ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம்!

ZEE5 ஒரிஜினல் – ராதாமோகன் இயக்கத்தில் வைபவ் – வாணி போஜன் நடிக்கும் புதிய படம். 2020 ஆம் ஆண்டில், ZEE5 ‘லாக்கப்’ ‘க / பெ ரணசிங்கம்’, ‘முகிலன்’ உள்ளிட்ட தனித்துவமிக்க, தரமான படைப்புகளை ரசிகர்களுக்கு அளித்து மகிழ்வித்தது. இந்த 2021ம் வருடத்தில் ZEE5 மேலும் பல சுவாரஸ்யம் மிகுந்த படைப்புகளை தொடர்ந்து வழங்க இருக்கிறது. ZEE5 இந்த வருடத்தின் அடுத்த படைப்பாக, வைபவ் – வாணி போஜன் நடிக்கும் இந்த முழு நீள நகைச்சுவை திரைப்படத்தை வழங்குகிறது. இன்னும் பெயரிடப்படாத இப்படத்தைப் பிரபல இயக்குநர் ராதாமோகன் இயக்குகிறார். மங்கி மேன் கம்பெனி இப்படத்தைத் தயாரிக்கிறது. இப்படத்தில் எம்.எஸ்.பாஸ்கர், கருணாகரன், மயில்சாமி உள்ளிட்ட நடிகர்களும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு – மகேஷ் முத்துசாமி படத்தொகுப்பு – கே.எல்.பிரவீன் இசை – பிரேம்ஜி கலை –…

Read More

பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் !

பிப்ரவரி 5 ல் வெளியாகும் அசோக் செல்வனின் “தீனி” பட ட்ரெய்லர் அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடிக்கும் “தீனி” படத்தின் ட்ரெய்லர் பிப்ரவரி 5 அன்று வெளியாகிறது. இயக்குநர் அனி I.V. சசி இயக்கும் இப்படத்தினை பாபிநீடு B வழங்குகிறார். தென்னிந்தியாவின் புகழ்மிகு நிறுவனங்களான Sri Venkateswara Cine Chitra LLP மற்றும் Zee Studios இப்படத்தினை தயாரிக்கின்றன. படத்தை தயாரிக்கும் BVSN பிரசாத் படம் பற்றி கூறியதாவது… இது முழுக்க உணர்வுபூர்வமான காதல் கொண்ட, முழுக்க முழுக்க காமெடி நிறைந்த அட்டகாசமான பொழுதுபோக்கு திரைப்படம் ஆகும். அசோக் செல்வன், நித்யா மேனன், ரிது வர்மா நடித்திருக்கும் காட்சிகள் ரசிகர்கள் அனைவரையும் வசீகரிக்கும். மிக சமீபத்தில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டோம். தற்போது வரும் பிப்ரவரி 5 அன்று காலை 11 மணிக்கு…

Read More

கதையை விட ஹீரோ பெரிய ஆளாக இருக்க கூடாது” ; விஷமக்காரன் விழாவில் இயக்குனர் ஓபன் டாக்*

ஹனி பிரேம் ஒர்க்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் விஷமக்காரன். இந்தப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளதுடன் இந்தப்படத்தை இயக்கியுள்ளார் அறிமுக நடிகர் வி (விஜய்). அனிகா விக்ரமன் மற்றும் ‘யாரடி நீ மோகினி’ சீரியல் புகழ் சைத்ரா ரெட்டி கதாநாயகியாக நடித்துள்ளனர். மனித வாழ்க்கையில் மனிதர்கள் ஒருவரை ஒருவர் கையாளுதல் என்பது அவர்களது வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றத்தை கூட உருவாக்கும். அந்தவகையில் இந்தப்படத்தின் கதையே மனிதர்களை தங்களுக்கு ஏற்றபடி திறமையாக கையாளுதல் என்கிற மையக்கருவை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது விரைவில் தியேட்டர்களில் வெளியாக இருக்கும் இந்தப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னை சத்யம் தியேட்டரில் நடைபெற்றது.. படக்குழுவினர் அனைவரும் இந்த விழாவில் கலந்துகொண்டனர். பியார் பிரேமா காதல் இயக்குனர் இலன், ‘பைனலி’ பாரத் மற்றும் நீலு ஆகியோர் கலந்து கொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். படத்தொகுப்பாளர் மணிக்குமரன்…

Read More

*“முறையான அனுமதி பெறாமல் என் கதையை வெப்சீரிஸாக இயக்கிவிட்டார் வெங்கட்பிரபு” ;

*“முறையான அனுமதி பெறாமல் என் கதையை வெப்சீரிஸாக இயக்கிவிட்டார் வெங்கட்பிரபு”   *“வெங்கட்பிரபு இயக்கியுள்ள வெப்சீரிஸ் கதை நான் உருவாக்கி எழுத்தாளர் சங்கத்தில் பதிவு செய்யப்பட்ட கதை ; இயக்குனர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு* *“முறையான அனுமதி பெறாமல் என் கதையை வெப்சீரிஸாக இயக்கிவிட்டார் வெங்கட்பிரபு” ; இயக்குனர் சசிதரன் பரபரப்பு குற்றச்சாட்டு* இயக்குநர் வெங்கட்பிரபு இயக்கத்தில் காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகியுள்ள ஹாரர் வெப் சீரிஸ் தான் ‘லைவ் டெலிகாஸ்ட்’. விரைவில் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கும் இந்த வெப் சீரிஸின் டீசர் சமீபத்தில் வெளியானது. இதையடுத்து இந்த வெப் சீரிஸின் கதை தன்னுடையது என்றும் தனக்கு தெரியாமலேயே, தன்னுடைய அனுமதி இல்லாமலேயே இதனை வெங்கட்பிரபு வெப் சீரிஸாக இயக்கியுள்ளார் என்றும் பரபரப்பான குற்றச்சாட்டை எழுப்பியுள்ளார் இயக்குனர் சசிதரன். இவர் அட்டகத்தி தினேஷ் நடித்து…

Read More

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்

எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்     .   சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னி லை வகித்தனர். தமிழக  செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்…

Read More

கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது..!

கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது..!   மறைந்த நடிகை வி.ஜே சித்ராவின் கடைசிப் படமான கால்ஸ் படத்தின் ட்ரெய்லர் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது..! சின்னத்திரை மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமாகி மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் வி.ஜே சித்ரா. அவர் திடீரென இறந்தது தமிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.சினிமா துறையில் சாதிக்க நினைக்கும் பல பெண்களுக்கு எடுத்து காட்டாக விளங்கிய அவரின் மரணம் பலபேருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் அவர் இறப்பிற்கு முன் நடித்த படம் கால்ஸ் இப்படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது…வெளிவந்த இரண்டு நாட்களில் இந்த ட்ரெய்லர் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. மேலும் இது 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு வருகிறது. மேலும் சித்ராவின் சமீப கால நிகழ்வுகள் படத்தின் ட்ரெய்லர்…

Read More

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ 5 மொழிகளில் வெளியாகிறது..

ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி  5 மொழிகளில் வெளியாகிறது..     ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ தமிழ்-தெலுங்கு-மலையாளம்-கன்னடம்-ஹிந்தி என 5 மொழிகளில் வெளியாகிறது.. திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு ராம் கோபால் வர்மாவின் ‘டி கம்பனி’ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டது. இத்திரைப்படத்தை யுஎஃபோ மூவிஸ் இந்தியா லிமிடட் (UFO Moviez India Ltd) விநியோகிக்கிறது. 5 மொழிகளில் இத்திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஆக்‌ஷன், த்ரில்லர், அரசியல், குற்றப் பின்னணி என பல்வேறு பின்புலங்களில் உணர்வுகள் தத்ரூபமாக, சில நேரங்களில் மிகவும் அப்பட்டமாகக் கொப்பளிக்கும் அளவுக்கு படங்களைக் கொடுப்பவர்களில் தனக்கென தனி முத்திரை பதித்தவர் பாலிவுட் இயக்குநர் ராம் கோபால் வர்மா. இவர் தற்போது ‘டி கம்பனி’ என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார். மும்பையைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் தாவூத் இப்ரஹிம் கஸ்காரின் டி கம்பெனி…

Read More

தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்*

*தமிழில் ரீமேக் ஆகிறது ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’: கே.எஸ்.ரவிகுமார் தயாரித்து நடிக்கிறார்*. சில திரைப்படங்களைக் காணும் போது, இப்படியொரு கதையை எப்படி யோசித்தார்கள் என்று சிந்திக்க வைக்கும். அப்படி பலராலும் பேசப்பட்டு, கொண்டாடப்பட்ட மலையாள படம் ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25’. ரதீஷ் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் வெளியான இந்தப் படத்தில் சுராஜ், செளபின், சூரஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 2019-ம் ஆண்டு வெளியான இந்தப் படத்துக்குச் சிறந்த நடிகர், அறிமுக இயக்குநர், கலை இயக்குநர் ஆகிய கேரள மாநில விருதுகளை வென்றது. இந்தப் படத்தின் தமிழ் ரீமேக் உரிமையை கடும் போட்டிக்கு இடையே கைப்பற்றினார் முன்னணி இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார். பலரும் அவர் இயக்குவதற்காகக் கைப்பற்றியுள்ளார் என எண்ணினார்கள். ஆனால் கமல் நடித்த ‘தெனாலி’ படத்தைத் தொடர்ந்து கே.எஸ்.ரவிகுமார், ‘ஆண்ட்ராய்டு குஞ்சப்பன்’ தமிழ் ரீமேக்கை தயாரித்து நடிக்கிறார். ‘கூகுள் குட்டப்பன்’…

Read More

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்

மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம்.   மரியாதைக்குரிய நமது பாரதப் பிரதமர் மோடி ஜி அவர்களுக்கு நடிகர் உதயா நன்றி கடிதம் அனுப்பி உள்ளார்….மறைந்த ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த ராணுவ வீரர் திரு அவில்தார் பழனி அவர்களுக்கு உயரிய விருதான “வீர் சக்ரா”விருதினை குடியரசு தினத்தன்று வழங்கி பெருமை சேர்த்ததற்கு நன்றி தெரிவித்துள்ளார்….நடிகர் உதயா, “செக்யூரிட்டி” படக்குழுவினரும் இவ்விருதினை அவருக்கு வழங்குமாறு கோரிக்கை கடிதம் 4 .1 2021 பிரதமர் மோடிக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது…..அதன் கோரிக்கை கடிதத்தை மாநிலத் தலைவர் L.முருகன் அவர்களிடம் நேரடியாக உதயா வழங்கினார்….பிரதமர் மோடி ஜி அவர்களுக்கும், ராணுவத் துறை அமைச்சர் அவர்களுக்கும், தமிழ்நாடு மாநிலத் தலைவர் முனைவர் எல்.முருகன் அவர்களுக்கும் தனது நன்றி கடிதத்தை தனது சார்பாகவும் ” செக்யூரிட்டி” படக்குழுவினர்…

Read More