இயக்கமா…நடிப்பா…இயக்குநர் ஜேசன் சஞ்சய் பதில்!

லைகா புரொடக்ஷன்ஸ் சுபாஸ்கரன் தயாரிப்பில் உருவாகியுள்ள ‘சிக்மா’ திரைப்படத்தின் மூலம், ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகிறார். சந்தீப் கிஷன், ஃபரியா அப்துல்லா உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த திரைப்படம் இன்று திரையரங்குகளில் வெளியான நிலையில் படக்குழு பத்திரிக்கையாளர்களை சந்தித்தது. நடிகை மகாலக்‌ஷ்மி, ” இந்த திரைப்படத்தில் நல்ல கதாபாத்திரம் கொடுத்த இயக்குநர் சஞ்சய்க்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் நன்றி. இந்த படத்திற்கு உங்கள் ஆதரவு தேவை”. கலை இயக்குநர் பெஞ்சமின், “சஞ்சய் ப்ரோ என்ன கதை சொன்னாரோ அதை தான் படமாக்கியிருக்கிறார். நானும் என் பணியை சரியாக செய்திருக்கிறேன் என நம்புகிறேன். என்னுடைய அணியினருக்கு நன்றி”. நடிகர் அன்புதாசன், ” இந்தப் படத்தில் கேஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். சஞ்சய் ப்ரோ, லைகா நிறுவனம் மற்றும் படக்குழுவினருக்கு நன்றி”. நடிகர் ஷிவ் பண்டிட், “கடந்த ஒன்றரை வருடமாக எங்களுடைய…

Read More

ஜூனியர் ஆர்டிஸ்ட் முதல் ஹீரோ வரை: நடிகர் சித்து பேச்சு!

அண்மையில் வெளியான ‘தி டார்க் ஹெவன் ‘ திரைப்படம், களத்தில் நின்ற பல்வேறு போட்டிப் படங்களுக்கு மத்தியில் மூன்றாவது வாரமாக வெற்றிகரமாகத் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.இப்படத்தின் வெற்றி சிறு முதலீட்டுப் படங்களுக்குப் பெரிய நம்பிக்கை வெளிச்சத்தை ஏற்படுத்தியுள்ளது என்று திரையுலகில் பேசப்படுகிறது. இதன் வெற்றியை இயக்குநர் பாலாஜி தனது சொந்த ஊரான திருநெல்வேலியில் விழா எடுத்துக் கொண்டாடினார். நெல்­லை­யைச் சேர்ந்த இயக்­கு­நர் பாலாஜி இயக்­கத்­தில் கடந்த செப்­டம்­பர் 18ம் தேதி வெளியான படம் ‘தி டார்க் ஹெவன்’. இதில் சித்து, தர்­ஷிகா, ரித்­விகா, வேல ராம­மூர்த்தி, நிழல்­கள் ரவி, ஜெயக்­கு­மார், சாரண், அருள் டி சங்­கர், சத்­தியா, சாப்­ளின் பாலு, கோபால் மற்­றும் பலர் நடித்­திருந்தனர். இப்­ப­டத்­திற்கு மணி­கண்­டன் பிகே ஒளிப்­ப­திவு செய்ய, சக்தி பாலாஜி இசை­ய­மைத்­துள்­ளார். இப்­ப­டத்தை கோதை என்­டர்­டெ­யின்­மென்ட் மற்­றும் எம்­எஸ் ஸ்விஸ் பிலிம் பேக்­டரி…

Read More

தமிழ் திரைப்பட இசை சங்கம் & ட்ரஸ்ட் மாயா பஜார் ஹப் நிறுவனம்

தமிழ் திரைப்பட இசை கலைஞரர்களின் சங்கம் இந்தியாவின் முதல் திரை துறை சங்கம் என்று பெருமைமிகு சங்கமாக விளங்குகிறது. இந்த சங்கத்தின் பல ஆண்டு கனவு தங்களது இடத்தில் ஒரு பிரமாண்டமான கட்டிடம் அமைத்து, அதில் வரும் வருமானத்தில் தங்களது உறுப்பினர்களின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் வகையில் ஏதாவது செய்ய வேண்டும் என்பதுதான். அதற்காக இன்றைய தலைவர், செயலாளர், பொருளாளர் மற்றும் உறுப்பினர்கள் ஏக மனதாக முடிவெடுத்து மாயாபஜார் ஹப் என்ற நிறுவனத்தை அணுகி அதற்கான ஒப்பந்தத்தை செய்துள்ளனர். மாயா பஜார் நிறுவனம் தனது பல ஆண்டுகால அனுபவத்தை முன்னிறுத்தி சென்னை திரை இசை சங்கம் மற்றும் டிரஸ்டுக்கு சொந்தமான இடத்தில் மாபெரும் வணிக வளாகம் அமைத்து, அதில் திரையுலக பயன்பாட்டிற்கு தேவையான அனைத்து நவீன வசதிகளும் செய்து கொடுக்க முடிவெடுத்தனர். இந்த பத்து மாடி கட்டிடத்தை கட்ட…

Read More

டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள் படத்தில் நடிக்க இது தான் காரணம் : பஹத் பாசில்!!

அர்கா மீடியா ஒர்க்ஸ் ( Arka Media Works) – ஷோயிங் பிசினஸ் ( Showing Business) ஆகிய நிறுவனங்கள் சார்பில் ஷோபு யெர்லகடா – எஸ். எஸ். கார்த்திகேயா ஆகியோரின் தயாரிப்பில் ஷஷாங்க் யெலெட்டி இயக்கத்தில் பகத் பாசில் நடிப்பில் இயக்குநர் எஸ். எஸ். ராஜமௌலி வழங்கும் ‘டோன்ட் ட்ரபிள் தி ட்ரபிள்’ திரைப்படம் – அக்டோபர் 2 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது. இந்தப் படத்தை தமிழகம் முழுவதும் சக்தி பிலிம் பேக்டரி (sakthi film factory) நிறுவனம் சார்பில் விநியோகஸ்தர் சக்திவேலன் வெளியிடுகிறார். இப்படத்தினை விளம்பரப்படுத்தும் வகையில் வெளியீட்டிற்கு முன்னரான  பிரத்யேக நிகழ்வு சென்னையில் உள்ள நட்சத்திர ஹோட்டலில் நடைபெற்றது. இந்நிகழ்வில் எஸ்.எஸ். ராஜமௌலி, எஸ்.எஸ். கார்த்திகேயா,  ஃபஹத் பாசில், சாரா சச்தேவ், பிரவீண் ஆண்டனி, விநியோகஸ்தர் சக்திவேலன் ஆகிய…

Read More

6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம்

தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்தின் (TFAPA) 6-வது ஆண்டு பொதுக்குழு கூட்டம் (AGM) இன்று சென்னை, வடபழனியில் உள்ள ஹோட்டல் ஆதித்யாவில் நடைபெற்றது. ஒவ்வொரு ஆண்டும் நடைபெறும் இப்பொதுக்குழு கூட்டத்தின் மூலம் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி, தமிழ் திரையுலகம் தொடர்பான முக்கிய விஷயங்கள் குறித்து கருத்துகளைப் பரிமாறிக் கொள்வதுடன், சங்கத்தின் ஆண்டு கணக்குகள் மற்றும் புதிய முன்னெடுப்புகள் குறித்து விவாதித்து, உறுப்பினர்களின் ஒப்புதலைப் பெறுவது வழக்கம். இவ்வாண்டு கூட்டத்தில் 150-க்கும் மேற்பட்ட தயாரிப்பாளர் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்வில், தமிழ்நாடு பள்ளிக் கல்வி, தமிழ் வளர்ச்சி, தகவல் மற்றும் விளம்பரத் துறை மாண்புமிகு அமைச்சர் திரு. ஏ. ராஜ்மோகன் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, தமிழ் திரையுலகின் முக்கிய பிரச்சினைகள் குறித்து உரையாற்றியதுடன், தயாரிப்பாளர்களுடன் கலந்துரையாடினார். தமிழ்நாடு அரசிடம் TFAPA கோரிக்கைகள் அடங்கிய…

Read More

கெமிஸ்ட்ரியா… கம்ஃபோர்ட்டா? ‘#Love’ டிரெய்லர் வெளியீடு!

சௌந்தர்யா ரஜினிகாந்த் ஷோ-ரன்னராகவும் தயாரிப்பாளராகவும் பணியாற்ற, பாலாஜி மோகன் இயக்கத்தில் நவீன காதல் மற்றும் உறவுகளை மையமாகக் கொண்டு உருவாகியுள்ள ‘#Love’ வெப் சீரிஸின் டிரெய்லர்  வெளியிடப்பட்டது. அர்ஜுன் தாஸ் மற்றும் ஐஸ்வர்யா லட்சுமி முன்னணி கதாபாத்திரங்களில் நடித்துள்ள இந்தத் தொடர், இன்றைய டிஜிட்டல் உலகில் காதல், டேட்டிங், உறவுகள் மற்றும் உணர்வுகள் எப்படி மாறியிருக்கின்றன என்பதை நகைச்சுவையுடனும் உணர்வுப்பூர்வமாகவும் பேசுகிறது. சென்னையில் நடைபெற்ற ‘#Love’ தொடரின் டிரெய்லர் வெளியீட்டு விழாவில் படக்குழுவினர் மற்றும் திரையுலகைச் சேர்ந்த பிரபலங்கள் கலந்துகொண்டு தொடரைப் பற்றிய தங்களது கருத்துகளைப் பகிர்ந்துகொண்டனர். இந்நிகழ்வினில் *நெட்ஃப்ளிக்ஸ் நிறுவனத்தைச் சேர்ந்த மோனிகா ஸ்ரீவாஸ்தவ் பேசியதாவது..,* “நெட்ஃப்ளிக்ஸின் முதல் தமிழ் காதல் டிராமா தொடராக ‘#Love’ உருவாகியுள்ளது. தென்னிந்தியக் கதைகளில் நெட்ஃப்ளிக்ஸ் தொடர்ந்து அதிக கவனம் செலுத்தி வருகிறது. குறிப்பாக தமிழ் படைப்புகளில் வித்தியாசமான கதைக்களங்கள்,…

Read More

’டோரதி’ படத்திற்கு மிகப்பெரிய ஆசீர்வாதம் ராஜா சாரின் இசைதான் – கார்த்திக் சுப்புராஜ் நெகிழ்ச்சி

ஜியோ ஸ்டுடியோஸ் வழங்கும், சிக்யா என்டர்டெயின்மென்ட் மற்றும் தம்மம் ஃபிலிம்ஸ் தயாரிப்பில், கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகர்கள் ரிஷிகாந்த், சனந்த், கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டோரதி’. செப்டம்பர் 25 அன்று திரையரங்குகளில் வெளியாகும் இந்தத் திரைப்படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்வு நடைபெற்றது. நடிகர் முத்துப்பாண்டி, “இது என்னுடைய முதல் மேடை. வாய்ப்பு கொடுத்த கார்த்திக் சாருக்கு நன்றி. எல்லோரும் நன்றாக நடித்திருக்கிறார்கள். ராஜா சார் இசையில் வரும் வரிகளின் மீனாட்சியாய் இந்தப் படத்திற்கு வழித்துணையாய் இருந்த கீர்த்தி சுரேஷ் மேமுக்கு நன்றி”. நடிகர் செளந்தரராஜன், “கார்த்திக் சுப்புராஜ்ஜை ஷார்ட் பிலிம் காலத்திலிருந்து தெரியும். மிகச்சிறந்த திறமையான இயக்குநர். அவருடைய எண்ணம் செயலெல்லாம் ஒன்று போல இருக்கும். அவர் மதுரையையும் அந்த மனிதர்களையும் மிகவும் நேசிப்பார். இந்திய அளவிலும் அவர் பெரிய இயக்குநராக வளர வேண்டும்.…

Read More

சினிமாவை நம்பினால் அது கைவிடாது: நடிகர் சித்து பேச்சு!

அண்மையில் வெளியான க்ரைம் த்ரில்லர் திரைப்படம் ‘தி டார்க் ஹெவன்’ .இப்படத்தில் பிக்பாஸ் புகழ் நட்சத்திரங்கள் சித்து, தர்ஷிகா , ரித்விகா ஆகியோருடன் , பிரதீப்,வேல ராமமூர்த்தி, நிழல்கள் ரவி, ஜெயக்குமார், அருள் டி சங்கர், சத்தியா, சாப்ளின் பாலு, கோபால், ஆர்த்தி மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்தை பாலாஜி இயக்கியிருந்தார். இவர் ஏற்கெனவே ‘D3’ என்ற படத்தை இயக்கியவர்.ஒளிப்பதிவு: மணிகண்டன் பிகே,படத்தொகுப்பு : ராஜா ஆறுமுகம், இசை: சக்தி பாலாஜி என்ற தொழில்நுட்பக் கூட்டணியுடன் இந்தப் படத்தை கோதை என்டர்டெயின்மென்ட் மற்றும் எம்எஸ் ஸ்விஸ் ஃபிலிம் ஃபேக்டரி தயாரித்திருந்தன. சமீபத்தில் வெளிவந்த படங்களில் வித்தியாசமான க்ரைம் த்ரில்லர் என்று பெயர் பெற்று ஊடகங்களால் பெரிதும் பாராட்டப்பட்ட இந்த ‘தி டார்க் ஹெவன்’ ரசிகர்களின் வரவேற்பையும் பெற்று இன்று பெரிய வெற்றி பெற்றுள்ளது.இது சிறு முதலீட்டுப் படத்…

Read More

அன்பில் அவன்’ திரைப்படத்தின் வெளியீட்டுக்கு முந்தைய அறிமுக விழா

அசோக் செல்வன், ப்ரீத்தி முகுந்தன், சபுமோன் அப்துசமத், கதிர் பாலு, மஹா டெல்லி கணேஷ்  மற்றும் பலர் நடித்துள்ள திரைப்படம் ‘அன்பில் அவன்’. ஆர். கார்த்திகேயன்  இயக்கியுள்ள இப் படத்தின் கதையை ‘போர் தொழில்’ பட இயக்குநர் விக்னேஷ் ராஜா எழுதியுள்ளார். கோவிந்த் வசந்தா இசையமைக்க, கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்ய ,ஆர்.கே. செல்வா படத்தொகுப்பு செய்ய,  மணிகண்டன் ஸ்ரீனிவாசன் கலை இயக்கத்தை மேற்கொண்டுள்ளார். ஐங்கரன் இண்டர்நேஷனல் மற்றும் ஹேப்பி ஹை பிக்சர்ஸ்  சார்பில் கே.கருணாமூர்த்தி, அசோக் செல்வன் மற்றும் அபிநயா செல்வம் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.ஸ்ரீ குமரன் ஃபிலிம்ஸ் ராசி சிதம்பரம் வெளியிடுகிறார். *இவ்விழாவில் ஹேப்பி ஹை பிச்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் அபிநயா பேசும்போது,* “இந்தப் படம் எடுக்க முடிவு செய்வதற்குக் காரணம் கதை தான் . கதை பிடித்துப் போய் தான் இந்தப்…

Read More

கூல் சுரேஷ் இரண்டாவது கதாநாயகனாக நடிக்கும் “மறுஜென்ம காதல்”!

இந்தியன் டிஜிட்டல் பிலிம்ஸ் வழங்கும், வித்யா பிரேம் தயாரிப்பில், வந்தை பிரேம் எழுதி, இயக்கும் ‘மறுஜென்மம் காதல்’ படத்தின் தொடக்க விழாவில், சிறுபட தயாரிப்பாளர்கள் சங்க தலைவர் அன்புச்செல்வன், நடிகர்கள் இமான் அண்ணாச்சி, கூல் சுரேஷ், முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா, இயக்குநர் E.V.கணேஷ் பாபு மற்றும் திரையுலக பிரபலங்கள் கலந்துக் கொண்டு, வாழ்த்தினார்கள்! பாவிக்கும், ஆவிக்கும் நடக்கும் சண்டை மற்றும் உண்மையான காதல் எத்தனை ஜென்மங்கள் எடுத்தும் சேரும் என்பதே ‘மறுஜென்ம காதல்’! வந்தை பிரேம் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக வித்யாதாரி நடிக்கிறார். இரண்டாவது கதாநாயகனாக கூல் சுரேஷ் நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக அக்ஷராய் விஜய் நடிக்கிறார். இவர்களுடன் இமான் அண்ணாச்சி, முத்துக்காளை, கிரேன் மனோகர், கராத்தே ராஜா ஆகியோர் நடிக்கிறார்கள். கதை, திரைக்கதை, வசனம் எழுதி வந்தை பிரேம் இயக்குகிறார். கிரியேட்டிவ் இயக்குநர்…

Read More