”’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தில் பணிபுரிவது ஒரு அரிய வாய்ப்பு!” நடிகர் நாசர்!

கடந்த 2019 ஆம் ஆண்டு வெளியான ஆக்ஷன் பிளாக்பஸ்டர் திரைப்படமான ‘தி லயன் கிங்’ வெற்றியைத் தொடர்ந்து ’முஃபாசா: தி லயன் கிங்’ டிசம்பர் 20, 2024 அன்று வெளியாகிறது. தமிழில் முஃபாசா கதாபாத்திரத்திற்கு நடிகர்கள் அர்ஜுன் தாஸ், டாக்காவுக்கு அசோக் செல்வன், ரோபோ சங்கர் மற்றும் சிங்கம் புலி முறையே பும்பா மற்றும் டிமோன், ரஃபிக்கியின் இளைய பதிப்பிற்கு நடிகர் விடிவி கணேஷ் மற்றும் கிரோஸின் குரலாக நடிகர் எம். நாசர் ஆகியோர் குரல் கொடுத்திருக்கின்றனர்.

முஃபாசா: தி லயன் கிங் படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து நாசர் கூறுகையில், “”நடிகராக எனது பயணத்தைத் தொடங்கும் முன்பே, பல படங்களுக்கு டப்பிங் கலைஞராக பணியாற்றி உள்ளேன். லயன் கிங்கின் முதல் ரசிகன் நான். அந்தப் படத்திற்கான டப்பிங் வாய்ப்பு வரும்போது எப்படி நிராகரிக்க முடியும்? தனது தன்னம்பிக்கையால் ரசிகர்களைக் கவர்ந்த மறக்க முடியாத கதாபாத்திரம் கிரோஸ். டப்பிங்கின் போது அவரது திரை இருப்பை பொருத்த என்னால் முடிந்த முயற்சிகளை செய்திருக்கிறேன். கிரோஸிடம் எனக்குப் பிடித்தது என்னவென்றால், அவர் எதை நம்புகிறாரோ அதற்காக அவர் போராடுவார்.

இந்தப் படம் குழந்தைகளுக்கானது மட்டுமல்ல, பெரியவர்களுக்குமானது. ஒவ்வொரு பெரியவர்களிடமும் குழந்தை போன்ற குணம் இருக்கும். இந்தப் படம் அவர்களுக்கு ஒரு அற்புதமான அனுபவத்தை கொடுக்கும். முஃபாசா பாசிட்டிவிட்டியை பரப்பி, அனைவருக்கும் மகிழ்ச்சியான அனுபவத்தைக் கொடுக்கிறது. டிசம்பர் 20, 2024 அன்று திரையரங்குகளில் வெளியாகிறது” என்றார்.

’முஃபாசா: தி லயன் கிங்’ படத்தை பேரி ஜென்கின்ஸ் இயக்கியுள்ளார். இதற்கான பாடல்களை லின்-மானுவல் மிராண்டா எழுதியிருக்கிறார். ’முஃபாசா: தி லயன் கிங்’ திரைப்படம் டிசம்பர் 20, 2024 அன்று ஆங்கிலம், இந்தி, தமிழ் மற்றும் தெலுங்கு ஆகிய மொழிகளில் இந்திய திரையரங்குகளில் வெளியாகும்.

Related posts

Leave a Comment