தமிழ் திரையுலகின் முன்னணி படத் தயாரிப்பு நிறுவனமான வேல்ஸ் ஃபிலிம் இன்டர்நேஷனல் மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், அவ்னி சினிமேக்ஸ் (பி) லிமிடட் நிறுவனம் மற்றும் ரௌடி பிக்சர்ஸ் நிறுவனம் இணை தயாரிப்பில் கமர்ஷியல் கிங் இயக்குநர் சுந்தர் சி இயக்கத்தில், நடிகை நயன்தாரா நடிப்பில் ‘மூக்குத்தி அம்மன் 2’ திரைப்படம் பிரம்மாண்டமாக உருவாகவுள்ளது. 1 கோடி ரூபாயில் பிரம்மாண்டமாக அமைக்கப்பட்ட அரங்கில், படக்குழுவினருடன், திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, இப்படத்தின் பூஜை, தமிழ் சினிமா இதுவரை கண்டிராத வகையில், மிகப்பிரம்மாண்டமாக நடைபெற்றது. இந்நிகழ்வினில் … உட்படப் பல முன்னணி பிரபலங்களுடன், படக்குழுவினர் கலந்துகொண்டனர். வேல்ஸ் பிலிம் இன்டர்நேஷனல் லிமிடெட் (Vels Film International Limited) நிறுவனத்தின் டாக்டர் ஐசரி கே. கணேஷ், மற்றும் ஐவி என்டர்டெயின்மென்ட் (Ivy Entertainment) இணைந்து, முதல் பாகத்தை விட பல மடங்கு பிரம்மாண்டமாக,…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
போஸ்ட் புரொடக்ஷன்ஸ் ஸ்டுடியோ ஆரம்பித்திருக்கும் இயக்குநர் விஜய்!
ரசிகர்கள் விரும்பும்படியான பல வெற்றிப்படங்களைக் கொடுத்த இயக்குநர் விஜய் ‘D Studios Post’ என்ற பெயரில் புதிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவினை மார்ச் 2 அன்று தொடங்கியுள்ளார். இந்த ஸ்டுடியோவை இயக்குநர் பிரியதர்ஷன், ஒளிப்பதிவாளர் பி.சி. ஸ்ரீராம், வேல்ஸ் பல்கலைக்கழகத்தின் நிறுவனர் & வேந்தர் டாக்டர் ஐசரி கே கணேஷ் மற்றும் தயாரிப்பாளர் சுரேஷ் பாலாஜி ஆகிய பிரபலங்கள் தொடங்கி வைத்தனர். இந்த நிகழ்வு சென்னையின் மிகப்பெரிய போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோவின் பிரமாண்டமான தொடக்க விழா என்பது குறிப்பிடத்தக்கது. டிஐ, டால்பி அட்மாஸ் சவுண்ட் மிக்ஸ், டப்பிங், டிசிபி (DCP), ஓடிடி மாஸ்டரிங், விஎஃப்எக்ஸ் மற்றும் டிஐடி (DIT) ஸ்டோரேஜ் ஆகியவற்றிற்கான ஒரே இடமாக இந்த போஸ்ட் புரொடக்ஷன் ஸ்டுடியோஸ் உள்ளது. இந்த நிகழ்வில் அரசியல்வாதிகள், திரைப்பட பிரபலங்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் உள்ளிட்டப் பலர்…
Read Moreகிரியா லாவின் ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ நிகழ்வின் தொடக்க நிகழ்வு!
கிரியா லா மார்ச் 1, 2025 அன்று ‘ஐபி அண்ட் மியூசிக்: ஃபீல் தி பீட் ஆஃப் ஐபி’ என்ற தலைப்பில் அரை நாள் நிகழ்வை ஏற்பாடு செய்துள்ளது. வரவிருக்கும் வருடாந்திர கூட்டத்திற்கு முன்னோடியாக இந்த நிகழ்வு சர்வதேச டிரேட்மார்க் சங்கத்தால் நடத்தப்பட்டது. இது மே 17 முதல் மே 21, 2025 வரை கலிபோர்னியாவின் சான் டியாகோவில் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் இசைத் துறையைச் சேர்ந்த பல்வேறு வல்லுநர்கள் கலந்து கொண்டனர். டர்ன்கே மியூசிக் மற்றும் பப்ளிஷிங் பிரைவேட் லிமிடெட் நிர்வாக இயக்குநர் அதுல் சுரமணி மற்றும் சரிகம இந்தியா லிமிடெட் முன்னாள் துணைத் தலைவர் சஞ்சய் வாத்வா, ஏபி இன்டர்நேஷனலின் நிர்வாக இயக்குநர் ஸ்ரீதர் ஜெ, தென்னிந்திய இசைக் கம்பெனிகள் சங்கத்தின் (SIMCA) செயலாளர் சுவாமிநாதன், தேசிய விருது பெற்ற கிளாசிக்கல் பியானோ…
Read Moreசெகண்ட் சான்ஸ் ஆல்பம் பாடல் வெளியீட்டு விழா !!
*கவிப்பேரரசு வைரமுத்து வரிகளில், ஸ்ரீ பி இசையில், கலைமாமணி ஶ்ரீதர் மாஸ்டர் நடன அமைப்பில், ஜிவி பிரகாஷ் குமார், நரேஷ் ஐயர் மற்றும் ரக்ஷிதா குரல்களில் A Spot Light Entertainment தயாரிப்பில் சபரி மணிகண்டன் இயக்கத்தில், வாழ்வில் இரண்டாவது வாய்ப்பின் அருமையை பேசும் அழகான ஆல்பம் பாடலாக உருவாகியுள்ளது செகண்ட் சான்ஸ்…* மகேஷ் சுப்பிரமணியம், அம்மு அபிராமி நடித்துள்ள இப்பாடல் இன்று படக்குழுவினர் கலந்துக்கொள்ள பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில் கோலாகலமாக வெளியிடப்பட்டது. இளம் நட்சத்திரங்களான ரியோ, மாஸ்டர் மகேந்திரன் மற்றும் சௌந்தர் இவ்விழாவில் கலந்துகொண்டு பாடலை வெளியிட்டு, படக்குழுவை பாரட்டினர். இந்நிகழ்வினில் *நடிகர் ரியோ கூறியதாவது..* இந்த பாடலில் மகேஷ் மற்றும் அபிராமி இருவரின் பர்ஃபாமன்ஸ் மிகப்பிரமாதமாக இருக்கிறது. நானும் மகேஷும் ஜோடி ரியாலிட்டி ஷோவில் ஒன்றாக பங்கேற்றோம். ஜிவி பிரகாஷ் மற்றும் நரேஷ்…
Read MoreY S R பிலிம்ஸ் சார்பில் யுவன் சங்கர் ராஜா தயாரிக்கும் ரியோ ராஜின் ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீடு
YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ரியோ ராஜ் நடிப்பில் அறிமுக இயக்குநர் ஸ்வினீத் எஸ் சுகுமார் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘ஸ்வீட்ஹார்ட்’ படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா சென்னையில் சிறப்பாக நடைபெற்றது. ‘ஸ்வீட்ஹார்ட் ‘ எனும் திரைப்படத்தில் ரியோ ராஜ், கோபிகா ரமேஷ், ரஞ்சி பணிக்கர், ரெடின் கிங்ஸ்லி, அருணாசலேஸ்வரன், சுரேஷ் சக்கரவர்த்தி, துளசி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். பாலாஜி சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தொகுப்பு பணிகளை தமிழரசன் மேற்கொள்ள, கலை இயக்கத்தை சிவசங்கர் கவனித்திருக்கிறார். காமெடி வித் ரொமாண்டிக் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை YSR பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் யுவன் சங்கர் ராஜா தயாரித்திருக்கிறார். இந்த திரைப்படத்தை தமிழகம் முழுவதும் ஃபைவ் ஸ்டார் செந்தில் வழங்குகிறார்.…
Read Moreபிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது :நடிகர் மாதவன் ஆதங்கம்!
Parent Geenee : குழந்தைகளின் செல்போனுக்கு ஒரு கண்காணிப்பு கேமரா! இப்போதெல்லாம் பிஞ்சிலேயே பழுத்தது போல் குழந்தைகளின் பேச்சு உள்ளது என்று நடிகர் மாதவன் ஆதங்கத்துடன் பேசினார்.இது பற்றிய விவரம் வருமாறு: நடிகர் மாதவனைப் பங்குதாரராகக் கொண்டு வந்துள்ள ‘பேரண்ட் Army (Parent Geenee )என்கிற செயலியின் அறிமுக விழா சென்னையில் ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் நடந்தது. இந்தச் செயலி பெற்றோருக்கு அடங்காமல் தறி கெட்டு தாராள சுதந்திரங்களுடன் இயங்கும் குழந்தைகளின் சமூக ஊடகம் மற்றும் இணைய உலகின் ஈடுபாட்டையும் செயல்பாட்டையும் கண்காணிக்கிறது. உடனிருந்து பெற்றோர்கள் கவனிக்க முடியாத சூழலில் இந்தச் செயலி கண்காணித்து அவர்களுக்கு உதவுகிறது. இதன் மூலம் குழந்தைகளைக் கண்காணிக்கவும் நல்வழிப்படுத்தவும் வாய்ப்பாக அமைகிறது. இதன் அறிமுக விழா சென்னையில் நடந்தது.செயலியை அறிமுகப்படுத்தி வைத்து நடிகர் மாதவன் பேசும்போது, “ஒரு பெற்றோராக இன்று…
Read Moreமும்பையில் நடைபெற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் அக்ஷய் குமார் வெளியிட்ட ‘கண்ணப்பா’ டீசர்!
கண்ணப்பாவின் புகழ்பெற்ற கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு காவிய திரைப்படமான ‘கண்ணப்பா’-வுக்கான மிகவும் எதிர்பார்க்கப்பட்ட டீஸர் மும்பையில் நடைபெற்ற சிறப்பு ஊடக நிகழ்வில் வெளியிடப்பட்டது. பாலிவுட் சூப்பர் ஸ்டார் அக்ஷய் குமார், முன்னணி நடிகர் விஷ்ணு மஞ்சு, இயக்குநர் முகேஷ் குமார் சிங் மற்றும் படக்குழுவினர் இதில் பங்கேற்றனர். படத்தின் நிர்வாக தயாரிப்பாளரான வினய் மகேஸ்வரி, வரவேற்புரை நிகழ்த்திய இந்த நிகழ்ச்சியில், திரையிடப்பட்ட கண்ணப்பா பட டீசர், பத்திரிகையாளர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றதோடு, பக்தி, தியாகம் மற்றும் பிரமாண்டமான வரலாற்று விவரிப்பைப் பற்றிய ஒரு பார்வையை வழங்கும் விதத்தில் இருந்தது. முகேஷ் குமார் சிங் இயக்கிய மற்றும் எம். மோகன் பாபு தயாரித்த இப்படம், பார்வையாளர்களை பக்தி மற்றும் உணர்ச்சிபூர்வமான பயணத்திற்கு அழைத்துச் செல்லும் நோக்கத்தில் உருவாக்கப்பட்டுள்ளது என்பதை டீசர் பிரதிபலிக்கும் வகையில் இருந்தது. இப்படத்தில் சிவபெருமான்…
Read More“ஜீ.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் ‘கிங்ஸ்டன்’ படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா
ஜீ ஸ்டுடியோஸ் – பேரலல் யுனிவர்ஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்திருக்கும் ‘கிங்ஸ்டன்’ திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. இதனை தமிழில் முன்னணி நட்சத்திர நடிகரான சிவ கார்த்திகேயன் அவருடைய சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார். முன்னதாக நடைபெற்ற முன்னோட்ட வெளியீட்டு விழாவில் தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தாணு, முன்னணி நட்சத்திர இயக்குநர்களான வெற்றிமாறன்- சுதா கொங்காரா- பா. ரஞ்சித் – அஸ்வத் மாரிமுத்து – ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். அறிமுக இயக்குநர் கமல் பிரகாஷ் இயக்கத்தில் உருவாகி உள்ள ‘கிங்ஸ்டன் ‘ எனும் திரைப்படத்தில் ஜீ. வி. பிரகாஷ் குமார், திவ்யபாரதி, அழகம்பெருமாள், ‘மேற்குத் தொடர்ச்சி மலை’ ஆண்டனி, சேத்தன், குமரவேல், சபுமோன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ஜீ. வி. பிரகாஷ் குமார்…
Read Moreசட்டி கறி – ECR அக்கரையில் ஈரோடு ஸ்டைலிலான சிறந்த உணவகம் அறிமுகம்!
சட்டி கறி – ECR அக்கரையில் ஈரோடு ஸ்டைலிலான சிறந்த உணவகம் அறிமுகம் ‘சட்டி கறி ‘ உணவகம் – ஈரோடு பகுதியில் பிரபலமான ஸ்பெஷல் நாட்டுக்கோழி உணவு வகைகளுக்காகவே சென்னை கிழக்கு கடற்கரை சாலை பகுதியில் அமைந்துள்ள அக்கரை எனும் இடத்தில் தொடங்கப்பட்டிருக்கிறது. இதனை முன்னணி நட்சத்திர நடிகரான ரவி மோகன் மற்றும் தயாரிப்பாளர் டாக்டர் ஐசரி கே. கணேஷ் ஆகியோர் திறந்து வைத்தனர். இந்த உணவகத்தின் சிறப்பு அம்சங்கள் குறித்து உரிமையாளரும் உணவு ஆர்வலருமான அஷ்வின் மற்றும் காயத்ரி ஆகியோர் பேசுகையில், ” உணவே மருந்து! ஆரோக்கியத்தின் ஆணிவேர் உணவு ! எங்களுடைய சட்டி கறி உணவகத்திற்கு வருகை தரும் விருந்தினர்களையும், வாடிக்கையாளர்களையும், அவர்களின் வீட்டை போல் உணர வைப்பதும், அவர்களுக்கு ஒப்பற்ற சுவையுடன் கூடிய உணவை வழங்குவதும் தான் எங்களுடைய முதன்மையான இலக்கு.…
Read More‘ஆர்யா பற்றி கேள்விப்பட்டது வேறு: நடந்தது வேறு: கதை கேட்ட 20 நிமிடத்தில் நடிக்க ஓகே சொன்னார் ” – மிஸ்டர் x படத்தின் இயக்குனர் மனு ஆனந்த் பரவசம்
லப்பர் பந்து படத்தின் மிகப்பெரிய வெற்றியைத் தொடர்ந்து பிரின்ஸ் பிக்சர்ஸ் S. லஷ்மன் குமார் தயாரிப்பில் மற்றும் A. வெங்கடேஷ் இணை தயாரிப்பில் மிகப் பிரமாண்டமாக உருவாகி இருக்கும் படம் ‘மிஸ்டர் எக்ஸ் (Mr X). வெற்றிப் படமான எப்ஐஆர் படத்தை இயக்கிய மனு ஆனந்த் இந்தப்படத்தை இயக்கியுள்ளார். ஆர்யா கதாநாயகனாக நடிக்க, கவுதம் கார்த்திக், சரத்குமார், மஞ்சு வாரியார், அனகா, அதுல்யா ரவி, ரைஸா வில்சன், காளி வெங்கட் மற்றும் பலர் நடித்துள்ளனர். படத்திற்கு திபு நிணன் இசையமைத்துள்ளார். அருள் வின்சென்ட் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பை பிரசன்னா கவனித்துள்ளார். இந்தப்படத்தின் டீசர் மற்றும் ஃபர்ஸ்ட் சிங்கிள் வெளியீட்டு நிகழ்வு சென்னை நெக்சஸ் விஜயா மாலில் நடைபெற்றது. *இந்த நிகழ்வில் நடிகர் ஆர்யா பேசும்போது,* “இந்த படத்துக்கு எனக்கு சிபாரிசு செய்ததே தயாரிப்பாளர் S. லஷ்மன் குமார்…
Read More