கதை…
நாயகன் மைக்கேல் தங்கதுரை.. நாயகி கவிப்பிரியா இருவரும் காதலித்து வருகிறார்கள்.. கல்யாணத்திற்கு பிறகு ஏதாவது பிசினஸ் செய்யலாம் என்கிறார் நாயகன்.. அதற்காக இருவரும் பணம் சேர்க்க முற்படுகின்றனர்.
அப்போது ஒரு வீட்டில் நடக்க முடியாமல் அவதிப்படும் ஸ்ரீரஞ்சனியை கவனித்துக் கொள்ள நாயகி கவிப்பிரியாவுக்கு வாய்ப்பு வருகிறது.. இதன் மூலம் நிறைய பணம் சம்பாதிக்கலாம்.. அப்படி சம்பாதித்தால் பிசினஸ் செய்யலாம் என எண்ணி அந்த வேலைக்கு செல்கிறார் நாயகி.
முதலில் மறுக்கும் நாயகன் பிறகு நாயகியை அந்த வேலைக்கு அனுப்பி வைக்கிறார்.. அதன்படி நாயகியும் செல்கிறார்.. அங்கு சென்ற பின்னர் தான் ஸ்ரீரஞ்சனி வீட்டில் ஒரு கண்ணாடி கூட இருக்கக் கூடாது என்கிறார்..
கண்ணாடியில் முகத்தையே கூட பார்க்காமல்.. இப்படியாக சில மாதங்கள் ஆன நிலையில் திடீரென இளமையிலேயே கவிப்பிரியாவுக்கு முதுமை வருகிறது.. தலைமுடி நரைக்கிறது.. வயதான தோற்றம் வருகிறது.. இவை எல்லாம் எதனால் நடைபெறுகிறது.. என்பதுதான் படத்தின் மீதிக்கதை.
நடிகர்கள்…
பர்மா உள்ளிட்ட பல படங்களில் நல்லதொரு நடிப்பை கொடுத்து ரசிகர்களைக் கவர்ந்தவர் மைக்கேல் தங்கராஜ்.. இந்த படத்தில் எந்த அலட்டலும் இல்லாமல் ரொமான்ஸ் செய்து கதையை நகர்த்தி இருக்கிறார்.. இடைவேளைக்குப் பிறகு இவரது கேரக்டரில் பல திருப்புமுனைகள் இருப்பதால் அதை வெளியே சொன்னால் கதையின் சுவாரசியம் அவிழ்ந்துவிடும்.
கவிப்பிரியாவின் கேரக்டர் பெயர் கூட அழகு தான் மகிழ்நிலா என்று அழகான பெயரில் வருகிறார்.. பெயருக்கு ஏற்றப்படியே மகிழ்ச்சியாகவும் இருக்கிறார்.. கிளைமாக்ஸ் காட்சியில் இவரது நடிப்பு போற்றும் படியாக இருக்கிறது..
இவர்களுடன் ஸ்ரீரஞ்சனி கேரக்டரும் படத்துக்கு உதவி இருக்கிறது.. பெரும்பாலும் இவர்களைச் சுற்றியே திரைக்கதை அமைத்திருக்கிறார் இயக்குனர் அருண்..
தொழில்நுட்ப கலைஞர்கள்…
படத்தின் பாடல்களும் ஒளிப்பதிவும் நேர்த்தியாக அமைக்கப்பட்டுள்ளது.. எடிட்டிங் இல் கொஞ்சம் நீளத்தை குறைத்து இருக்கலாம்..
இதுவரை பெரும்பாலும் சொல்லப்படாத கதையை எடுத்து அதற்கு திரைக்கதை அமர்த்து அதை புராண கால கதைகளுடன் கலந்து சுவாரஸ்யமான திரைக்கதையை அமைத்திருக்கிறார் இயக்குனர் அருண்.
ஆரகன்.. முதுமையிலும் இளமை