மேலை நாடுகளைப் போல தமிழிலும் இண்டிபெண்டன்ட் ஆல்பம் முயற்சிகள் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கின்றன . இதோ ஒரு புது ஆல்பமாக வந்திருப்பதுதான் “மழை சாரல் ” . இசையமைப்பாளர் யாதவ் ராமலிங்கம் இசையில் ஸ்வேதா மோகன், அசோக் ஐயங்கார் குரல்களில் உருவாகியிருக்கும் பாடலுக்கு கருணாகரன் வரிகளை எழுதியுள்ளார். ‘ காதல் மேகம் காற்றிலாடும் நெஞ்சில் வா மழையே’ என்று தொடங்குகிறது இந்தப் பாடல். காதலைக் கெளரவப்படுத்தும் ஒரு தனி வீடியோ ஆல்பமாக இது உருவாகி இருக்கிறது. இதனை ஆருத்ரா கான் வர்ஷா நிறுவனம் தயாரித்துள்ளது. முழுக்க முழுக்க மாண்டேஜ் முறையில் பாடல் ஒலிக்கிறது. படம் பிடிக்கப்பட்டிருக்கும் காட்சிகள் காதலுக்கு வேறொரு தளத்தில் வேறொரு வகையில் பொழிப்புரை எழுதுகின்றன. ஏற்கெனவே ராஜேஷ் ராமலிங்கம் என்ற பெயரில் ஒரு படத்திற்கு பாடல்களை உருவாக்கி எஸ்.ஜானகியைப் பாட வைத்தவர் , இப்போது யாதவ் ராமலிங்கம்…
Read MoreDay: June 22, 2019
17 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் இணைந்த காலத்தால் மறக்க முடியாத ஜோடி!
பல ஆண்டுகளாகவே, ஒரு சில தலைப்புகள் சினிமாவில் பதிலளிக்கப்படாமல் இருக்கின்றன, ஆனால் அவை வியப்புக்குரியவை. அவற்றில் ஒன்று வெள்ளித்திரையில் தோன்றும் ஜோடிக்கு இடையே உள்ள கெமிஸ்ட்ரி. அது ஒரு குறிப்பிட்ட காலம் மட்டுமல்லாமல், திரைப்படம் வெளியாகி பல ஆண்டுகளுக்கு பின்னரும், அவர்களின் திரைப்படங்களை நாம் பார்க்கும் போது நம்மை அறியாமல் வியக்க வைக்கிறது. வெளிப்படையாக, எப்போதும் இளமையான மாதவன் மற்றும் காலம் கடந்தாலும் அதே அழகு மற்றும் இளமையுடன் இருக்கும் சிம்ரன் போன்ற ஒரு கவர்ச்சியான ஜோடி நம்மை ‘பார்த்தாலே பரவசம்’ (2001) மற்றும் ‘கன்னத்தில் முத்தமிட்டால்’ (2002) ஆகிய படங்களில் அவர்களை ரசிக்க வைத்தார்கள். உண்மையில், இந்த படங்கள் அவர்களை வெறும் ஜாலியான காதல் ஜோடிகளாகக் காட்டவில்லை, மாறாக சிக்கலான சூழ்நிலைகளை எதிர்கொள்பவர்களாக இருந்தனர். நிச்சயமாக, அதுதான் அழகு அல்லவா? சோதனைகள் மற்றும் இன்னல்கள் கடினமான…
Read More