பாஜக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான முதல்கட்ட வாக்குப்பதிவு வரும் 11ஆம் தேதியன்று தொடங்கவுள்ள நிலையில், இன்று (ஏப்ரல் 8) பாஜக தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஏழு கட்டமாக நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 11ஆம் தேதி முதல் மே 19ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. கடந்த 2ஆம் தேதியன்று காங்கிரஸ் கட்சி தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ளவர்களுக்கு ஆண்டுதோறும் 72,000 ரூபாய் வழங்குவது உட்படப் பல்வேறு அம்சங்கள் இதில் இடம்பெற்றிருந்தன. இதையடுத்து, இதற்குப் பதிலடி கொடுக்கும் வகையில் ஆளும் கட்சியான பாஜகவின் தேர்தல் அறிக்கை இருக்குமென்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில், இன்று (ஏப்ரல் 8) டெல்லியில் பாஜகவின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் மத்திய உள் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், நடைமுறையில் சாத்தியமுள்ள தேர்தல் அறிக்கையைத் தாங்கள் தயாரித்திருப்பதாகக் கூறினார். இந்த…

Read More

குப்பத்து ராஜா சீரியஸான ஒரு கேங்க்ஸ்டர் படம்

எஸ் ஃபோகஸ் ப்ரொடக்‌ஷன்ஸ் தயாரிப்பில் ஜிவி பிரகாஷ்குமார், பார்த்திபன், பாலக் லால்வானி, பூனம் பாஜ்வா, யோகிபாபு நடிக்க, பாபா பாஸ்கர் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘குப்பத்து ராஜா’. ஜிவி பிரகாஷ் இசையமைத்திருக்கும் இந்த படம் வரும் ஏப்ரல் 5ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகிறது. இந்த படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு படத்தை பற்றிய சுவாரஸ்யமான தகவல்களை பகிர்ந்து கொண்டனர். உண்மையாக உழைப்பவர்களை எனக்கு மிகவும் பிடிக்கும். காலா, லூசிஃபர் படங்களில் இதற்கு முன்பு பாடல் எழுதியிருக்கிறேன். இந்த படத்தில் ஜிவி பிரகாஷ் மற்றும் பாபா பாஸ்கர் சார் இருவருமே என்னை மிகவும் ஊக்கப்படுத்தினர் என்றார் பாடலாசிரியர் லோகன்.நானும் பார்த்திபனும் ஆரம்ப காலத்தில் இருந்தே நண்பர்கள். நான் துவண்டு போயிருந்த காலங்களில் என்னை ஊக்கப்படுத்தியவர் அவர். அவரை போலவே நரேந்திரன் என்னை…

Read More

துரைமுருகன் கல்லூரி & திமுக பிரமுகர்கள் வீடுகளில் இருந்து கோடிக் கணக்கான பணம் பறிமுதல்!

தமிழகத்தின் எதிர்கட்சியான தி.மு.க. பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன் வீடு வேலூர் மாவட்டம் காட்பாடி காந்திநகரில் உள்ளது. இவருடைய மகன் கதிர்ஆனந்த் காட்பாடியில் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக் கூடம் நடத்தி வருகிறார். கதிர்ஆனந்த் வேலூர் நாடாளுமன்ற தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிடுகிறார். இந்த நிலையில் கடந்த 27-ந் தேதி இரவு வருமானவரித்துறை அதிகாரிகள், துரைமுருகன் வீடு, அவரது மகன் நடத்தும் பொறியியல் கல்லூரி மற்றும் பள்ளிக்கூடத்தில் சோதனை நடத்தினார்கள். விடிய, விடிய நடந்த இந்த சோதனையில் ரூ.10 லட்சம் மற்றும் முக்கிய ஆவணங்கள் சிக்கியது. இதேபோல் துரைமுருகனுக்கு மிகவும் நெருக்கமானவராக கூறப்படும் குடியாத்தம் அணங்காநல்லூரைச் சேர்ந்த கே.சக்கரவர்த்தி, வாணியம்பாடியை அடுத்த செக்குமேடு பகுதியைச் சேர்ந்த தி.மு.க. முன்னாள் மாவட்ட செயலாளர் தேவராஜ் ஆகியோரின் வீடுகளிலும் சோதனை நடத்தப்பட்டது. இந்தநிலையில், வருமானவரி அதிகாரிகள் நேற்று மீண்டும் துரைமுருகன்…

Read More

டைம்லைன் சினிமாஸ்’ சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், விக்ரம் ஸ்ரீதரன் எழுதி, இயக்கும் ‘ரெட்ரம்’ !

எச்சரிக்கை இது மனிதர்கள் நடமாடும் இடம்’ வெற்றியைத் தொடர்ந்து, சுந்தர் அண்ணாமலை தயாரிப்பில், ‘தெகிடி’ புகழ் அசோக் செல்வன், சம்யுக்தா ஹோர்நாட் நடிப்பில், வெளிவரவிருக்கும் க்ரைம் திரைப்படம் ‘ரெட்ரம்’ காக்க காக்க, பச்சைக்கிளி முத்துச்சரம், வேட்டையாடு விளையாடு உள்ளிட்ட இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் திரைப்படங்கள், அட்டகத்தி, சூடு கவ்வும், பிட்சா ஆகியவற்றுக்கு நிர்வாக தயாரிப்பாளராக பணியாற்றிய சுந்தர் அண்ணாமலையின் இரண்டாவது திரைப்படம் ‘ரெட்ரம்’. வியப்பூட்டும் திகில் மற்றும் மிரட்டல் காட்சி அமைப்புகளும், சுவராஸ்யமான காதல் காட்சிகளும், ரசிகர்களை இருக்கை நுனியில் அமரச் செய்யும் விதத்தில் சிறப்பாக படமாக்கப்பட்டுள்ளது. சென்னை, அதன் சுற்றுபுறங்கள் மற்றும் உதகமண்டலத்தின் அடர்ந்த காட்டு பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ள விதம் ரசிகர்களின் கவனத்தை பெரிதாக ஈர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ‘ஃபர்ஸ்ட் லுக்’ போஸ்டர்கள் மக்கள் மற்றும் திரையுலகின் கவனத்தை ஈர்த்த நிலையில், இப்படத்தின் டீசர்…

Read More