சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார். சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார். 2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின்…
Read MoreCategory: தமிழக செய்திகள்
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம்
இயக்குநர் ஷங்கர் – ராம் சரண் – தயாரிப்பாளர் தில் ராஜு இணையும் பிரம்மாண்டத் திரைப்படம். ஒரு படத்தைப் பற்றி அறிவிப்பே இந்தியத் திரையுலகினர், வியாபார சந்தை ஆகியவற்றில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்த வேண்டும். அப்படியொரு அறிவிப்பை வெளியிடுவதில் பெருமை கொள்கிறது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் தயாரிப்பு நிறுவனம். இந்தியத் திரையுலகில் பிரம்மாண்ட படங்களை இயக்கி அதில் தொடர் வெற்றிகளைக் குவித்தவர் இயக்குநர் ஷங்கர். ‘ஜென்டில்மேன்’, ‘இந்தியன்’, ‘அந்நியன்’, ‘சிவாஜி’, ‘எந்திரன்’, ‘2.0’ என்ற படங்களின் வரிசை மூலம் இவர் அடைந்திருக்கும் பிரம்மாண்ட உயரம் புரியும். இவருடைய அடுத்த பிரம்மாண்ட படத்தைத் தயாரிக்கவுள்ளது ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் நிறுவனம். இதில் நாயகனாக மெகா பவர் ஸ்டார் ராம் சரண் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். பல்வேறு வசூல் ரீதியான வெற்றிப் படங்களைக் கொடுத்து முன்னணி நாயகனாக வலம் வரும் ராம்…
Read Moreதயாரிப்பு நிறுவனத்தை தொடங்குகிறார் இயக்குநர் வசந்தபாலன்
பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல்
பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல். ‘சின்ன மச்சான்…’ சூப்பர் ஹிட் பாடலுக்கு பிறகு பிரபுதேவாவுடன் நடன இயக்குநர் ஸ்ரீதர் இணையும் வெஸ்டர்ன் பாடல் ‘சார்லி சாப்ளின் 2’ திரைப்படத்தில் இடம்பெற்ற ‘சின்ன மச்சான்’ பாடல் அதன் இசைக்காகவும், நடன அசைவுகளுக்காகவும் பிரபலமானது அனைவரும் அறிந்ததே. உற்சாகம் மிக்க நாட்டுப்புற இசைக்கு ஏற்ப பிரபுதேவா மற்றும் நிக்கி கல்ரானி ஆடிய அப்பாடலுக்கு நடனம் அமைத்த ஸ்ரீதர், பிரபுதேவாவுடன் மீண்டுமொருமுறை கைகோர்த்திருக்கிறார். அபிஷேக் பிலிம்ஸ் சார்பில் ரமேஷ் பி பிள்ளை தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் இப்பாடல் இடம்பெறுகிறது. ‘மஞ்ச பை’ புகழ் N.ராகவன் இயக்கும் படத்திற்கு, D.இமான் இசையமைக்கிறார். மேற்கத்திய இசையின் அடிப்படையில் அமைந்துள்ள துள்ளலான பாடலுக்கு, யுகபாரதி வரிகளை எழுத, ஸ்ரீதரின் நடன இயக்கத்தில் பிரபுதேவா ஆடியுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தின் முக்கிய…
Read More*’செம திமிரு’ படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்*
*’செம திமிரு’ படத்தைப் பிரம்மாண்டமாக வெளியிடும் ராக்போர்ட் எண்டர்டெயின்மென்ட் நிறுவனம்* ஒரு படம் தயாரிப்பது மட்டும் பெரிய விஷயமல்ல, அதைச் சரியான விநியோகஸ்தரின் கையில் கொடுத்து வெளியிடுவது தான் மிகவும் முக்கியம். அவ்வாறு பல நல்ல படங்களைத் தயாரிப்பது மட்டுமன்றி, நல்ல படங்களை விநியோகித்தும் வெற்றிகண்டு வரும் நிறுவனம் தயாரிப்பாளர் முருகானந்தம் அவர்களின் ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். மிஷ்கின் இயக்கி வரும் ‘பிசாசு 2’ மற்றும் அதர்வா நடித்துள்ள ‘குருதி ஆட்டம்’ உள்ளிட்ட படங்களைப் பிரம்மாண்ட பொருட்செலவில் தயாரித்து வருகிறது. தற்போது ‘செம திமிரு’ என்ற படத்தை தமிழகத்தில் விநியோகம் செய்யவுள்ளது ராக்போர்ட் எண்டர்டையின்மெண்ட். கன்னட திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் துருவா சர்ஜா. இவர் ஆக்ஷன் கிங் அர்ஜூனின் உறவினர். இவர் நாயகனாக நடித்துள்ள படம் தான் ‘செம திமிரு’. பெரும் பொருட்செலவில்…
Read More18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா
18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா. திரைப்பட ஆர்வலர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழா 18.2.2021 முதல் 25.2.2021 வரை நடைபெறவுள்ளது. இந்திய திரைப்படத் திறனாய்வுக் கழகம் பிவிஆர் உடன் இணைந்து இவ்விழாவை நடத்துகிறது. உலகெங்கிலும் உள்ள 53 நாடுகளில் இருந்து 37 மொழிகளில் (10 இந்திய மொழிகள் உட்பட) 92 திரைப்படங்கள் பங்குபெறவுள்ளன. 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவின் தொடக்க நிகழ்ச்சி 18.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நடைபெறும். 25.2.2021 அன்று பிவிஆர் மல்டிபிளெக்ஸின் சத்யம் திரையில் நிறைவு விழா நடைபெறும். பிவிஆர் மல்டிபிளெக்ஸ் (முன்பு சத்யம் சினிமாஸ் – சாந்தம், சீசன்ஸ், சிக்ஸ் டிகிரீஸ், செரீன் திரைகள்) மற்றும் காசினோ சினிமாஸ் ஆகிய திரையரங்குகளில் 18-வது சென்னை சர்வதேச திரைப்பட விழாவில் பங்குபெறும் திரைப்படங்கள்…
Read Moreதயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள்
தயாரிப்பாளர்கள் இல்லாமல் திரைப்படங்கள். கொரோனா கால சிரமங்களைக் கடப்பதற்கு முன்னரே திரையரங்குகள் பலவிதமான இன்னல்களை தயாரிப்பாளர்கள் மீது தொடர்ந்து அடுக்கி வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக VPF, Transparency, TMC, Convenience fee என பல்வேறு காரணங்களுக்காக கடுமையாக போராடி வருகிறோம். ஒன்றிலும் தீர்வு கண்டபாடில்லை. திரைப்படங்கள் தயாரிக்கப்படுவது மக்களை மகிழ்விக்கவேயன்றி திரையரங்குகளுக்கு இரையாகுவதற்கு அல்ல. இந்த இன்னல்களுக்கு நடுவே OTT மூலம் மக்களை நேரிடையாக சென்றடைய முடியும் என்ற நிலை கிடைக்கப்பெற்ற பொழுது உண்மையில் தயாரிப்பாளர்கள் நிம்மதிப் பெருமூச்சடைந்தனர். கடன்சுமை தவிர்க்க சில படங்கள் வெளியிட்ட பொழுது தயாரிப்பாளர்களுக்கு அவ்வளவு நிம்மதி. இதற்கு திரையரங்குகள் அபயக் கூக்குரல் எழுப்பினர். அதேசமயம் சில தயாரிப்பாளர்கள் நல்ல விலை கிட்டியபொழுதும், திரையரங்கங்களை தேர்ந்தெடுத்து வெளியிட்டனர். உடனே அவர்களை தெய்வம் என்றார்கள், விளக்கேற்றியெல்லாம் நன்றி தெரிவித்தனர். எல்லோருக்கும் லாபம் என்றவுடன்…
Read More*மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்: சந்தானம் பேச்சு*
*மக்கள் கவலையை மறந்து சிரிப்பதற்கான முயற்சியை செய்துக் கொண்டிருக்கிறேன்: சந்தானம் பேச்சு*. ‘ஏ 1’ படத்தின் மூலம் நம்மை சிரிப்பு மழையில் நனைய வைத்த கூட்டணி, மீண்டும் பிப்ரவரி 12-ம் தேதி நம்மை நனைய வைக்கவுள்ளது. இயக்குநர் ஜான்சன் இயக்கத்தில் சந்தானம் நடித்துள்ள ‘பாரிஸ் ஜெயராஜ்’ திரைப்படம் பிப்ரவரி 12-ம் தேதி தமிழகமெங்கும் பிரம்மாண்டமாக வெளியாகவுள்ளது. இந்தப் படத்தின் ட்ரெய்லர், கானா பாடல்கள் என இணையத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருப்பதால் படக்குழுவினர் உற்சாகத்தில் இருக்கிறார்கள். இன்று காலை பத்திரிகையாளர்களைச் சந்தித்தது படக்குழு. இந்தச் சந்திப்பில் சந்தானம் பேசியது, “தயாரிப்பாளர் குமாருக்கு தான் முதலில் நன்றி சொல்ல வேண்டும். கொரோனா நேரத்தில் தான் இந்தப் படத்தைத் தொடங்கினோம். இப்போது படப்பிடிப்பு போகலாம், அப்போது போகலாம் என்று காத்திருந்தோம். ஆனால், அனைத்தையும் நல்லபடியாக முடித்து தயாரானதற்கு தயாரிப்பாளர் குமார் தான் காரணம்.…
Read More‘C / O காதல்’ சினிமா விமர்சனம்
‘C / O காதல்’ சினிமா விமர்சனம். ‘அந்தாலஜி’ பாணியில் கதைகளை உருவாக்கி, ‘அடடே’ கிளைமாக்ஸில் முடித்திருக்கும் படம்! அந்த சிறுவனுக்கு அந்த சிறுமி மீது மெல்லிய பிரியம் அரும்பி காதலாகிறது. சிறுமியின் அப்பா அவளை டெல்லிக்கு படிக்க அனுப்பிவிட, சிறுவனுக்கு காதல் தோல்வி! அந்த பிராமணப் பெண்ணுக்கு, அடியாளாய், ரவுடியாய் ஊர் சுற்றும் அந்த கிறிஸ்தவ இளைஞன் மீது காதல் உருவாகிறது. பெண்ணின் அப்பா மதத்தை காரணம்காட்டி அவளுக்கு வெறொரு மணமகனுடன் கல்யாணம் செய்து வைக்க, அவனுக்கும் காதல் தோல்வி! மதுக்கடையில் வேலை செய்யும் அந்த இளைஞனுக்கு அந்த இஸ்லாமியப் பெண்மீது காதல். பின்னாளில் அவள் விலைமாது என்கிற அதிர்ச்சிக்கு ஆளாகிறான். காதலின் ஆழம் அவர்களை கல்யாணம் நோக்கி நகர்ந்த திடீரென அவள் உலகத்தை விட்டுப் போகிறாள்! கல்யாணம் கை கூடாததால், ஊராரின் கேலிக்கும் கிண்டலுக்கும்…
Read Moreதயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து*
*தயாரிப்பாளர் எம்.எஸ்.முருகராஜ் மகள் திருமண வரவேற்பு – பிரபலங்கள் நேரில் வாழ்த்து* யா யா மற்றும் பக்ரீத் படங்களை தயாரித்தவர் எம்.எஸ். முருகராஜ். இவரின் மகள் டாக்டர் லாவண்யா முருகராஜ், டாக்டர் ரூபன் எழுமலை அவர்களின் திருமண வரவேற்பு செங்கல்பட்டில் சிறப்பாக நடைபெற்றது. இதில் இயக்குனர் ஹரி அவரது மனைவி ப்ரிதா, நடிகர்கள் பொன்வண்ணன், ரவி மரியா, ஜெரால்ட், தயாரிப்பாளர்கள் அம்மா கிரியேஷன்ஸ் சிவா, ரெட் ஜெயன்ட் மூவீஸ் செண்பகமூர்த்தி, மெட்ராஸ் எண்டர்பிரைசஸ் நந்த கோபால், பூச்சி முருகன், திருப்பதி பிரதர்ஸ் சுபாஷ் சந்திரபோஸ், தங்கராஜ், வின்னர் ராமசந்திரன், கலை இயக்குனர் கதிர் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
Read More