நடிகரும் சமூக ஆர்வலருமான சௌந்தரராஜா, தனது “மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை” சார்பில், ஒவ்வொரு ஆண்டும் நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு நேர்மையாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு விருதுகளையும் ரொக்க பரிசுகளையும் வழங்கி வருகிறார். அந்த வகையில் இந்த ஆண்டு தஞ்சாவூர் மாவட்டத்தில் 11 இயற்கை விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருதும், தலா ரூ.5,000 ரொக்கப் பரிசும் வழங்கி கவுரவித்தார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியதாவது: “நம்மாழ்வாரின் பிறந்த நாளை முன்னிட்டு தஞ்சாவூரைச் சேர்ந்த 11 இயற்கை விவசாயிகளுக்கு எனது மண்ணுக்கும் மக்களுக்கும் அறக்கட்டளை மூலம் விருதும் ரொக்கப் பரிசும் வழங்கி, அவர்களுக்கான எனது நன்றியை வெளிப்படுத்தியுள்ளேன். இதை எனது வாழ்க்கையின் மிகப்பெரிய அர்த்தமுள்ள தருணங்களில் ஒன்றாகக் கருதுகிறேன். கடந்த ஆண்டு மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் 11 விவசாயிகளுக்கு விருதுகளும் ரொக்கப் பரிசுகளும் வழங்கினோம். அப்போது…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
‘அன்பே டயானா’ நன்றி அறிவிப்பு விழா!!
‘மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ்’ (Million Dollar Studios) மற்றும் ‘நியோ கேசில் கிரியேஷன்ஸ்’ (Neo Castle Creations) இணைந்து தயாரிக்க, பாரி இளவழகன் இயக்கத்தில் ‘அன்பே டயானா’ திரைப்படம் ஜூலை 17, 2026 உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்திற்கான உற்சாக வரவேற்பைத் தொடர்ந்து, படக்குழு பத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து, படத்தின் வெற்றிக்கு நன்றி தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியில் படக்குழுவினர் மற்றும் படத்தில் நடித்த நடிகர்கள் கலந்து கொண்டு, திரைப்படம் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான தகவல்களை பத்திரிகையாளர்களுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… பாடலாசிரியர் முத்தமிழ் பேசியதாவது: “அனைவருக்கும் வணக்கம். ‘அன்பே டயானா’ திரைப்படத்தில் ‘தொடுவானம்’ என்ற பாடலை எழுதும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. இசையமைப்பாளர் பரத் சங்கரின் இனிய இசையிலும், அழகான காட்சிகளுடனும்…
Read More“இந்தியாவிலிருந்து உலக நாடுகளுக்கு இயேசு கிறிஸ்துவின் வரலாற்றை கொண்டு செல்லும் முயற்சி “பிரஜாபதி” – தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பாராட்டு !!
இயேசு கிறிஸ்துவின் வாழ்க்கை வரலாற்றை உலகத் தரத்தில் திரைப்படமாகப் பதிவு செய்யும் “பிரஜாபதி” திரைப்படத்தின் டிரெய்லர் வெளியீட்டு விழா, திரையுலக பிரபலங்கள், கிறிஸ்தவ அமைப்புகளைச் சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் மற்றும் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் முன்னிலையில் சிறப்பாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டதுடன், திரைப்படத்தின் நோக்கம், உருவாக்கப் பயணம் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து படக்குழுவினர் பகிர்ந்து கொண்டனர். சிறப்பு விருந்தினர்கள் டிரெய்லரை பார்த்து படக்குழுவிற்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். இந்நிகழ்வினில் தமிழக சட்டமன்ற பேரவை தலைவர் JCD பிரபாகர் பேசியதாவது.., “இந்த டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். பல நிகழ்ச்சிகள் இருந்தாலும், ரூபர்ட் ஐயா அழைத்தவுடன் உடனே ஒப்புக்கொண்டேன். ஏனென்றால், இது காலத்தின் கட்டாயமாக நடைபெற வேண்டிய ஒரு முக்கியமான முயற்சி என்று…
Read More“இதயம் முரளி” திரைப்பட நன்றி அறிவிப்பு விழா !!
Dawn Pictures நிறுவனத்தின் தயாரிப்பில், ஆகாஷ் பாஸ்கரன் எழுத்து இயக்கத்தில், அதர்வா முரளி நடித்துள்ள, “இதயம் முரளி” திரைப்படம் கடந்த ஜூலை 10 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம்பெரும் பாராட்டுக்களை குவித்து வெற்றி பெற்றுள்ளது. இன்பன் உதயநிதி வழங்க, ரெட் ஜெயன்ட் மூவிஸ் இப்படத்தைஉலகமெங்கும் வெளியிட்டது. இப்படத்தின் பெரும் வரவேற்பைப் தொடர்ந்து படக்குழுபத்திரிக்கை ஊடக நண்பர்களை சந்தித்து நன்றி தெரிவித்தனர். இந்நிகழ்வினில் சின்னி ஜெயந்த் பேசியதாவது.., “முதலில் இந்தப் படத்தின் இயக்குநர் ஆகாஷ் பாஸ்கரனுக்குநன்றி சொல்ல வேண்டும். இன்றைய தலைமுறையில் பலரும் பழைய நினைவுகளை மறந்துவிடுகிறார்கள். ஆனால் அந்த பழைய உணர்வுகளையும் நினைவுகளையும் அழகாக மீட்டெடுத்து திரையில் கொண்டு வந்த பெருமை இயக்குநர் ஆகாஷ்பாஸ்கரனுக்கே சேரும். அதர்வாவுடன் இது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவம். அவரது தந்தை முரளியுடன் இணைந்து…
Read Moreஉலகளாவிய டிரெய்லர் வெளியீட்டிற்கு முன்னதாக, புது டெல்லியில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் ‘ராமாயணம்’ திரைப்படத்தின் முதல் அறிமுகம்1
புது டெல்லி, 18 ஜூலை 2026:* இந்தியாவின் மிகப்பெரிய கலாச்சார பாரம்பரியத்தை உலக அரங்கில் பகிர்ந்து கொள்ளும் முக்கியமான தருணம். ராமாயணம் என்பது இதிகாச நூல் மட்டுமல்ல! நமது திருவிழாக்கள், வாழ்க்கை நெறிகள் மற்றும் தலைமுறை தலைமுறையாகக் கடத்தப்படும் கதைகளின் அங்கமாக இருந்து வருகிறது. இந்தியா மற்றும் உலகெங்கும் வாழும் இந்தியர்களின் அன்றாட வாழ்விலும் அது பிரதிபலிக்கிறது. இப்போது, அந்தப் பயணம் புதிய அத்தியாயத்தை தொடங்கியுள்ளது. ஜூலை 24 ஆம் தேதி உலகம் முழுவதும் டிரெய்லர் வெளியாகவுள்ளது. ஆனால், அதற்கு முன்னதாகவே, ‘ராமாயணம்’ திரைப்படத்தின் பிரத்யேக முதல் அறிமுக நிகழ்ச்சி டெல்லியில் நடைபெற்றது. ‘ராமாயணம் – பாரதத்திலிருந்து உலகம் வரை’ என்பதை உணர்த்தும் வகையில், இந்த நிகழ்வு ‘பிரதம் சங்கல்ப்’ எனும் பெயரில் நடைபெற்றது. இந்திய பாரம்பரியத்தில் ‘சங்கல்ப்’ என்பது மகத்தான முயற்சியைத் தொடங்குவதற்கு முன் மனப்பூர்வமாக…
Read Moreமுதல்வர் விஜய்க்கு மக்களும் அரசியல் கட்சிகளும் உரிய கால அவகாசம் வழங்க வேண்டும் – இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன்!
காமராஜர் ஆவணப்படம் மற்றும் திருக்குறள் இரண்டாம் பாகத்தின் மாதிரி காட்சி வெளியீட்டு விழா சென்னையில் பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் சமூகத்தின் முக்கிய ஆளுமைகள், மற்றும் திரை பிரபலங்கள் கலந்துகொள்ள இனிதே நடைபெற்றது. இந்நிகழ்வினில் இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன், காமராஜர் திரைப்படத்தை அரசுடமையாக்க வேண்டும் என்ற தனது கோரிக்கையை மீண்டும் வலியுறுத்தியதுடன், தற்போதைய அரசியல் சூழல் குறித்தும் தனது கருத்துகளை பகிர்ந்தார். இயக்குநர் A.J. பாலகிருஷ்ணன் பேசியதாவது.., , “அனைவருக்கும் மாலை வணக்கம். பெருந்தலைவர் காமராஜரின் 124-வது பிறந்தநாளில் உங்களைச் சந்திப்பதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன். காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக உருவாக்கும் வாய்ப்பு கிடைத்ததை என் வாழ்க்கையின் மிகப்பெரிய பாக்கியமாக கருதுகிறேன். நான் நெல்லை மாவட்டத்திலிருந்து சென்னை வந்து வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, 1994-ல் பெருந்தலைவர் காமராஜரின் உதவியாளர் வைரவன் அவர்களைச் சந்தித்தேன். காமராஜரின் வாழ்க்கையை திரைப்படமாக உருவாக்க…
Read Moreமிஷ்கின் நான் ஈன்றெடுக்காத பிள்ளை- தாணு புகழாரம்
வி கிரியேஷன்ஸ் கலைப்புலி எஸ் தானு தயாரிப்பில் மிஷ்கின் இயக்கத்தில் விஜய் சேதுபதி, ஷ்ருதி ஹாசன், ஐரா தயானந்த, ப்ரீதி கரன், மாளவிகா, தியா ஷர்மா, நாசர், கே எஸ் ரவிக்குமார், சம்பத் ராஜ், நரேன், கலையரசன் மற்றும் பலர் நடித்து விரைவில் திரைக்கு வரவிருக்கும் ட்ரெயின் (Train) படத்தின் இசை மற்றும் டீஸர் வெளியீட்டு விழா சத்தியம் சினிமாஸில் மிக பிரம்மாண்டமாக நடைபெற்றது இதில் மடோன் அஷ்வின், பி எஸ் வினோத் ராஜ், தமிழரசு பச்சைமுத்து, அருண் மாதேஸ்வரன், அமீர், விக்னேஷ் சிவன், சசி, ஆர் பார்த்திபன், ராம், வெற்றிமாறன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். *தயாரிப்பாளர் கலைப்புலி எஸ் தானு* அவர்கள் பேசும்பொழுது இன்ப நாள் இது இனிய நாள் இது. மிஷ்கின் பற்றி சொன்னால் நான் ஈன்று எடுக்காத பிள்ளை. எல்லா படத்திற்கும்…
Read Moreமுதலமைச்சர் விஜய்க்கு விரைவில் பாராட்டு விழா! – ‘வாழ்க்கையே போராட்டம்’ பட பூஜையில் இயக்குநர் பேரரசு தகவல்
நடிகர் விவேக் உடல் பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து பிரபலமான கிளி ராமச்சந்திரன் என்கிற ஏ.வி.ராமச்சந்திரன், இயக்குநர் அவதாரம் எடுத்திருக்கிறார். அவர் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படத்திற்கு ‘வாழ்க்கையே போராட்டம்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. ஏ.வி.ஆர் இண்டர்நேஷ்னல் பிலிம்ஸ் சார்பில் எஸ்.கே.ஏ.அசோக் குமார் தயாரித்து, நாயகனாக நடிக்கும் இப்படத்தில் செந்தில், பாவா லட்சுமணன், முத்துக்காளை, சுப்பராஜ், ரெபக்கா ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்க, இவர்களுடன் இயக்குநர்கள் பேரரசு மற்றும் சுப்பிரமணிய சிவா ஆகியோர் மிக முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். அரசியல் நையாண்டி திரைப்படமாக உருவாகும் இப்படத்திற்கு வேலன் சகாதேவன். ஜி இசையமைக்க, வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்கிறார். கவிஞர் எழிலரசன் பாடல்கள் எழுத, ரவி தேவ் நடனக் காட்சிகளை வடிவமைக்கிறார். பி.ஆர்.ஓவாக விஜய் கார்த்திக் பணியாற்றுகிறார். இப்படத்தின் துவக்க விழா இன்று (ஜூலை…
Read Moreசரத்குமாரின் பிறந்தநாளில் காவ்யா ஃபிலிம் கம்பனியின் ‘புரொடக்ஷன் நம்பர் 12’ அறிவிப்பு!
‘2018’, ‘ரேக்காசித்திரம்’ மற்றும் ‘மாளிகப்புரம்’ போன்ற பல பிளாக்பஸ்டர் மற்றும் எமோஷனல் படங்களை தயாரித்த பிரபல தயாரிப்பு நிறுவனமான காவ்யா ஃபிலிம் கம்பனி (Kavya Film Company), தயாரிப்பாளர் வேணு குன்னப்பள்ளி தலைமையில் தமிழ் திரையுலகில் தனது அடுத்த பிரம்மாண்ட படைப்பை அறிவித்துள்ளது. முன்னணி நட்சத்திரமான ஆர். சரத்குமாரின் பிறந்தநாளான இன்று (ஜூலை 14, 2026), அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் விதமாக, தற்காலிகமாக “புரொடக்ஷன் நம்பர் 12” (Production No. 12) என்று பெயரிடப்பட்டுள்ள புதிய தமிழ் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பு நிறுவனம் வெளியிட்டுள்ளது. காவ்யா ஃபிலிம் கம்பனி மற்றும் சரத்குமார் இணையும் முதல் படம் இது என்பதால், இக்கூட்டணி மீதான எதிர்பார்ப்பு இப்போதே அதிகரித்துள்ளது. ஜி.வி. பிரகாஷ் குமார் நடிப்பில் உருவான ‘கிங்ஸ்டன்’ படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் கமல் பிரகாஷ் இப்படத்தை…
Read Moreஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த திரைப்படம் ‘மஹாகாளி’ – 125 நாள் படப்பிடிப்பு நிறைவு!!
ஹனு-மேன் சினிமாட்டிக் யுனிவர்ஸின் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ – 125 நாட்கள் படப்பிடிப்பை நிறைவு செய்து இறுதிக்கட்டத்தை எட்டியது; ரோஹித் சராஃப் தனது பகுதிகளின் படப்பிடிப்பை முடித்துள்ளார் ! பிரசாந்த் வர்மா சினிமாட்டிக் யுனிவர்ஸ் (PVCU)-இன் மிகவும் எதிர்பார்க்கப்படும் அடுத்த அத்தியாயமான ‘மஹாகாளி’ தற்போது தனது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. RKD Studios சார்பில் RK துக்கல் மற்றும் ரிவாஸ் ரமேஷ் துக்கல் தயாரிக்கும் இப்படத்தில், பிரசாந்த் வர்மா கிரியேட்டராகவும், பூஜா அபர்ணா கொல்லுரு இயக்குநராகவும் செயல்படுகின்றனர். மிகப்பெரிய புராண காவியமாக உருவாகி வரும் இப்படம் இதுவரை 125 நாட்கள் படப்பிடிப்பை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளது. பிரம்மாண்டமான திரையரங்கு அனுபவத்தை வழங்கும் வகையில், IMAX வடிவத்திற்காக இப்படம் உருவாக்கப்பட்டு வருகிறது. கண்கவர் காட்சியமைப்புகளும், முழுமையான பெரிய திரை அனுபவமும் ரசிகர்களுக்காக காத்திருக்கின்றன. படப்பிடிப்பில் மற்றொரு முக்கிய மைல்கல்லாக, நடிகர்…
Read More
