ஹோட்டல் தொழிலில் கொடிகட்டி பறக்கும் பிரபல சினிமா நிறுவனம்

பிரபல தயாரிப்பு நிறுவனமான அம்மா புரொடக்சன்ஸ் திரைப்படங்கள் தயாரிப்பு மற்றும் வினியோகம், தொலைக்காட்சி தொடர்கள் என பல்வேறு கலை சார்ந்த பணிகளை செய்து வருகிறது.

 

இந்த நிறுவனம் மலேசியாவில்’காரசாரம்’ என்கிற பெயரில் உணவகத்தையும் வெற்றிகரமாக நடத்தி வருகிறது. மலேசியாவில் தமிழ் பாரம்பரிய உணவு வகைகளுக்கு மிகவும் பிரசித்தி பெற்ற உணவகமாக இந்த காரசாரம் உணவகம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

மலேசியாவின் புகழ்பெற்ற காரசாரம் உணவகம் இந்தியா மற்றும் சிங்கப்பூர், ஸ்ரீலங்கா, துபாய், லண்டன் உள்பட பிற நாடுகளிலும் தொடங்க இருக்கிறது என்று உணவக உரிமையாளர் டத்தோ சரவணன் தெரிவித்திருக்கிறார்.

இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை அதன் தன்மை மாறாமல் , அதன் மருத்துவகுணங்கள் குறையாமலும் வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
இந்த உணவகத்தில் மண்சட்டிச்சோறு, என்கிற உணவு மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

மலேசியாவிற்கு செல்லும் தமிழ் சினிமா நடிகர்கள் மற்றும் பாடகர்கள் இந்த உணவகத்திற்கு வருகை தந்து அதன் உணவுகளை சுவைத்து பாராட்டியுள்ளனர்.
பாடகர் அந்தோணி தாசன் ஒரு பாடலையும் இந்த உணவகத்தை புகழ்ந்து பாடியுள்ளார்.

தமிழர்களின் கலாச்சார உணர்வுகளை மட்டுமல்ல நமது உணவுகளையும் பாதுகாக்கவேண்டும். தமிழ் பண்பாட்டு கலாச்சாரங்கள் மறக்கப்பட்டுவரும் இந்த காலகட்டத்தில் உலகம் முழுவதும் தமிழர்களின் உணவுகளை மீட்டுறுவாக்கம் செய்யும் நோக்கமாக நமது பண்பாட்டு உணவை நாங்கள் உலகம் முழுவதும் விரிவுபடுத்தவுள்ளோம் என்கிறார் இந்த நிறுவனத்தின் தயாரிப்பாளர் டத்தோ சரவணன்.

சமீபத்தில் மண்சட்டிச்சோறு உணவுக்காக மலேசியன் புக் ஆப் ரெக்கார்ட்ஸ்ல் இந்த உணவகம் இடம்பெற்றிருக்கிறது.

இந்த உணவகம் இந்தியா, ஸ்ரீலங்கா, துபாய், சிங்கப்பூர் மற்றும் லண்டன் ஆகிய இடங்களில் விரைவில் அறிமுகமாகும் என்கிறார்கள். இந்தியா மற்றும் தமிழ்நாடு ஆகிய இடங்களிலும் பிற நாடுகளில் தொடங்க இருக்கும் இந்த உணவகம் தமிழர்களின் கலாச்சார உணவுகளை உலகம் முழுவதும் பரப்புவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

Related posts

Leave a Comment