D.R பிக்சர்ஸ் தயாரிப்பில் சத்யவதி அன்பலகன் மற்றும் தனுஷ் ராஜ்குமார் தயாரிப்பில் உருவான “ஹீலர்” திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று இனிதே தொடங்கியது. இதில் வெற்றி, ராதிகா ப்ரீத்தி,அபினயா, வினோத் சாகர் மற்றும் பலர் நடித்துள்ளனர். மேலும் இயக்குனர் பேரரசு,தயாரிப்பாளர் மற்றும் நடிகருமான திரு.பழக்கருப்பையா, நடிகர் சரண்ராஜ், நடிகர் கூல் சுரேஷ் , இயக்குனர் சுப்ரமணியம் சிவா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு (15.12.2024) பிரசாத் லேப்பில் இனிதே துவங்கியது. நடிகர்கள் : வெற்றி, ராதிகா ப்ரீத்தி, பேரரசு, பழக்கருப்பையா, சரண்ராஜ், வினோத் சாகர், சுப்ரமணியம் சிவா, அபினயா தொழில்நுட்ப கலைஞர்கள்: தயாரிப்பு நிருவனம் : D.R பிக்சர்ஸ் தயாரிப்பாளர் : சத்யவதி அன்பலகன், தனுஷ் ராஜ்குமார் இயக்கம் : தனுஷ் ராஜ்குமார் இசை : ஜுபின் ஒளிப்பதிவாளர் : இளையராஜா …
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
சீமான் அண்ணனுக்கு ஸ்பெஷல் நன்றி – அலங்கு பட விழாவில் பேசிய நடிகர் குணாநிதி!
அலங்கு திரைப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நேற்று சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில் படத்தின் கலைஞர்கள், தொழில்நுட்ப கலைஞர்கள் மற்றும் விருந்தினர்கள் கலந்து கொண்டனர். மேலும், இயக்குனர் மிஷ்கின் சிறப்பு விருந்தினராக பங்கு பெற்றார். விழாவில் பேசிய இயக்குனர் மிஷ்கின், “ அனைருக்கும் மாலை வணக்கம். இயக்குனர் சக்தி வந்து என்னை அழைத்தார் . நான் உடனே வருகிறேன் என்று கூறினேன். இயக்குனர் சக்தி என்னுடைய அஞ்சாதே படத்தில் உதவி இயக்குனராக பணியாற்றியவர். மிகவும் உணர்ச்சிப்பூர்வமானவர் சக்தி. சினிமா பயணத்தில் இருந்து விலகி மீண்டும் சினிமாவிற்குள் வந்தார். ரொம்ப நாளைக்கு முன்பு ஒரு கதை கூறினார். நாய்களை பற்றிய கதை அது. நான் நாய்களோடு அதிகம் பழகி இருக்கிறேன், நாய்களோடு வாழ்ந்திருக்கிறேன். பொதுவாகவே நான் என்னுடைய துணை இயக்குனர்களுடன் அதிகம் பேசுவது பேரன்பை பற்றியும் கருணையை பற்றியும் தான். இயக்குனர்…
Read Moreசங்கரதாஸ் சுவாமிகள் குருபூஜையில் கலந்து கொண்ட நடிகர் சௌந்தரராஜா
தமிழ் திரையுலகில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் சௌந்தரராஜா. இவர் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினராக கடந்த 3 ஆண்டுகளாக இருந்து வருகிறார். நடிப்பு மட்டுமின்றி சமூக பணிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வரும் இவர், மரம் நடுவது மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சார்ந்த சேவைகளையும் செய்து வருகிறார். இந்த நிலையில், மதுரையில் நடைபெற்ற தவத்திரு டி.டி. சங்கரதாஸ் சுவாமிகளின் 102-வது குருபூஜை விழாவில் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டார். தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் அதன் துணை தலைவர் திரு. பூச்சி முருகன் மற்றும் தென்னிந்திய நடிகர் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் நடிகர் சௌந்தரராஜா கலந்து கொண்டனர். சங்கரதாஸ் சுவாமிகளின் குருபூஜை விழாவில் மதுரை நாடக நடிகர் சங்க நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், சங்க உறுப்பினர்கள் மற்றும் பலர்…
Read Moreசென்னை மதுரவாயல் ஏ ஜி எஸ் திரையரங்கில் சிறப்பு காட்சியுடன் ரசிகர்கள் நூறாவது நாள் கொண்டாட்டம்
ரசிகர்கள் பேரார்வத்துடன் எதிர்பார்த்த தளபதி விஜய்யின் ‘கோட்’ திரைப்படம் செப்டம்பர் 5 அன்று வெளியாகி உலகெங்கும் பெரும் வெற்றி பெற்று ரூபாய் 460+ கோடி வசூல் செய்து 2024ம் ஆண்டின் நெம்பர் 1 பாக்ஸ் ஆபிஸ் வெற்றி திரைப்படமாக நூறாவது நாளை நிறைவு செய்துள்ளது. இந்த ஆண்டு வெளியான தமிழ் திரைப்படங்களில் மாபெரும் வெற்றிப் படமாக உருவெடுத்துள்ள ‘கோட்’ திரைப்படத்தின் நூறாவது நாளை கொண்டாடும் விதமாக சென்னை மதுரவாயலில் உள்ள ஏ ஜி எஸ் திரையரங்கில் ரசிகர்களின் உற்சாக பங்கேற்புடன் சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. 2024ம் வருடத்தின் மிக பிரம்மாண்ட திரைப்படங்களில் ஒன்றான ‘கோட்’ படத்தை ஏ ஜி எஸ் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் 25வது படைப்பாக கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ். சுரேஷ் ஆகியோர் பெரும் பொருட்செலவில் தயாரித்தனர். வெங்கட்…
Read Moreஆக்ஷன் திரில்லர் ‘தென் சென்னை’–செய்தியாளர் சந்திப்பு
ரங்கா ஃபிலிம் கம்பெனி சார்பில் அறிமுக இயக்குநர் ரங்கா தயாரித்து இயக்கி நடித்திருக்கும் ஆக்சன் திரில்லர் டிராமா திரைப்படம். தென் சென்னை. இன்று வெளியாகும் இப்படம் பத்திரிகையாளர்களுக்கென பிரத்தியேகமாக முன் திரையிடல் செய்யப்பட்டது. இதனைத்தொடர்ந்து படக்குழுவினர் பத்திரிகை ஊடக நண்பர்களைச் சந்தித்து படம் குறித்த தவல்களைப் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வினில்… நடிகர் இளங்கோ பேசியதாவது… இயக்குநர் என்னிடம் கதை சொன்ன போது, எப்படி என்னை பாரில் இருக்கும் கேரக்டருக்கு தேர்ந்தெடுத்தீர்கள்? எனக் கேட்டேன். ஆனால் அவர் உங்களை சமூக வலைத்தள பக்கத்தில் பார்த்திருக்கிறேன் அதில் ஸ்டைலாக டிரெஸ்ஸிங் செய்வதைப் பார்த்துத் தேர்ந்தெடுத்தேன் என்றார். ஒரு காட்சி எடுக்கும் முன், அதை நண்பர்களை வைத்து, போனில் எடுத்து, அதைக்காட்டி தான் எடுப்பார். அந்தளவு தயாராக இருப்பார். என்ன தேவையோ அதைச் சரியாக வாங்கி விடுவார். படம் மிக அருமையாக…
Read Moreஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் பிரபல சினிமா நிறுவனம்
பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம், தொலைக்காட்சி தொடர்கள் என பல்வேறு கலை சார்ந்த பணிகளை செய்து வருகிறது. இந்த நிறுவனம் மலேசியாவில்’காரசாரம்’ என்கிற பெயரில் உணவகத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மலேசியாவில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற உணவகமாக இந்த காரசாரம் உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. மலேசியாவின் புகழ்பெற்ற காரசாரம் உணவகம் இந்தியா மற்றும் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, துபாய், லண்டன் உள்பட பிற நாடுகளிலும் தொடங்க இருக்கிறது என்று உணவக உரிமையாளர் டத்தோ சரவணன் தெரிவித்திருக்கிறார். இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை அதன் தன்மை மாறாமல் , அதன் மருத்துவகுணங்கள் குறையாமலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இந்த உணவகத்தில் மண்சட்டிச்சோறு, என்கிற உணவு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.…
Read Moreஎத்தனை காலம் புஷ்பா மாதிரி படங்கள் உங்களைக் காப்பாற்றும்? – தயாரிப்பாளர் கே ராஜன் !!
SIEGER PICTURES ( சீகர் பிக்சர்ஸ் ) நிறுவனம் சார்பில் கமலகுமாரி, ராஜ்குமார் ஆகியோர் தங்களது இரண்டாவது படைப்பாகத் தயாரிக்க, இயக்குநர் ராஜவேல் கிருஷ்ணா இயக்கத்தில், நடிகை ரக்ஷிதா மஹாலஷ்மி, அபி நட்சத்ரா, மற்றும் ஆனந்த் நாக், அம்ரிதா ஷெல்டர், சிவம் நடிப்பில், சஸ்பென்ஸ் திரில்லராக உருவாகியுள்ள படம் “Extreme”( எக்ஸ்டிரீம் ). இம்மாதம் 20 ஆம் தேதி இப்படம் வெளியாகவுள்ள நிலையில், இப்படத்தின் இசை வெளியீட்டு விழா, படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, பத்திரிக்கை ஊடக நண்பர்கள் முன்னிலையில், நேற்று கோலாகலமாக நடைபெற்றது. இவ்விழாவினில் தயாரிப்பாளர் ராஜ்குமார் பேசியதாவது… இப்படம் எங்களது இரண்டாவது படம். நண்பன் ராஜவேல் முதலில் ஒரு கதை சொன்ன போது, அதை ஷார்ட் ஃபிலிமாக எடுத்தோம். அந்தப்படம் நிறைய விருதுகள் வாங்கியது, அதில் என் நடிப்பும் பாராட்டப்பட்டது. பின் நாம் ஏன் படம்…
Read MoreSR PRODUCTIONS தயாரிப்பில், “மெட்ராஸ்காரன்” திரைப்பட இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா !!
SR PRODUCTIONS சார்பில் B.ஜகதீஸ் தயாரிப்பில், ரங்கோலி பட இயக்குநர் வாலி மோகன் தாஸ் இயக்கத்தில், மலையாள நடிகர் ஷேன் நிகாம், கலையரசன், நிஹாரிகா நடிப்பில், புதுமையான ஆக்சன் டிராமாவாக உருவாகியுள்ள திரைப்படம் “மெட்ராஸ்காரன்”. விரைவில் திரைக்கு வரவுள்ள இப்படத்தின் இரண்டாவது சிங்கிள் “காதல் சடுகுடு” பாடல் வெளியீட்டு விழா, தனியார் மாலில், மக்கள் முன்னிலையில் படக்குழுவினருடன் திரைப்பிரபலங்கள் கலந்துகொள்ள, சிறப்பாக நடைபெற்றது. ஆடல், பாடல், நடனம் மற்றும் மேஜிக் ஷோ என மக்கள் முன்னிலையில் கோலாகலமாக நடைபெற்ற இந்நிகழ்வினில்… இயக்குநர் வாலி மோகன் தாஸ் பேசியதாவது… மிக மிகச் சந்தோசமாக இருக்கிறது. படம் ஆரம்பித்து இவ்வளவு தூரம் வந்துவிட்டது. விரைவில் உங்களை மகிழ்விக்கத் திரையில் இப்படத்தைக் கொண்டு வருகிறோம். இந்தப்படம் ஆரம்பமாக மிக முக்கிய காரணமாக இருந்த ஐஸ்வர்யா தத்தாவுக்கு நன்றி. சதீஷ் மாஸ்டர், அருமையாக…
Read Moreதயாரிப்பாளர், விநியோகஸ்தர், நடிகர் ஜே எஸ் கே இயக்குநர் அவதாரம் எடுத்துள்ள திரில்லர் திரைப்படமான ‘ஃபயர்’ இசை வெளியீடு
பல்வேறு வெற்றி படங்களின் விநியோகஸ்தராக தடம் பதித்து, தேசிய விருது பெற்ற மற்றும் சூப்பர் ஹிட் திரைப்படங்களின் தயாரிப்பாளராக உயர்ந்து, ‘அநீதி’, ‘வாழை’, உள்ளிட்ட படங்களில் நடிகராகவும் முத்திரை பதித்துள்ள ஜே எஸ் கே இயக்குநராக அவதாரம் எடுத்துள்ள ‘ஃபயர்’ திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. பாலாஜி முருகதாஸ், ரச்சிதா மகாலட்சுமி, சாக்ஷி அகர்வால், காயத்ரி ஷான், சாந்தினி தமிழரசன், சிங்கம் புலி, சுரேஷ் சக்ரவர்த்தி மற்றும் பத்மன் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கும் இப்படம் தமிழகத்தையே உலுக்கிய ஒரு உண்மை சம்பவத்தால் உந்தப்பட்ட விறுவிறுப்பான திரில்லர் ஆகும். ஜே எஸ் கே ஃபிலிம் கார்ப்பரேஷன் பேனரில் தயாராகும் ‘ஃபயர்’ திரைப்படத்திற்கு டி கே (அறிமுகம்) இசையமைத்துள்ளார். சதீஷ் ஜி பாபு ஒளிப்பதிவு செய்துள்ளார். இயக்குநரும் பிரபல வசனகர்த்தாவுமான எஸ் கே ஜீவா வசனங்களை…
Read Moreஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் தயாரிப்பில், சரிகமா நிறுவனம் வழங்கும், இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில், “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆன்மிக ஆல்பம் !!
தென்னிந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளரான வித்யாசகர், முதன்முறையாக ஆன்மிக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். ஐயப்ப சாமியின் புகழ் பாடும் வகையில் உருவாகியுள்ள, “அஷ்ட ஐயப்ப அவதாரம்” ஆல்பத்தை, இந்தியாவின் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஶ்ரீ ஐயப்பன் அறம் சேவா லிமிடட் சார்பில், முரளிகிருஷ்ணன் சிங்கப்பூர் இந்த ஆல்பத்தை தயாரித்துள்ளார். தென்னிந்திய சினிமாவில் 225 க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து புகழ்பெற்றவர், இசையமைப்பாளர் வித்யாசாகர். முன்னணி நட்சத்திரங்களின் வெற்றிப்பாடல்கள் முதல், காலத்தால் அழியாத பல அற்புதமான மெலடி பாடல்களைத் தந்து, மக்கள் மனதில் நீங்காத இடம் பிடித்த வித்யாசாகர், முதன் முறையாக ஆன்மீக பாடல்களுக்கு இசையமைத்துள்ளார். சுயாதீன ஆல்பங்கள், திரைப்பட பாடல் இசை, ஆன்மீக ஆல்பம் என இந்திய இசைத்துறையில் கோலோச்சும் முன்னணி இசை நிறுவனமான சரிகமா நிறுவனம் இந்த “அஷ்ட ஐயப்ப அவதாரம்” இசை…
Read More
