கடந்த ஐந்து தசாப்தங்களாக சினிமாவில் தனக்கான இடத்தை அழுத்தமாக பதிய வைத்து ஈடு இணையற்ற நடிகராக வலம் வருகிறார் நடிகர் மம்முட்டி. அவரது வரவிருக்கும் ‘பிரமயுகம்’ திரைப்படத்தில் இதுவரை இல்லாத அளவில் மிரட்டலான அவதாரத்தில் பார்வையாளர்களைக் கவர உள்ளார். நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் மற்றும் ஒய் நாட் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்த இந்த ‘பிரமயுகம்’ படத்தை, ‘பூதகாலம்’ புகழ் ராகுல் சதாசிவன் எழுதி இயக்கியுள்ளார். இப்படம் பிப்ரவரி 15ஆம் தேதி மலையாளத்தில் உலகளவில் திரைக்கு வருகிறது. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் ஒரே நேரத்தில் முன்பு இந்தப் படம் வெளியாகத் திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால், இதன் ஒரிஜினல் வெர்ஷனை முதலில் பார்வையாளர்கள் அனுபவிக்க வேண்டும் என்ற கோரிக்கையின் காரணமாக முதலில் மலையாளத்தில் மட்டுமே வெளியாகிறது. படக்குழுவினரும் இதன் அசல் பதிப்பு ரசிகர்களிடம் வரவேற்பு பெறும்…
Read MoreCategory: சினி-நிகழ்வுகள்
உருகி உருகி காதலித்தவர் சொல்ற மெசெஜ்-ஆ இது…!!!???
விஜய் ஸ்ரீ ஜி இயக்கத்தில் அதிரடி ஆக்ஷன் வேடத்தில் நடிகர் மோகன் ரீ-என்ட்ரி கொடுக்கும் ‘ஹரா’ படம் ஏப்ரல் மாதம் வெளியாகிறது இந்த நிலையில் தன் அடுத்த படத்தின் தலைப்பு “காதலிச்சா கல்யாணம் பண்ணக்கூடாது” என்று காதலர் தினத்தை முன்னிட்டு இன்று வெளியிட்டார். ஏப்ரல் மாதம் பூஜையுடன் படப்பிடிப்பு தொடங்குகிறது. சென்னை, கோவை, கோவா, மலேசியா போன்ற இடங்களில் படப்பிடிப்பு நடத்த திட்டமிட்டு, தீபாவளி வெளியீட்டுக்கு தயாராகிறது.
Read Moreலவ் டுடே புகழ் “மாமா குட்டி”-யிலிருந்து வந்த “மாமா குட்டிமா” பாடல் புரோமோ வெளியானது
‘தேனிசைத் தென்றல்’ தேவா குரலில் ஸ்ரீகாந்த் தேவா இசையில் கவிஞர் பொத்துவில் அஸ்மின் வரிகளில் “மாமாகுட்டிமா” பாடல் புரோமோ வெளியானது. தனியிசை பாடல்கள் மூலமாகவும் தமிழ் திரைப்பட பாடல்கள் வாயிலாகவும் உலகெங்கும் உள்ள தமிழர்கள் மனங்களில் இடம் பிடித்துள்ள இலங்கை கவிஞர் பொத்துவில் அஸ்மின் எழுதிய புதிய ஆல்பம் பாடல் “மாமாகுட்டிமா” புரோமோ வெளியாகியுள்ளது. லண்டனைச் சேர்ந்த தொழிலதிபரும் சமூக சேவகருமான DR. மாலாகுமார் தனது மாலாகுமார் படைப்பகத்தின் சார்பில் தயாரித்துள்ள இந்த பாடலினை சமீபத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஶ்ரீகாந்த் தேவா இசையமைத்துள்ளார். இந்த உற்சாகமிக்க பாடலை அவரது தந்தையும் பிரபல இசையமைப்பாளருமான தேவா தனது காந்த குரலில், பிரத்யேக ஸ்டைலில் பாடியுள்ளார். விஜய் ஆண்டனி நடித்த’ நான்’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘தப்பெல்லாம் தப்பே இல்லை’ பாடலின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான கவிஞர்…
Read More”குழந்தைகளுக்கு நல்ல உணவை அறிமுகம் செய்கிறோமா? என்பது தான் கேள்வி.” – நாயகன் ஆரி
நடிகர் ஆரி தான் நடிக்கும் அடுத்த படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இயற்கையான உணவுகளை விளம்பரப்படுத்தினார். மெட்ராஸ் டெக் என்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் வழங்கும் ‘புரொடக்ஷன் நம்பர் ஒன்’ திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் நாயகன் ‘ஆரி அர்ஜுனனி’ன் பிறந்தநாள் விழா இயற்கை சிறுதானியங்களால் ஆன கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. இப்படத்தில் நாயகியாக லஷ்மி மேனன் நடிக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் ‘ப்ளாக்’பாண்டி, ஷெர்லி பபித்ரா,கனிமொழி, ‘மைம்’கோபி ஆகியோர் நடிக்கிறார்கள். இப்படத்தின் கதை, திரைக்கதை,வசனம் எழுதி இயக்குகிறார் ராஜசேகர பாண்டியன், தயாரிப்பு பணிகளை அருணாச்சலம் மேற்கொள்கிறார். மதுரையில் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கும் இப்படத்தின் படப்பிடிப்பில் நடிகர் ஆரி அர்ஜுனனின் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இயற்கை உணவை எப்போதும் போற்றும் விதமாக ‘ மாறுவோம் மாற்றுவோம் அறக்கட்டளை ‘ சார்பாக தொடர்ச்சியாக உணவு சார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வரும் நடிகர் ஆரி அர்ஜுனன்…
Read More”Valentine’s Day Cheers” – சொன்ன படக்குழு
அப்புக்குட்டி கதையின் நாயகனாக நடிக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படக்குழுவினர், காதலர் தினத்தில் தங்கள் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை மிகவும் வித்தியாசமான முறையில், Valentine’s Day Cheers என வெளியிட்டுள்ளனர்! ராஜு சந்திரா எழுதி இயக்கியிருக்கும் “பிறந்தநாள் வாழ்த்துகள்” படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது. தேசிய விருது பெற்ற அப்புக்குட்டி இப்படத்தில் கதையின் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை பிளான் த்ரீ ஸ்டுடியோஸ் பிரைவேட் லிமிடெட் சார்பில், ரோஜி மேத்யூ, ராஜு சந்திரா இருவரும் தயாரிக்க, மாதன்ஸ் குழுமம் இணைந்து தயாரித்துள்ளது. மலையாள நடிகை ஐஸ்வர்யா அனில், இப்படத்தின் மூலம் தமிழில் கதையின் நாயகியாக அறிமுகம் ஆகிறார். ஸ்ரீஜா ரவி மற்றும் ரோஜா மேத்யூ முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர். மலையாளத்தில் விமர்சன ரீதியாகப் பலரின் பாராட்டுகளை பெற்ற ஜிம்மி இ வீட்டின்ட ஐஸ்வர்யம்’ ‘ஐ ஆம் ஏ பாதர்’ என…
Read Moreமீண்டும் பட்டித்தொட்டி எங்கும் ஒலிக்கப் போகும் “பேட்டராப்”
90-களில் இளைஞர்களை ஆடவைத்த “பேட்டராப்” பாடலை நம்மால் மறக்க முடியாது. நடன புயல் “இந்தியன் மைக்கேல் ஜாக்சன்” “பிரபுதேவாவின்” அதிரடி நடனத்தில் இயக்குனர் “SJ Sinu” இயக்கத்தில் “பேட்டராப்” என்ற திரைப்படம் பிரம்மாண்டமாக தயாராகிக் கொண்டிருக்கிறது. இன்று Feb 14 பிரபலங்கள் தங்கள் டிவிட்டர், இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பேட்டராப் திரைப்படத்தின் “FIRST LOOK” போஸ்டர் பகிர்ந்துள்ளார்கள். திரைப்படத்தைக் குறித்து இயக்குனர் SJ Sinu கூறுகையில் பிரபுதேவா உடன் ஜோடி சேர்ந்திருக்கும் வேதிகா, அவருடன் போட்டி போட்டு நடனத்தில் கலக்கியிருக்கிறார் மற்றும் இமான் இசையில் பத்து பாடல்கள் ரசிகர்களை திரையரங்குகளில் ஆடவைக்கும், குடும்பங்கள் கொண்டாடும் இளைஞர்களின் படமாக வந்திருப்பதாக கூறினார். BLUE HILL FILMS BANNER-ல் ஜோபி பி சாம் தயாரிக்க, SJ Sinu இயக்கியிருக்கிறார். கதை திரைக்கதையை எழுதியிருப்பது தினில் பி.கே, ஜித்து தாமோதர் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்க,…
Read Moreநடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ள நடிகை கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை!
பூம்பாரை முருகன் புரடக்ஷன்ஸ் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் ராஜசேகர் இயக்கத்தில் கயல் ஆனந்தி கதாநாயகியாக நடித்திருக்கும் திரில்லர் படம் ’ஒயிட் ரோஸ்’. இதில் நடிகர் ஆர் கே சுரேஷ் மாறுபட்ட வில்லனாக நடித்துள்ளார். இவர்களுடன் விஜித், புதுமுகம் ரூசோ ஸ்ரீதரன், சசிலயா, கணேஷ், ராமநாதன் மற்றும் பலர் நடித்துள்ளனர். சமீபத்தில் இதன் படப்பிடிப்பு முடிவடைந்துள்ளது. படத்தின் போஸ்ட் புரொடக்சன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வேளையில் இதன் முதல் பார்வை போஸ்டரை நடிகர் விஜய்சேதுபதி வெளியிட்டுள்ளார். வித்தியாசமான கதைகளைத் தேர்ந்தெடுத்து நடித்து வரக்கூடிய கயல் ஆனந்தியின் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் முதல் பார்வை ரசிகர்கள் மத்தியில் கூடுதல் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகர் விஜய்சேதுபதி முதல் பார்வையை வெளியிட்டு படக்குழுவினருக்குத் தனது வாழ்த்துகளையும் கூறியுள்ளார். இக்கதையில் காவல் கட்டுபாட்டு மையம் முக்கிய பங்கு வகுக்கிறது. அது தத்ரூபமாக இருக்கவேண்டும்…
Read Moreஎழுத்தாளனாக விரும்பும் இளைஞனாக வெற்றி நடிக்கும் “ஆலன்”
3S பிக்சர்ஸ் சார்பில் சிவா R தயாரித்து இயக்க, வெற்றி நாயகனாக நடிப்பில் மனதை மயக்கும் ரொமான்ஸ் டிராமாவாக உருவாகிவரும் திரைப்படம் ஆலன். தமிழகம் மட்டுமல்லாது இந்தியாவின் பல பகுதிகளில் படமாக்கப்பட்ட இப்படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவுற்றதாக படக்குழு அறிவித்துள்ளது. ஒரு முழுமையான ரொமான்ஸ் படமாக மட்டுமல்லாமல் வாழ்வின் அழகை சொல்லும் ஒரு அழகான டிராமாவாக இப்படம் உருவாகியுள்ளது. ஆலன் என்பதன் பொருள் படைbபாளி. சிறுவயதில் இருந்தே எழுத்து மீது ஆர்வம் கொண்டு எழுத்தாளனாகும் கனவில் வாழும் ஒருவன், அவனின் பதினைந்தாம் வயதில் நடக்கும் ஒர் எதிர்பாராதா நிகழ்வு. அவனின் காதல் 40 வரையிலான அவனது வாழ்வின் பயணம் தான் இப்படம். வாழ்வின் எதிர்பார நிகழ்வுகள், ஒரு நதியாக அது அடித்துச் செல்லும் பயணம், காதல் ஆன்மீகம் எழுத்து என ஒரு ஆத்மார்த்தமான படைப்பாக இப்படத்தை எழுதி…
Read More‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் தேங்க்ஸ் மீட்!
பீப்பிள் மீடியா ஃபேக்டரி தயாரிப்பில், கார்த்திக் யோகி இயக்கத்தில் நடிகர்கள் சந்தானம், மேகா ஆகாஷ் நடித்திருக்கும் திரைப்படம் ‘வடக்குப்பட்டி ராமசாமி’. இதன் தேங்க்ஸ் மீட் நடந்தது. கிரியேட்டிவ் புரொடியுசர் நட்ராஜ், “இந்தப் படத்தை வெற்றிப் படமாக்கிய அனைவருக்கும் நன்றி. கார்த்திக் யோகி சொன்ன இந்தக் கதைக்குத் தேவைப்பட்ட பட்ஜெட் அந்தக் கதைக்குத் தேவையான ஒன்றாகவே இருந்தது. தொடர்ந்து 63 நாட்கள், இடையில் ஒரு நாள் கூட பிரேக் எடுக்காமல் இதன் படப்பிடிப்பை எடுத்து முடித்தோம். அந்த அளவுக்கு கடின உழைப்பைக் கொடுத்துள்ளோம். பழனி, திண்டுக்கல், பொள்ளாச்சி என லொகேஷனும் மாற்றி மாற்றி இயக்குநர் கார்த்திக் கொடுத்திருக்கிறார். அவருக்கு நன்றி. ஹீரோயின் மேகா ஆகாஷூம் சிறப்பான ஒத்துழைப்புக் கொடுத்தார். கூல் சுரேஷ், பிரஷாந்த் என அனைவரும் எந்தவிதமான கஷ்டமும் பார்க்காமல் நடித்துக் கொடுத்தனர். சந்தானம் சார் சிறந்த…
Read Moreபா.இரஞ்சித் தயாரிப்பில் ஊர்வசி நடிக்கும் Jபேபி மார்ச் 8 ல் வெளியாகிறது.
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் புரொடக்சன்ஸ் மற்றும் நீலம் ஸ்டுடியோஸ் , விஸ்டாஸ் மீடியாஸ் இணைந்து தயாரித்திருக்கும் படம் Jபேபி. அறிமுக இயக்குனர் சுரேஷ் மாரி இயக்கத்தில் தினேஷ், ஊர்வசி, மாறன் , மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். இந்தப்படம் மார்ச் 8 ம் தேதி திரையரங்குகளில் வெளியாகவிருக்கிறது. இந்த படத்திற்கு சென்சார் எந்த வித கட்டும் கொடுக்காமல், மியூட் செய்யப்படாமல் சான்றிதழ் வழங்கியுள்ளார்கள். குடும்ப உறவுகளுக்குள் நடக்கும் உணர்வுப்பூர்வமான கதையாக , குடும்பத்தோடு கண்டுகளிக்கும் படமாக உருவாக்கியுள்ளார்கள். பா.இரஞ்சித் தயாரிக்கும் படங்களில் இந்த படம் முற்றிலும் வேறுபட்டதாக இருக்கும் . ஊர்வசி, தினேஷ், மாறன், கவிதா பாரதி, ஜெயமூர்த்தி, சேகர் நாராயணன், ஏழுமலை, தக்ஷா, இஸ்மத் பானு, சபீதா ராய், பெ.மெலடி டார்கஸ், மாயாஸ்ரீஅருண் மற்றும் பலர் நடித்துள்ளனர். டோனி பிரிட்டோ இசையமைக்க, ஜெயந்த் சேது மாதவன்…
Read More