தமிழக அரசியலும் உலகம் சுற்றும் வாலிபன் படமும் பிரித்து பார்க்க முடியாத ஒன்று திமுகவின் பொருளாளர், மற்றும் அடிப்படை பொறுப்பில் இருந்து எம்.ஜி.ஆர்நீக்கப்பட்ட பின்னர் எம்ஜிஆர் பிக்சர்ஸ் சார்பில் எம்ஜிஆர் தயாரித்து, இயக்கி, இரு வேடங்களில் நாயகனாக நடித்த படம் ‘உலகம் சுற்றும் வாலிபன்’. 1973ம் ஆண்டு வெளிவந்த இந்தப் படம் அக்காலத்தில் பல தடைகளைக் கடந்து வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. அதன் பிறகு இந்தப் படத்தை பல முறை ரி-ரிலீஸ் செய்து வெளியிட்டும் ஒவ்வொரு முறையும் பல ஊர்களில் அந்த சமயத்தில் வெளியாகும் புதிய படங்களுக்குப் போட்டியாக ஓரிரு வாரங்கள் வரை ஓடி சரித்திரம் படைத்திருக்கிறதுவெளிநாடுகளில் படப்பிடிப்பு என்பதை யோசித்து கூட பார்க்க முடியாக காலகட்டத்தில் ஜப்பான், தாய்லாந்து, மலேசியா, சிங்கப்பூர் என முழுக்க முழுக்க வெளிநாட்டில் படப்பிடிப்பு நடத்தப்பட்ட படம் உலகம் சுற்றும்…
Read MoreCategory: அரசியல்
அரசியல்
கார்த்தி சிதம்பரத்தை எச்சரித்த தினேஷ்குண்டுராவ்
காங்கிரஸ் கட்சியில் அவ்வப்போது சர்ச்சை கருத்துக்களை சொல்லி ஊடகங்களில் உலா வருபவர் கார்த்தி சிதம்பரம்.அந்த வகையில் வரும் சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு திமுக கூட்டணியில் ஒதுக்கப்பட்ட 25 தொகுதிகளில் 8 பெண்களுக்கும் நான்கு தொகுதிகளை சிறுபான்மையினருக்கும் ஒதுக்க வேண்டும் என்று கார்த்தி சிதம்பரம் கருத்து தெரிவித்திருந்தார். இது தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி, மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் போன்றவர்களை டென்ஷன் ஆக்கியது.இந்த சூழலில் கடந்த மார்ச் எட்டாம் தேதி இரவு சத்தியமூர்த்தி பவனில் தமிழக காங்கிரஸின் பல்வேறு கோஷ்டி தலைவர்களையும் தமிழகத்தின் காங்கிரஸ் எம்பி களையும் தனித்தனியாக சந்திக்க முடிவு செய்தார் குண்டு ராவ். இதற்காக அவர்களுக்கு உரிய முறையில் தகவல் தெரிவிக்கப்பட்டது. தங்கபாலு, ஈவிகேஎஸ் இளங்கோவன், திருநாவுக்கரசர, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் கே .ஆர். ராமசாமி உள்ளிட்ட பல தலைவர்களும் எம்.பி களும்…
Read Moreஇஸ்லாமிய திருமண விழாவில் அமைச்சரை பாராட்டிய இயக்குனர் பாக்யராஜ்…யார் அவர்???
இன்று ஞாயிற்றுக்கிழமை மார்ச் 7 ம் தேதி மதியம் ஒரு மணி இருக்கும்,சென்னை புரசைவாக்கம் தனியார் திருமண மண்டபத்தின் வாசல் முன்பு வந்து நிற்கிறது அமைச்சர் ஒருவரது கார்… அது இஸ்லாமிய பிரமுகர் ஒருவரது குடும்பத்தின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி. வந்தவர் யாரென அனைவரும் பாக்கிறார்கள்…. காரில் இருந்து இறங்கியவர் அமைச்சர் ஜெயக்குமார் என்பதை பார்த்ததும் மேடையில் பாடிக்கொண்டிருந்த இசைக் கலைஞர்கள் அப்போதே முடிவுக்கு வந்துவிட்டனர்,இனிமேல் நமக்கு வேலைக்காகாது அவரே பாடி விடுவார் என்று தங்களுக்குள் பேசிக்கொண்டது அவர்களை அறியாமல் மைக்கில் லேசாக ஒலித்தது. ஆனால் அதை கண்டுகொள்ளாமல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த அமைச்சர் ஜெயக்குமார் மணமக்களை சந்தித்து வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். மற்றபடி அவருக்கு பாடும் நோக்கம் எதுவுமில்லை. ஆனால் இவர் ஏற்கனவே பல மேடைகளில் பாடல்களைப் பாடி மக்களை,தொண்டர்களை ரசிக்க வைத்தவர்…
Read Moreஇவர் யாரென்று தெரிகிறதா
இவர் யாரென்று தெரிகிறதா??? அசாத்தியங்களை சாத்தியங்களாக்கும் மனிதன்…விளையும் பயிர் முளையிலேயே தெரியும் என்பதற்கு முக்கியமான சான்றாக இருப்பவர்களில் இவரும் ஒருவர்.இந்த படம் எடுக்கும் போது வயது 15,ஒன்பதாம் வகுப்பு மாணவன்.பாரத சாரண சாரணியர் இயக்கத்தில் முனைப்போடு செயல்பட்டு அணித்தலைவராக கோலோச்சிய காலகட்டமது. எப்போதுமே இருக்குமிடத்தில் தான் முன் வரிசையில் நிற்க வேண்டும்.தலைமைப் பண்பை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணம் இருந்திருக்கிறது. அதன் காரணமாகவே பள்ளியில் படிப்பிலும் சரி விளையாட்டு போட்டிகளிலும், பேச்சிலும் சரி அனைத்திலுமே முதல் மாணவனாக திகழ்ந்து வந்திருக்கிறார் இந்த சிறுவன். சென்னை ராயபுரத்தில் டான்பாஸ்கோ ஆரம்பப் பள்ளியில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பை முடித்துவிட்டு, ராயபுரம் கே.சி.சங்கரலிங்கம் நாடார் மேல்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் 11ஆம் வகுப்பு வரை படித்து வந்த காலகட்டம் மிக முக்கியமானதாக…
Read More12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்!
12,000 பேருக்கு வேலைவாய்ப்பு தருகிறார் அமைச்சர் ஜெயக்குமார்! உலகமே கொரோனா பாதிப்பால் அச்சத்தில் உறைந்து கிடக்கிறது. இந்த நேரத்தில் பல்வேறு நிறுவனங்களில் ஊதியக் குறைப்பு, ஆட்குறைப்பு போன்ற நடவடிக்கைகளால் தங்கள் எதிர்காலத்தை இழந்து நிற்பவர்கள் ஏராளம். இவர்களுக்கே இந்த நிலை என்றால் பெரும் கனவோடு, படித்து முடித்து வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையோடு காத்திருக்கும் இளைஞர்கள் பலர் இன்று விரக்தியின் விழும்பில் நின்று எதிர்காலம் என்னவாகும் என்பதற்கு விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார்கள். இந்த சூழ்நிலையில் மக்கள் நலனை எப்போதும் நினைவில் வைத்துக்கொண்டு,அரசியல் கடந்து அனைவருக்கும் பொதுவான மனிதராக வலம் வரும் அமைச்சர் ஜெயக்குமார் புதிய முயற்சியை துவக்கியிருக்கிறார். அவரது சீரிய முயற்சியால் இதோ உங்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு காத்திருக்கிறது. ஆம் 12 ஆயிரம் பேருக்கு வேலை வாய்ப்பை உருவாக்கி தருவதற்கு மிகப்பெரிய வாய்ப்பை கொடுத்திருக்கிறார்…
Read Moreஜெயலலிதா பிறந்தநாளில் உருக்கமாக அமைச்சர் எழுதிய கடிதம்
எல்லா விதைகளும் விருட்சம் ஆவதில்லை விருட்சங்கள் எல்லாம் நிழல் தருவதில்லை… எங்களின் போதி மரமே! உங்களை வணங்குகிறேன்… வேதா இல்லம் எங்கள் முகவரி மட்டுமல்ல; இந்த தேசத்தின் முகவரி! வீரம் உங்களிடம் விலாசம் கேட்கும் விவேகம் உங்களிடம் யாசகம் கேட்கும்… மக்களால் நான்; மக்களுக்காகவே நான்… வெறும் வார்த்தையல்ல, வாழ்க்கை! “இதய தெய்வம்” உதடுகளின் வார்த்தையல்ல உள்ளத்தின் உணர்ச்சி ஊற்று! எதிர்ப்பவர்களுக்கு நீங்கள் சிம்ம சொப்பனம்; எளியோர்கள் அமரும் அரியாசனம். கோபுரங்களைக் காட்டிலும் குடிசைகளை விரும்பியவர் நீங்கள். ஆதலால் தான் அனைவருக்கும் என்றென்றும் நீங்களே இதய தெய்வம்! மகமே! எங்கள் ஜெகமே!! உங்களை நினைக்காத நாளில்லை… மறந்தால் நாங்கள் நாங்களில்லை… நீங்கள் ஆள வேண்டுமென சொன்னதைக் காட்டிலும் இன்னமும் நீங்கள் வாழ வேண்டுமென நாங்கள் சொல்லியிருக்க வேண்டும் அம்மா! ஒவ்வொருவரின் பிறந்த நாளும் அவர்களுக்கு சிறந்த நாளாக…
Read Moreசாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார்.
சாமித்தோப்பு வைகுண்டர் ஆலயத்திற்கு துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் வருகிறார். கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள சாமிதோப்பில் உள்ள வைகுண்டர் ஆலயத்தில் தரிசனம் செய்ய துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், வரும் மார்ச் 4 ஆம் தேதி வருகிறார். சாமிதோப்பில் உள்ள அய்யா வைகுண்டரின் ஆலயம் உலக பிரசித்திப் பெற்றதாகும். இக்கோவிலில் தரிசனம் செய்ய உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் வருகிறார்கள். இந்த நிலையில், வரும் மார்ச் 4 ஆம் தேதி நடைபெறும் அய்யா வைகுண்டரின் 189 வது அவதார திருநாளை முன்னிட்டு, பூஜித குரு பால பிரஜாபதி அடிகளார், மனோஜ் பாண்டியன் எம்.பி, இயக்குநரும் தயாரிப்பாளரும், அதிமுக நட்சத்திர பேச்சாளருமான நாஞ்சில் பி.சி.அன்பழகன், ஆகியோரின் வேண்டுகோளுக்கிணங்க துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், சாமித்தோப்பில் வைகுண்டர் தரிசனம் பெற வருகிறார். 2008 ஆம் ஆண்டு அய்யா வைகுண்டரின்…
Read Moreஇயக்குநர் அமீர் அறிக்கை
இயக்குநர் அமீர் அறிக்கை. தமிழகத்தில் நடைபெறப் போகும் சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாக வைத்து மதக்கலவரத்தை தூண்டி அதன் மூலம் ஓட்டுக்கள் பெறும் நோக்கத்தோடு, உலகெங்கும் வாழும் பல நூறு கோடி இஸ்லாமிய மக்கள் தங்கள் உயிருக்கும் மேலாக மதிக்கும் இறுதித் தூதர் முகம்மது நபி அவர்களை சொல்லத்தகாத வார்த்தைகளால் பொது வெளியில் கொச்சைப்படுத்திய கல்யாணராமன் என்னும் அயோக்கியனை கைது செய்த தமிழக அரசிற்கு என்னுடைய பாராட்டுக்கள். சமூக நல்லிணக்கத்திற்கு எதிரான நச்சுக் கருத்துக்களை பொது வெளியில் உலவ விட்டு அதன் மூலம் ஏற்படும் கலவரத்தின் மூலம் தமிழகத்தில் ஓட்டு வேட்டை நடத்தலாம் என்கிற தீய எண்ணத்தோடு கல்யாணராமனையும் வேலூர் இப்ராஹிமையும் அழைத்துக்கொண்டு தமிழகத்தின் பல ஊர்களுக்கு பயணிக்கும் பாஜக கட்சியினரையும், தங்கள் கண் முன்னே தொடர்ந்து நடைபெறும் அநீதிகளை கண்டும் காணாதது போல் அமைதி காக்கின்ற…
Read Moreலாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா
#லாக்கப் மரணஅரசியலை பேசும் ராஜலிங்கா அறிமுக இயக்குநர் ஷிவபாரதி எழுதி இயக்கியிருக்கும் படம் ராஜலிங்கா. இயக்கியதோடு முக்கிய கதாபாத்திரமொன்றில் நடித்துமிருக்கிறார். இவரோடு டி.குமரேசன், மாறன் பாண்டியன் ஆகியோரும், நாயகியாக ஜாய் ப்ரியா என்பவரும் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை இயக்கியிருக்கும் ஷிவபாரதிதஞ்சாவூர்மாவட்டம் திருவையாறைச் சேர்ந்தவர். இயக்குநர் ராதாபாரதி உள்ளிட்ட பலரிடம் பணியாற்றிய அனுபவங்களைக் கொண்டவர். இவர் எழுதிய திரைக்கதையும் அதையொட்டி இவர் செய்திருந்த வடிவமைப்பையும் பார்த்த திருச்சி விநியோகஸ்தர் மாரிமுத்து படத்தை இயக்கும் வாய்ப்பைக் கொடுத்திருக்கிறார். இப்படம்குறித்துஇயக்குநர்ஷிவபாரதி கூறியதாவது…. இப்படம் தற்காலத்தில் அதிகம் பேசப்படும் ஒரு சிக்கலை மையமாகக் கொண்டு எடுத்திருக்கிறேன்.பார்த்தவுடன் காதல் பழகியவுடன் அத்துமீறல் என்று போகும் ஜோடிகளுக்கு இப்படம் ஒரு பாடமாக இருக்கும். அன்றாடம் தவிர்க்க முடியாத அத்தியாவசியமாகிவிட்ட வாட்சப்பை நாம் மிக அலட்சியமாகக் கையாள்கிறோம். இப்படம் பார்த்துவிட்டு போனை எடுத்து வாட்சப்பை திறந்தால் ஒரு…
Read Moreஎச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார்
எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார் . சவுத் இந்தியன் சினி அண்ட் டிவி மேக்கப் ஆர்டிஸ்ட் அண்ட் ஹேர் ஸ்டைலிஸ்ட் யூனியன் சார்பில் நேற்று ( பிப்ரவரி 1ம்தேதி) சென்னை விருகம்பாக்கம் காமராஜர் சாலை, ஏவிஎம் காலனியில் எச் ஜே சினி மேக்கப் ஹேர் அண்ட் பியூட்டி அகடமி திறப்பு விழா நடந்தது. பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் அங்கமுத்து சண்முகம், பொருளாளர் பி.என்.சுவாமிநாதன் முன்னி லை வகித்தனர். தமிழக செய்தி துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ கலந்து கொண்டு திறந்து வைத்தார். நடிகையும், ஆந்திரா எம் எல் ஏவுமான நடிகை ரோஜா குத்துவிளக்கு ஏற்றினார். நிகழ்ச்சியில் அமைச்சர்…
Read More
