவது.., இப்படத்தில் நானும் ஒரு பங்காக இருப்பது மகிழ்ச்சி. வாய்ப்பு தந்த இயக்குநர் தயாரிப்பாளருக்கு நன்றி. அபிஷன், அனஸ்வரா உங்கள் எல்லோருடன் வேலை பார்த்தது இனிமையான அனுபவம். ஒரு குடும்பம் போல இருந்த குழுவிற்கு நன்றி. படத்திற்கு உங்கள்…

Read More

தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில் ஜீவா நடித்த ‘தலைவர் தம்பி தலைமையில்’ படத்தின் வெற்றி விழா

கண்ணன் ரவி குழுமம் சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரிப்பில், நடிகர் ஜீவா நடிப்பில், இயக்குநர் நிதிஷ் சஹாதேவ் இயக்கத்தில் வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ திரைப்படத்தின் வெற்றி விழா சென்னையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பொங்கல் திருநாளன்று வெளியான ‘தலைவர் தம்பி தலைமையில்’ எனும் திரைப்படம் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவை பெற்று பெரும் வெற்றியை வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெற்றது. இதனைத் தொடர்ந்து இப்படத்தின் வெற்றி விழா சென்னையில் நட்சத்திர ஹோட்டலில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்த விழாவில் ‘தலைவர் தம்பி தலைமையில்’ பட குழுவினருடன் மத்திய இணை அமைச்சர் திரு சுரேஷ் கோபி, தமிழ் திரையுலகத்தை சேர்ந்த முன்னணி நட்சத்திர நடிகர்களும், இயக்குநர்களும், திரையுலக பிரபலங்களும் என ஏராளமானவர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். *இந்நிகழ்வில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி பேசுகையில்,* ”எனக்கு ஏழு வயதாக…

Read More

விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில் அஸ்வின் குமார் நடிக்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 மச் ‘படத்தின் வெற்றி விழா

கே ஜே பி டாக்கீஸ் சார்பில் தயாரிப்பாளர் கே. ஜே. பாலாமணி மார்பன் தயாரிப்பில் இயக்குநரும், நடிகருமான விக்னேஷ் கார்த்திக் இயக்கத்தில், விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் வழங்கும் ‘ஹாட் ஸ்பாட் 2 ‘ மச் ‘ திரைப்படம் ஜனவரி 23 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வெற்றியை பெற்றிருக்கிறது. இதனால் உற்சாகமடைந்த படக்குழுவினர் வெற்றி விழாவை சென்னையில் ஒருங்கிணைத்தனர். இவ்விழாவில் படக்குழுவினர் அனைவரும் கலந்து கொண்டனர். இந்த வெற்றி விழாவில் ஒளிப்பதிவாளர் ஜோசப் பால் பேசுகையில், ” அஸ்வின் குமாருடன் பணியாற்ற வேண்டும் என்ற போது முதலில் தயக்கம் இருந்தது. அதன் பிறகு பழகும் போது தான் அவருடைய அர்ப்பணிப்பு தெரிந்தது. படப்பிடிப்பு தளத்தில் அஸ்வின் குமார் வழங்கிய ஒத்துழைப்பு மறக்க முடியாதது. ஏழு மணிக்கு படப்பிடிப்பு என்றால்…

Read More