எலி எப்படி வில்லனாக வருகிறது? – மான்ஸ்டர் பாருங்க!

ஒருநாள் கூத்து’ படத்தை இயக்கிய இயக்குநர் நெல்சன் வெங்கடேசன் தற்போது எஸ்.ஜே.சூர்யா நடிக்கும் படத்தை இயக்கியுள்ளார். இந்தப் படத்தை மாநகரம் படத்தை தயாரித்த பொட்டன்ஷியல் ஸ்டுடியோ நிறுவனம் தயாரித்துள்ளது. இந்தப் படத்திற்கு `மான்ஸ்டர்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. மேலும் படத்தில் எஸ்.ஜே.சூர்யாவுக்கு ஜோடியாக நடிகை ப்ரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இதில் எஸ்.ஜே.சூர்யா, பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

வசனகர்த்தா ஷங்கர் பேசும்போது,

இப்படத்தில், எழுத்தில் நான் இருந்திருக்கிறேன். பாடலாசிரியர் மற்றும் எழுத்து இரண்டிலும் என் பெயர் வந்ததற்கு நன்றி. இப்படம் எனக்கு இரண்டாவது படம். நெல்சன் என்னுடைய மாணவனாக இருந்தாலும் அவரிடம் நான் நிறைய கற்றுக் கொண்டேன். நெல்சன் இயக்கத்தில் கதாநாயகி பாதுகாப்பாக இருப்பார்கள். கதையை எப்படி அழகுப்படுத்துவதை எஸ்.ஜே.சூர்யாவிடம் கற்றுக் கொண்டேன். அனைவரிடமும் ஆலோசனை கேட்பார். தயாரிப்பாளர் எப்படி இருக்க வேண்டும் என்று பிரபாகரனிடம் தெரிந்துக் கொண்டேன் என்றார்.

நடன இயக்குநர் சாபு ஜோசப் பேசும்போது,

‘ஒரு நாள் கூத்து’ படத்தில் பணியாற்றிய குழுவுடன் இப்படத்திலும் பணியாற்றினோம். எலியை வைத்து கதையை கூறும்போது ஆர்வமாக இருந்தது. எலி மற்றும் எஸ்.ஜே.சூர்யா இணைந்து வரும் காட்சிகளில் தொழில்நுட்பத்தில் சவாலாக இருந்தது. இந்த காட்சிகள் நன்றாக வருவதற்கு அனைவரின் ஆலோசனையும் இருந்தது என்றார்.

DOP கோகுல் விநாயக் பேசும்போது,

இக்கதையை கொண்டு வந்த இயக்குநருக்கு பாராட்டுக்கள். எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு இப்படத்திற்கு பலமாக இருந்தது என்றார்.

எஸ்.ஆர்.பிரபு பேசும்போது,

இந்நிறுவனம் தொடங்கும்போது தரமான படங்களை மட்டுமே எடுக்க வேண்டும் என்று தீர்மானித்தோம். தீபாவளி பண்டிகைக்கு எங்கள் பெற்றோர் புது உடைகள் முன்பே வாங்கி வைத்திருந்தார்கள். நாங்கள் கேட்டதும், இருக்கு ஆனால் தீபாவளியன்று குளித்ததும் தான் தருவோம் என்றனர். குளித்ததும் ஆடை உடுத்த எடுத்த போது ஜீன்ஸ் பேண்டை எலி கடித்துக் கிழிந்திருந்தது. எலி மீது கோபம் அன்று ஆரம்பித்தது என்றார்.

யாருக்கும் தீங்கு செய்யாத ஒருவனுக்கு எலி எப்படி வில்லனாக வருகிறது? இறுதியில் அதை அவன் கொன்றானா? என்பதை இப்படம் மூலம் கூறியிருக்கிறோம்.

இக்கதையை இயக்குநர் கூறியதும், மான்ஸ்டராக பார்க்கக்கூடிய எஸ்.ஜே.சூர்யாவிற்கு எலி மான்ஸ்டராக இருந்தால் எப்படி இருக்கும்? என்று நினைத்தோம். நம் நாட்டில் பெரும்பாலானவர்கள் நடுத்தர வர்க்கத்தைச் சார்ந்தவர்கள் தான். அப்படியொரு கதாபாத்திரத்திற்கு எஸ்.ஜே.சூர்யா பொருத்தமாக இருப்பார் என்று முடிவெடுத்தோம். அவரும் அவருடைய கதாபாத்திரத்தைச் சிறப்பாக செய்திருக்கிறார்.

இப்படம் வருகிற மே 17ம் தேதி வெளியாகிறது என்றார்.

Related posts

Leave a Comment