நிறம் விமர்சனம்… 3/5

கதை..

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி.. இருவரும் காதலிக்கிறார்கள்.. இருவரும் மருத்துவத் துறையை சேர்ந்தவர்கள்..

தவறு எங்கு நடந்தாலும் தட்டி கேட்கும் குணம் கொண்டவர் ப்ரீத்தி.. இதனால் பல பிரச்சனைகளை சந்திக்கிறார்.. ஒரு கட்டத்தில் முகேனுக்கும் ப்ரீத்திக்கும் பிரச்சனை வருகிறது.. இதனால் இருவரும் பிரிகின்றனர்.. அடுத்த நாள் ப்ரீத்தி காணாமல் போகிறார்..

இதனால் முகேன் மீது சந்தேகம் வருகிறது.. இவரை போலீஸ் பிடித்து விசாரிக்கிறது.. ஆனால் தன் காதலியை நான் கடத்தவில்லை.. அவர் எப்படி காணாமல் போனார் எனக்கு தெரியாது என்கிறார்..

ஒரு கட்டத்தில் ஜாமினில் வெளியே வருகிறார். அவரின் காதலியை கடத்தியது யார்.? இவர்கள் காதலை ஒன்று கூடினார்களா என்ன நடந்தது.? என்பதெல்லாம் நிறத்தின் கதை..

நடிகர்கள்..

முகேன் ராவ், ப்ரீத்தி அஸ்ரானி, தான்யா ஹோப், சுரேகா வாணி, கஜராஜ், நிதின் சத்யா, சுரேஷ் சக்கரவர்த்தி உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.

ஸ்மார்ட்டான நாயகனாக முகேன்.. பாட்டு ஆக்ஷன், பதட்டம் என வெரைட்டியா நடிப்பை கொடுத்திருக்கிறார்.. ப்ரீத்தி அஸ்ராணி சிறப்பான நடிப்பை கொடுத்திருக்கிறார்.. கண்களாலும் அழகிலும் கவர்ந்து விடுகிறார்..

தான்யா ஹோப்.. பெரிய ஸ்பேஸ் இல்லை என்றாலும் கொடுத்த பாத்திரத்தில் ஓகே..

வில்லனாக மிரட்டி இருக்கிறார் நிதின் சத்தியா.. சுரேகா வாணி, கஜராஜ், சுரேஷ் சக்கரவர்த்தி ஆகியோர் கொடுத்த பாத்திரத்தில் சிறப்பு…

தொழில்நுட்ப கலைஞர்கள்…

இமான் இசையமைத்திருக்கிறார் மெலோடி பாடல்களில் மனதை வருடி கொடுக்கிறார்..  இசைக்கு ஏற்ப பாடல் காட்சிகளை கலர்ஃபுல்லாகி கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர்..

மருத்துவத்துறையில் நடக்கும் பிரச்சனைகள்… சமூகத்தில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள்.. ஆகியவற்றை கலந்து ஒரு கமர்சியல் விருந்து படைக்க முயற்சித்து இருக்கிறார் இயக்குனர் பலராம் கிருஷ்ணா..

Related posts

Leave a Comment