தமிழ் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சௌந்தரராஜா. இவர் சுந்தரபாண்டியன், வருத்தப்படாத வாலிபர் சங்கம், ஜிகர்தண்டா, பூஜை, தெறி, தர்மதுரை, றெக்க, கத்தி சண்டை, பிகில் மற்றும் பல்வேறு படங்களில் நடித்து புகழ் பெற்றவர். பிகில் படத்தில் நடிகர் விஜய்யுடன் நடித்த பிறகு அவருக்கு நெருக்கமான இவர், நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடர்பான அறிவிப்பை வெளியிட்டதில் இருந்து பல்வேறு நடவடிக்கைகளில் சௌந்தரராஜா ஈடுபட்டு வருகிறார். அதன்படி நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெயர் அறிவிக்கப்பட்டு, கட்சி கொடி அறிமுகம் செய்யப்பட்ட மறுநாளே தமிழக வெற்றிக் கழக கட்சி கொடியுடன் மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவிலுக்கு சென்ற நடிகர் சௌந்தரராஜா கோவில் சன்னதியில் கட்சி கொடியை வைத்து சிறப்பு பூஜைகளை செய்தார். மேலும், தமிழக வெற்றிக் கழகம் கட்சியின் தலைவர் விஜய் குறித்து தொலைகாட்சி…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
”இளைஞர்களுக்கு வழிகாட்டும் ஒரு படைப்பாக ‘கலன்’ இருக்கும்” – தயாரிப்பாளர் சங்க செயற்குழு உறுப்பினர் விஜயமுரளி நம்பிக்கை
ராமலெட்சுமி புரொடக்ஷன்ஸ் மற்றும் அனுசுயா ஃபிலிம் புரொடக்ஷன் நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கும் படம் ‘கலன்’. ‘ கிடுகு’ படத்தை இயக்கிய வீரமுருகன் எழுதி இயக்கியிருக்கும் இப்படத்தில் அப்புகுட்டி, தீபா , யாசர் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் சம்பத் ராம், சேரன் ராஜ், மணிமாறன், ராஜேஷ், பீட்டர் சரவணன், வேலு, முகேஷ், மோகன், பாலா உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். ஜெர்சன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு ஜெயக்குமார் மற்றும் ஜேகே ஒளிப்பதிவு செய்திருக்கிறார்கள். குருமூர்த்தி மற்றும் குமரி விஜயன் பாடல்கள் எழுதியுள்ளனர். திலகராஜன் அம்பேத் கலை இயக்குநராக பணியாற்ற, வெரைட்டி பாலா நடனக் காட்சிகளை வடிவமைத்துள்ளார். விக்னேஷ் வர்ணம் மற்றும் விநாயகம் படத்தொகுப்பு செய்திருக்கிறார்கள். சவுண்ட் எஞ்சினியராக சந்தோஷ் பணியாற்ற, துணை இணை இயக்குநராக ஜெகன் ஆல்பர்ட். துணை இயக்குநராக பாலாஜி சாமிநாதன்,மகேஷ் மற்றும்…
Read Moreநடிகர் கவினின் ’ப்ளடி பெக்கர்’ படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட்!
ஃபிலாமெண்ட் பிக்சர்ஸ், இயக்குநர் நெல்சன் திலீப்குமார் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் சிவபாலன் முத்துக்குமார் இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் இந்த மாதம் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கும் திரைப்படம் ‘ப்ளடி பெக்கர்’. இந்தப் படத்தின் ப்ரீ ரிலீஸ் ஈவண்ட் நடைபெற்றது. கலை இயக்குநர் மணிமொழியன் ராமதுரை பேசியதாவது, “இந்தப் படம் நான் நள்ளிரவு ஒரு மணிக்கு ஒத்துக்கொண்டேன். நான் செய்ய நினைத்ததை சிறப்பாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன்” என்றார். எடிட்டர் நிர்மல், “இந்தப் படம் ஆரம்பிக்க காரணமாக இருந்த நெல்சன் சாருக்கு நன்றி. சிவபாலன் சார் எங்கள் டீம் என்பதால் காமெடி படம்தான் எடுப்பார் என நினைத்தேன். ஆனால், அதையும் தாண்டில் நல்ல கதையை படமாகக் கொடுத்திருக்கிறார். டிரெய்லரில் இருப்பது போலதான் கதை இருக்கும். நிச்சயம் தீபாவளிக்கு படம் பார்த்து…
Read Moreஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தொடங்கி வைத்த ‘மொய் விருந்து’ உணவு பயணம்
சர்வதேச உணவு நாளை முன்னிட்டு சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் ( Help On Hunger) எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் பசித்தவர்களுக்கு ருசியான உணவை வழங்குவதற்காக ‘மொய் விருந்து’ எனும் உணவு வழங்கும் பயணத்தை ஒருங்கிணைத்தது. இதனை இந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் விளம்பர தூதுவரும், முன்னணி நட்சத்திர நடிகையுமான ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் ஆகியோர் கொடி அசைத்து தொடங்கி வைத்தனர். சென்னையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஹெல்ப் ஆன் ஹங்கர் எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் – நாள்தோறும் பசித்தவர்களுக்கு அவர்கள் இருக்கும் இடங்களை தேடி சென்று உணவு வழங்கி வருகிறது. இந்த வகையில் தினமும் 200க்கும் மேற்பட்டவர்களுக்கு உணவு சேவையை மேற்கொண்டு வரும் இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம் … உலக உணவு…
Read More‘நேச்சுரல் ஸ்டார்’ நானி நடிக்கும் ‘#நானிஓடேலா2 ‘படத்தின் தொடக்க விழா
‘நேச்சுரல் ஸ்டார்’ நானி – இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா – தயாரிப்பாளர் சுதாகர் செருகுரி – எஸ் எல் வி சினிமாஸ் – கூட்டணியில் உருவாகும் ‘#நானிஓடேலா 2 ‘எனும் திரைப்படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. ‘நேச்சுரல் ஸ்டார்’ நானி, ‘தசரா’ எனும் பிரம்மாண்டமான வெற்றி பெற்ற படத்தை தொடர்ந்து அதன் இயக்குநர் ஸ்ரீகாந்த் ஓடேலா மற்றும் ஸ்ரீ லட்சுமி வெங்கடேஸ்வரா சினிமாஸ் நிறுவனத்தின் தயாரிப்பாளர் சுதாகர் செருகுரியுடன் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் வகையில் இரண்டாவது முறையாக இணைகிறார்கள். இந்த திரைப்படத்திற்கு தற்காலிகமாக ‘ #நானி ஓடேலா 2 ‘ என பெயரிடப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவிப்பு ஏற்கனவே போஸ்டர் மூலம் அறிவிக்கப்பட்டிருந்தது. மேலும் ‘இந்த திரைப்படம் ‘தசரா’ திரைப்படத்தை விட நூறு மடங்கு தாக்கத்தை ஏற்படுத்தும்’ என நானி அண்மையில் தெரிவித்திருந்தார். ‘தசரா’ திரைப்படம்…
Read Moreபவர் ஸ்டாரின் புதுவிதமான லட்டு
லட்டுவை வைத்து சமீப காலமாக பல பிரச்சனைகள் கிளம்பிய வண்ணம் உள்ளது. 2013 ல் கண்ணா லட்டு திங்க ஆசையா என கேட்ட பவர் ஸ்டார் தற்போது ஒரு புது விதமான லட்டு ஒன்றை தனது ரசிகர்களுக்காக விருந்தளிக்க உள்ளார். தற்போது பவர் ஸ்டார் அவரது இயக்கத்தில் உருவாக உள்ள புது படத்தின் பெயர் “பவர் லட்டு” என பெயர் வைத்துள்ளார். இந்த படத்தை மாபெரும் பொருட்செலவில் L V Creations சார்பில் டாக்டர் லோகு தயாரிக்கின்றார், இவர் இதற்க்கு முன்னதாக பவர் ஸ்டார் நடித்த “முன்தினம்” தயாரித்து இயக்கிய அத்திரைப்படம் மிக விரைவில் வெளிவர உள்ளது. இப்படத்திற்கு கதை திரைக்கதை எழுதியது மனோஜ் கார்த்திக் காமராஜு இவர் வைஜெயந்தி ஐ பி எஸ் , ப்ருஸ்ட்லீ ரிடர்ன்ஸ் படங்களின் இயக்குனர் ஆவார் மற்றும் வினோத் குமார்…
Read Moreசிடிஎம்ஏ ஆவணிப்பூவரங்கு 2024: அமைச்சர்களின் சிறப்புப் பங்கேற்பு!
CTMA (Confederation of Tamil Nadu Malayalee Association) சமீபத்தில் சென்னையில் ஆவணிப்பூவரங்கு 2024 நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தது. ஓணம் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்குப் பிறகு கொண்டாடப்படும் பண்டிகை இது. வயநாடு நிலச்சரிவின் போது வீடுகளை இழந்து பாதிக்கப்பட்டவர்களுக்கு இந்த நிகழ்வின் மூலம் திரட்டப்படும் நிதியை நன்கொடையாக வழங்குவதற்காக ஒரு சிறப்பு முயற்சியாக இந்த நிகழ்வு திட்டமிடப்பட்டது. தமிழ்நாடு அரசின் இந்து சமய, அறநிலையத்துறை அமைச்சர் மாண்புமிகு திரு பி.கே. சேகர் பாபு முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டார். தமிழ்நாடு அரசின் ஆதி திராவிடர் நலத்துறை அமைச்சர் மாண்புமிகு டாக்டர் எம். மதிவேந்தன் கெளரவ விருந்தினராகப் பங்கேற்றார். இவர்களுடன் நடிகர்கள் மஹத் ராகவேந்திரா மற்றும் காளிதாஸ் ஜெயராம் ஆகியோரும் கலந்து கொண்டனர். திரு பி.கே. சேகர் பாபு பேசுகையில், “தேவைப்படுபவர்களுக்கு உதவும் வகையில் அமைந்துள்ள இந்தக் கொண்டாட்டம்…
Read Moreடாக்டர் ஐசரி.கே.கணேஷ் பிறந்தநாள் விழா: கோலிவுட் மற்றும் அரசியல் பிரபலங்கள் கலந்து கொண்ட நிகழ்வு
டாக்டர் ஐசரி கே கணேஷ் அவர்களின் பிறந்தநாள் விழா கொண்டாட்டங்கள் சென்னையில் உள்ள பிரபல தனியார் நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இதில் அரசியல் மற்றும் திரைத்துறை பிரபலங்கள் கலந்துக்கொண்டு டாக்டர். ஐசரி கே கணேஷ் அவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்தனர். குறிப்பாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் திரு.சேகர்பாபு, பா.ம.க தலைவர் திரு.அன்புமணி ராம்தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திரு.திருமாவளவன், நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் திரு. சீமான், தயாரிப்பாளர் தானு, இசையமைப்பாளரும் நடிகருமான திரு விஜய் ஆண்டனி, நடிகர்கள் பார்த்திபன், தனுஷ், பிரபு தேவா, ஜெயம் ரவி, ஜீவா,விஷ்னுவிஷால், ஆர்யா, இயக்குநர்கள், கவுதம் வாசுதேவ் மேனன், சுந்தர் சி, ஆர்.கே.செல்வமணி, மாரிசெல்வராஜ், விக்னேஷ் சிவன், ஏ.எல்.விஜய், நடிகைகள் ராதிகா, மீனா, சங்கீதா மற்றும் பாடகர் கிருஷ் ஆகியோர் கலந்துக்கொண்டு தங்கள் வாழ்த்துக்களை தெரிவித்தனர். விழாவிற்கு…
Read More”அறிவுள்ள ஒரு அறிவியல் தெரிந்த இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு கிடைத்துவிட்டார்” ; ‘பிளாக்’ பட இயக்குநரை புகழ்ந்த நடிகர் விவேக் பிரசன்னா
ஒவ்வொரு படத்திற்கும் ஒரு குறிப்பிட்ட கால இடைவெளி எடுத்துக் கொண்டாலும் நல்ல தரமான, கருத்தாழம் மிக்க அதேசமயம் ரசிகர்களுக்கு பிடித்தவகையில் பொழுதுபோக்கு அம்சங்களையும் கொண்ட படங்களை மட்டுமே தர வேண்டும் என்கிற நோக்கில் படங்களை தயாரித்து வரும் பொடென்ஷியல் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் ‘பிளாக்’. அறிமுக இயக்குநர் ஜி.பாலசுப்பிரமணி இயக்கியுள்ள இந்த படத்தில் ஜீவா கதாநாயகனாக நடிக்க, கதாநாயகியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். முக்கிய வேடங்களில் விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சாம் சி.எஸ் இசையமைக்க, கோகுல் பதிவை மேற்கொள்ள, பிலோமின் ராஜ் படத்தொகுப்பை கவனித்துள்ளார். வரும் அக்டோபர் 11ம் தேதி இந்த படம் திரையரங்குகளில் வெளியாகிறது. இதனை தொடர்ந்து ‘பிளாக்’ படக்குழுவினர் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்து படம் குறித்த தகவல்களையும் தங்களது அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.…
Read Moreசென்னை டிடிகே சாலையில் ‘துளசி மெட்ராஸ் ஸ்டோர்’ Grand Opening!.
சென்னை டிடிகே சாலையில் உள்ள துளசி மெட்ராஸ் ஸ்டோர் திறப்பு விழாவின் சிறப்பு நிகழ்வில் தமிழகத்தின் புகழ்பெற்ற பிரமுகர்களான திருமதி. செல்வி செல்வம், திருமதி. துர்கா ஸ்டாலின், திருமதி. ஜெயந்தி தங்கபாலு, டாக்டர். எழிலரசி ஜோதிமணி மற்றும் பலர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். இவர்களோடு நிகழ்வில் டாக்டர். மரியா ஜீனா ஜான்சன், நீனா ரெட்டி, உஷா வணங்காமுடி, தேவி கோயல், ப்ரீதா ஹரி மற்றும் அனிதா விஜயகுமார் ஆகியோரும் கலந்து கொண்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டு ‘துளசி மெட்ராஸ்’ என்ற பிராண்ட் ரஸ்வரிதி, சந்தீப் பரேக் மற்றும் பிரார்த்தனா பரேக் ஆகியோரால் நிறுவப்பட்டது. இந்திய நெசவு மற்றும் கைவினை கலைஞர்களை உலக அரங்கிற்கு எடுத்துச் செல்லும் நோக்குடன், அவர்கள் இந்த பிராண்டை ஆன்லைனில் மட்டுமே அறிமுகப்படுத்தியுள்ளனர். அவர்களின் தயாரிப்புகளுக்கு அமோக வரவேற்பு கிடைத்த நிலையில்,…
Read More
